வெடிகுண்டு முருகேசன் என்றதும் ஏதோ ஒரு பெரிய ஆக்ஷன் படமாய் இருக்கவேண்டும், அல்லாது படு காமெடியான படமாய் இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் மனதில் வருகிறது அல்லவா.. அதிலும் படத்தின் விளம்பரஙக்ள், செய்திகள் எல்லாவற்றிலும், பசுபதியின் காமெடி, வடிவேலுவின் காமெடியைவிட நன்றாக வந்திருப்பதால் டப்பிங் பேச மறுத்ததாக வந்த செய்திகள் வேறு நம்மை உசுப்பேத்தியிருக்க,
முழுக்க, காமெடி படமாவும் இல்லாம, சீரியஸ் படமாவும் இல்லாம ஒரே கொழப்படிச்சிருக்காங்க..பாவம் பசுபதி கருப்பா, பிக்பாக்கெட் கணக்கா இருக்கிறதினாலேயே.. அவரை பார்த்தா இந்த மாதிரி இத்து போனவன், நொந்து போனவன், என்கிற மாதிரி கேரக்டர்களையே தேடி போய் கொடுக்கிறார்கள். அவரும் பாவம் ரொம்ப கொழம்பி போய் தான் நடிச்சிருக்கிறாரு.. ஜோதிர்மயி வேற பாவம்.. அவங்களும் காமெடி பண்ணுறேன்னு நம்மை போட்டு பின்னி எடுக்குறாங்க.
வடிவேலு சார்.. சீக்கிரம் நீங்களும் கொஞ்சமாவது புதுசா யோசிக்க வேற ட்ராக் ஆளை பிடிங்க. ஜனங்க இப்ப லேசா சிரிக்கிறதே உங்கள ஸ்கிரின்ல பார்த்தவுடனே சிரிச்சு பழகினதுனாலதான். அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்.
இயக்குனர் ஒரு முழுநீள காமெடி படம் எடுக்கத்தான் முயற்சி செய்திருக்கிறார் என்பது அவரது வசனங்களில் தெரிகிறது. படத்தில் வருகிறா வில்லன் கேரக்டர் எல்லாம் சீரியஸ் காமெடியன்களாக சித்தரித்திருப்பது படு வீக்காக இருப்பது எல்லாமே மொக்கையினா மொக்கை அப்படி ஒரு மொக்கை. ஆனா படத்துலதான் செல்ப் எடுக்கல. தேங்க்யூ(வேலைக்காகவில்லை) ஆயிருச்சு
பாலபரணியின் ஒளீப்பதிவு பற்றி ஸ்பெஷலாய் ஒன்றும் சொல்வதற்கில்லை.. இசையும் ஓகேதான்
வெடிகுண்டு முருகேசன் – புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
டிஸ்கி
பெங்களூரிலிருந்து பதிவர் ஒருவர் போன் செய்து வெடிகுண்டு முருகேசன் படத்துக்கு அவரின் நண்பர்கள் டிக்கெட் வாங்கி வைத்து கொண்டு அழைப்பதாகவும். போகலாமா.. வேண்டாமா.. என்று கேட்டார். வேறு வேலை ஏதுவும் இல்லையென்றால் போகவும் என்றேன். ஒரு ஒன்னறை மணி நேரம் கழித்து போன் செய்தார்.. பாதி படத்திலேயே எல்லோரும் வந்துவிட்டதாக..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இல்லை அண்ணே ஜோதிர்மயி
சொன்னா கேக்கணும்ல.......
ithu romba bore adiguthu
//தேஜர்மயி//
இல்லை அண்ணே ஜோதிர்மயி"
intha ilakkiyavathi gal thollai thanga mudiyala
"அத்திரி said...
//தேஜர்மயி//
இல்லை அண்ணே ஜோதிர்மயி"
intha ilakkiyavathi gal thollai thanga mudiyala//
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் நாளைக்கு போலாம்னு இருந்தேன்
ஆனா இப்போ மறுபரிசிலனை நடக்கிறது.
சரி தலைவரே விமர்சனம் எங்கே?
ஜோதிர்மயி படத்தை ஒன்னுக்குட closeupla போடாததிற்கு என்னோட கண்ணடம் ஹிஹி கண்டனம்
பாக்கலாமா? வேணாமா?
ஸ்ரீ....
இதுக்கு போகாதேன்னே சொல்லிருக்கலாம். பாவம், போக விட்டு பழிவாங்கிட்டீங்க!
ithu romba bore adiguthu//
பண்ணுவோம் மாயாவி.. டைம் இல்ல..
நன்றி செல்வேந்திரன்..
பாத்தீங்கள்ல.. சாக்குரத..அத்திரி..
நான் நாளைக்கு போலாம்னு இருந்தேன்
ஆனா இப்போ மறுபரிசிலனை நடக்கிறது.//
போய் வேலைய பாருங்க ஜெட்லி..
ஜோதிர்மயி படத்தை ஒன்னுக்குட closeupla போடாததிற்கு என்னோட கண்ணடம் ஹிஹி கண்டனம்
//
இந்த படத்தை பார்த்துட்டு இவ்வளவு எழுதுனதே பெரிசு இதுல தனியா விமர்சனம் வேற்..
