Thottal Thodarum

Sep 5, 2010

உங்கள் பக்கம்

1) பாதை பயணம் நான் …
பாதை முடியும் இடம்
தேடிய பயணம் எனது
தேடிமுடித்தேன்


பாதை முடியவில்லை
தேடல் மட்டும் முடிந்ததாய் தோன்ற
பாதை நீள்கிறது

நான் எங்கே?
____________________________________________________________________________________

2) நான் மரணிக்கிறேன்
இந்த சப்தவெளியின் கதறல்கள்
துண்டு துண்டாய் கிழிக்கிறது
என்னையும் என்னுள்ளிருக்கும் என்னையும்

விடுபட்டு ஓடத்துடிக்கும் என்னை
கட்டிப்போடுவது
என்னுள்ளிருக்கும் நான்தான்

ஒருமுறை மரணித்துப் பார்
சப்த கதறல்கள் ஒன்றுமில்லாமல் போகும்
நான் மரணிக்கப் போகிறேன்.
_________________________________________________________________________________________________________
3) காற்று வீசுகிறது
சொட்டு சொட்டாய்
சேகரித்த
கோப்பைத் தேநீர்
உடைந்து நொறுங்கியது கோட்டை
நா வறண்டது
கடல் அலை
அடித்துக் கொண்டேயிருக்கிறது.
_____________________________________________________________________________________________________
-- 
என்றும் அன்புடன்
தமிழினியன்.சுப
www.thamiziniyan.com

Post a Comment

17 comments:

என்னது நானு யாரா? said...

கவிதை புரிந்த மாதிரியும் இருக்கு! புரியாத மாதிரியும் இருக்கு! இன்னமும் தெளிவா எழுதுங்களேன். எங்க மரமண்டைக்கு புரிகிற மாதிரி நண்பா!

---------------------------------

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
-------------------------

Unknown said...

நல்லா இருக்குங்க...

R. Gopi said...

\\கவிதை புரிந்த மாதிரியும் இருக்கு! புரியாத மாதிரியும் இருக்கு! இன்னமும் தெளிவா எழுதுங்களேன். எங்க மரமண்டைக்கு புரிகிற மாதிரி நண்பா!\\

அதேதான்

ருத்ர வீணை® said...

கவிதைகள் அருமை. ஆலமரம் போல் தானும் கிளை விரித்து நிழலும் தரும் கேபிள்ஜிக்கு வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

அனைத்தும் அருமை. எனக்கு இரண்டாவது கவிதை மிகவும்அருமை. வாழ்த்துக்கள்

a said...

நல்லா இருக்குண்னே......

Suthershan said...
This comment has been removed by the author.
Suthershan said...

நான் மரணிக்கிறேன் கவிதை மிகவும் அருமை.. மரணிக்கும் ஒருவனின் கடைசி எண்ணத்தை மிக நுட்பமாக பிரதிபலிகின்றது...

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை.

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை.

வெற்றி நமதே said...

//*** என்னது நானு யாரா? said...

கவிதை புரிந்த மாதிரியும் இருக்கு! புரியாத மாதிரியும் இருக்கு! இன்னமும் தெளிவா எழுதுங்களேன். எங்க மரமண்டைக்கு புரிகிற மாதிரி நண்பா!

---------------------------------

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!///*****



அடுத்தவர்களின் வலைதளத்தில் விளம்பரம் தேடும் மரமண்டைக்கு கூட இல்ல உனது மொட்டைமண்டைக்கும் ஏறாது.

க ரா said...

கமலஹாசன் பேசின எபெக்டு கவிதயெல்லாம் படிச்சு முடிச்ச உடனே.. மிக அற்புதம் :)

vinu said...

naaan potta commentai kaanoamm

yaro delete pannittaangaaaaaaaaaa

தமிழினியன் said...

நன்றி கேபிள்ஜி
பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.

தமிழினியன் said...

@palani
இந்த மாதிரி ஏற்கனவே ஒரு கொசுவை ஹாலிபாலா அடிச்சாரு, கொசு அடிப்போர் சங்கம் ஆரம்பிச்சா தான் கொசுத் தொல்லை குறையும்.

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை தலைவரே....நீங்க ஏன் ஆலிவுட் படத்துக்கு பாட்டெழுத போக கூடாது. ஆ ஆ அருமை பிரமாதம், அட்டகாசம்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு.