Thottal Thodarum

Aug 24, 2010

இனிது.. இனிது

Inidhu Inidhu  Movie Stills (39) தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் என்ற படத்தின் ரீமேக், ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பு என்ற மரியாதை எல்லாம் சேர்ந்து படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். நான் ஏற்கனவே தெலுங்கு படத்தை ஷாட் பை ஷாட் அறுபது தடவைக்கு மேல் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டபடியால் எந்த காட்சியை பார்த்தாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை

சிததார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு என்கிற அபர்ணா, அந்த எம்.எல்.ஏ பையன், அரவிந்த் எனும் டைசன், சீனயர் ஷ்ர்ப்ஸ் எனும் ஷ்ரவந்தி என்று நான்கு ஜோடிகளை சுற்றி சுற்றி வரும் கதை. இவர்களின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். தனியாக இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பித்து ஓட்டாமல், மிக இயல்பாய் நட்பினூடே அலைபாயும் காதலை, அதன் பின் வரும் ஈகோவை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். எப்போதும் சீரியஸாய் தன் படிப்பு, தன் வாழ்க்கை என்று செல்ப் செண்டர்டாய் அலையும் சங்கர், சும்மா ஜாலிக்காக சுற்றும் சங்கிதா. சீனியர் ஷ்ராப்ஸ், கிராமத்திலிருந்து வந்து படிக்கும் இளைஞன். குண்டு சீனியர் மாணவன். எதையும் பாஸிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்ளும் டைசன் எனும் அரவிந்த். என்று படம் முழுவதும் வாழும் கேரக்டர்கள். இம்மாதிரியான கேரக்டர்களை நிச்சயம் நம் கல்லூரி வாழ்க்கையில் பார்க்காமல் தவிர்த்து வ்ந்திருக்க முடியாது.

காட்சிக்கு காட்சி இளமை பின்னி பெடலெடுக்கிறது. வைக்கும் ஷாட்டிலாகட்டும், எடிட்டிங்கிலாகட்டும், மாணவர்களின் உடைகளில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இளமை, இளமை..இளமை.. அவ்வளவு இளமை.
inidhu_inidhu_movie_stills_photos_15 நடிகர்களில் இங்கிலீஷ் ப்ரொபசராக வரும் அஞ்சலா ஜாவேரியை, ஷ்ராப்ஸாக தெலுங்கில் நடித்த சோனியாவை தவிர எல்லாரும் புதுமுகங்களே. அருமையான தேர்வு. முக்கியமாய், டைசன், விக்கி எனும் எம்.எல்.ஏ பையன், சங்கர், சங்கீதா கேரக்டர்கள், மதுவை துரத்தி, துரத்தி காதலிக்கும் சீனியர் பையன். என்று ஒவ்வொரு கேரக்டரும் பொறுக்கி, பொறுக்கி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழ் படத்துக்காக நிறைய இடங்களில் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஒரு சில மாற்றங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. முக்கியமாய் அந்த சீனியர் குண்டு மாணவன் சம்பந்தபட்ட காட்சிகள் தெலுங்கில் கொஞ்சம் பேண்டஸியாக இருக்கும். அதே போல் விக்கி வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை சகிக்காமல் டைசனிடம் ஒரு கெமிக்கலை வாங்கி நாற்றமடிக்க செய்வதற்கு பதிலாய், இதில் விக்கிக்கு கோலாவில் ஒரு திரவத்தை ஊற்றிக் கொடுத்து செய்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

படத்தின் இயக்குனர் குகன ஒரு ஒளிப்பதிவாளர் என்கிற படியால் ஒவ்வொரு ப்ரேமும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம். அவ்வளவு அழகு. முக்கியமாய் அந்த கேரளா எபிசோடும், தேசியக் கொடி காட்சியும் மனம் கொள்ளை போகிறது.
InidhuInidhu நடித்த புதுமுகங்களில் சித்து, அரவிந்த், மது, விக்கி எல்லோரும் ஸ்கோர் செய்கிறார்கள். தெலுங்கு தமன்னாவை விட இந்த பெண் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், சில கோணங்களில் மிகவும் சின்ன பெண்ணாகவும், பல கோணங்களில் நல்ல அழகாக இருக்கிறார். காலேஜ் கேம்பஸே மிகவும் ரிச்சாக இருப்பதால் ஒரு ஹைஃபை விஷுவல் இம்பாக்ட் இருப்பதால் கொஞ்சம் அந்நியத்தன்மை இருக்கவே செய்கிறது.

