Thottal Thodarum

Mar 31, 2011

காந்தி பைசெக்ஸுவலா?

25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி



mahatma bookசமீபத்தில் ஒரு புத்தகம் வெளியாகி இரண்டு மாநிலங்களில் அதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.Joseph Lelyveld’s Great Soul: Mahatma Gandhi and His Struggle With India  என்கிற இந்த புத்தகத்திற்குத்தான் இவ்வளவு ப்ரச்சனை. எழுதியவர் ஒன்றும் சாதாரணப்பட்டவர் அல்ல புலிட்சர் பரிசு பெற்றவர். முன்னாள் த நியுயார்க் டைம்ஸ் ஆசிரியர்.

இந்த புத்தகம் இது வரையில் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்து உருவான விவாதங்களினால் சூடு ஏறி, விஷயம் இந்திய அரசின் காதுகளுக்கு எட்டி, இன்று குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் இப்பதகத்தை தடை செய்திருக்கிறார்கள்.

புத்தகத்தில் காந்தியை ஒரு நிறவெறியர் என்றும் பைசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது காந்திக்கும் ஜூயிஷ் உடற்பயிற்சியாளர் Herman Kallenbach என்பவருக்கும் இடையே செக்‌ஷுவல் தொடர்பு இருந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஊரில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு திடீரென காந்தி பாசம் ஏறி அறிக்கை விட ஆரம்பித்திருக்கிற நேரத்தில், காந்தியின் பேரனான துஷார் காந்தி இந்த தடையுத்தரவை வன்மையாக கண்டித்திருக்கிறார்.  தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சாப்பாட்டுக்கடை -கல்யாண பவன் பிரியாணி

சாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி

பிரியாணி என்றதும் நாசியை துளைக்கும் மசாலா வாசனையும், அந்த பிரியாணியை வைத்திருக்கும் பாத்திரத்தில் டக் டக்கென அடிக்கும் சத்தமும் நிச்சயம் நம் மனதில் தோன்றும். அதே போல முஸ்லிம் வீட்டு திருமணங்களுக்கு போனால் தலைவாழை இலையோ, அல்லது இன்றைய கலாச்சாரமான பேப்பர் இலையையோ போட்டு, அதில் கத்திரிக்காய் சட்னி, வெங்காய பச்சடி,  கேசரி போல ஒரு ஸ்வீட் அயிட்டம் வைப்பார்கள். அதன் பிறகு தான் ஒரு தட்டு நிறைய கறித்துண்டுகளுடன் பிரியாணியை ஒரு தள்ளு நம் இலையில் தள்ளிவிட்டு போவார்கள். சில பணக்கார திருமணங்களில் சிக்கன் 65 போன்ற அயிட்டங்களையும் சேர்த்திருப்பார்கள். அப்படி ஒரு திருமண டைப் பிரியாணியை சுவைக்க வேண்டுமா?

அப்படியானால் நீங்கள் போக வேண்டியது கல்யாண பவன் பிரியாணி கடைக்குத்தான். பாந்தியன் ரோடிலிருந்து கமிஷனர் ஆபீஸுக்கு போகும் ரோடில் ரவுண்டானாவை தாண்டியவுடன் இடது பக்கமாய் ஒரு பெரிய ஓட்டல் இருக்கும் அது தான்  கல்யாண பவன் பிரியாணி கடை. உள்ளே போனால் முஸ்லிம் திருமணங்களில் போடுவதை போல தலை வாழை இலை போட்டு, திருமணம் மற்றும் விஷேஷங்களுக்கு போடப்படும் கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டுடன் பிரியாணியை பரிமாறுகிறார்கள். மட்டன், சிக்கன், 65 பிரியாணி என்று பிரியாணி வகைகள் மட்டுமே கிடைக்கும். செம சுவை. மத்யான நேரத்தில் போவதானால் நிச்சயம் பசிக்கு முன்னமே போவது நல்லது ஏனென்றால் காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். 
*******************************************************************

Mar 30, 2011

குள்ளநரி கூட்டம்


25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி


முதலில் இயக்குனருக்கு ஒரு வணக்கம் வைக்க வேண்டும். ஏனென்றால் மதுரைப் படம் என்றதும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுக்கும் அளவிற்கு வந்து கொண்டிருந்த டெம்ப்ளேட், கொண்டேபுடுவேன், அருவாள், ஊர் திருவிழா, கிடா வெட்டி, டாஸ்மாக், ஷேவ் செய்யாத முகமும், திருத்தாத முடியுடன், டவுசர் தெரிய அலையும் ஹீரோக்கள், சகாக்கள் இல்லாத ஒரு படத்தை கொடுத்ததற்க்காக.

