Thottal Thodarum

Aug 12, 2010

Aisha (2010)

Aisha1_330x234 ஒரு அழகான, புத்திசாலியான, Self Centered,  சுயநலவதியான, மற்றவர்கள் விஷயத்தில், அவர்களது வாழ்க்கை முடிவில் மூக்கை நுழைக்கும்,  பெண்ணை கண்டால் உங்களூக்கு எரிச்சல் வரும் ஆனால் இவளை கண்டால் உங்களால் ரசிக்காமல், காதலிக்காமல் இருக்க முடியாது. எ லவ்வபிள், அரகண்ட் பியூட்டியான அயிஷாவை பற்றிய கதை.

அயிஷா டெல்லியில் வாழும் ஒரு உயர்தர வகுப்பை சேர்ந்த பெண், அவளுடய பொழுது போக்கு, அப்பாவின் பணத்தை செலவு செய்து கொண்டும், ஷாப்பிங் செய்து கொண்டும், டெல்லியில் நடக்கும் உயர்தர மக்களின் பார்டிகளில் கலந்து கொள்வதும், ஜோடி பொருத்தம் பார்த்து இவன், இவள்தான் உன் ஜோடி என்று தான்  நினைப்பதை மற்றவர்களிடம் திணிப்பவள். அவளுடய ஆண்டிக்கு ஒருவரை பார்த்து செலக்ட் செய்தவள். அடுத்து அவளுடய டார்கெட்டில் வருபவள் மிடில் க்ளாஸ்  பெண்ணான ஷிபாலியை தன்னைப் போலவே மாற்றி, அவளுக்கு சரியானவன் ரந்திர் என்கிறவன் தான் என்றும். அவனை தான் ஷிபாலி காதலிக்கவேண்டும் என்றும் அவன் தான் உனக்கு சரியான் ஜோடி என்று ஏத்திவிட்டு தன் எண்ணத்தை அவள் மூலம் செயல்படுத்த நினைக்கிறாள். அயிஷா ஷிபாலியை ஒரு ப்ராஜெக்டாகவே நினைக்கிறாள்.
aisha2 அர்ஜுன் அவளது தூரத்து உறவினன். சிறுவயதிலிருந்தே பழக்கம். அவன் எப்போதும் அயிஷாவை மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை தடுத்துக் கொண்டிருப்பவன். ஆனால் அவளை காதலிப்பவன். அவள் விஷயத்தில் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதாலேயே.. அயிஷாவுக்கு அவனை பிடிக்காமல் போகிறது என்றாலும் ஒரு ஓரமாய் அவன் மேல் ஒரு இண்ட்ரஸ்ட் இருக்கத்தான் செய்கிறது. அவனுடன் பழகும் அவனுடய லண்டன் பெண் சிநேகிதியை கண்டாலே எரிகிறது. ஒரு கட்டத்தில் இவளது எல்லா கணிப்புகளையும் மீறி ஜோடிகள் மாறி, அயிஷாவின் இம்சையை, ஆக்கிரமிப்பை, அரகன்ஸை பொறுக்க முடியாமல் நெருங்கிய தோழிகள் பிரிந்து போக, முடிவு என்ன என்பதை வெள்ளித்திரையில் காணுங்கள்.
aisha அயிஷாவாக சோனம்கபூர்.. என்ன பெண் இவள்? I Hate Luv Storiesயில் பார்த்த சோனமா..? எவ்வளவு மாறுதல்? எவ்வளவு மெச்சூரிட்டி. கண்களாலும், பாடி லேங்குவேஜாலும் கொள்ளை கொள்கிறார். ஒரு மேல்தட்டு பெண்ணை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் சோனம். அவ்வளவு இயல்பு அவரது நடிப்பில். ஆண்களை கிண்டல் செய்யும் குறும்பு பார்வையாகட்டும், சட்சட்டென மாறும் முகபாவங்கள் ஆகட்டும், உள்ளுக்குள் கிண்டலோடு ஷிபாலியையும், ரந்தீரையும் ஓட்டுவதாகட்டும் அட்டகாசம் சோனம்.

