Thottal Thodarum

Jan 24, 2012

Good Night Good Morning

 gngm இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா? வெட்டியாய் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பேசிக் கொள்வதில் என்ன பெரிய சுவாரஸ்யமிருந்து விடப் போகிறது?. இம்மாதிரியான பேச்சில் அவ்விரண்டு பேருக்குத்தான் சுவாரஸ்யமான ஸ்வீட் நத்திங்காக இருக்குமேயன்றி, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமா? ஒரு நாள் இரவு போன் பேச்சில் கடலைப் போட்டு, காதல் சொல்லி, பிரிவு உண்டாகி, அந்த சிறிய பிரிவு மேலும் அவர்கள் உறவை நெருக்கமாக்க முடியுமா? சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா? இப்படியெல்லாம் தொடர்ந்து பல கேள்விகளை உள்ளடக்கியவரா நீங்கள் உங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும். பிரபல பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சுதீஷ்காமத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டியன் ஆங்கிலப் படம். அமெரிக்காவில் இதை இண்டிபெண்டட் மூவி என்று சொல்வார்கள்.


gngm1 பெரிதாய் அறிமுகமில்லாத இரண்டு பேர் இரவிலிருந்து அடுத்த நாள் காலை வரை செல்லிலும், தொலைபேசியிலும் பேசுவதுதான் படம். ஓம்பிரகாஷும், மோய்ராவும் நியூயார்க்கின் பார் ஒன்றில் சந்தித்து, பின்பு தொலைபேசியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஓம்பிரகாஷ் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட், மோய்ரா ஒரு மீடியாவில் பிஎஹ்ச்டி பட்டம் பெற்றவள். ஓம்ப்ரகாஷ் தன் நண்பர்களுடனான கார் பயணத்திலும், மோய்ரா ஓட்டல் அறையிலும் பேச்சை தொடர்கிறார்கள். பேச்சு பேச்சு என்றால் அப்படி ஒரு பேச்சு. மிகச் சதாரணமாய் சினிமாவில் ஆரம்பிக்கும் பேச்சு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, வாட்டர்மெலன், செக்ஸ், காதல், ஆன்மீகம், அன்பு, பிரிவு, குழப்பம் என்று பல விதமான மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை உணர்ச்சிமயமாய் கொடுத்திருக்கிறார்கள்.
gngm2 சினிமா என்பது விஷுவல் மீடியா என்று சொல்பவர்கள், இம்மாதிரியான பேசிக் கொண்டிருக்கும் படத்தை சிலாகிப்பார்களா? என்றால் நிச்சயம் பார்கள் என்றே சொல்வேன். ஏனென்றால் அவர்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள். மிகச் சாதாரணமாய் சினிமாவில் ஆரம்பிக்கும் பேச்சு. மாட்ரிக்ஸ் படத்தின் கதை சுருக்கத்தை நாலு வரியில் சொல்ல முடியுமா? என்று ஆரம்பித்து, வாட்டர் மெலன் என்று பேச, அது பெண்களின் மார்பகங்களை பற்றிய பேச்சாய் மாறி, செக்ஸ் பற்றிய அவதானிப்பில் முடிகிறது. தான் ஒரு வர்ஜின் என்பதை ஓம்பிரகாஷ் சொல்ல, தனக்கு இரண்டு பேருக்கான அனுபவமிருக்கிறது என பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரை போக, ஒரு கட்டத்தில் லேசான ஆன்மீகத்தில் நுழைந்து, சட்டென ஒரு புரிதலில் ப்ரச்சனை வந்து பிரிகிறார்கள். அந்த சில நேரப் பிரிவு, பேச்சப்பாக மாறி மறுபடியும் தொடர்கிறது.