Mar 29, 2011

நான்.. ஷர்மி.. வைரம்.-3

25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி

peace____by_courtney_ann-d3cogac கேஷ் + என்ஜாய்மெண்ட் என்றதும் முதலில் பத்தாயிரம் ரூபாயை அவர்கள் சொல்லும் அக்கவுண்டில் கட்டிவிட்டு மீண்டும் போன் செய்தால் சென்னையில் இருக்கும் லோக்கல் நம்பர் தருவதாய் சொன்னாள். பத்தாயிரமா? என்று வாய்பிளந்து நின்றிருக்க, எதிர் முனையில் “ஹலோ..?.. ஹலோ?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.

Mar 28, 2011

கொத்து பரோட்டா-28/03/11

ழ பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை பெற்றுக் கொள்ள, சிறப்பாய், நிகழ்சி நடந்தேறியது. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாய் தொகுத்தளித்த நண்பர் சுரேகாவுக்கு நன்றிகள் பல.   ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. எல்லாப் புத்தகங்களிலும் நூறு புத்தகங்கள் புக் செய்து பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் ஜெயவேல் அவர்களுக்கும், மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல. நாளை விழாப் படங்களை தொகுத்து அளிக்கிறேன்.
###############################################

Mar 24, 2011

சாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி

பிரியாணி என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஊர் பிரியாணி ஞாபகம் வரும். அதில் ஒரு முக்கிய ஊர் பிரியாணி ஆற்காடு ஸ்டார் பிரியாணி. ரொம்பவும் பிரசித்தமான பிரியாணி கடை. ஹைவேயிலிருந்து ஆற்காடு பைபாஸ் வழியாய ஆற்காடு பஸ்ஸ்டாண்டுக்கு போகும் வழியில் பழைய ஜோதி தியேட்டருக்கு எதிரில்(இப்போது அந்த தியேட்டர் இல்லை இடித்து விட்டார்கள்) ஆற்காடு பிரியாணி கடை இருக்கிறது.

காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்து மதியத்துக்குள் அண்டா காலியாகிவிடும். பெங்களூர் போகிறவர்கள் கூட ஊருகுள்ளே  வந்து பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள். பிரபல அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை யார் அந்த ஏரியாவை க்ராஸ் செய்தாலும் ரெண்டு பார்சல் இல்லாமல் போக மாட்டார்கள். அவ்வளவு சுவை. பிரியாணி தவிர வேறேதும் அயிட்டங்கள் அங்கில்லை என்றாலும். எப்போது கூட்டம் நிரம்பி வழியும். பார்சல் கட்டும் போது, மசாலாவோடா? இல்லை ப்ளையினா என்று  கேட்டால் நீங்கள்  என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். பிரியாணி கிளறும் போது அடியில் தங்கியிருக்கும் பிரியாணி மசாலா அப்படியே சோறுடன் கலந்திருக்கும். நீங்கள் மசாலா பிரியர் என்றால் யோசிக்காமல் தலையாட்டி ம்ம்..என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவு சுவையாய் இருக்கும்.  இவர்களுடய பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சாப்பிட்டு முடித்தவுடன் வேறு ஏதாவது பிரியாணி என்றால் கொஞ்சம் மந்தமாய்  இரவு வரை வேறு ஏதும் சாப்பிட முடியாது. ஆனால் இவர்களுடயது அப்படிக் கிடையாது. ம்ம்ம்..நாலு மாசம் ஆச்சு.. அங்க போயி.
ஸ்டார் பிரியாணி
பழைய ஆற்காடு ஜோதி தியேட்டர் எதிரில்
பஸ்ஸ்டாண்டுக்கு முன்பு.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Mar 23, 2011

