Thottal Thodarum

Dec 31, 2009

தமிழ் சினிமா 2009

வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம்.

ஜனவரி
பொங்கலுக்கு ரீலீசான விஜய்யின் வில்லு, சன்பிக்சர்ஸின் படிக்காதவன், ராஜ்டிவியின் செமி டப் படமான காதல்னா சும்மா இல்லை, ஏவிஎம்மின் அ..ஆ..இ..ஈ.., அதே போல தமிழ் தெலுங்கு இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட என்னை தெரியுமா?, வெண்ணிலா கபடிக்குழு என்று படங்கள் ரிலீஸானதில் விஜயின் வில்லுவை பற்றி நானேதும் சொல்லத் தேவையில்லை.ஏவிஎம்மின் அ..ஆ.. இ… படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தும் பெரிய தோல்வியை அடைந்தது. ராஜ்டிவியின் காதல்னா சும்மா இல்லை படம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், படம் நந்தி விருது பெற்றது. தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த கேரக்டரில் ரவிகிருஷ்ணாவை போட்டு அவர் சம்மந்தபட்ட காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி, வடை போச்சே கதையாகிவிட்டது. தனுஷின் பொங்கல் ரிலீஸான படிக்காதவன் படத்தின் ரிப்போர்ட் படு கேவலமாய் இருந்தாலும், சன் பிக்சர்சின் தயவால் நல்ல ஓப்பனிங். அதனால் தப்பிவிட்டது என்றே சொல்ல வேண்டும். மாதக் கடைசியில் வந்த வெண்ணிலா கபடிக்குழு. சின்ன பட்ஜெட் படமென்றாலும் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். எதிர்பார்ப்பை திருப்தி செய்ததால் ஹிட்.

தோல்வி படங்கள் : வில்லு, காதல்னா சும்மா இல்லை, அ.. ஆ..இ..ஈ,
அவரேஜ் ஹிட் : படிக்காதவன்
ஹிட் ; வெண்ணிலா கபடி குழு

பிப்ரவரி
இந்த மாதத்தில் வெளியான முக்கிய படங்கள் பாலாவின் “நான் கடவுள்” விகடன் டாக்கீஸின் “சிவா மனசுல சக்தி” பிரபு சாலமனின் “ லாடம்” த.நா.07.அல.4777. சுமார் மூன்று ஆண்டுகள் உட்கார்ந்து மெனக்கெட்டு எடுக்கப்பட்ட, சுமார் 14 கோடி செலவு செய்யப்பட்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பாலாவின் நான் கடவுள். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்காக இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் அந்த பெருமை பாலாவை சேரும். படம் பல விதமான சர்சைகளையும், சண்டைகளையும், பாராட்டுகளையும் பெற்றாலும், வசூல் ரீதியில் வெற்றியில்லை என்றே சொல்ல வேண்டும். காதலர் தினத்தன்று வெளியான சிவா மனசுல சக்தி ஜீவாவுக்கு ஒரு மறுவாழ்வை அளித்தது என்றால் அது மிகையில்லை. விகடனின் தயாரிப்பில், அவர்களின் தரத்துக்கு இந்த படம் கீழாக இருந்தாலும், வசூல் ரீதியில் பல முக்கிய ஏ செண்டர் நகர்களில் வெற்றி பெற்று சுமார் நாலு கோடியில் தயாரிக்கப்பட்டு எட்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்த படம். லக்கி நம்பர் செவனையும், கிம்.கி.டுக்கின் கதாநாயகி கேரக்டரையும் சேர்த்து செய்த லாடம் சத்தமேயில்லாமல் போக, அடுத்து வந்த த.நா.07.அல.4777 படம் ஆங்கில ஹிட்டான சேஞ்சிங் லேன்ஸை , ஹிந்தியில் டாக்ஸி நம்பர் என்று நானாபடேகருக்காகவே ஓடிய படம் தமிழில் ஏனோ வெற்றி பெறவில்லை.

தோல்வி : லாடம், த.ந.07.அல.4777
ஆவரேஜ் : நான் கடவுள்
ஹிட் : சிவா மனசுல சக்தி

மார்ச்
முதல் படம் ஓடி நாலாவது வாரம் கழித்து ஒரு படத்தை வெளியிடும் சன் பிக்சர்ஸின் தீ, ரிலையன்ஸின் தயாரிப்பில் மாதவன் நடிக்க யாவரும் நலம், சரத்தின் 1977, லிங்குசாமியின் தயாரிப்பில் நதியா ஆண்டி நடித்த பட்டாளம், ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம், அப்புறம் தமிழ் அருந்ததி. சன் பிக்சர்ஸ் மாங்கு மாங்கு என்று ரிலீஸ் டேட் அன்று காலையே சூப்பர் ஹிட் என்று விளம்பரப்படுத்தி நியூஸ் எல்லாம் போட்டாலும் ஆப்பு வாங்கிய படம். அதனாலென்ன சேனலுக்கு ஒரு படமாச்சு. ரிலையன்ஸின் தயாரிப்பில் சுமார் 6 கோடி தயாரிப்பில் தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் 27 கோடி ரூபாய் சம்பதித்த படம். சரத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஆசையில் எடுக்கப்பட்ட 1977, சரத் என்னதான் பாடி காட்டினாலும் நம்ம தலைவில் நமீதாவின் பாடிக்கு ஈடாகாமல் திரைமுழுவது தங்கத்தலைவியே ஆக்கிரமிக்க, ஒன்றும் புரியாததால் ரிசல்ட்.. விஜய் டிவியில் ஹிட்டான ஒரு சீரியலை மையமாய் கொண்டு அதே இயக்குனரை வைத்து, நதியாவை முன்வைத்து தயாரிக்கப்பட்டபடம். இந்த படங்களையெல்லாம் விட ராமநாராயண் டப் செய்து ரீலீஸ் செய்த தெலுங்கு அருந்ததி.. தமிழ்நாட்டில் ஒருரவுண்டு கட்டி அடித்தது என்றால் அது மிகையில்லை. வழக்கம் போல நல்ல சினிமா ஓடாது என்பதற்கேற்ப காஞ்சிவரத்தை யாரும் சீந்தக்கூட இல்லை.

தோல்வி படங்கள் : தீ, பட்டாளம்
ஆவரேஜ் : அப்படி சொல்ல ஏதுமில்லை
ஹிட் : டைரக்ட் படம் “யாவரும்நலம்” டப்பிங்கில் “ அருந்ததி”

ஏப்ரல்
ஏவிஎம் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அயன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ஆனந்த தாண்டவம், மிகவும் எதிர்பார்க்கப் ப்ட்ட குங்குமபூவூம் கொஞ்சு புறாவும், ராஜ் டிவியின் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த விஜய்காந்தின் மரியாதை, வினயனின் நாளை நமதே, கார்த்திக் அனிதா போன்ற படங்கள் வெளியாகின.. வெளியான நாள் முதலே சூப்பர் ஹிட் என்று தெரிந்த படம் அயன், சன் பிக்ஸர்சின் நிஜமான வெற்றிப்படம் என்றால் அது அயன் தான். தமிழில் பின்னியெடுத்த இந்த படம் தெலுங்கில் ஏவிஎம்மே டப் செய்து வெளியிட்டு தோல்வியடைந்தது வேறு விஷயம். சுஜாதாவின் பிரபல நாவலான “பிரிவோம் சந்திபோமை” அப்படியே எடுகிறேன் என்று சுஜாதாவுக்கு நல்லது செய்வதாய் நினைத்து திரைக்கதையில் தனக்கு தானே வெட்டி கொண்டார் குழி இயக்குனர் காந்தி கிருஷ்ணா. படம் வெளிவருவதற்கு முன்பே யுவனின் பாடல்கள் ஹிட்டாகியிருக்க, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவுக்கான எதிர்பார்ப்பு எகிறியிக்க,எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஈடு கட்டாததால் வேலைக்காகவில்லை. அதற்கு அப்புறம் வந்த கார்த்திக் அனிதா போன்ற படங்கள் வெளியாயின.

