ரொம்பவும் மோசமான நிலையில் உள்ள தமிழ் சினிமா உலகம் மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸிஜன் படம். பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இழைத்து, இழைத்து செய்யப்பட்ட படம்.. மிக பெரிய ஓப்பனிங் எதிர்பார்க்கப்பட்ட படம். கந்தசாமி.
படம் ஆரம்பித்ததும், கதை என்னவென தெரிந்துவிடுகிறது. அந்நியன், ரமணா, ஜெண்டில்மேனில் செய்ததை மறுபடியும் வேறு நிலைப்பாட்டில் செய்திருக்கிறார்கள். அதில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி, இதில் தெரிந்தே.. ஜெண்டில்மேனில் சரண்ராஜ் என்றால் இதில் பிரபு, என்ன அதில் எல்லாம் நல்ல திரைக்கதை என்று ஒன்று இருந்தது. இதில் அது இல்லை. ஆரம்ப காட்சி அதிரடியாய் ஆரம்பித்தாலும், ஏற்கனவே பார்த்த பீலீங் வந்துவிட்டதாலும், தெரிந்த கதையாகி போனதினாலும் பெப் இருக்கவே இல்லை. ஸ்ரேயாவின் பழிவாங்கு நடவடிக்கை, காதல், மோதல் என்று ஆரம்பித்ததும் சூடேறும் காட்சி, மீண்டும் வேறு எங்கே, எங்கேயோ பயணித்து, கலைத்து போட்ட சீட்டு கட்டாய் ஆகிவிடுகிறது.
கந்தசாமி சேவல் கோழியின் கெட்டப்பில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியவர்கள் அதை சஸ்பென்ஸாய் வைத்திருக்காமல் நம்ப முடியாத ஒரு செட்டபபை காட்டி, அதையும் புஸ்ஸென ஆக்கிவிடுகிறார்கள். அதை காட்டியதாலேயேஎ ஓப்பன் க்ரவுண்டில் இருட்டில் சுத்தி, பறந்து அடிப்பது எப்படி முடியும் என்ற கேள்வி எழுகிறது. முதல் ஒரு முக்கால் மணி நேரம் அந்த சேவல் கேரக்டரை வைத்து கும்மி அடிப்பதோடு சரி அதற்கப்பறம் அதையும் காணோம். சரி ஒரிஜினல் கந்தசாமியை கண்டு பிடிக்க, டி.ஜிபி. பிரபு வந்ததும், அவர் ஏதோ செய்ய போகிறார் என்றால் பல காட்சிகளில் காமெடிபீஸாய் லாஜிக் இல்லா சீன்களுக்கு விளக்கவுரையாற்றுகிறார். தெலுங்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவும் தெலுங்கு வாடையில் நடித்திருக்கிறார். வடிவேலு இடையிடையே வருகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.
திடீரென ஒரு வில்லன் முளைத்து தமிழ்நாட்டின் முக்கிய புள்ளி என்று அவனே சொல்லி கொள்கிறான். பஸ்ஸிலேயே பிகர்களுடன் சல்லாபிக்கிறான், பஞ்சாயத்து பேசுகிறான், முமைத்கானுடன் டான்ஸ் ஆடுகிறான். ஸ்ரேயாவின் அப்பா ஆஷிஷ்தான் வில்லன் என்று நினைத்தால், தமிழ்நாட்டின் முக்கிய புள்ளி, என்று ஒருவன் மெக்ஸிகோவில் அலெக்ஸ் என்று எங்கெங்கோ போய் சுற்றி நம்மையும் சுற்றி விடுகிறார்கள்.
விக்ரமின் உழைப்பு படம் பூராவும் தெரிகிறது. மொத்த திரைக்கதை சொதப்பல்களையும் தன் தோள்களில் சுமக்கிறார். பாவம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். பெண் வேடமிட்டு வருவது, வயதானவராய் வருவது ஏன் கந்தசாமி கோழி கெட்டப் உட்பட எல்லாமே சும்மா பில்டப்பாக இருக்கிற்தே தவிர படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
அதே போல் ஸ்ரேயா இன்னொரு சேவிங் கிரேஸ் இந்த படத்திற்கு, அந்த “மியாவ்..மியாவ்” பாட்டில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு போடும கெட்ட ஆட்டம் போட்டு நம் மனதை துண்டாடுகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். ஆனால் அதை படமாக்கிய விதத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். பிண்ணனி இசையில் ரொமப் சொதப்பல். படத்தில் பார்க்கும் போது மிக்ச் சாதாரணமாய் இருக்கிறது.