இவரது எல்லா ஆட்டத்திற்கும் உடந்தையாய் இருக்கும் இவரது உயிர் பிங்கி, அயிஷாவுக்கு ஒத்து போக அடிபணிந்தே பழக்கப்பட்ட அவர், அயிஷாவுக்கு பிடிக்காத ரந்திருடன் காதல் கொள்ள, ஒரு கட்டத்தில் அயிஷா ரந்திரை கேவலப்படுத்தினாள் என்பதற்காக பிரிகிறாள்.
aisha3 அர்ஜுனாக அபய் டியோல், மிகவும் சப்மிஸிவான நடிப்பு. பல இடங்களில் டயலாக் மாடுலேஷனும், கண் பார்வைகளிலுமே பல விஷயங்களை  கடத்துகிறார். கொஞ்சம் ரிஜிட். அயிஷா எல்லாராலும் த்னித்துவிடப்பட, தான் அர்ஜுனை காதலிப்பதை தன் தந்தையிடம் நடு ராத்திரி காஜர் அல்வா சாப்பிட்டுக் கொண்டே சொல்வது செம க்யூட்.ஷிபாலியாக வரும் அம்ரிதா பூரியை பார்த்தவுடனேயே நமக்கு பிடிக்க அரம்பித்துவிடும். அவ்வளவு இன்னொசென்ஸ்.
aisha5 படம் முழுக்க டயலாக்குகள் செம Impressive. முழுக்க, முழுக்க பெண்கள் பார்வையில் படமிருப்பதால், பல இடங்களில் பெண்கள் பார்வையில் ஆண்கள், நண்பர்கள், அப்பாக்களை எப்படி பார்க்கிறார்கல் பெண்கள் என்பதை பார்க்கும் போது செம இண்ட்ரஸ்டிங்.. ரொம்பவும் ஷார்ப்பான வசனங்கள், உயர்தர வார்தைக் கிண்டல்கள், என்று அவ்வளவு லைவான வசனங்கள் எழுதிய தேவகிபகத்துக்கு பாராட்டுக்கள்.ஜாவத் அக்தரின் பாடல்களும், அரவிந்த் திரிவேதியின் இசையும் படத்துடன் இணைந்து போகிறது.

இயக்குனர் ராஜ்யஸ்ரீ ஓஜாவின் கதை சொல்லும் முறையும், காட்சி படுத்திய விதமும் அருமை. மிக இயல்பான கேரக்டர்கள், டெல்லியின் உயர்தர வகுப்பினர் கூடிக் குலவும் லொக்கேஷன்களே விசுவலுக்கு ஏதுவாய் ரிச்சாய் இருக்க, ஒரு ஹைடெக்கான மக்களின் நடவடிக்கைகளை கன் முன் ஓட விட்டிருக்கிறார். emma என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு அமைக்க பட்ட படம். மிக சின்ன கேரக்டர்கள் கூட இம்பரசிவாக இருக்கிறது. முக்கியமாய் ஷிபாலியை காதலிக்கும் அக்கவுண்ட் பார்க்கும் செளரவ், அயிஷா இம்ப்ரஸ் ஆகும் பாடிபில்டர் பையன், அர்ஜுனின் கூட்வே அலையும் அர்சனா, அயிஷாவின் அப்பா என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படத்தில் குறையென்றால் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் பேசிக் கொண்டேயிருப்பதும், ஒரு சில இடங்கள் கொட்டாவி விடும் வரை நீள்வதும்தான். 
Aisha – Not To Miss
கேபிள் சங்கர்
Post a Comment

22 comments:

Muthukumar said...

hindi maloom nahi...

Cable சங்கர் said...

acchaa...

க ரா said...

சப்-டைட்டிலோட டீ.வி.டீ கிடைச்சதுன்னா பாக்கலான்னு நினைக்கிறேன்...

பருப்பு (a) Phantom Mohan said...

Aisha – Not To Miss
///////////////

What is the difference between "Not To Miss" and "Don't Miss"?

பருப்பு (a) Phantom Mohan said...

"படத்தில் குறையென்றால் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் பேசிக் கொண்டேயிருப்பதும்".....,

"படம் முழுக்க டயலாக்குகள் செம Impressive".....