தோல்வி படங்கள் : கார்த்திக் அனிதா, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும், ஆனந்த தாண்டவம், மரியாதை, நாளை நமதே
ஆவரேஜ் : சென்ற மாதம் ரிலீஸான அருந்ததி,
ஹிட் : அயன்

மே
பாண்டியராஜின் பசங்க, தாய் தமிழ் செல்வனின் இயக்கத்தில். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியான நீயூட்டனின் மூன்றாவது விதி, விஷ்ணுவர்தனின் சர்வம், சக்தி சிதம்பரத்தின் ராஜாதி ராஜா, விஷாலின் தோரணையை தவிர பல சின்ன படங்களான, மெய்ப்பொருள்,பிரம்ம தேவா போன்ற படங்களும் வெளியாகின. பாண்டியராஜின் பசங்க விமர்சகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, சூர்யாவின் நீயூட்டனின் மூன்றாவது விதி வேறு யாரும் நடித்திருந்தால் கொஞ்சமாவது ஓடியிருக்க வாய்ப்பிருக்கிறது. சூர்யாவால் ஓடாத படம் என்றுதான் சொல்லவேண்டும். விஷ்ணுவர்தனின் சர்வம் மிகவும் எதிர்பார்க்க பட்ட ஒரு படம், 21 கிராம்ஸ் என்கிறா ஆங்கில படத்தின் தழுவல். சரியான திரைக்கதையில்லாமல் போனதால….., விஷாலில் தோரணை தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டு இரண்டிலும் தோல்வி அடைந்தபடம். ராஜாதிராஜாவும் அஃதே

தோல்வி படம் : நியூடனின் மூன்றாவது விதி, சர்வம், ராஜாதிராஜா, தோரணை, மெய்பொருள், பிரம்மதேவா,
ஆவரேஜ்; பசங்க
ஹிட் : அநேகமாய் ப்சங்க..

ஜூன்
மாயாண்டி குடும்பத்தார், குளிர் 100, சன்னின் மாசிலாமணி, ராகவன், முத்திரை, நாடோடிகள், வால்மிகி. மாயாண்டி குடும்பத்தார் மிகச் சிறிய பட்ஜெட்டில் சூப்பர்16ல் தயாரிக்கப்பட்டு, பத்து டைரக்டர்கள் நடித்த படம், சென்னை, போன்ற பெரு நகரங்களில் பெரிதாக ஓடவில்லை. ஆனால் பி,சி செண்டர்களில் நல்ல வசூலை பெற்று தந்த படம், பழுதில்லை. மாயாஜால் ஓனரின் பெண் அனிதா உதிப் இயக்கிய படம் குளிர்100. வழக்கம் போல சன் பிக்சர்சின் தொடர் இம்சையால் சுமாராய் கலக்ட் செய்த படம், ராகவன், முத்திரை பற்றியெல்லாம் ஏதும் சொல்வதர்கில்லை, சிவா மனசுல சக்திக்கு பிறகு வால்மிகியில் இறங்கிய விகடன் அதன் தோல்வியால் தயாரிப்பையே நிறுத்தும் அளவுக்கு அடியை கொடுத்த படம். நாடோடிகள் சசிகுமார் நடித்த படம் இவ்வாண்டின் சிறப்பாய் ஓடிய படங்களில் இரண்டு படங்களில் இவரின் பங்கு இருக்கிறது.
தோல்விபடம் : ராகவன், முத்திரை, வால்மிகி, குளீர்100
ஆவரேஜ் ; மாயாண்டி குடும்பத்தார், மாசிலாமணி
ஹிட் : நாடோடிகள்

ஜூலை
ஞாபகங்கள், இந்திரவிழா, வாமனன், வைகை, வெடிகுண்டு முருகேசன், அச்சமுண்டு அச்சமுண்டு, மோதி விளையாடு, மலையன் ஆகிய படங்கள் வெளியாகின. வித்தக கவிஞர் விஜய் நடிகராக ஆசைப்பட்டு ரெயின் கோட் என்கிறா ஹிந்தி படத்தை தழுவி எழுக்கப்பட்ட படம் ஞாபகத்தில் வைக்க முடியாத படம் நமக்கும் அவருக்கும். இந்திரவிழா நமிதாவுக்காக பார்த்த படம். சுப்ரமணியபுரம் ஜெய் தான் நடிக்கும் படத்திலே இது தான் சிறந்த படம் என்று சிலாகித்த படம். முடியல. வைகை, வெடிகுண்டு முருகேசன், அச்சமுண்டு, அச்சமுண்டு எல்லாம் பற்றி விவரிக்க தேவையில்லை. சரணின் மோதி விளையாடு வந்து சுவடே தெரியாமல் போனது. அதே போல் கரணின் மலையனும்.
தோல்வி : ஞாபகங்கள், இந்திரவிழா, வாமனன், வெடிகுண்டு முருகேசன்,அச்சமுண்டு அச்சமுண்டு, மோதி விளையாடு, மலையன், வைகை

ஆகஸ்ட்
சிந்தனை செய், ஈசா, மலை மலை, பொக்கிஷம், கந்தசாமி ஆகியவை வெளியாகின. சிந்தனை செய் ஹிந்தி ஜானி கத்தாரை தழுவி எடுக்கப்பட்ட படம் ஒரளவுக்கு சுமாரான படம் . ஆனால் சரியான விளம்பரம் இல்லாததால் ரேஸில் ஓடவில்லை, ரொம்ப நாள் கழித்து விக்னேஷ் நடிப்பில் பாலாவின் சீடரின் இயக்கத்தில் வெளியான ஈசாவை பற்றி பெரிதாய் சொல்ல எதுவுமில்லை, கதாநாயகியை தவிர, ஒரு வழியாய் அருண் விஜயின் மலை மலை ஓரளவுக்கு மக்களிடையே சென்ற்டைந்தது. படத்தின் தயாரிப்பை விட விளம்பரங்களுக்கு செலவு செய்தது தான் சிறப்பு. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சேரனின் பொக்கிஷம் படு தோல்வியடைந்தது. அதே போல் விக்ரமின் கந்தசாமி. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி புஸ்ஸானாலும் மசாலா படமாததால் நல்ல ஓப்பனிங்க பெற்ற படம்.
தோல்வி : சிந்தனை செய், ஈசா, பொக்கிஷம்,
ஆவரேஜ் : மலைமலை, கந்தசாமி