படம் பார்க்க போகும் முன் உங்கள் வீட்டின் டிவி பெட்டி முன் உட்கார்ந்து தலையை ஆட்டியபடியே படம் பார்த்து பழகி கொள்ளுங்கள். அப்போது தான் படத்தில் ஆடிக் கொண்டே இருக்கும் காட்சிகளை பார்க்க முடியும். இலலாவிட்டால் கண் வலி நிச்சயம். ஏகாம்பரமா ஒளிப்பதிவு. ?? அந்த மெக்ஸிகோ ஹெலிகாப்டர் காட்சிகள் எல்லாம் ஏதோ திருட்டு தனமாய் ஓளிந்து கொண்டு எடுத்தது போல் இருக்கிறது. அதே போல எடிட்டிங்கும் சில காட்சிகளில் பத்து செகண்டு கூட ப்ரேம் ஓட மாட்டாமல் ஒரே இரிடேடிங்க்.
எ பிலிம் பை சுசி கணேசன் என்று போட்டு விட்டு, தனி, தனியாய் கதை, திரைக்கதை, வசனம என்று தனக்கு டைட்டில் கார்டு போட்டுக் கொள்கிறார். படம் பூராவும் தேடினாலும் கதாசிரியர் சுசியும், திரைக்கதை ஆசிரியர் சுசியும் தென் பட மாட்டார்கள். ஆங்காங்கே அதிலும் ஸ்ரேயாவிடம் கேள்வியாகவே பதிலை சொல்லும் காட்சியும், ஸ்ரேயாவிடம் பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் கேள்விகளிலும் புத்திசாலிதனம் தெரிகிற்து. பல இடங்களில் இறங்கி, இற்ங்கி ஏறுகிறது படத்தின் க்ராப். படத்தில் உட்சபட்ச காமெடி, ஸ்ரேயா தன் துணிகளை கிழித்து கொண்டு, சிபிஐ ஆபீஸில் அலறுவது, பின்னர் சிசிடிவியில் எல்லாம் ரெக்கார்ட் ஆகும் என்பது நேற்று பிற்ந்த குழந்தைக்கு கூட தெரியும் இயக்குனர் சுசி அவர்களே. இதில் இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்ப்தை விளக்க ஒரு ப்ளாஷ்பேக், இயக்குனர் வேறு நடித்திருக்கிறார். சாரி.. நடந்திருக்கிறார். அவரின் கேரக்டரினால் என்ன பயன் என்று அந்த கந்தசாமிக்கே வெளிச்சம். கோயிலுக்கு போய் ஒரு லெட்டரை எழுதி வைக்கணும்…………………… நீங்களே பில் பண்ணிக்கங்க.
கந்தசாமி – பார்த்து நொந்தசாமி
டிஸ்கி
பாவம் விக்ரம் பீமா, கந்தசாமி மாதிரியான படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நொந்து போவதை விட நல்ல கதையில் குறுகிய கால படங்களில் நடிப்பது எவ்வளவோ மேல். எத்தனையோ இளம் இயக்குனர்கள் உங்களை வைத்து படம் செய்ய காத்திருக்கிறார்கள்.
தெரிந்த கதையை, அருமையான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் உட்காரவைக்க முடியும் என்பதை சமீபத்திய சூப்ப்ர் ஹிட்டான ஹிந்தி படம் கமீனேவை பார்த்து இயக்குனர் புரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
உங்கள் விமர்சனத்தை தேடினேன். லாஜிக் இல்லை என்றாலும், கிராபிக்ஸ் பிரமாண்டம் என்றால் பணம் மட்டும் செலவழிப்பது இல்லை என்று ஷங்கர், சுசி கணேசன், விக்ரம் உணர்வார்கள்.
சூப்பர் அண்ணே! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்!