இசை மிக்கி.ஜே.மேயர். தெலுங்கில் இவரது பாடல்கள் சூப்பர்ஹிட். அதனால் அதே பாடல்களை இதில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் பாடல்கள் மனதை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நா.முத்துக்குமார், வைரமுத்து என்று பெரிய ஜாம்பவான்கள் எழுதியிருந்தும் ஏனோ மனதில் நிற்க மாட்டேன் என்கிறது பாடல்கள்.
 
தெலுங்கில் படம் பார்த்தவர்களுக்கு ஏனோ இந்த படம் ஒரு அன்னியமாய் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழில் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும். அதுவும் காலேஜ் மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தெலுங்கில் சென்னையில் ஐம்பது நாளுக்கு மேல் சத்யமில் ஓடிய படம் வேறு.
என் தனிப்பட்ட கருத்தில் தெலுங்கில் இயக்குனர் தன் நிஜ வாழ்வில் நடந்த பல சம்பவங்களை மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் தொகுத்து, மிக மெல்லமாய் அன்போல்ட் செய்யும் முறையில் படம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால். சில இடங்களில் ஜம்ப் ஆகி போகும் தமிழ் திரைக்கதையில் ஏதோ ஒரு நேட்டிவிட்டு குறைவது போல் இருப்பது என் பிரமையாக இருக்கலாம். ஆனால் இப்படம் நிச்சயம் ஒரு கறுப்பு குதிரை..
இனிது இனிது- இனிமை.
கேபிள் சங்கர்
Post a Comment

23 comments:

க ரா said...

ஹாலி பாலி தோத்தாங்குழி.. மீ த பர்ஸ்டோய்... நன்னி கேபிள் அண்ணா நான் முழிச்சிட்டு இருக்கறப்ப பதிவு போட்டதுக்கு :)

kanagu said...

எனக்கு தெலுங்கு-ல ‘ஹாப்பி டேஸ்’ ரொம்ப பிடிச்சிருந்துது அண்ணா... இப்பவும் சில சமயம் உட்கார்ந்து பாத்துட்டு இருப்பேன்..

அதனால தமிழ்-ல பாக்க யோசிச்சிட்டு இருக்கேன்.. தமிழ்-ல பாத்து பிடிக்காம போயிடுமோ-னு ஒரு பயம்..

நீங்க கொஞ்சம் திரைக்கதை மாத்தி எடுத்து இருக்காங்க-னு சொல்றீங்க.. பார்ப்போம்.. :)

க ரா said...

இங்க படம் வரதுக்கு சான்ஸே இல்ல.. நல்ல டிவிடி பிரிண்ட் வந்த உடனே டவுன்லோடு பன்னி பாத்துடறேன் கண்டிப்பா :) நான் இப்படி சொல்றேன்னு பிராகஷ்ராஜ்கிட்ட்ட சொல்லிறாதீங்க :)

shortfilmindia.com said...

அய்யோ பாவம் ஹாலிபாலி.

shortfilmindia.com said...

enna kanagu இந்நேரத்துல முழிச்சிட்டு இருக்கே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paakkalaamnu sollunga

ஜானகிராமன் said...

விமர்சனம் /இனிது இனிது/

கா.கி said...