நான்.. ஷர்மி.. வைரம்-2

Sexy_girl_by_Brassman07 உடலில் ஒரு பொட்டுத்துணிகூட இல்லாமல், பத்து பெண்கள், மூன்று ஆண்களின் மேல் உழன்று கொண்டிருக்க, ஒரே ஆணின் குறியை மூன்று பெண்கள முற்றுகையிடும் நிகழ்வை பார்த்துவிட்டும் கலாச்சாரம் பற்றி பேசுபவர்களா நீங்கள்?. அப்படியானால் நீங்கள் ஒரு ஹிப்போக்ரேட். நிஜத்தை உள் வைத்துக் கொண்டு, வெளியில் நடிப்பவர். ஆரம்ப நாட்களில் இதில் எனக்கிருந்த பங்கேற்க்கும் ஆர்வம், இப்போது இருப்பதில்லை. பார்க்கத்தான் பிடிக்கிறது. இதற்கு ஏதோ பெயர் சொல்வார்களே.. ஆ.. வாயரிஸம்.

Mar 22, 2011

அவர்களும்..இவர்களும்


  சில கதைகளை கேட்கும் போது அட அட்டகாசமாய் இருக்கிறதே என்று யோசிக்கத் தோன்றும், ஆனால் அதே கதையை திரைப்படமாய் பார்க்கும் போது எக்ஸிக்யூஷனில் சொதப்பிவிடுவார்கள். அப்படியான ஒரு நல்ல கதையுள்ளப் படம் தான் அவர்களும் இவர்களும்..

Dongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்களும், ராம்கோபால் வர்மாவும்

dongalamuthamovierev ராம் கோபால் வர்மா. இந்த பெயர் இந்திய சினிமாவில் பல பேருக்கு உற்சாகத்தை கொடுக்கும் பெயர். பல புதிய, கல்ட்டான விஷயங்களை மிகச் ஈஸியாக உடைத்தெறிந்தவர். அதே சமயம் அதற்காக படு பயங்கரமாய் விமர்சிக்கப்பட்டவரும் கூட. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டது கிடையாது. தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது ஒன்றுதான் அவருடய முயற்சி. அப்படிப்பட்ட முயற்சியில் இந்தப்படமும் ஒன்று. இதில் அவர் நினைத்ததில் பாதி வெற்றி மீதி தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.

Mar 21, 2011

கொத்து பரோட்டா-21/03/11

SK D1 F1 V3 (1) PNM D3 F1 V3
மீண்டும் என்னுடய புத்தகம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. இம்முறை உங்களின் மனம் கவர்ந்த “கொத்து பரோட்டா”வைத்தான் “ழ” பதிப்பகம் வெளியிடுகிறது. கொத்து பரோட்டாவுடன், கே.ஆர்.பி. செந்தில் எழுதிய “பணம்”, என்.உலகநாதன் எழுதிய “சாமான்யனின் கதை” “வீணையடி நீ எனக்கு” ஆகிய புத்தகங்ளையும் வெளியிடுகிறார்கள். எல்லா புத்தகத்திற்கும் உங்களின் தொடர்ந்த  ஆதரவு வேண்டுமென்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
  KB D4 F1 V1 VNE D1 V4 
*****************************************

Mar 20, 2011

பதிந்ததில் பதிந்தது -2

எம்.எம்.அப்துல்லாஓண்ணுமில்ல சும்மா..
இணைய உலகில் யாருக்கும் அண்ணே என்றாலே தெரியுமளவுக்கு பிரபலம். இவர் எழுதியதினால் மட்டுமே பிரபலமில்லை. இவரிடம் ஒரு முறை பழகிவிட்டால், நிச்சயம அவரது அன்பில் நெகிழ்ந்துவிடுவார்கள். பதிவுலகில் இவரது தம்பியின் டைரிக் குறிப்புகள் மிகப் பிரபலம். அதே போல ஆணித்தரமான அரசியல் விஷயங்கள், மற்றும் பொது நல சமுதாய விஷயங்கள் என்று கலந்து கட்டி பின்னியெடுப்பவர்.|

Mar 19, 2011

முத்துக்கு முத்தாக..

muthuku_muthaga_movie_posters_wallpapers ராசு மதுரவனின் கம்பேக்கிற்கு பிறகு வரும் நான்காவது படம். பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் அடுத்து முத்துக்கு முத்தாக. மாயாண்டிக் குடும்பத்தாரின் மார்ஜின் வெற்றி, கோரிப்பாளையத்தில் வீழ்ந்துவிட, மறுபடியும், குடும்ப செண்டிமெண்டை போட்டு கலக்கியெடுத்திருக்கிறார் இயக்குனர்.