படத்தின் மிக முக்கியமான விஷயம் வசனங்கள்.. வசனங்கள். வசனங்கள். அவ்வளவு ஷார்பான, புத்திசாலித்தனமான, முட்டாள்தனமான கட்த்ரோடான வசனங்கள். இதற்கு முன் நான் பார்த்ததில் இம்மாதிரி இரண்டு கேரக்டர்களை வைத்து வெறும் வசனங்களால் என்னை அலைக்கழித்தப்படம் Before sunrise. அதற்கு பிறகு நான் பார்த்தபடம் இதுதான். அதிலும் பெரும்பாலான காட்சிகள் ஸ்ப்லிட் ஸ்க்ரீன் எனப்படும் முறையில் ஒரு பக்கம் காரில் உட்கார்ந்தபடி பேசி வரும் ஓம்பிரகாஷ், அவனுடய நண்பர்களின் சத்தமிலலாத ரியாக்‌ஷன்கள். இன்னொரு பக்கம் மோய்ராவின் ஹோட்டல் ரூம். அவள் உட்கார்ந்து, படுத்து, நடந்து, வைன் சாப்பிட்டபடி என்று தொடர்ந்து கேமரா அவளூடன் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. படம் பார்க்கும் பார்வையாளனை தன்னுள் ஈர்க்க, இந்த முறை அருமையாய் செயல்பட்டிருக்கிறது. படத்தில் இரண்டு மூன்று இடங்களைத்தவிர முழுவதும் கருப்பு வெள்ளையில் கொடுத்திருக்கிறார்கள். அது மேலும் ஒரு ஏஸ்தடிக் உணர்வை கொடுக்கிறது.
gngm3 ஓம்பிரகாஷாய் மனு நாராயண், மோய்ராவாக சீமா ரெஹ்மானியா. இவ்விரண்டு கேரக்டர்களின் நடிப்பு நமக்கு பிடிக்காமல் போனால் நிச்சயம் படத்தில் உட்கார முடியாது. அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். டிஜிட்டல் டெக்னாலஜியில் எடுக்கப்பட்ட படம். டெக்னிக்கலாய் அது நன்றாக இருக்கிறது, இது சூப்பர் அது சூப்பர் என்று சொல்ல முடியாத கதைக்களம். ஆனால் ஒரு நல்ல ஒளிப்பதிவு என்பது படத்தின் ஜீவனை கெடுக்காமல், நானிருக்கிறேன் என்று துறுத்துக் கொண்டில்லாமல் இருப்பதே என்பதை ஒத்துக் கொள்வீர்களானால் மிகச் சிறந்த ஒளிப்பதிவு.

படத்தின் மைனஸ் என்று சொல்லப் போனால் இடையிடையே வரும், குச் குச் ஹோதாயே பட ஸ்பூப்பும், ஓம்பிரகாஷ் கேரக்டர் சொல்லும் குட்டிக்கதை. ஆரம்பக்காட்சிகளில் தொடர்ந்து நடக்கும் பேச்சை கவனிக்க தவறி, அடுத்ததற்கு போக முடியாமல் தடுமாற வேண்டிய நிர்பந்தம். சப்டைட்டிலில் படம் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இப்படம் கொஞ்சம் கவனிக்க விட்டாலும், கஷ்டம்தான். சில இடங்களில் கொஞ்சம் கொட்டாவி விட வைக்கத்தான் செய்கிறது. ஆனால் இம்மாதிரியான பேச்சுக்களிடையே நடுவில் தொய்வாவது இயற்கையான விஷயமாகத்தான் தெரிகிறது என்றாலும்.. படமாய் பார்க்க கொஞ்சம் அவ்விடங்களில் மெனக்கெட வேண்டியிருக்கிறது.
sudesh kamathஎழுதி, இயக்கி, தயாரித்தவர் சுதீஷ் காமத். எவ்வளவோ படங்களுக்கு விமர்சனமெழுதியிருப்பவர். வித்யாசமான கதைக்களன்களை வைத்து படமெடுப்பவர். இதற்கு முன்னால் இவர் இயக்கிய “That Four Letter word” எனும் படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. சுமார் நான்கு வருட தயாரிப்பு அது. பல புதிய சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர், இயக்குனர் பட்ட அத்துனை கஷ்டங்களை கடந்துதான் அப்படம் வெளியானது. இந்த படமும் அதே போல சின்ன பட்ஜெட் முயற்சிதான். ஆனால் கடந்த வருடம் மும்பை பெஸ்டிவலில் வெளியானது. உலக அளவில் பல விழாக்களில் கலந்து கொண்டு கவனிக்கப்பட்டதால் சென்ற வாரம் வெள்ளித்திரை வெளியீடு. நம்மூர்லேர்ந்தும் ஒரு ஒலகப் படம் வந்திருக்குன்னு நினைக்கும் போது சந்தோஷமாயிருக்கு.
Good Morning Good Night – Feel Good, lovely, erotic, irritating, excellent Film

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

Thava said...