செப்டம்பர்
நினைத்தாலே இனிக்கும், மதுரை சம்பவம், ஈரம், சொல்ல சொல்ல இனிக்கும், உன்னைப் போல் ஒருவன், கண்ணுக்குள்ளே, மதுரை டூ தேனி, திரு..திரு.. துறு.துறு.. ஆகிய படங்கள் வெளியாகின. வழக்கம் போல சன் இம்சையினாலும், இரண்டு பாடல் ஹிட்டினாலும் வெகு சுமாராய் வசூல் செய்த படம், ராமநாராயணன் சன்னுக்கு ஈடாய் கலைஞரில் தொடர் விளம்பரபடுத்தியும் பெரிதாய் செல்ப் எடுக்காத படம், ஹீரோ ஹரிகுமாருக்கு பதிலாய் யார் நடித்திருந்தாலும் இதை விட பெரிதாய் ஓடியிருக்கும். சங்கரின் உதவியாளர் அறிவழகனின் ஈரம் வழக்கமான ஒரு காதல் கதையை கொடுக்காமல் கொலை, பேய் என்று வித்யாசமாய் யோசித்து டெக்னிகலாகவும், இயக்குனராகவும் நின்ற படம். மதுரை டூதேனி மிக குறைந்த செலவில் சுமார் 45-50 லட்சங்களில் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலில் வெளியான படம், சாடிலைட் ரைட்சிலேயே சுமார் 25 லட்சத்துக்கு மேல் வசூல் செய்துவிட்டது. படம் படு சுமார் என்றாலும் ஏதோ தேத்தி விட்டார்கள் என்றேன் சொலல் வேண்டும். அதே போல பெரிய படங்களுக்கு நடுவில் வெளியான சொலல் சொல்ல இனிக்கும், விளம்பரம் பெரிதாய் இல்லாததாலும், சரியான தியேட்டர்களில் வெளியாகாகதாலும் படம் நல்லாருக்கா இல்லையா என்று யோசிப்பதற்குள் ஓடிவிட்டது தியேட்டரை விட்டு. கமலில் உன்னை போல் ஒருவன் ஒரே சமயத்தில் சுமார் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 50துக்கும் மேற்பட தியேட்டர்களில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம். கமலின் ஹாட்ரிக். சத்யம் சினிமாஸின் திரு.திரு..துறு..துறு ஒராளவுக்கு நலல் பேர் பெற்றாலும் இவர்களுக்கு அதே பிரச்சனை குறைந்த தியேட்டரக்ளில் வெளியீடு, கமலுடன் வெளியானதால் கவனிக்க படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தோல்வி: மதுரை சம்பவம், சொல்ல சொலல் இனிக்கும், கண்ணுக்குள்ளே,
ஆவரேஜ்: நினைத்தாலே இனிக்கும், மதுரை டூ தேனி, திரு திரு துறு துறு
ஹிட் : ஈரம், உன்னைப் போல் ஒருவன்


அக்டோபர்
மூணார், பேராண்மை, ஆதவன், கண்டேன் காதலை வெளியான மாதம். மூணார் அதை பற்றி பெரிதாய் பேசத் தேவையிலலை. பேராண்மை வெகு நாட்களுக்கு பிறகு ஐங்கரனுக்கு லேசான ஆக்சிஜனை கொடுத்த படம். ஆதவன் சூர்யாவின் கிரேஸ், கே.எஸ்.ஆர். கலைஞர் டிவியின் தொடர் விளம்பரம், ஹரிஸின் ஹிட் பாடல்கள், வடிவேலுவின் காமெடி என்று வெளிவந்த சிறந்த மொக்கை படம். சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுத்த படம். ஆனால் படம் ஓடியது வடிவேலினால். சிறந்த மார்கெட்டிங்கில்னாலும் வேறு ஏதும் பெரிய படம் இல்லாததாலும் பெரும்பாலான இடங்களில் நல்ல வசூல் ஒரு சில ஏரியாக்கள் தவிர. வழக்கம் போல் சன், கண்டேன் காதலை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. சந்தானம் இப்ப்டத்தின் கதாநாயகன்.

தோல்வி : மூணார்
ஆவரேஜ் : பேராண்மை, கண்டேன் காதலை
ஹிட் : ஆதவன்


நவம்பர
சா..பூ..த்ரி.. அதே நேரம் அதே இடம், நான் அவன் இல்லை 2 இப்படங்களை பற்றி சொல்வதற்கு ஏதுமிலலை
தோல்வி : மூன்றுமே

டிசம்பர்
ரேணி குண்டா, வேட்டைக்காரன். ரேனி குண்டா மிக சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியான படம். ஒரு சிறிய படத்திற்கு எவ்வாறு அக்ரசிவ் மார்கெட்டிங் செய்ய வேண்டும் என்று இப்படத்தை பார்த்தால் தெரியும். படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 4-5 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஓப்பனிங்கை கொடுத்த படம் அடுத்த அடுத்த வாரங்களில் வயலன்ஸ் அதிகமான காட்சிகளால் பெரிதாய் வெகு ஜனங்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் ஹிட்தான். வழக்கம் போல சன்னின் தொடர் இம்சை வேட்டைக்காரன். முதல் மூன்று நாட்கள் சூப்பார்ர்ர்ர் ஓப்பனிங். அடுத்த நாட்களில் தொபக்கடீர் என்று விழுந்து, அவர்களும் என்னன்னவோ விளம்பரம் எல்லாம் கொடுத்து பார்த்து கொண்டுதானிருக்கிறார்கள். மொக்கை கதை திரைக்கதையால் தூக்கி நிறுத்த முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தோல்வி : >>>??
ஆவரேஜ்: வசூலில் வேட்டைக்காரன்.
ஹிட் : ரேனி குண்டா (நிஜ ஹிட்)

சுமார் 125க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளீயாகி இருந்தாலும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் 2012லும், அவதாரும் தான் என்பது நிஜம். அந்த அந்த மாதங்களீல் வெளியான படங்களில் ஹிட் லிஸ்ட் இருந்தாலும் மொத்தமாய் இந்த வருடத்திய ஹிட் என்று கணக்கிட்டால் படத்தின் தயாரிப்பு செலவு, மற்றும் வசூலை வைத்து பார்த்தால்,

சூப்பர் ஹிட்
வெண்ணிலா கபடி குழு
அயன்
நாடோடிகள்
உன்னைப் போல் ஒருவன்
ஆதவன்

ஆவரேஜ்

சிவா மனசுல சக்தி
மாயாண்டி குடும்பத்தார்
பசங்க
கந்தசாமி
ஈரம்
பேராண்மை
வேட்டைக்காரன்
ரேனிகுண்டா

ஒரு சில படங்களை பற்றி நான் எழுதவில்லை. ஒரே வாரத்தில் ஏழு படங்கள் எல்லாம் ரிலிஸாகி தமிழ் சினிமாவையே திரும்ப வைக்க முயற்சி செய்தார்கள். :) அதை பற்றி எல்லாம் சொல்வதற்கு ஏதுமில்லை.

வாசகர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

டிஸ்கி:
லக்கியின் கூற்றுபடி இன்று மாலை காட்சி புல் என்று சொல்லியிருக்கிறார் இதோ இன்று
மாலை இப்போது எடுத்த ஸ்கீரீன் ஷாட் கமலாவுடையது.



இது சங்கம் தியேட்டர் நிலவரம். 5.50 மணீக்கு
Post a Comment

73 comments:

Rajalakshmi Pakkirisamy said...