Mar 18, 2011

மின்சாரம்

minsaram-10 சின்ன பட்ஜெட்டில் படமெடுப்பது என்பது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் அப்படி எடுக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் சில சமயம் காதல், மைனா போல சரித்திரமாகிவிடுவது உண்டு. ஆனால் அதையடுத்து ஒரு இருநூறு படங்களாவது தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம் பிடிக்க முயற்சிக்கும் காலங்களில் இம்மாதிரி படங்கள் வருவதுண்டு.

Mar 17, 2011

சினிமா வியாபாரம்-2-12- Dolby Digital

பகுதி12
 Dolbytrailerdvd07 
அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.

World Invasion: Battle Los Angeles. ங்கொய்யால.. வந்துருச்சு.. ஓடு..

battle_los_angeles07  தமிழ் சினிமாவிற்கு ஒரு டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் போல் ஹாலிவுட்டுக்கென்று சில டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் இருக்கிறது. அதுவும் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டதென்றால், தொடர்ந்து அதே போல் பார்ட்டு பார்ட்டாக எடுத்து தள்ளுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

Mar 16, 2011

நான் – ஷர்மி -வைரம்

cade_walker_by_fleech_hunter-d33zcw0 முத்தமிடுகையில் பன்னிரெண்டு வோல்ட் மின்சாரம் நரம்பெல்லாம் ஊடுருவி, பளிச்சென விளக்கெறிந்தது போல் ஆகுமா? ஷர்மி முத்தமிட்டால் ஆகும். அப்படி ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு “எனக்காக இந்தச் சின்னத் திருட்டைக்கூட செய்ய மாட்டாயா?” என்று மடியின் மேல் உட்கார்ந்தபடி கேட்பவளுக்கு மாட்டேன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் பெரிய ஆள் தான் சார். ஆனால் நான் சாதாரணன். “உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்” என்று ஷாக்கடித்த கிக்கிலிருந்து வெளியே வராமல் சொன்னதன் விளைவுதான் சென்னையின் மிக முக்கியமான, பெரும் பணக்காரர்களுக்கான வைரக் கடை வாசலில் நிற்கிறேன்.

Mar 15, 2011

மாடலின் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு

ஓரிட் ஃபாக்ஸ் எனும் பிரபல மாடலை, மலைப்பாம்பை வைத்துக் கொண்டு ஒரு போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தார்கள். பி கிரேட் மாடலான அவர் தன் மார்பகத்தை செயற்கையாக சிலிக்கான் மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். டெல அவிவ் நகரில் போட்டோ ஷூட் மிக சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருந்தது. பாம்பை மாடலின் கழுத்தில், இடுப்பில், கைகளில் காலில் என்று எல்லா இடத்திலும் தவழ விட்டு படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்

பதிவர், நண்பர் சஞ்செய்யின் திருமணத்திற்காக தர்மபுரி சென்றிருந்தோம். திருமணத்தன்று காலையில் மிகவும் லேட்டாகத்தான் டிபன் சாப்பிட்டிருந்ததால், மதிய சாப்பாட்டை திருமணம் நடந்த மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம். என் நண்பர்களுக்கு போன் செய்து ”நல்ல மெஸ்ஸா இருந்தா ஒண்ணு சொல்லுங்க?” என்று கேட்ட அடுத்த விநாடி அவர்களிடமிருந்து வந்த பதில் “வள்ளி மெஸ்” தான்.