அதான் பாட்டுலேயே நொந்தசாமின்னு பாடுறாங்களே. படத்த ஒரு தடவை பார்க்கலாம் (குறிப்பு: ஏற்கனவே ஜென்டில் மென், அந்நியன், சிவாஜி படங்களை பல தடவை பாத்தவர்கள் உஷார்)
திருட்டுப்பயலே, டிஷ்யூம் படத்தை பார்த்த பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களில் வரிசையில் அவரும் இருக்காருனுல்ல நினைச்சேன்..
விக்ரம் இது மாதிரி மூணு வருஷமா ஒரே படத்துல நடிக்கிறதுக்கு பதிலா வருஷத்துக்கு மூணு படத்துல நடிச்சா அவரும் பொழைக்கலாம்.. நாமளும் பொழைக்கலாம்..
//சுசி கணேசன் இப்படி சொதப்பியிருக்காரா???
திருட்டுப்பயலே, டிஷ்யூம் படத்தை பார்த்த பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களில் வரிசையில் அவரும் இருக்காருனுல்ல நினைச்சேன்..//
dishoom director is sasi, not susi ganesan, u r confusing
எங்க தலயோட "மஹதீரா.."..?!?!?
இல்ல, டிஸ்ட்ரிப்யூஸன்ல பணத்தை எடுத்துட்டாப்லயா..?
:(
யூ மீன்.... அந்த யூத் பதிவரை சொல்றீங்களா.....? இதுல ஏதும் சுய விளம்பரம் இல்லையே....
பேசாம நான் இனையத்தில் கொரியா படம் பார்த்துகிறேன்....:)))
இவனுங்க ஓவரா பில்டப் பண்ணும்போதே நெனச்சேன், படம் கிட்டத்தட்ட சிவாஜி, ஜென்டில்மேன் மாதிரியான பழைய தயிர் சாதமாதான் இருக்கும்னு.. ஆனா இது ரொம்பவே புளிச்ச தயிர் சாதம்..
சுசி கணேசன பாராட்டணும்னா ஒரே ஒரே விஷயம் தான் இருக்கு.. சங்கர் கிட்ட இந்த படம் சிக்கிச்சுன்னா ஒரு நாப்பது கோடில இருந்து அம்பது கோடில எடுத்திருப்பான்.. சுசி கொஞ்சம் கம்மியா முடிசிருப்பான்னு நெனைக்கிறேன்..
நான் சங்கர்ன்னு சொன்னது எந்திரன் எடுக்குற சங்கர தான் :-)
//“மியாவ்..மியாவ்” பாட்டில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு போடும கெட்ட ஆட்டம் போட்டு நம் மனதை துண்டாடுகிறார்.
//
பாட்டை மட்டும் பார்க்க ஏதும் வழி இருக்கா?:)
இவர்கள் இடறி வழுக்கி விழுவது அப்பட்டமான “demand" "supply" விகிதம் தெரியாததால்.
இந்த பிராம்மாண்டம் ஓவர் சப்ளையாகி(அடிக்கடிப் பார்த்து)
நமக்கு பிடிக்காமல் போய்(டீமாண்ட் கம்மியாகி)விடுகிறது.
அதைக்காட்டுவதில்தான் திறமை வேண்டும்.
படம் எடுப்பது "corporatise"ஆகி உள்ளது. ஆனால் கொடுக்கும் முறை
professional ஆகவில்லை.
உங்கள் படம் என் பதிவில் போட்டிருக்கிறேன் வந்து பார்த்திட்டு போங்க.
http://yovoice.blogspot.com/2009/08/blog-post_21.html
கில்லி நொ - 5
என்னோடு நேற்று படம் பார்த்த என் நண்பர்கள் அனைவருக்கும் படம் பிடித்து இருக்கிறது.
படம் எடிட்டிஙில் நீளத்தை குறைத்தால் படம் நன்றாகவே ஓடும் என் நினைக்கிறேன்
நேத்து நைட் வரைக்கும் உங்க விமர்சனத்துக்காக வெயிட் பண்ணிட்டு
வேற வழியில்லாம(ரூம்லே பசங்க தொல்ல தாங்க முடியாம) டிக்கெட் புக் பண்ணிட்டேன்...