Happy New Year!

Unknown said...

naa than firsta..

Unknown said...

ஐயோ வட போச்சே...

Unknown said...

// ஒரே வாரத்தில் ஏழு படங்கள் எல்லாம் ரிலிஸாகி தமிழ் சினிமாவையே திரும்ப வைக்க முயற்சி செய்தார்கள். :) அதை பற்றி எல்லாம் சொல்வதற்கு ஏதுமில்லை.//

இது கரெக்ட் தான்... பேராண்மை அவரேஜ் தான..,

Anbu said...

சூப்பர் ஹிட்ல இரண்டு சூர்யா படமா.....

விஜய் படமே இல்லையா....

கார்க்கி அண்ணாவுக்காக ஏதேனும் ஒன்றையாவது போட்டிருக்கலாமே அண்ணா....

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா....

ரமேஷ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ganesan said...

கேபிள்,

இந்த கட்டுரை பிரமிக்க வைக்கிறது.
நல்ல உழைப்பு தெரிகிறது.

தங்களின் திரைப்பட துறையின் நீங்கள் கொண்ட தாக்கம் புரிகிறது.

2010 ல் உங்களுக்கு நல்ல படம் இயக்குவதற்கு அமையவேண்டும் என வாழ்த்துக்கிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வலைபதிவு இவ்வளவு வாசகர்களை கொண்டுள்ளது என்பதற்கு பின்னால் உங்கள் உழைப்பு என்பது நிதர்சனமான உண்மை.

வாழ்த்துக்கள்.

Ganesan said...

கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.html

Jerry Eshananda said...

கலக்கல்

பாலாஜி சங்கர் said...

வரும் ஆண்டுகளில் நல்ல நல்ல படங்கள் வர வேண்டும் என வாழ்த்துக்கிறேன்.

இராஜ ப்ரியன் said...

நன்றி ....... முனைவர்.திரு.கேபிள்சங்கர்.MSC,Mphil,phd(in cinema)அவர்களுக்கு,

(நேரமிருந்தால், விரைவில் உலக சினிமா பற்றியும் இதுபோல ஒரு அறிக்கை எதிர்பார்க்கிறேன் என்பதை தாழ்மையுடன்தெரிவித்துக்கொள்கிறேன்)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ............. :)

CS. Mohan Kumar said...

Very detailed analysis. Excellent work. Very neutral report.

butterfly Surya said...

Annual Report.. அருமை.

கேபிள், இந்த வருடம் நீங்க எவ்வளவு தியாகம் செய்து எங்களையெல்லாம் மொக்கை படங்களிலிருந்து காப்ப்பாற்றி இருக்கிறீர்கள்.. அதற்கு ஸ்பெஷல் நன்றிகள்..

புத்தாண்டு வாழ்த்துகள்.

butterfly Surya said...

இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் 2012லும், அவதாரும் தான் என்பது நிஜம்////

ஹாலிவுட் பாலா .. ஜெயிச்சுட்டார்.

Suresh.D said...

அருமையான அலசல் தல அசத்திட்டிங்க. தொடரட்டும் உங்கள் பணி. மென்மேலும் உங்கள் எழுத்து இன்னும் எல்லோரையும் கவர புது வருட வாழ்த்துக்கள்

Ashok D said...

//இந்த வருடம் நீங்க எவ்வளவு தியாகம் செய்து எங்களையெல்லாம் மொக்கை படங்களிலிருந்து காப்ப்பாற்றி இருக்கிறீர்கள்.. அதற்கு ஸ்பெஷல் நன்றிகள்..//

நன்றி கவிஞரே!

புலவன் புலிகேசி said...

இன்று காலை "Times of India" -ல படிச்சேன். மொத்த படங்கள் 130 அதில் லாபம் கண்ட படங்கள் 18 (14%) என்று. வந்து பாத்தா நீங்களும் அதையேதான் அலசிருக்கீங்க..நல்ல அலசல் தல

புலவன் புலிகேசி said...

//2010 ல் உங்களுக்கு நல்ல படம் இயக்குவதற்கு அமையவேண்டும் என வாழ்த்துக்கிறேன்.//

கண்டிப்ப இயக்குவாரு..வாழ்த்துக்கள் தல

vanila said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கேபிள் ஜி..

Prabhu said...

படம் வெளிவருவதற்கு முன்பே யுவனின் பாடல்கள் ஹிட்டாகியிருக்க,////

நீங்களேவா? ஜி.வி.பிரகாஷில்ல? என்னஜி இது?

சைவகொத்துப்பரோட்டா said...

//நதியா ஆண்டி நடித்த பட்டாளம்,//

ஹா...ஹா...ஹா...

சங்கர் அண்ணா மற்றும் அனைவருக்கும் இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் தல

எறும்பு said...

//அளீத்தது என்றால்//
//தயாரிபில்//
//படஙக்ளும் //
//நடித்டிருந்தால் கொஞ்சமாவது//
/நகரஙக்ளில் /
/சொல்வதர்கில்லை/
/நடிகரக/
/சொல்ல ஏதுவ்மில்லை/
/அதெ போல்/
/என்றேன் சொலல்/
/சரியான தியேட்டரக்ளில்/
/கமலில் உனனி போல்/
/நலல் பேர்/
//வெளிவந்த சிறாந்த மொக்கை//
//படஙக்ளீல் //

அடுத்த ஆண்டும் மொக்கை படங்களை பார்த்து விமர்சனம் எழுதி எங்களை காக்கவேண்டும்....
பதிவில் உள்ள வார்த்தை பிழைகளை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம்..
;))

sathishsangkavi.blogspot.com said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கேபிள் ஜி..

Paleo God said...

புதிய மற்றும் நல்ல வித்தியாசமான படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது... இங்கே ஆடம்பரங்களை விட ... அசால்ட்டாக படம் எடுத்து பிரமிக்க வைக்கும் படங்கள் இந்த ஆண்டில் வரட்டும் ... உங்களுடையதும் ஒன்றாக அதில் இருக்கட்டும் (ஆறு லக்ஷம் டிக்கெட்டுகள் - இலவசமாக குடுக்க எடுத்து வைக்கவும்::)) )

உங்களுக்கும் நண்பர்களுக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .. கேபிள் ஜி.. ::) நன்றி.

திருவாரூர் சரவணா said...

ரேனிகுண்டாவிர்க்கு நிஜ ஹிட் என்று அடைமொழி கொடுத்திருந்தது ரசிக்க வைத்தது.

ஜிகர்தண்டா Karthik said...

சும்மா அலசி, துவைச்சு, காயப்போட்டு, க்ளிப்பும் போட்டு விட்டுடீங்க தல....

மரா said...

நல்ல விலாவாரியான ரிப்போர்ட் தல...தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2010ல் தங்கள் இயக்கத்தில் ஒரு தமிழ் படம் எதிர்பார்க்கிறேன்......

யுவகிருஷ்ணா said...

ரேணிகுண்டா ஹிட் என்பது நல்ல நகைச்சுவை :-)

வே.காரன் கமலா தியேட்டரில் 7 நாட்களில் கொடுத்த டிஸ்ட்ரிப்யூட்டர் ஷேர் என்ன தெரியுமா? 10 லட்சம்.

