Thottal Thodarum

Nov 2, 2008

ஈழதமிழனால் சம்பாதிக்கும்....


ஈழதமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடந்து கொண்டுதானிருக்கிறது... ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை சமீபகாலமாய் மீண்டும் தொலைக்காட்சியின் வாயிலாக மக்களூக்கு தெரியவருகிறது..தமிழர்களுக்கெல்லாம் தாங்கள் தமிழன் என்று உணர்வுபூர்வமாய் உணர்ந்து கொள்ள தமிழின தலைவர்கள் எல்லாம் தமிழ் உணர்வை தூண்டிவிட்டு, ஈழத்தமிழனுக்கு ஆதரவாய் ஆங்காங்கே மீட்டிங்குகளூம், போராட்டங்க்ளும், உண்ணாவிரதங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு மீடியாக்களின் பார்வையில் பரபரப்பாய் தெரிய சரியான தருணத்தை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழ், தமிழ் என்று கூவிக் கொண்டு அதையே வியாபாரமாய் கொண்டுருப்பவர்கள் எல்லாம் எதையாவது செய்தாக வேண்டிய சூழ்நிலையில் ஆளுக்கொரு அறிக்கை விட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்..

தமிழக அரசோ.. ஈழத்தில் அமைதி நிலவுவதற்காக மத்திய அரசு உதவ்வில்லை என்றால் தங்கள் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கிறார்.. அதற்கு அப்புறம் இலங்கையிலிருந்து ராஜப்க்சே தம்பி வந்தார்..பிரணாப் முகர்ஜி வந்தார்.. இப்படி பலர் வந்தார்கள் போனார்கள்..தமிழக் அரசின் தமிழின தலைவரும் அதையெல்லாம் கேட்டு தங்கள் ராஜினாமாக்களை திரும்ப பெற்று கொள்வதாய் அறிவித்து, மத்திய அரசில் தன்னுடய முக்கியத்துவத்தை நிலை நிறுத்திக் கொண்டது.. இதனால் திமுக சம்பாதித்தது.. தொடர் மின்வெட்டின் காரணமாய் மக்களிடம் இருந்த அதிருப்தி பற்றிய பேச்சுகளை மக்கள் மறந்து இதை பற்றி பேச ஆரம்பித்ததுதான்..

ஜெயலலிதாவோ ஓரு படி மேலே போய் தேவையில்லாமல் பேசி மீண்டும் மீடியாக்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி கொஞ்ச நாளாய் காணாமல் போயிருந்த அவருக்கு அவரின் பேச்சே மீடியாக்களின் பிரதானமாகி அதனால் தான் காணாமல் போயிருந்த நாட்களுக்கான மீடியா எக்ஸ்போஸரை சம்பாதித்தார்.

இது போல்தான் பல அரசியல் கட்சிகளும், ஆளாளுக்கு தங்கள் தங்கள் அறிவிப்புகளாளும், செயல்களாளும் தங்களீன் பழைய பிரச்சனைகளை மக்களிடமிருந்து மறக்கடிக்க.. எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் இவையெல்லாம் ஈழதமிழர்களுக்கு எந்த விதத்தில் உத்வுகிறது என்றே தெரியவில்லை.. இவர்கள் இப்படி பேசுவதால் அவர்களூக்கு அமைதி திரும்பிவிட்டதா..? என்றால் அதுவுமில்லலை..

இதையெல்லாம் விட ஓரு காமெடி எதற்கெடுத்தாலும் தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளும் திரையுலகத்தினர்.. இவர்கள் இருதலை கொள்ளி எறும்புகள் போல் அங்குமில்லாமல், இங்குமில்லாமல்.. இரண்டு பக்கங்களிலும் மாட்டிக் கொண்டு, அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்..

காவிரி நீருக்காக போராட்டமா.. நடிக்க வேண்டிய இவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்..
ஈழதமிழனுக்காக போராட்டமா இவர்கள் போராடுகிறார்கள்.. உண்ணாவிரதமிருக்கிறார்கள்.. இங்கேயெல்லாம் நன்றாய் நடிப்பவர்கள்.. தாங்கள் செய்யும் தொழிலில் நன்றாக நடித்தால் அவர்களின் வாழ்கையாவது நன்றாக் இருக்கும்.. தமிழ் திரைத்துறையில் எத்தனை பேர் தமிழர்கள்.. தமிழ் பேசவே தெரியாத நடிகைகள் எல்லாம் “தமில் வால்க” என்று பேசுகிறார்கள்..