வடை போச்சே...
நல்ல விமர்சனம்...
நான் வேற நாளைக்கி டிக்கெட் வாங்கிட்டேனே...
என்ன செய்ய?
நான் வேற நாளைக்கி டிக்கெட் வாங்கிட்டேனே...
என்ன செய்ய?
Friends thollainala, nethikku second show paarka ponaen...
10.30 kku ulla poittu, 2 manikku thaan velila vittaanga...
Pasanga ellam eluppi koottu varave, naeram aidichu...
அலாவுதீன் (பிரபுதேவா நடித்தது) அதும் இதே மாதிரி கதை தான். திருந்தவே மாட்டார்களா ?
இப்படியே போன விக்ரம காப்பாத்த இன்னொரு பாலா வர மாட்டார்
அட போங்க..
நேத்து நைட் வரைக்கும் உங்க விமர்சனத்துக்காக வெயிட் பண்ணிட்டு
வேற வழியில்லாம(ரூம்லே பசங்க தொல்ல தாங்க முடியாம) டிக்கெட் புக் பண்ணிட்டேன்...
//
naan nethu kandasamy vimarsan eluthi irunthen neenga en varala
naan nethu kandasamy vimarsan eluthi irunthen neenga en varala//
தப்புதாங்க இனிமே தவறாம வந்தர்றேன்...
http://oliyudayon.blogspot.com/2009/08/inglourious-bastards-2009.html
இந்த படத்துக்கு இவ்வளவு கால தாமதம் ஏன்???
எதற்கு வடிவேல்? ......
என்னமோ போங்க அண்ணே என்னோட இருநூறு
காலி ஆனது தான் மிச்சம்.....
வடை போச்சே...
thanks இரவுப்பறவை
யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையமுன்னு இல்லாம படம் பாத்துட்டு வந்து ஒளிவு மறைவு இல்லாம விமர்சனம் பண்ணி எங்க பாக்கெட்டையும் மூணு மணி நேர டைமையும் காப்பாத்துறீங்களே உமக்கு ஒரு சிலை வைக்கணும்.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்ப்பேன். எனக்கு இந்த படம் சுத்த சொதப்பல் ஆகிவிடும் என்று ஒரு உள்ளுணர்வு சொல்லியது.
சூப்பரா நோகடிச்சுடுச்சு போலிருக்கு..
படம் நல்லா இருக்கும் அப்படின்னு எதிர்ப்பார்த்தேன்.. இப்படி சொதப்பிட்டாங்களே..
ஆச.. தோச.. அப்பளம் வட..!!!
உங்கள் விமர்சனத்தை தேடினேன். லாஜிக் இல்லை என்றாலும், கிராபிக்ஸ் பிரமாண்டம் என்றால் பணம் மட்டும் செலவழிப்பது இல்லை என்று ஷங்கர், சுசி கணேசன், விக்ரம் உணர்வார்கள்.//
மகதீரா படம் இன்னும் சென்னையில் ரிலீஸ் ஆகவில்லை..
நானும் அந்த ஒரு வாட்டி பாத்துட்டுதான் எழுதினேன். மூவி போஸ்டர்.
திருட்டுப்பயலே, டிஷ்யூம் படத்தை பார்த்த பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களில் வரிசையில் அவரும் இருக்காருனுல்ல நினைச்சேன்//
சுசிகணேசனின் களம் இது கிடையாது.. அதே போல் டிஸ்யூம் சுசி இயக்கவில்லை. அது சசி
நீங்கள் சொல்வதுபோல் சூர்யா நிச்சயமா முந்திவிடுவார் வந்தியத்தேவன்.
நீங்க பொழைக்க இதைவிட எவ்வளவோ இருக்குண்ணே..
எங்க தலயோட "மஹதீரா.."..?!?!?
இல்ல, டிஸ்ட்ரிப்யூஸன்ல பணத்தை எடுத்துட்டாப்லயா..?
:(//
அவரு எடுக்கிற எல்லா பெரிய படங்களின் ரிசல்டும் இப்படித்தான் இருக்கும். படம் ரிலீஸுக்கு முன்னால் படம் அப்படி இப்படின்னு சொல்வாரு.. ரிலீஸுக்கு பின்னால டைரக்டரை திட்டு, திட்டுன்னு திட்டுவாரு..
இதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும். ம்ஹும்
சைட் கேப்ல உங்கள மறுபடி யூத்னு சொல்லிக்கிட்டீங்க... தலைவரே உங்க அழிச்சாட்டியம் தாங்கல...
ஹூம்.. விக்ரம் பாவம் :-(
யாருடைய பதிவுன்னு தெரியல.. ஆனா கந்தசாமி நொந்தசாமிதான்னு யாருக்கோ 2 மாதத்துக்கு முன்னால பின்னூட்டம் போட்டேன். அநேகமாக உண்மைத்தமிழன் பதிவாக இருக்க வேண்டும்.உங்க விமர்சனப்படி கந்தசாமி நிஜமாயே நொந்தசாமி என்றால் கைவசம் நமக்கும் ஒரு தொழில் இருக்கு போல இருக்கு
வந்தியத்தேவன் said
///இல்லையென்றால் இளைய தலைவலிகளுடன் விக்ரமும் சேர்ந்துகொள்ளவேண்டியதுதான் சைக்கிள் கேப்பில் சூர்யா முந்திவிடுவார்///
ஏற்கனவே முந்திவிட்டார் சூர்யா என்பது என் கருத்து.... இப்போதுள்ள நடிகர்களில் காமெடியையும் தனியாளாக கையாளக்கூடியவர் சூர்யா மட்டும் எனபது என் கருத்து (கமலை ஆட்டத்தில சேர்க்காதீங்கண்ணா)
அந்த தெலுங்கு கிருஷ்ணா 'பிரின்ஸ்' பாபு அப்பாவா?
அந்த தெலுங்கு கிருஷ்ணா 'பிரின்ஸ்' பாபு அப்பாவா?
:(((
அந்த தெலுங்கு கிருஷ்ணா 'பிரின்ஸ்' பாபு அப்பாவா?//
ஆமா...கிருஷ்ணா பிரின்ஸ் மகேஷ் பாபுவோட அப்பா தான்....
போயும் போயும் இந்தப் படத்துக்கு கூட்டிட்டு வந்தீங்களே அப்படின்னு வீட்டுக்காரி கிட்ட வாங்கி கட்டிக்கிட்டது தான் மிச்சம்...
காஸ்ட்லி குப்பை...:(
:)
பேசாம நான் இனையத்தில் கொரியா படம் பார்த்துகிறேன்....:)))
//
நலலா இருந்தா நாலு படம் எனக்கு அனுப்பி வையுங்க சிண்டாக்
ஆமாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு..
ஒப்பனிங் வைத்து எஸ்கேப்பானால் தப்பிக்கலாம்.
//
:)
//
நீங்களும் மாட்டிட்டீங்களா. சார்..
professional ஆகவில்லை//
ரைட்டு..
:)
என்னோடு நேற்று படம் பார்த்த என் நண்பர்கள் அனைவருக்கும் படம் பிடித்து இருக்கிறது.
படம் எடிட்டிஙில் நீளத்தை குறைத்தால் படம் நன்றாகவே ஓடும் என் நினைக்கிறேன்
//
எனக்கு தெரிந்து வெகு ஜனங்களுக்குதான் பிடிக்கவில்லை அருண்.. உங்களுக்கு பிடித்திருந்தால் அது தவறில்லை.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.. எனக்கு பிடிக்கவில்லை
நேத்து நைட் வரைக்கும் உங்க விமர்சனத்துக்காக வெயிட் பண்ணிட்டு
வேற வழியில்லாம(ரூம்லே பசங்க தொல்ல தாங்க முடியாம) டிக்கெட் புக் பண்ணிட்டேன்...
வடை போச்சே...
//
பாராட்டுக்கு மிக்க நன்றி இரவுபறவை/
இது சூப்பர் அரவிந்த்.. எடுத்து என்ன பிரயோசனம்.. ??
எனக்கும் ஸ்ரேயா மட்டுமே ..
//
வருகிறேன் பிரசன்னா..
இந்த படத்துக்கு இவ்வளவு கால தாமதம் ஏன்???