ரஜினி, கமலை தவிர வேறெவரின் படங்களும் ஒரே தியேட்டரில் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு இவ்வளவு பெரிய ஷேர் வழங்கியதில்லை. முந்தாநாள் நைட் ஷோ கூட உதயமில் வே.காரன் ஹவுஸ்ஃபுல். படம் வெளிவந்து பத்து நாட்கள் கழித்து செகண்ட் ஷோ ஹவுஸ்ஃபுல் ஆவது என்பது கடைசியாக சந்திரமுகியில் மட்டுமே நடந்தது.

இதுபோன்ற முக்கியமான மதிப்பீடுகளில் மட்டுமாவது சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு நிஜமான சாதனைகளுக்கு முக்கியத்துவம் தரலாம் :-)

அப்புறம் ‘வில்லு' தோல்வி குறித்து... படத்தின் ஃபாரின் கலெக்‌ஷன் என்னவென்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

//அதே போல பெரிய படஙக்ளுக்கு நடுவில் வெளியான சொலல் சொல்ல இனிக்கும், விளம்பரம் பெரிதாய் இல்லாததாலும், சரியான தியேட்டரக்ளில் வெளியாகாகதாலும் படம் நல்லாருக்கா இல்லையா என்று யோசிப்பதற்குள் ஓடிவிட்டது தியேட்டரை விட்டு. //


சூப்பர்ஆ சொன்னிங்க...

கார்க்கிபவா said...

வேட்டைக்காரனுக்கு மட்டும் ஆவரேஜ்(வசூலில்) என்று போட்டதன் நுண்ணரசியல் என்னவோ? மத்த படஙக்ளெல்லாம் தரத்திலும் ஆவரேஜா?

கண்டேன் காதலை ஆவரேஜா? சரி..

மாயாண்டி குடும்பத்தாரும் ஆவரேஜா? ரைட்டு

ஆதவன் சூப்பர் ஹிட்டா? அதேதான்..

கலக்கல் சகா

anujanya said...

வாவ், துறை நிபுணம் அட்டகாசம் கேபிள். ஆமா, இத்தனை படங்களையும் நீங்க பார்த்தீங்களா :((((((

கார்க்கி, என்ன மாதிரி குறைஞ்ச வெலைக்கு படிய மாட்டார் கேபிள். கொடுக்க வேண்டியது கொடுக்கணும் பிரதர் :)))

(அப்பா, மகானுபாவன்களா, ஏகப்பட்ட ஸ்மைலி போட்டுருக்கேன்)

அனுஜன்யா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கரன் said...

யுவகிருஷ்ணா said...
//அப்புறம் ‘வில்லு' தோல்வி குறித்து... படத்தின் ஃபாரின் கலெக்‌ஷன் என்னவென்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்!//

இதில் உண்மை உண்டு.

ஆதவனும் பெரிய Budget படம்தான்.
வேட்டைக்காரனும் பெரிய Budget படம்தான்.
ஆதவன் - Super Hit
வேட்டைக்காரன் - Average
***இரண்டும் மொக்கையென்பது பல பதிவுலக ஜாம்பவான்களின் கருத்து.

இரண்டு வார வசூலில் வேட்டைக்காரனின் வசூல் மிகப் பெரிது.
இரண்டு வார வசூலை மட்டும் கருத்தில் கொண்டு எப்படி படம் (வசூலில்) சராசரி என்று கூறமுடியும்.
எதிர்காலத்தை, எதிர்வு கூற மட்டும்தான் எம்மால் முடியும்.
ஆனால்...முடிவு!!!

சிவகுமார் said...

WISH U
HAPPY NEW YEAR
2010.

கார்த்திகைப் பாண்டியன் said...

2010யில் உங்கள் கனவுகள் நிறைவேறி, ஒரு நல்ல இயக்குனர் எங்களுக்கு கிடைக்க வேண்டும் தல.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..:-))

Cable சங்கர் said...

/ரேணிகுண்டா ஹிட் என்பது நல்ல நகைச்சுவை :-)//

ரேனிகுண்டா ஹிட்டா இல்லையா என்பதை என்னிடம் உள்ள ரிப்போர்ட் சொல்லும் லக்கி

??வே.காரன் கமலா தியேட்டரில் 7 நாட்களில் கொடுத்த டிஸ்ட்ரிப்யூட்டர் ஷேர் என்ன தெரியுமா? 10 லட்சம்.//

கமலா தியேட்டர் மட்டுமல்ல தமிழ் நாட்டில் உள்ள அத்துனை தியேட்டரிளூம் சூப்பர் ஓப்ப்னிங்.. ஆனால் அதுவே படத்தின் ஹிட்ட்டை கணக்கிடாது.. எங்கோ ஒரு சத்யத்திலும், ஐநாக்ஸிலும், புல் ஆவ தை பெரிதாக பேசக்கூடாது.

//ரஜினி, கமலை தவிர வேறெவரின் படங்களும் ஒரே தியேட்டரில் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு இவ்வளவு பெரிய ஷேர் வழங்கியதில்லை. முந்தாநாள் நைட் ஷோ கூட உதயமில் வே.காரன் ஹவுஸ்ஃபுல். படம் வெளிவந்து பத்து நாட்கள் கழித்து செகண்ட் ஷோ ஹவுஸ்ஃபுல் ஆவது என்பது கடைசியாக சந்திரமுகியில் மட்டுமே நடந்தது.//

யார் சொன்னது லக்கி.. சமீப கால சன் ஹிட்டான அயன் முதல் இரண்டு வாரங்களுக்கு சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் செகண்ட் ஷோ புல்.. அதே கமலா தியேட்டரில் கிறிஸ்துமஸ் அன்றைக்கும். முன்றாவது நாள் காலை காட்சி டிக்கெட் எவ்வளவு போயி\ற்று என்று உங்களால் நிச்சயமாய் கூற முடியுமா..டிஸ்ட்ரிபுயூட்டரிடம் கேட்டு சொல்லுங்க..பத்து லட்சம் ஷேர் எலலம் இன்றைய 80-100 ரூபாய் டிக்கெட்டில் ரீச்சாவது சாதாரணம்.

//இதுபோன்ற முக்கியமான மதிப்பீடுகளில் மட்டுமாவது சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு நிஜமான சாதனைகளுக்கு முக்கியத்துவம் தரலாம் :-)//

தலைவரே எனக்கு மாயாண்டி குடும்பத்தார் பிடிக்கவில்லை ஆனால் மாயாண்டி குடும்பத்தார் சென்னையை தவிர மற்ற இடங்களீல் வாங்கியவர்களுக்கெல்லாம் நல்ல மகசூல் ஏனென்றால் வாங்கிய விலை அவ்வளவு.

//அப்புறம் ‘வில்லு' தோல்வி குறித்து... படத்தின் ஃபாரின் கலெக்‌ஷன் என்னவென்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்!
//

பாரின் கலெக்‌ஷன் இங்கு சோறு போடாது. லக்கி.. ஏனென்றால் பாரினில் வசூல் செய்த பணத்தை விட பல மடங்கு இங்கு லாஸ் அதை என்னவென்று சொல்ல் எனக்கென்னவோ நீங்க தான் ஒரு சாராரை திருப்ப்தி படுத்த இப்படி அங்க ஹிட்.. இங்க் ஹிட் என்றுசொல்லுகிறீர்களோ என்று தோன்றுகிறது..

அதே போல் வேட்டைக்காரன் சென்னையின் ராஜ், அபிராமி, சங்கம்,
விஜயா, ஜோதி போன்ற இடங்கள் உஙக்ளுக்கு சாம்பிள் சென்னையை தவிர மற்ற இடங்களில் எல்லாம் எம்.ஜி, கிழிந்ந்து கிருஷ்ணகிரி.. வசூல் ஆகாமல் போஸ்டரில் மிக குறைந்த கட்டணம் என்று ஆளாளுக்கு கூவி அழைக்காத குறையாய் போஸ்டர் ஒட்டியிருப்பதை பார்க்கவில்லையா..?

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

யுவகிருஷ்ணா said...

//ரேனிகுண்டா ஹிட்டா இல்லையா என்பதை என்னிடம் உள்ள ரிப்போர்ட் சொல்லும் லக்கி//

கேபிள்!

இந்த ‘ரிப்போர்ட் விளையாட்டு' மற்ற பதிவர்களிடம் சரி. எங்கிட்டேயாவா? :-)

சினிமா வணிகம் தொடர்பான ஆட்களோடு நான் நேரடித் தொடர்பில் இருக்கிறேன். தமிழ்நாடு எண்டெர்டெயிண்மெண்ட் நம்பர் வேணுமா? நீங்களே பேசி எந்த ஏரியா எவ்வளவு கலெஷன், என்ன டிஸ்ட்ரிப்யூட்டர் ஷேர் என்று கேட்டு தெரிஞ்சிக்கிறீங்களா?


//கமலா தியேட்டர் மட்டுமல்ல தமிழ் நாட்டில் உள்ள அத்துனை தியேட்டரிளூம் சூப்பர் ஓப்ப்னிங்.. ஆனால் அதுவே படத்தின் ஹிட்ட்டை கணக்கிடாது.//

அதாவது பத்து நாட்களாக நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும் படம், இன்னும் பத்து நாளில் ஆவரேஜ் ஆகிவிடும் என்று கணக்கிடுகிறீர்கள். நல்லா பண்ணுறீங்க சார் பிசினஸூ :-)

//அதே கமலா தியேட்டரில் கிறிஸ்துமஸ் அன்றைக்கும். முன்றாவது நாள் காலை காட்சி டிக்கெட் எவ்வளவு போயி\ற்று என்று உங்களால் நிச்சயமாய் கூற முடியுமா..//

மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை சிறப்புக்காட்சி போடுகிறார்கள். ரஜினி கமல் படத்துக்கே ரிலீஸுக்கும், ரிலீஸை ஒட்டிவரும் ஞாயிறும் மட்டும்தான் ஸ்பெஷல் ஷோ.

கமலாவில் போன் போட்டு விசாரியுங்கள். இன்று ஈவ்னிங் ஷோ கூட ஃபுல்தான்.

//எனக்கென்னவோ நீங்க தான் ஒரு சாராரை திருப்ப்தி படுத்த இப்படி அங்க ஹிட்.. இங்க் ஹிட் என்றுசொல்லுகிறீர்களோ என்று தோன்றுகிறது..//

அப்படிங்களா? இதுவரைக்கும் எந்த சன் பிக்சர்ஸ் படத்தை நான் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினேன் என்று சொல்லமுடியுமா?

ஆதவன் அவுட் என்று படம் வந்தபோது எழுதிவிட்டு, இப்போது ஹிட் என்கிறீர்கள். பேராண்மை லேட் பிக்கப் என்று எழுதிவிட்டு இப்போது ஆவரேஜ் என்கிறீர்கள். முதல் நாளே காத்தாடிய பேராண்மை உங்களுக்கு ஆவரேஜா? நீங்கள் உதாரணம் காட்டிய ஜோதி தியேட்டரிலேயே ஒரு தீபாவளி ரிலீஸ் படத்தை ஒரே வாரத்தில் தூக்கினார்கள் என்றால் அது பேராண்மைதான்.

சமீபத்தில் வந்த விஜய் படங்களில் அழகிய தமிழமகன் தவிர வேறெந்த படமும் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தந்ததில்லை. தொடர்ந்து மூணு ஃபிளாப் என்று சொல்லப்பட்டாலும் விஜயின் மார்க்கெட் கில்லியாக நிற்பதற்கு இதுதான் காரணம்.

மதுரை டூ தேனியை ஆவரேஜ் என்கிறீர்கள். சென்னையிலேயே 50 நாள் கூட ஓடமுடியாத உன்னைப்போல் ஒருவனை ஹிட் என்கிறீர்கள். உங்களிடம் நான் இதற்குமேல் என்ன பேசமுடியும்?

VISA said...

//ஆதவன் சூப்பர் ஹிட்டா? அதேதான்..//

ஆதவன் சூப்பர் ஹிட் என்பதை என்னால் கடுகளவும் ஒப்புக்கொள்ள முடியாது.
ஆதவன் சூப்பர் ஹிட் இல்லை என்பதை இந்த வருடத்தின் கடைசி மறுப்பாக நான் பதிவு செய்துகொள்கிறேன்.

VISA said...

UOP super hita???

சங்கர் said...

கேபிள் சார்,

செம காமெடி சார் நீங்க. நல்லா கற்பனை உங்களுக்கு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் ரசிகன்

பித்தன் said...

romba menakeetteergalo itha ezutha arumai....

Cable சங்கர் said...

/சினிமா வணிகம் தொடர்பான ஆட்களோடு நான் நேரடித் தொடர்பில் இருக்கிறேன். தமிழ்நாடு எண்டெர்டெயிண்மெண்ட் நம்பர் வேணுமா? நீங்களே பேசி எந்த ஏரியா எவ்வளவு கலெஷன், என்ன டிஸ்ட்ரிப்யூட்டர் ஷேர் என்று கேட்டு தெரிஞ்சிக்கிறீங்களா//

சினிமா எண்டர்டெயிண்மென் நம்பர் இருந்தால் நீங்களே பேசுங்கள் பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் கவர் வாங்கிக் கொண்டு எழுதுவதுமாதிரி.. தான் அதுவும். நான் எல்லாம் நேரடியாய் கையை சுட்டுக் கொள்பவரிடம் ரிப்போர்ட் வாங்குபவன். அதுமட்டுமில்லாமல் எந்த பத்திரிக்கைக்கும் எந்த ஒரு டிஸ்ட்ரிபுயூட்டரும் ஒரிஜினல் கலெக்‌ஷனை கொடுத்தாய் சரித்தரமே கிடையாது. தயாரிப்பாளருக்கே சரியான கணக்கு கொடுக்க மாட்டாத டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எல்லாம் உண்டு தலைவரே..

/ஆதவன் அவுட் என்று படம் வந்தபோது எழுதிவிட்டு, இப்போது ஹிட் என்கிறீர்கள். பேராண்மை லேட் பிக்கப் என்று எழுதிவிட்டு இப்போது ஆவரேஜ் என்கிறீர்கள். முதல் நாளே காத்தாடிய பேராண்மை உங்களுக்கு ஆவரேஜா? நீங்கள் உதாரணம் காட்டிய ஜோதி தியேட்டரிலேயே ஒரு தீபாவளி ரிலீஸ் படத்தை ஒரே வாரத்தில் தூக்கினார்கள் என்றால் அது பேராண்மைதான்.
//

ஆதவனை படத்தை பற்றி நான் எழுதினது என்னுடய் விமர்சனம் மட்டுமே.. படத்துக்கான கலெக்‌ஷன் ரிப்போர்ட் இல்லை.