சார், உங்களோட விமர்சனத்துக்காகவே படத்தை பார்க்கனும் போல இருக்கு..அதுவும் ஒரு வித்தியாசமான படத்தை சொல்லி இருக்கீங்க..வசீகரிக்க கூடிய தங்கள் எழுத்துக்கள் படத்தை பார்க்க தூண்டுகின்றன.

@@ சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா@@
இப்படிதான் சில நாட்கள் வரை நம்பி ஏகபட்ட பிரமாண்ட படங்களின் பின்னால் வாலாட்டி சென்றவன் நான்//ஆனால், சில படங்களின் வழியே அதையும் மாற்றிக்கொண்டேன்.சில படங்கள் என்னை மாற்றியமைத்துவிட்டன என்பதே உண்மை..

@@ இம்மாதிரி இரண்டு கேரக்டர்களை வைத்து வெறும் வசனங்களால் என்னை அலைக்கழித்தப்படம் Before sunrise.@@@
என்னை மாற்றியமைத்ததாக சொன்ன படங்களில் இதுவும் ஒன்று..என்னால் முடிந்தவரை சில வரிகளை இந்த படத்தை எழுதும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.வசனங்களால் என்னை காயப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய வியந்து பார்க்க வைத்த சிறந்த காதல் படம்.

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கிறேன்..கேள்விப்படாத ஒரு படத்தை அறிமுகத்தோடு கூடிய நல்ல விமர்சனம் வழங்கிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஹாலிவுட்ரசிகன் said...

உங்கள் விமர்சனத்தை பார்த்தபின் மிகவும் அருமையான படம் போல தோன்றுகிறது.

Buried, Exam போன்ற படங்களைப் பார்த்தபின் லொகேஷன், டெக்னீஷியன்கள் இல்லாமலும் சுவாரஸ்யமான படங்கள் தரமுடியும் என தெரிந்துகொண்டேன்.

கட்டாயம் இந்தப் படத்தைப் பார்ப்பேன்.

rajamelaiyur said...

அழகான விரிவான விமர்சனம் .. நன்றி

rajamelaiyur said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

==================================

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?

Unknown said...

தலைவரே After Sunset பாருங்க அது இன்னும் அற்புதம்.

இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்..

எனக்குத் தெரிந்து நாம் இருவரும் பார்த்ததில் பீப்லி லைவுக்கு அப்புறம் இதுதான் உருப்படியாதும் கூட..

hotkarthik said...

நல்ல படமாத்தான் இருக்கும் என நம்புகிறேன் அதனால் நிச்சயம் இதை பார்ப்பேன் பதிவுக்கு நன்றி

R. Jagannathan said...

Regrettably I cannot see the film due to my handicap. But I am splitting my hair after reading your concluding remark - /erotic, irritating, excellent Film/ :-) - R. J.

Anonymous said...

என்ன இருந்தாலும் இந்த படத்துல மூணாவதா ஒரு கேரக்டர் 'சொல்லுங்க தலைவரே..படம் பாத்துட்டு இருக்கேன்'ன்னு அடிக்கடி சொன்னதுதான் சுவாரஸ்யம் :)

நெல்லை கபே said...

//சினிமா என்பது விஷுவல் மீடியா என்று சொல்பவர்கள், இம்மாதிரியான பேசிக் கொண்டிருக்கும் படத்தை சிலாகிப்பார்களா? என்றால் நிச்சயம் பார்கள் என்றே சொல்வேன்.// ஹய்யா...டக்குனு சுஜாதா வந்துட்டாரு!

என் வலையில் ;
ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

ஒரு வாசகன் said...

//இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா?//

இரண்டு பேர் தொடர்ந்து 2 மணிநேரம் லெட்டரில் அறுத்ததை சேரனின் பொக்கிஷத்தில் பார்த்து தொலைத்தோமே.......

ரா.ரமணன் said...

அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...

Jayaprakash said...

Ramanan,

Unrealatedly dont post anything here, i know your against "Ajith" but there is no requirement to post these kind of things here.

Dear Shankar,

Do not entertaine these kind of comments here (something unrealated to topic!)

Regards
Jayaprakash

Ba La said...

Even the trailer was different, and it was dedicated to Art Gilmore.


http://www.youtube.com/watch?v=UAIJqOkphSY

--

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்