1) பாதை பயணம் நான் …
______________________________ ________________________
2) நான் மரணிக்கிறேன்
______________________________ ______________________________ ___________
-- பாதை முடியும் இடம்
தேடிய பயணம் எனது
தேடிமுடித்தேன்
பாதை முடியவில்லை
தேடல் மட்டும் முடிந்ததாய் தோன்ற
பாதை நீள்கிறது
நான் எங்கே?
______________________________2) நான் மரணிக்கிறேன்
இந்த சப்தவெளியின் கதறல்கள்
துண்டு துண்டாய் கிழிக்கிறது
என்னையும் என்னுள்ளிருக்கும் என்னையும்
விடுபட்டு ஓடத்துடிக்கும் என்னை
கட்டிப்போடுவது
என்னுள்ளிருக்கும் நான்தான்
ஒருமுறை மரணித்துப் பார்
சப்த கதறல்கள் ஒன்றுமில்லாமல் போகும்
நான் மரணிக்கப் போகிறேன்.
______________________________ ______________________________ ______________________________ _______________
3) காற்று வீசுகிறது
சொட்டு சொட்டாய்
சேகரித்த
கோப்பைத் தேநீர்
உடைந்து நொறுங்கியது கோட்டை
நா வறண்டது
கடல் அலை
அடித்துக் கொண்டேயிருக்கிறது.
______________________________என்றும் அன்புடன்
தமிழினியன்.சுப
www.thamiziniyan.com
Comments
---------------------------------
நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.
என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com
நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
-------------------------
அதேதான்
கவிதை புரிந்த மாதிரியும் இருக்கு! புரியாத மாதிரியும் இருக்கு! இன்னமும் தெளிவா எழுதுங்களேன். எங்க மரமண்டைக்கு புரிகிற மாதிரி நண்பா!
---------------------------------
நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.
என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com
நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!///*****
அடுத்தவர்களின் வலைதளத்தில் விளம்பரம் தேடும் மரமண்டைக்கு கூட இல்ல உனது மொட்டைமண்டைக்கும் ஏறாது.
yaro delete pannittaangaaaaaaaaaa
பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.
இந்த மாதிரி ஏற்கனவே ஒரு கொசுவை ஹாலிபாலா அடிச்சாரு, கொசு அடிப்போர் சங்கம் ஆரம்பிச்சா தான் கொசுத் தொல்லை குறையும்.