//சமீபத்தில் வந்த விஜய் படங்களில் அழகிய தமிழமகன் தவிர வேறெந்த படமும் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தந்ததில்லை. தொடர்ந்து மூணு ஃபிளாப் என்று சொல்லப்பட்டாலும் விஜயின் மார்க்கெட் கில்லியாக நிற்பதற்கு இதுதான் காரணம்.//

நீங்கள் சொல்வது போல் அழகிய தமிழ் மகனைப்போல கேவலமாய் பேசப்பட்ட வில்லு, குருவி கூட பல ஏரியாக்களீன் விநியோகஸ்தர்களுக்கு அல்ல.. எம்.ஜி. கொடுத்து வாங்கிய தியேட்ட்ர் காரர்கள் கவர் செய்யத்தான் செய்தார்கள் எவ்வளவு நாட்களில், எப்படி என்று என்னால் சொல்ல முடியும் நிச்சயம்

Cable சங்கர் said...

/மதுரை டூ தேனியை ஆவரேஜ் என்கிறீர்கள். சென்னையிலேயே 50 நாள் கூட ஓடமுடியாத உன்னைப்போல் ஒருவனை ஹிட் என்கிறீர்கள். உங்களிடம் நான் இதற்குமேல் என்ன பேசமுடியும்?
//

உனனைப்போல் ஒருவன் ஹிட் இல்லை என்று உங்களால் புரூவ் செய்ய முடியுமா..?

மதுரை டூ தேனியை மொத்தமாய் வெளியான ஆவரேஜ் படங்களின் லிஸ்டில் சேர்க்கவில்லை.
அந்த மாதத்தில் ரிலீஸான நேரத்தில் அவர்களின் பட்ஜெட்டோடு அவர்கள் விற்று வந்த லாபத்தை வைத்து எழுதப்பட்டது. வேண்டுமானால் தயாரிப்பாளரின் நம்பரை தரட்டுமா..?

லக்கி.. ஒரு விஷயம் நான் ஒன்றும் விஜய்க்கு எதிராக எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு பிடிக்காத மாயாண்டி குடும்பதாரை கூட அது ஒரளவுக்கு மற்ற ஏரியாகக்ளில் நன்றாக ஓடியிருந்ததால் என் கருத்து தான் சரி என்று அடம் பிடிக்கமாட்டேன்.

Cable சங்கர் said...

விசா
என்னால் கூடத்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது.. விதி வலியது.. சூப்பர் ஹிட் என்று நான் எந்த படத்தையும் போடவில்லை. வந்ததில் ஹிட்டான படம் என்றுதான் எழுதியிருக்கிறேன்.

அந்த வகையில் உன்னை போல் ஒருவனும் ஹிட் தான்.

Cable சங்கர் said...

லக்கி, இன்று மாலைக்காட்சி கமலாவில் புல் என்று சொன்னீர்கள் அல்லவா.. இதோ.. என்னிடம் இன்று மாலை 5.43க்கு எடுத்த ஸ்க்ரீன் ஷாட்டை உஙக்ல் மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன்

Cable சங்கர் said...

லக்கி.. உஙக்ளுக்காகவும் படிக்கும் வாசகர்களுக்காகவும். ஸ்டேடஸ் ரிப்போர்ட்டை பதிவிலேயே போட்டு விட்டேன்

Subha said...

sankar, nice review
wish you a happy new year 2010. May god bless you with lots of health and wealth to watch more stupid movies (as usual) and write great reviews.....of course save us loads of time (as usual)

Subha said...

sankar, nice review
wish you a happy new year 2010. May god bless you with lots of health and wealth to watch more stupid movies (as usual) and write great reviews.....of course save us loads of time (as usual)

யுவகிருஷ்ணா said...

கேபிள்!

உங்கள் ஸ்க்ரீன்ஷாட் கமலா தியேட்டருக்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து தரும் வெப்சைட்டுடையது. இது ஆன்லைன் கோட்டா.

இன்று காலை பதினோரு மணியளவிலேயே அட்வான்ஸ் புக்கிங் கவுண்டரில் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது.

ஆன்லைனில் விற்கமுடியாத பட்சத்தில் அந்த டிக்கெட்டுகள் மட்டும் கவுண்டரில் விற்கப்படும். சாந்தி மற்றும் ஆல்பட் தியேட்டரிலும் கூட இதே முறையே செயல்பாட்டில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

சத்யம், ஐனாக்ஸ் போன்றவர்களே தங்களது சொந்த வெப்சைட் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் விற்கிறார்கள்.

எனவே கமலா போன்ற திரையரங்குகளில் கவுண்டரில் ஹவுஸ்ஃபுல்லா என்று பார்ப்பதே முறை. ஆன்லைன் கோட்டா ஃபுல் ஆகிவிட்டதா என்று பார்ப்பது சரியல்ல. ஆன்லைனில் விற்காவிட்டாலும் கடைசி பத்து நிமிடத்தில் தியேட்டரில் விற்றுத் தீர்ந்துவிடும்.

இதனாலேயே கமலா தியேட்டருக்கு போன் போட்டு டிக்கெட் கேட்கச் சொன்னேன்.

Cable சங்கர் said...

போனெல்லாம் வேண்டாம் நீங்கள் சொன்ன அதே நேரத்தில் இப்போது என் நண்பர் அந்த தியேட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போயிருக்கிறார்.. வந்ததும் பேசச் சொல்கிறேன்.

யுவகிருஷ்ணா said...

//அதே நேரத்தில் இப்போது என் நண்பர் அந்த தியேட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போயிருக்கிறார்.//

ஆன்லைன் கோட்டா முழுக்க புக் ஆகாத டிக்கெட்டுகளை காட்சிக்கு முன்பாக கவுண்டரில் தருவார்கள் என்றே நானும் சொல்லியிருக்கிறேன்.

எப்படியும் உங்கள் நண்பர் அவர் மட்டுமே தனியாக அமர்ந்து படம் பார்த்ததாக தான் சொல்லப் போகிறார் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது :-)

Cable சங்கர் said...

லக்கி தமிழ் சினிமாவின் வசூல் கமலா, ஜநாக்ஸ், சத்யமை வைத்து மட்டும் கணக்கிடபடுவதில்லை. ம்ற்ற தியேட்டர்களில் ஆகும் கலெக்‌ஷனை சேர்த்துதான்.

கானா பிரபா said...

வழக்கம் போல நன்றாக ஆய்ந்து எழுதி இருக்கிறீர்கள், அருமை. ஒரு சின்ன தகவல் "மரியாதை" தயாரிப்பு டி.சிவா ஆச்சே, ராஜ் டிவி என்று போட்டிருக்கு?

ஆங்கிலப் புதுவருஷ வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

/வழக்கம் போல நன்றாக ஆய்ந்து எழுதி இருக்கிறீர்கள், அருமை. ஒரு சின்ன தகவல் "மரியாதை" தயாரிப்பு டி.சிவா ஆச்சே, ராஜ் டிவி என்று போட்டிருக்கு?
//

மரியாதை டி.சிவா முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, ராஜ்டிவி வழங்கியதாகும்

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

/எப்படியும் உங்கள் நண்பர் அவர் மட்டுமே தனியாக அமர்ந்து படம் பார்த்ததாக தான் சொல்லப் போகிறார் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது :-)
//

அப்படியெல்லாம் நான் காமெடி பண்ண மாட்டேன் லக்கி :))

Ganesan said...

