Thottal Thodarum

Apr 26, 2013

சாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை

 தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூறு ரூபாய்க்களை செலவு செய்து ஆப்பம் சாப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் உண்டு. ஆப்பத்துடன் தேங்காய்ப்பால், அல்லது வெஜ் குருமா, அல்லது கடலைக் கறி என்று பல காம்பினேஷன்களில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பம் என்பது நல்ல பொன் முறுவலோடு, அப்படியே கவிழ்த்துப் போட்ட சட்டி போல இருந்தால் தான் ஓரத்தில் இருக்கும் முறுகலை அப்படியேவும், மீதியை கிரேவியோடும், பாலோடும் சாப்பிட ஏதுவாக இருக்கும். இப்படி ஆப்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.  சாதாரணமாய் ஆயாகடைகளில் மட்டுமே கிடைக்கப் பெற்ற அப்படியாப்பட்ட ஆப்பத்தை, இட்லிக்கடை என்று சொல்லி முருகன் இட்லிக்கடை பெயர் பெற்றதை போல நளாஸ் ஆப்பக்கடை என்று வைத்து பிரபலமானதும் வடபழனியில் சிம்ரன்ஸ் ஆப்பக்கடை உதயமானது. ஏற்கனவே துபாயில் எல்லாம் இருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டில் ஆப்பத்திற்காக கடைகள் உதயமானதற்கு முக்கிய காரணம் நளாஸ் என்று சொல்ல வேண்டும்.


வடபழனி ஏரியா சினிமாக்காரர்களின் ஏரியா என்ற பெத்த பெயர் உண்டென்றாலும், சுவையான உணவகங்களுக்கு பஞ்சம் இருக்கும் இடம். கொஞ்சம் டீசெண்டான உணவகத்தை காண முடியாது. அந்தக் குறையை போக்க வந்தது தான் இந்த உணவகம் என்பது என் எண்ணம். நல்ல இண்டீரியர், ஆண்ட் ஆம்பியன்ஸ். நளாஸ் போலவே இவர்களும், ஆப்பத்தில் வகை வகையாய் வைத்திருக்கிறார்கள். ஆப்பம், முட்டை ஆப்பம், வெஜிட்டபிள் ஆப்பம், சிக்கன், மட்டன் ஆப்பம், ஆஃப் பாயில் ஆப்பம் என்று வரிசைக்கட்டி வைத்திருக்கிறார்கள். உடன் சாப்பிட, உள்ளித்தீயலில் ஆரம்பித்து, வெஜ், நான் வெஜ் அயிட்டங்கள் என சைட்டிஷ்கள் வரிசை வேறு. அதில் எனக்கு பிடித்தது உள்ளித்தீயலும், பெப்பர் சிக்கன் மசாலாவும் தான்.  உள்ளித்தீயலில் சிறு வெங்காயத்தையும், சமயஙக்ளில் முறுங்கைகாயையும் சேர்த்து கிட்டத்த புளிப்பு அதிகமான நம்ம காரக்குழம்பு போலத்தான் தெரிந்தாலும் சுவை படு வித்யாசமாய் இருக்கும். அதுவும் ஆப்பத்திற்கு அட்டகாசமாய் இருக்கும். பெப்பர் சிக்கன்  மசாலா வெகு காரமாய் இல்லாமல் நல்ல மிக்ஸிங்கில் இருக்கும். இவர்களின் ஆப்பம் கொஞ்சம் தித்திப்பாகவே இருப்பது இவர்களது தனி ஸ்பெஷாலிட்டியா? என்று தெரியவில்லை. எனக்கு தித்திப்பாக இல்லாத ஆப்பம் தான் பிடிக்கிறது. காரணம் ஆப்பம் ப்ளெயினாக இருந்தால்தான் உடன் சாப்பிடும் மற்ற சைட்டிஷ்களின் சுவை அதில் பின்னிப் பிணைந்து சுவையை மேலும் கூட்டும்.
 மதியத்தில் பிரியாணி மற்றும் சாப்பாடு சர்வ் செய்கிறார்கள்.  மதிய சாப்பாடு லிமிட்டெட் மற்றும் அன்லிமிடெட் வாழை இலை சாப்பாடு. அதில் வெஜ் மற்றும் நான் வெஜ் இரண்டும் இருக்கிறது. நான்வெஜ்ஜில் வழக்கமாய சிக்கன், மீன், மட்டன் குழம்புகள், மற்றும் சாம்பார், ரசம், பொரியல் போன்றவைகள், வெஜ்ஜில் கிரேவிக்கள் மைனசாய். சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும். அதே போல மட்டன் குழம்பும். மீன் குழம்பில் லேசாய் வாடை அடிக்கிறது. ரெண்டு மூன்று முறை சொல்லியும் அதே நிலை தான். பட்.. நல்ல அருமையான ரசம் தருகிறார்கள். நல்ல காய்கறிகளுடனான பொரியல்,கூட்டு என்று கொடுக்கிற காசுக்கு ஏற்றார்ப்போல நல்ல சர்வீசும் கூட. பிரியாணி காம்போ, பிரியாணியுடன், சிக்கன், பிஷ் போன்றவற்றையும் இணைத்து காம்பினேஷனில் தருகிறார்கள். பிரியாணி இவர்களது ஸ்பெஷாலிட்டி இல்லை என்றாலும், ஓகேவான பிரியாணி. என் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்த உணவகமாய் மாறிவிட்டது இந்த சிம்ரன்ஸ் ஆப்பக்கடை.

இடம்: வடபழனி போலீஸ் நிலையத்திற்கு எதிரில்
பட்ஜெட் : இரண்டு பேர் சாப்பிட மதிய லிமிடெட் உணவு என்றால் குறைந்தது 200 ரூபாய். ஆப்பம் வகையறாக்களுடன் என்றால் குறைந்த பட்சம் 250-300
  கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Anonymous said...

ஆப்பம் இனிப்பாயிருக்குன்னா அதுல தேங்காப்பாலோ ஜீனியோ கலந்திருப்பாங்க. கேரள ஸ்டைல் அது. நம்மூர் ஆப்பங்கள் இனிப்பில்லாம இருக்கும். தேங்காப்பால், பாயா, கறிக்கொழம்பு, பாய்க வீட்டு மீன் கொழம்புன்னு எல்லாத்துக்கும் பொருந்தும்.

Hari said...

mokka padhivu.

SRIDHAR R ( Srirangam ) said...

fantastic review

Unknown said...

நீங்க சாப்பிட்டதே இரண்டு ஐட்டம்தான். அதை வைத்து பதிவு போட்டீங்க.சரிதானே..இன்னும் நிறைய சாப்பிட்டு பதிவு பன்னுங்க கடவுளே.