நடிகர்களே..நடிகைகளே.. உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. உங்களில் எத்துனை பேர் ஈழத்தமிழனுக்காக, நிஜமாகவே உண்ணாவிரதமிருக்க வந்தீர்கள்.. சங்கம் கட்டாயபடுத்தாவிட்டால் பாதி பேர் எஸ்கேப் ஆகியிருப்பார்கள்.. அனால் இதனால் இவர்கள் சம்பதித்தது.. மீடியாவின் முழு கவனமும், மார்கெட் இழந்து மீடியாக்களின் கவனத்தில் இல்லாதவர்கள் எல்லாம் முழு ஈடுபாட்டுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதன் பிண்ணனி ..

இயக்குனர்கள் அமிரூம், சீமானும் கைது செய்யபட்டதை எதிர்த்து பாரதிராஜா.. ஓரு வேண்டுகோள் விட்டிருந்தார். அதாவது அவர்களை விடுவிக்கும்வரை தமிழ் உணர்வுளள எல்லா திரைபடதுறையினரும் படபிடிப்புகளை நிறுத்த வேண்டுமென்று.. நிறுத்தினார்களா..அப்படி நிறுத்தாததால் அவர்க்ளுக்கு த்மிழ் உணர்வு இல்லை என்றாகுமா..? இப்படி அலைபவர்கள் எல்லாம் ஓன்றிரண்டு பேரை தவிர, தற்போது வேலையில்லாமல் இருப்பவர்கள்.. மீடியாவின் சூட்டை அனுபவிப்பதற்காகத்தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது..அப்படி இல்லை என்றால் அவர்கள் படப்பிடிப்பை நிறுத்தாததற்கு எதாவது எதிர் அறிவிப்பு விடுவதுதானே..? விட்டால் வாய மூடிட்டு போய்யா என்றிருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.. ஏன் என்றால் பணம் போடுவது அவர்கள் தானே..?

இதையெல்லாம் விட அதிகமாய் சம்பாதித்தது சன் டிவிதான் தன்னுடய நியூஸ் சேனலில், சினிமா கலைஞர்களின் ராமேஸ்வர போராட்டம், நேற்றைய உண்ணாவிரதம் என்று எல்லாவற்றையும் நேரலை நிகழ்ச்சியாய் ஓளிபரப்பி உலகம் முழுவது உளள தமிழர்களின் பார்வையை தங்களுடய சேனலின் பககம் திருப்பி டி.ஆர்.பியை தக்க வைத்து ரசிகர்களின் வீயூவர்ஷிப்பை சம்பாதித்தது..

இப்படி சொல்வதால் நான் என்னவோ அவர்க்ளுக்கு எதிரி என்று நினைக்க வேண்டாம்..அவர்களை அவர்களின் திறமைகளை மிகவும் மதிப்பவன் நான் சினிமாவில்.. அவர்களின் துறையில்.. அவர்களூக்கெல்லாம் சமுதாய் அக்கறை இருக்க கூடாதா? என்று கேட்டால்.. இருக்கட்டும். எல்லா சமூக பிரச்சனக்களுக்கும் அவர்கள் போராடினால் பாராட்டுவேன்.. ஏன் அவர்கள் தொடர் மின் வெட்டை எதிர்த்து போராடவில்லை.. ?

அரசியல் ரீதியாக போராட வேண்டிய ப்ரச்சனைக்கு அவர்கள் எந்தவிததிலும் உதவுவதாய் தெரியவில்லை.. ஆனால் இந்த் பிரச்சனையை வைத்து அவர் அவர்க்ள் தங்களின் மீது கவ்னத்தை திருப்புவதற்கோ.. அல்லது பழைய் பிரச்ச்னையிலிருந்து விடுபடுவதற்கோ.இப்படி எல்லோருமே தங்களின் சுயலாபத்துகாகவும் புகழுக்காவும், ஈழ தமிழர்களை சம்பாதிக்க பயன்படுத்துகிறார்களே .என்று தான் என் ஆதங்கம்...
Post a Comment

7 comments:

அத்திரி said...