ஜோதிர்மயி உங்களுக்க்கும் பிடிக்குமா..?
ம்க்கும்.. எனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு.. அத விட மொக்க படம் பிட்டு இருக்குன்னு பாக்குறது.. என்ன.. ஆளுய்யா நீரூ.. உ.த..
///
அபப் நீங்களும் என்னை போல ஒரு போராளியா..? விமர்சகன்
ஆமாம் விசா..
பாக்கலாமா? வேணாமா?
ஸ்ரீ...//
இவ்வளவுக்கு பிறகுசந்தேகமா.ஸ்ரீ
//
சொன்னேனே.. சொன்னேனே.. கேட்கலியே அவரு நண்பர்கள்.. ஆனா இப்ப எனக்கு ஒரு ரசிகர் மன்றம் திறக்கிறாதா சொல்லிட்டுருக்காஙக்..”)
அவரை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
வெடிகுண்டும் பனாலா..??
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அவரை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
வெடிகுண்டும் பனாலா..??
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//
aamaam thalaivaree..
உங்க படத்த பார்ப்பதற்கு முன் இந்த கேள்வியை அவரே கேட்டா உங்க பதில் என்னா அண்ணே ?!
எழுத்து பிழைகள் அதிகம் தவிர்க்கவும். தவறை விமர்சகர்கள் சுட்டி காட்டியும் அதை திருத்தாமல் இருப்பது ஏன்?.....
நன்றி ரமேஷ்..
அதையேன் என்கிட்ட கேட்க போறாங்க.. அப்ப யாராவது விமர்சனம் எழுதிட்டுருப்பாஙக் அவங்க கிட்ட கேட்பாங்க..
//எழுத்து பிழைகள் அதிகம் தவிர்க்கவும். தவறை விமர்சகர்கள் சுட்டி காட்டியும் அதை திருத்தாமல் இருப்பது ஏன்?...//
அண்ணே.. அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில்லை, பெயரை மாத்தி எழுதினது. மாத்திரலாம்.
இந்திரலோகத்தில் மாட்டி நான் முழித்தேன், கூட இருந்த எனது நண்பர் பிடித்துக்கொண்டு விடாததால்... அனால் இப்போது வெடிகுண்டிலிருந்து காப்பாற்றியதற்கு ஆயிரம் நன்றிகள். ஏனென்றால் அதே நண்பர் இந்த வரக்கடைசியில் வந்துதான் ஆக வேண்டும் என அழைத்திருக்கிறார்.
லேட்டாகத்தான் தெரிந்தது அவர் வடிவேலு வெறியர் என்று. எத பண்ணினாலும் சிரிக்கிறார், தாங்க முடியல. வெள்ளி முதல் ஞாயிறு மாலைவரை எனது மொபைல் ஸ்விட்ச் ஆஃப்.
என்னோட விருப்பம் என்னவென்றால், அட்லீஸ்ட் உங்களை டிஷ்கஷனுக்காவது கூப்பிடவேண்டும், கொஞ்சம் உருப்படியாய் வர.
(மனப்பூர்வமாக சொல்கிறேன்).
நன்றி சங்கர்...
பிரபாகர்.
(மனப்பூர்வமாக சொல்கிறேன்).
//
யாரோட டிஸ்கஷனுக்கு பிரபாகர்..?/
உங்கள் பாராட்டுக்கு நன்றி..
ஏன் எதுக்கு நன்றியெல்லாம் நமக்குள்ள.. எவனோ ஒருவன்.
ஏன் எதுக்கு நன்றியெல்லாம் நமக்குள்ள.. எவனோ ஒருவன்.//
ச்சும்மாவா... ஒரு சில படத்துக்குப் போய்ட்டு, ஏண்டா போனோம்னு எத்தன தடவ ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா? எத்தன படத்த தப்புகணக்கு பண்ணி விட்டுருக்கேன் தெரியுமா?
ஏதோ, உங்க விமர்சனம் படிச்ச பிறகு, மொக்க படத்துக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தாலும், மனச அதுக்கு தயார் படுத்திட்டு போக முடியுது, ஏமாற்றம் குறையுதில்ல...
அப்புறம் , நல்ல படமா இருதா ஓடிப்போய் பாத்துடலாம்.
உங்களுக்கு நன்றி கூட சொல்லாம போனா எப்படி?
---
தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.
---
நல்ல படம் எடுக்க நினைக்கிற எந்த ஒரு வளரும் இயக்குனரும்...
பிரபாகர்.
prabakar.. naanee oru valarum iyakkunar thaan...
---
தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.
---
/
ungal aatharavukku mikka nandri evano oruvan..
---
தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.
---
/
ungal aatharavukku mikka nandri evano oruvan..
//அதிலும் படத்தின் விளம்பரஙக்ள், செய்திகள் எல்லாவற்றிலும்//
//படத்தில் வருகிறா வில்லன் கேரக்டர் எல்லாம் சீரியஸ் காமெடியன்களாக//
விளம்பரஙக்ள்,
வருகிறா இவை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் என்னவாம்?
வருகிறா இவை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் என்னவாம்//
ookk.. ரைட்.. தப்புன்னு ஒத்துக்கறேன்.