எதற்கு வடிவேல்? ......
என்னமோ போங்க அண்ணே என்னோட இருநூறு
காலி ஆனது தான் மிச்சம்...//
எதுக்கு இவ்வளவு செஞ்சி இவ்வளவு மொக்க படம்..
நீங்க மாயாஜால்ல பாத்தீங்களா../ நான் 60 ரூபாவுல முடிச்சிட்டேன். கமலாவில..
சூப்பரா நோகடிச்சுடுச்சு போலிருக்கு..
படம் நல்லா இருக்கும் அப்படின்னு எதிர்ப்பார்த்தேன்.. இப்படி சொதப்பிட்டாங்களே..
//
உங்களை பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு. எல்லாத்திலேர்ந்தும் தப்பிச்சி.. நைஜீரியாவுல இருக்கீங்களே.. இராகவன் அண்ணே..
//
தெரிஞ்சே ஆப்பு வச்சிக்கிறவஙக்ள என்ன்னு சொல்றது விசான்னா..?
//
வாழ்த்துக்கள்.
யாருடைய பதிவுன்னு தெரியல.. ஆனா கந்தசாமி நொந்தசாமிதான்னு யாருக்கோ 2 மாதத்துக்கு முன்னால பின்னூட்டம் போட்டேன். அநேகமாக உண்மைத்தமிழன் பதிவாக இருக்க வேண்டும்.உங்க விமர்சனப்படி கந்தசாமி நிஜமாயே நொந்தசாமி என்றால் கைவசம் நமக்கும் ஒரு தொழில் இருக்கு போல இருக்கு
//
நீங்க ஒரு தீர்க்க தரிசி..
ஆமா செல்வேந்திரன் பரிசல் சித்தப்பா கிட்ட சொல்லி வைக்கணும்
ஆமா செல்வேந்திரன் பரிசல் சித்தப்பா கிட்ட சொல்லி வைக்கணும்
என்னோடு நேற்று படம் பார்த்த என் நண்பர்கள் அனைவருக்கும் படம் பிடித்து இருக்கிறது.
படம் எடிட்டிஙில் நீளத்தை குறைத்தால் படம் நன்றாகவே ஓடும் என் நினைக்கிறேன்
//
சார் உங்க மத்த பட விமர்சனம் ரொம்ப சரியாகவும் நடுநிலையாகவும் இருக்கும் . ஆனால் இந்த பட விமர்சனத்தில் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம். அருண் சொன்னதை போல எனக்கும் என் நண்பர்களுக்கும் படம் ரொம்ப மட்டமான படமாக தோணவில்லை .
கதை எல்லாம் பழைய கதை தான் . ஆனால் விக்ரமின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது . சுசி சுதப்பி இருக்கிறார் திரை கதையில் . இருந்தாலும் விக்ரம் வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன . வடிவேலுவின் காமெடி எரிச்சல் மூட்டுகிறது . அதே போல் தான் ஷ்ரேயா வரும் சில காட்சிகள் . மொத்தத்தில் ஒரு 40 -45 நிமிடம் படம் ரொம்ப மொக்கை தான் . புதிதாக எதையுமே சொல்ல வில்லை யோசிக்கவும் இல்லை தான் . அதற்காக பார்க்கவே சகிக்காத படமாக இதை சொல்ல முடிய வில்லை. எத்தனையோ நல்ல காட்சிகள் படத்தில் உள்ளன .அதை எல்லாம் நீங்க, நீங்க மட்டும் இல்ல யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க .சினிமாவை பற்றி நன்கு தெரிந்த உங்களிடம் இதை எல்லாம் எதிர்பார்த்தேன். படத்தின் நீளம் ஒரு பெரிய மைனஸ். சரியாக எடிட்டிங் செய்திருந்தால் ஓரளவுக்கு interestinga இருந்திருக்கும் .வடிவேலு கேரக்டர் இந்த படத்திற்கு தேவையே இல்லை .
//அதை காட்டியதாலேயேஎ ஓப்பன் க்ரவுண்டில் இருட்டில் சுத்தி, பறந்து அடிப்பது எப்படி முடியும் என்ற கேள்வி எழுகிறது//
அதை தான் setup என்று காட்டி இருப்பார்களே . கயிறு கட்டி பறப்பது கோழி சத்தம் ரெகார்ட் செய்ய பட்டது என எல்லாமே காட்டி இருப்பார்களே படத்தில் .