ராஜபக்ஷே தம்பி வந்தாக, அண்ணன் பிரணாப் முகர்ஜி வந்தாக, அவுக வந்தாக,இவுக வந்தாக எல்லாரும் வந்தாக, வந்துகிட்டே இருக்காக

இப்ப்டியே இருக்கவேண்டியதுதான் ஈழத்தமிழர்களின் நிலைமை.

சினிமாகாரவுக மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டு. மின்வெட்டு பிரச்சினையில் இவர்கள் போராடினால் தமிழ்நாட்டில் இவர்கள் இருக்க முடியுமா? ஆர்க்காட்டாரும், அஞ்சா நெஞ்சனும் சேர்ந்து ஒரு வழி பண்ணிட மாட்டாங்கன்னு தெரியாதா?

Anonymous said...

//இப்படி எல்லோருமே தங்களின் சுயலாபத்துகாகவும் புகழுக்காவும், ஈழ தமிழர்களை சம்பாதிக்க பயன்படுத்துகிறார்களே என்று தான் என் ஆதங்கம்...//

உண்மை. ஆனால் பெரும்பாலும் உண்மை (சிலருக்குக்) கசக்கத்தான் செய்யும்.

Cable சங்கர் said...

//சினிமாகாரவுக மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டு. மின்வெட்டு பிரச்சினையில் இவர்கள் போராடினால் தமிழ்நாட்டில் இவர்கள் இருக்க முடியுமா? ஆர்க்காட்டாரும், அஞ்சா நெஞ்சனும் சேர்ந்து ஒரு வழி பண்ணிட மாட்டாங்கன்னு தெரியாதா?//

நானே ஓரு சினிமாக்காரன்.. எனக்கென்ன காண்டு அவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.. மின்வெட்டுக்கு உண்ணாவிரதமிருந்தால் அவர்களுக்கு மீடியாவின் சப்போர்ட் கிடைக்குமா? முதல்ல அனுமதிதான் கிடைக்குமா..? அதனால் தான் சொல்கிறேன்.. மீடியாவில் புகழ் கிடைக்கிற இடத்தை தவிர இவர்களின் சமுதாய அக்கறை செல்லாது அத்திரி..

Cable சங்கர் said...

//உண்மை. ஆனால் பெரும்பாலும் உண்மை (சிலருக்குக்) கசக்கத்தான் செய்யும்.//

சிலருக்கு கசக்குமே என்று சொல்லாமல் இருக்க கூடாது நம்பி.. அதனால் தான் பதிவிட்டுவிட்டேன்..

குப்பன்.யாஹூ said...

அட இப்போதான் தெரியுதுங்களா.

ஈழ பிரச்னையே எலெக்சன் வந்தாதான் எந்திரிக்கும். நாலு வருஷம் கூடவே இருந்த கம்ம்யுநிச்டுக்கு ஈழம் ஞாபகம் இல்லை. இப்போ எலெக்ஷன் வரவும் எல்லாருக்கும் இந்து ஒரு ஊறுகாய்.

நன்றியுடன்
குப்பன்_யாஹூ

Cable சங்கர் said...

//ஈழ பிரச்னையே எலெக்சன் வந்தாதான் எந்திரிக்கும். நாலு வருஷம் கூடவே இருந்த கம்ம்யுநிச்டுக்கு ஈழம் ஞாபகம் இல்லை. இப்போ எலெக்ஷன் வரவும் எல்லாருக்கும் இந்து ஒரு ஊறுகாய்.//

தெரிந்தும் அதை பற்றி எழுதி ஹிட்ஸ் சம்பாதிக்க வேண்டாமே என்று நினைத்திருந்தேன்.. ஆனால் பல பதிவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இவர்களின் நடவடிக்கைகளை பற்றி போற்றியும், தூற்றியும் பதிவிடுவதை பார்த்து தான் பதிவிட்டேன்..

யூர்கன் க்ருகியர் said...

//தங்களின் சுயலாபத்துகாகவும் புகழுக்காவும், ஈழ தமிழர்களை சம்பாதிக்க பயன்படுத்துகிறார்களே .//

இந்த மாதிரியான கம்முனாட்டி, நாதாரிகளை,நேரா போய் செருப்ப கழட்டி அடிக்கணும் போல எனக்கு இருக்கு.

உங்களுக்கு எப்படி இருக்கு?