Mar 14, 2011

கொத்து பரோட்டா-14/03/11

நடுராத்திரி,  நான் உட்கார்ந்திருந்த சேர், கம்ப்யூட்டர் டேபிளோடு ஆட,  அந்தக் குலுக்கல் மேலும் அதிகமாகிக்  குலுங்கி, குலுங்கி, நானும் என் கம்ப்யூட்டரும் தலைகீழாய் புரண்டு கீழே போக, அய்யய்யோ.. பூகம்பம் என்று கத்தி கண்விழித்தேன். பஸ் ஒர் தொடர் ஸ்பீட் ப்ரேக்கரில் குதித்துக் குதித்து போய்க் கொண்டிருந்தது. அடுத்த நாள் நியூஸில் ஜப்பான் பூகம்பம். பட்டர்ப்ளை எபெக்ட் போல எங்கோ நடக்கும், அல்லது நடக்கப்போகும் ஒர் பேரழிவை ஒட்டிய கனவு   என்னுள் தோன்றக் காரணம் என்ன?. தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகள் என் கனவினில்  தெரிந்தால் நன்றாக செட்டிலாகிவிடலாம் என்று என் ஞான திருஷ்டி சொல்கிறது. திடீர்  திருப்பூர் பயணம் ரதிபாலா வோல்வோவில் ஆரம்பித்து, துரந்தோ எக்ஸ்பிரஸில் சுகமாய் முடிந்தது.
##################################

Mar 12, 2011

வேராய் பரவும் மனிதர்கள்.

ஆறேழு மாதமிருக்குமென்று நினைக்கிறேன். கோபியில் என் உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு போயிருந்த போது, ஈரோட்டுக் கதிர் ஞாபகம் வர, “தலைவரே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன் எப்போது சந்திக்கலாம்?” என்று போன் செய்தேன். இன்று மாலை எங்கள் லயன்ஸ் கிளப்பில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. சத்யமங்கலத்திலிருந்து ஒரு கார் வருகிறது. அதில் வந்துவிடுங்கள் நிச்சயம் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்ற அன்புக் கட்டளையிட்டு அழைத்தார்.

Mar 10, 2011

Midnight FM.(Korea) சைக்கோ கொலைகார விசிறியும், நடுநிசிப் பெண் ஜாக்கியும்.

 mid3 கோ சூன் யங் ஒரு பிரபல டிவி தொகுப்பாளினி, நடுநிசி ரேடியோ ஜாக்கியும் கூட. சிங்கிள் பேரண்டாய் தன் மகளை போஷித்துவரும் கோவின் மகளுக்கு உடல்நிலை கோளாறு காரணமாய் பேச்சு வரவில்லை. அதை குணப்படுத்த ஆபரேஷன் செய்வதற்காக, தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா செல்லவிருக்கிறாள். கடைசி நாள் நிகழ்ச்சியை சிறப்பாக முடிக்க போகும் முன் தன் அக்காவை அழைத்து குழந்தையை பார்த்துக் கொள்ள வரச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறாள். 

Mar 9, 2011

ஒர் விமர்சனக் கடிதம்.

உரைநடையின் வெற்றியை அனுபவித்தும், எழுதியும் மகிழ்கிற எழுத்து கேபிள் சங்கருடயது. ஒரு தனித்த வாசகனின் மனப் பரப்பை மீண்டுமொரு முறை ஆக்ரமிக்கிறார். தனது  நேர்த்தியான கதை சொல்லலில் தன்னுடைய கதை வயப்படுத்துகிறார். தொகுப்பும், கட்டமைப்பும், நமக்கு உற்சாகத்தை நமக்குள் மட்டுமல்ல, இளைய இணைய தலைமுறை வாசகனைத் தக்க வைக்கும் என்று கூறலாம்

Mar 8, 2011

Tanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.

tanu-weds-manu-2d ஹிந்தியில் மாதவன் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாய் நடித்திருந்தாலும் ,  ஓரளவுக்கு ஹிட் படமாய் அமைந்தது இதுதான் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை பரபரப்ப்பில் இது பெரிய விஷயம் தான்.