// ஒரு நேட்டிவிட்டு குறைவது போல் இருப்பது என் பிரமையாக இருக்கலாம்.//
பிரமை எல்லாம் இல்லை பாஸ்... நிஜமாவெ நேட்டிவிட்டி மிஸ்ஸிங்..
தெலுங்குல இருந்த simplicity, தமிழ்ல சுத்தமா இல்லை. அதுல இயல்பான இன்ஜினியரிங் காலேஜ்... இதுல ஒவர் hi fi IIT campus மாதிரி ஒரு இடம்... எனக்கு அவ்வளவா ஒட்டலை.. லீட் ரெண்டு பேருமே, ரொம்ப செயற்கையா பண்ணிருக்காங்க... ஆனா, டைசன், அப்பு, விக்கி மூணு பேரும் சூப்பர்... (சங்கீதா கேரக்டரைஸேஷன்ல இருக்கர நுண்ணரசியலை கவனிச்சீங்களா?? :P) சிட்டி மாணவர்களுக்கு வேணும்னா படம் ரொம்ப பிடிக்கலாம். மத்தபடி எல்லாராலையும் relate பண்ணிக்கமுடியும்னு தோணலை... :)

கா.கி said...
This comment has been removed by the author.
சிவராம்குமார் said...

ஹாப்பி டேஸ் என்னை மிகவும் கவர்ந்தது! அந்த ஈர்ப்பு இதில் கொஞ்சம் குறைவு.

Srinivasan said...

Telugu version was very good. I didn't like this tamil version :(

KarthikeyanManickam said...

Thala,

Nice vimarsanam.
ongaloda book relasing function videos, photos ellam patthean.
Thanks for sharing.

Cheers...

kanagu said...

/* enna kanagu இந்நேரத்துல முழிச்சிட்டு இருக்கே? */

எப்பவுமே நான் கொஞ்சம் லேட்டா தான் அண்ணா தூங்குவேன் :)

அருண் said...

பாஸ் படம் நல்லாயிருக்கோ இல்லியோ உங்க விமர்சனம் அருமை.

குரங்குபெடல் said...

படம் மொக்கைன்னா உங்க விமர்சனம் படுமொக்கை

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் இனிது.

Cable சங்கர் said...

@uthavi iyakkam
மிக்க நன்றி தலைவரே..

கனவுதுரத்தி said...

u didnt answer this question which i posted on "naan mahaan alla"
வணக்கம்..
இது தான் முதல் முறை நான் உங்கள் ப்லாக்-ல் விமர்சனம் படிப்பது.. இதற்கு முன்னால் இந்த ப்லாக்-ல் எதுவும் படித்ததில்லை..... .எல்லா படத்தையும் போய் பார்க்கும் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.....பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு விமர்சனம் எழுதும் உங்கள் மெனக்கேடலையும் கண்டிப்பாக நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்... i also have a question ...are u a full time blogger or do u have someother profession?

Cable சங்கர் said...

@janakikaram
நன்றி

2கார்த்திக்கிருஷ்ணா
நான் தான் சொன்னேனே.. ஏற்கனவே தெலுங்கில்மனப்பாடம் செய்யுமளவுக்கு பார்த்துவிட்டதால்..

@சிவராம்குமார்
தெலுங்கில் பார்த்தவர்களூக்கு.. அப்படித்தான் இருக்கும்

Cable சங்கர் said...

@ஸ்ரீனிவாசன்
:(

@கார்திகேயன் மாணிக்கம்
நன்றி
@கனகு
அப்படியா.?

@

Cable சங்கர் said...

@அருண்
நிச்சயம் படம் ஒரு வாட்டி தியேட்டரில் பார்க்கலாம்

@சே.குமார்
நன்றி

Cable சங்கர் said...

மிஸ்டர் கனவுதுரத்தி.. நானொரு சினிமா பேஷனிஸ்ட்.. என்னை பற்றிய விஷயங்கள் ப்ரொபைலில் இருக்கிறது.. எனக்கு தெரிந்து முழு நேர எழுத்தாளரே தமிழ்ல் குறைவு.. அப்படியிருக்க பிளாகராய். ....??? உங்கள் பாராட்டுக்கு நன்றி

Unknown said...

கேபிள் சங்கர்...
நீங்க 60 தடவைக்கு மேல பார்ததினாலதான் விமர்சனம் லேட்டா (நாலு நாள் கழிச்சு) போடீங்களா ?
நீங்க கொஞ்சம் சீக்கிரம் போட்டிருக்கலாம்...
படத்துக்கு தமிழில நல்ல எதிர்பார்ப்பு இருந்துச்சு....
இங்க திருப்பூர்ல ஒரு தியேட்டர்ல படம் மாத்தியாச்சு...