கேபிள்,
கிரிஸ்துமஸ் அன்று மதியம் கமலா திரையரங்கம் 12 மணிகாட்சிக்கு 11.50 க்கு சென்றேன். டிக்கெட் கவுண்டரில் இலகுவாக கிடைத்தது.

என்னுடைய row M வரிசை, அதற்கு பின் உள்ள N வரிசை முதல் காலியாகவே இருந்தது.மேலும் இந்த A TO M வரிசையிலும் ஆங்காங்கே காலியாக தான் இருந்தது.

மற்றப்படி விஜய் வெற்றி படம்கொடுத்தால் சந்தோசம் அடைய கூடிய ஆளாகவே இருப்பேன், வேட்டைகாரன் அந்த வெற்றியை நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

நிலாரசிகன் said...

நல்ல பதிவு கேபிள்ஜி..

கரன் said...

KaveriGanesh said...
//என்னுடைய row M வரிசை, அதற்கு பின் உள்ள N வரிசை முதல் காலியாகவே இருந்தது.மேலும் இந்த A TO M வரிசையிலும் ஆங்காங்கே காலியாக தான் இருந்தது.//

அனேகமான வெற்றிப்படங்களுக்கும் முதல் சில நாட்கள் தான் 90%க்கு மேற்பட்ட ரசிகர்கள் வருகை இருக்கும்.
வாரணம் ஆயிரம் சென்னை அபிராமி மகாலில் நான்காம் நாள் பார்த்தேன். 60% - 70% ரசிகர் வருகைதான் இருந்திருக்கும்.(இது ஒன்றும் தோல்விப்படமல்ல)

ஏன்,
மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த சிவாஜி திரைப்படமும் சில விநியோகஸ்தரின் கையைக் கடித்தது தான்.
இந்தக் காலத்தில் எந்த(வெற்றி) திரைப்படங்களும் எல்லா விநியோகஸ்தருக்கும் இலாபத்தை அள்ளிக் கொடுத்தவை அல்ல.
பொதுவாகவே அவற்றின் வெற்றிகள் ஆராயப்படுகின்றன.

KaveriGanesh said...
//வேட்டைகாரன் அந்த வெற்றியை நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை//

விஜயின் சமீபத்தய படங்கள் அனைத்தும் தோல்விப்படங்களெனின், ஏன் அனேகமான விநியோகஸ்தர்கள் விஜயின் படங்களை வாங்குகிறார்கள்.
(Sun Pictures மட்டும்தான் காரணம் என்று சொல்ல வேண்டாம்)

------

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

வருக 2010,
வேட்டைக்காரனின் வசூல் வேட்டையோடு...

ஹீ...ஹீ...ஹீ...!!!
(ஒருவரும் ஓடாமல் இருந்தால் சரிதான்)

மணிஜி said...

நான் ஒரு 10 ஸ்கிரீனில் இடைவேளையின் போது பார்த்தேன்.விளம்பரம் செக் பண்ண..நான்காவது நாளுக்கப்புறம் அரங்கு நிறைந்து பார்க்கவில்லை.(மேட்னி,ஈவினிங்,நைட்ஷோ.இத்தனைக்கும் மப்சல் தியேட்டர்கள்.வெற்றி,ஐ டிரீம்ஸ்,ராக்கி,தியாகராஜா,சைதை ராஜ், மகராணி)எதிர்பார்த்த கலெக்‌ஷன் இல்லை என்பதுதான் தியேட்டர்காரர்கள் கருத்து.

Ravikumar Tirupur said...

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா ....

Kabi said...

happy new year cableji

சிம்பா said...

வணக்கம் சங்கர் அண்ணா.. மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த பதிவில் உங்களது உழைப்பு தெரிகிறது. இதற்கு இவ்வாறான மற்று கருத்துகளா. ஒரு வேலை புது வருசத்துக்கு முழிச்சிருந்து வாழ்த்து அனுப்ப இப்படி ஒரு ஐடியாவா. லூஸ்ல விடுங்க, உங்கள் விமர்சனங்களில் உள்ள உண்மைகள், காசு குடுத்து திரையரங்கில் மட்டுமே படம் பார்க்கும் என்னை போல் அப்பாவிகளுக்கு தெரியும்.

விஜய் படம் இங்கு 9 திரையரங்கில் வெளியானது. பத்தாவது நாள் 5 out. மீதி 4 திரையரங்கில் ஒன்று நாளை முதல் ராசலீலைக்கு மாறுகிறது.

சிம்பா said...

இந்த வருஷம் ஒரு படம் கண்டிப்பா நீங்க இயக்கணும். மறக்காம இந்த தம்பிக்கு preview காட்சிக்கு அழைப்பு அனுப்பனும். :)

Toto said...

அற்புத‌மான‌ அல‌ச‌ல் ஸார். இந்த‌ ப‌திவை ஒரு ரெஃபெர‌ன்ஸாக‌ப் பார்க்கிறேன். ந‌ன்றி. New year wishes.

-Toto
www.pixmonk.com

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... :)

Rishoban said...

வணக்கம் நான் இன்றுதான் முதன் முதலாக பின்னுாட்டம் இடுகிறேன்.
இவ்வருடம் என்னை மிகவும் கவர்ந்த படங்கள் -
வெண்ணிலா கபடி குழு
நான் கடவுள்
த.ந.07.அல.4777
யாவரும்நலம்
அயன்
பசங்க
வால்மிகி
நாடோடிகள்
அச்சமுண்டு அச்சமுண்டு
திரு திரு துறு துறு
ஈரம்
உன்னைப் போல் ஒருவன்
பேராண்மை
கண்டேன் காதலை
ரேனி குண்டா

நான் பார்த்த குப்பைகள் -
வில்லு
படிக்காதவன்
சிவா மனசுல சக்தி
பட்டாளம்
மரியாதை
நியூடனின் மூன்றாவது விதி
சர்வம்
தோரணை
மாசிலாமணி
கந்தசாமி
ஆதவன்
வேட்டைக்காரன்

மற்றவை எல்லாம் நான் இன்னும் பார்க்கல.
எங்க ஊர்ல தியேட்டரே இல்லை (நான் இலங்கையை சேர்ந்தவன்)
அதனால Ayngaran, Sruthi, Lotus DVD வரும் வரை காத்திருந்துதான் படம் பார்க்க வேண்டும்.

அருமையான விமர்சனம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ILLUMINATI said...

Happy New year 2010 my Friend . . . .

I'm new to the blogging world.DO see it and comment.
And if you want to vote,go to tamilish.com

http://illuminati8.blogspot.com/

shortfilmindia.com said...

/இந்த ‘ரிப்போர்ட் விளையாட்டு' மற்ற பதிவர்களிடம் சரி. எங்கிட்டேயாவா? :-)//

லக்கி இந்த கேள்வியில் ஏதோ அத்தாரிட்டி போல தெரிகிறதே.. அய்யயோ..:))

கேபிள் சங்கர்

லோகேஷ்வரன் said...

def this is a wrong report...