"ரொம்பவும் ஷார்ப்பான வசனங்கள், உயர்தர வார்தைக் கிண்டல்கள், என்று அவ்வளவு லைவான வசனங்கள் எழுதிய தேவகிபகத்துக்கு பாராட்டுக்கள்".....
///////////////////////////

Enna Kodumai Sir Ithu??? :)

Etha Namburathu????

கத்தார் சீனு said...

விமர்சனம் cool as usual.
அயிஷா...இன்னும் கத்தார்ல ரிலீஸ் ஆகலை சங்கர்ஜி ....
அம்மணி சோனம் கபூர்தான் இப்ப "most happening gal"

Unknown said...

விமர்சனம் cool as usual.

R. Gopi said...

விமர்சனம் அருமை. படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

ஆர் கோபி

Cable சங்கர் said...

//"படத்தில் குறையென்றால் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் பேசிக் கொண்டேயிருப்பதும்".....,

"படம் முழுக்க டயலாக்குகள் செம Impressive".....

"ரொம்பவும் ஷார்ப்பான வசனங்கள், உயர்தர வார்தைக் கிண்டல்கள், என்று அவ்வளவு லைவான வசனங்கள் எழுதிய தேவகிபகத்துக்கு பாராட்டுக்கள்".....
///////////////////////////

Enna Kodumai Sir Ithu??? :)

Etha Namburathu????//

எல்லாத்தையும் தான் தலைவரே.. ஏன்னா.. படத்தோட மைனசும் அதுதான்..ப்ளஸும் அதுதான். டயலாக் மட்டுமே இண்ட்ரஸ்டாக இருந்து பிரயோஜனம் இல்லை.. அந்த டயலாக்குகள் எந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்கு உபயோகப்படுகிறது என்பதை பொறுத்துத்தான்.. ஃபைனல் ரிசல்ட்.பட் அதைஎழுதினவங்களை பாராட்டும் போது பாராட்டித்தானே ஆகணும்..:)

vinthaimanithan said...

என்னமோ போங்க...
களுதை..

நீங்களும் படம் எடுப்பீங்க.. போட்டு கிழிக்கலாம்னு பாத்தாக்க.. ஹ்ம்...எந்த சாமி எப்ப கண்ணத் தொறக்குமோ!

R.Gopi said...

Shankar ji...

Is there any possibility that we can also produce such movies in TAMIL?

Quite recently, i see lot of good movies produced in BOllywood....

How long we will keep on producing only ACTION MOVIES?

Unknown said...

//நீங்களும் படம் எடுப்பீங்க.. போட்டு கிழிக்கலாம்னு பாத்தாக்க.. ஹ்ம்...எந்த சாமி எப்ப கண்ணத் தொறக்குமோ!//



எந்த சாமிய சொல்றீங்க..?

பிரபல பதிவர் said...

//Is there any possibility that we can also produce such movies in TAMIL?
///

OK.. approved... You can produce such movies in tamil

பிரபல பதிவர் said...

//How long we will keep on producing only ACTION MOVIES?
//

Till your produced movie release...

KUTTI said...

NICE REVIEW

MANO

சிவராம்குமார் said...

Good review... Anyone please help me in typing my comments in tamil.. i donno how to do this

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் cool as usual.

Anonymous said...

நல்லதொரு விமர்சனம்

அம்சவல்லி கஜக்கோல் said...

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் அன்பரே.

இரகுராமன் said...

appo download potuda vendiyathu thaan seekirame ;)

Muthuprakash Ravindran said...

இந்த கதை முழுக்க முழுக்க Jane Austen's 'Emma' கதை போல் தெரிகிறது. நான் இப்படம் பார்க்க போவது இல்லை. எனினும், தொன்னூறுகளில் வெளி வந்த, திரை கதைக்கான ஆஸ்கார் பெற்ற, எம்மா தோம்ப்சன், kate winslet நடித்த 'Emma ' பாருங்கள். மூலத்திற்கு மிகவும் உண்மையோடு எடுக்கப்பட்ட அருமையான படம்.

Cable சங்கர் said...

முத்து இந்த படமும் ஜேன் ஆஸ்டன் எழுதிய எம்மா வை உரிமை வாங்கி அதை இண்டியனைஸ் செய்து எடுக்கப்பட்டதுதான்.