Mar 7, 2011

கொத்து பரோட்டா-07/03/11

Best Of Tamil Cinema 1931-2010
ஒரு நாள் யூடிவி தனஞ்செயன் சாரிடமிருந்து மெயில். உங்களுடய சினிமா வியாபாரம் படித்தேன்.மிக அருமையான புத்தகம். தமிழிலேயே இவ்வள்வு டீடெய்லான புத்தகம் வந்ததில்லை, இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வந்தால் நிச்சயம் உலக அளவில் முக்கியத்துவம் பெறும் புத்தகமாய் அமைந்துவிடும். ஏனென்றால் உலகம் முழுவதும் தமிழ் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைப் பற்றிய தகவலக்ள் தமிழில் இருக்கிறதே தவிர, ஆங்கிலத்தில் இல்லை.  தாய் மொழியில் இருப்பது சிறப்பென்றாலும் உலக அரங்கில் நம் தமிழ் சினிமா உலகை நிலைநிறுத்த ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் தேவையான ஒன்று,  வெளிநாடுகளில் வாழும் தமிழ் படிக்கத் தெரியாத தமிழர்கள், வெளிநாட்டுக்காரர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்று சொல்லியிருந்தார். அதை அவர் தன்னுடய The Best Of Tamil Cinema-1931-2010 என்கிற இரண்டு வால்யூம் புத்தகத்தின் மூலமாய் நிறைவேற்றியும் விட்டார். நிச்சயமாய் இது ஒரு சாதனை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படத்தைத்தையும் முழுவதுமாய் பல முறை பார்த்து, படத்தின் கதை சுருக்கம், அதன் பின்னணி என்று அலசி ஆராய்ந்திருக்கிறார். இவ்விழாவை தொகுத்து வழங்க ஒரு சின்ன ஏவி விடியோவை தயாரித்திருந்தார்கள். மிக அற்புதமான தொகுப்பு அது. புத்தகத்தை திரு.கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்தினார்.  தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்புத்தகமும் இடம் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை. விரைவில் தமிழிலும் இப்புத்தகம் வெளிவர இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.
################################## 

Mar 6, 2011

சிங்கம் புலி

singam_puli_posters_wallpapers_01_thumb உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரத்தில் எல்லா திரையரங்குகளும் மிகக் குறைந்த அளவு ஆடியன்ஸுகளை வைத்து ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் படமெல்லாம் ஏப்ரலுக்கு தள்ளிப் போனதால், புதிய நடிகர்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைக்கிறது. இதன் நடுவில் கோவிற்கு முன்னால் வெகு நாள் தயாரிப்பிலிருந்த ஜீவாவின் சிங்கம் புலி தியேட்டர்களுக்கு ஆக்ஸிஜனைத் தருமா?

Mar 3, 2011

வில்பர் சர்குணராஜ்

எப்படி சாம் ஆண்டர்சன் தமிழ் இணைய உலகில் பிரபலமோ.. அவரை விட பிரபலம் இந்த வில்பர் சர்குணராஜ். இந்திய கக்கூஸுகளை உபயோகிப்பது எப்படி? என்று வீடியோ பாடமாய் எடுத்தவர். காதல் திருமணம் பற்றி பாடல் எழுதி ரோஜா பட ருக்குமணி ருக்குமணியில் ஆடும் கிழவிகளை விட படு கிழவிகளையும், லோக்கல் நடிப்பு ஆர்வலர்களையும் வைத்து  மியூசிக் வீடியோவாக வெளியிட்டவர். அழுந்த வாரிய தலையும், பார்மலாய் இன் செய்யப்பட்ட பேண்ட் சர்ட்டுடன், டை கட்டிக் கொண்டு, முகத்தை மறைக்கும் பெரிய பழைய மாடல் ப்ரேம் போட்ட கண்ணாடியோடு, இவர் நடிக்கும் மியூசிக் வீடியோவை பார்த்தால் நிச்சயம் சிரிப்பு பொத்துக் கொண்டு  வரும்.

சினிமா வியாபாரம்-2-11

பகுதி 11
ஆம் தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான்.

Mar 2, 2011

சாப்பாட்டுக்கடை

Photo0162இதுவும் ஒரு சமோசா கடைதான். சத்யம் தியேட்டருக்கு எதிரே ஒரு சிறு கடையாய் இருக்கும். இங்கு சுண்டல், ஜிலேபி, சமோசா ஆகியவை இருக்கும். இவர்களுடய ஸ்பெஷாலிட்டியும் சமோசாதான். இவ்விடத்திலும் போடப் போட, காலியாகிக் கொண்டேயிருக்கும். வெங்காயம் இல்லாத உருளை மசாலா. மசாலாவின் டேஸ்ட் மட்டும் கொஞ்சம் காரமாய் இருக்கும். ஒரு சமோசா ஏழு ரூபாய். அங்கே கொடுப்பது போல் மந்தார இலையில் தராமல், கப்பில் தருவார்கள். சூடான சமோசாவோடு, சுண்டலையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் நிறைய பேர். எனக்கு இவர்களது சுண்டல் அவ்வளவாக பிடிக்காது.