எரிச்சலூட்டும் கேமரா , எடிட்டிங் , வடிவேலு இது போன்ற பெரிய தவறுகளை சரி செய்தால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது .
விக்ரம் எந்த ஒரு குறையும் வைக்க வில்லை. அவருக்கு கொடுத்த வேலையை 100% நன்றாகவே செய்துள்ளார் . விக்ரம் என்ற கலைஞனையாவது, அவரின் கடின உழைப்பையாவது நீங்கள் பாராட்டி இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து .
முதல் முறை comment எழுதுறேன் .மிக நீளமான commenttukku மன்னிக்கவும் . என் மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவு தான் .
இப்படிக்கு ,
சினிமாவை நேசிக்கும் ஒரு சாதாரண ரசிகன் ,
ராஜன்.
//
என் பர்ஸில் பட்டது என்ன தெரியுமா?
ஒளிப்பதிவு என்று இவர் முடிவு செய்துவிட்டார் போல.கந்தசாமி பார்த்தால் கண்வழி கன்பார்ம்.
உங்கள் பின்னூட்டத்திலேயே தெரிகிறது நீங்கள் விக்ரமின் அபிமானி என்று.. உங்கள் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறீர்கள்.. சுசி சொதப்பிவிட்டார் திரைக்கதையில் என்று. வடிவேலு காட்சிகள் எரிச்சலாய் இருக்கிறது என்று.. ஸ்ரேயா காட்சிகளையும் சாடியிருக்கிறீர்கள்.. அடுத்து டெக்னிகலாக எரிச்சலூட்டும் கேமரா என்று சொல்லியிருக்கிறீர்கள்.. பாருங்கள் நீங்கள் அவ்வளவு மோசமிலலை என்று சொல்லும் படத்திலேயே இவ்வளவு குறைகளை அடுக்கி வைத்துள்ளீர்கள்.. இவ்வளவு குறைகளை அடுக்கி வைத்த நீங்கள் ஏன் எவ்வளவோ காட்சிகள் நன்றாக இருக்கிறது அதை யாரும் சொலல்வேயிலலை என்று ஆதங்கபட்ட நீங்கள் ஏன் ஒரு காட்சியை கூட சொல்லவில்லை.. அந்த அளவுக்கு படத்தின் காட்சிக்ள் ஒட்டவிலலை
பிறகு அவர் கோழி மேட்டரை ஒரு பாண்டஸியாக வைத்திருந்தாலும் பரவாயில்லை. திரைக்கதைககாவது உபயோகபட்டிருக்கும். அவர் அதை விளக்கிய பின் யோசித்து பாருங்கள்.. ஓப்பன் மனையில் கந்தசாமி வந்தா பாக்கலாம்னு நிக்கிற் வில்லன்களுக்கு முன்னால் எவ்வளவு தூரத்துக்கு வயர் கட்ட முடியும்.. எவ்வாறு அங்கு ஒளிந்திருக்க முடியும்.. ஒரு வேளை அந்த கிழவனின் அனுமதியுடன் உட்கார்ந்திருப்பதாய் காட்டினால் சரியாக இருந்திருக்கும்.. லாஜிக்கை சொல்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத காட்சிகளை காட்டிவிட்டு.. கேள்விகளை முடுக்கி விட்டார். இயக்குனர்.
நன்றாக என் விமர்சனதை படித்த் பார்த்தால் விக்ரமின் உழைப்பை பாராட்டியிருப்பேன்.. ஏன் வசனத்தை பாராட்டியிருப்பேன்.
உங்கள் \நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க ந்ன்றி ரோபாட்.
சரிவிடுங்க ஜெய்சங்கர்.. எவ்வளவோ பாத்துட்டோம்.. இதை பாக்க மாட்டோமா../
ஒளிப்பதிவு என்று இவர் முடிவு செய்துவிட்டார் போல.கந்தசாமி பார்த்தால் கண்வழி கன்பார்ம்.
//
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தறுதலை..