Thottal Thodarum

Apr 15, 2013

கொத்து பரோட்டா -15/04/13


சென்னையில் புறநகர் எனறு இன்று அறியப்படும் இடங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன் வயல்வெளிகளாய் இருந்தது. பின்பு அவற்றை ப்ளாட் போட்டார்கள். இதோ நேற்று அப்பக்கமாய் போகும் போது கான்க்ரீட் ராட்சஷன்கள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயம் அருகிக்  கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எல்லா இடத்தில் கட்டங்கள் கட்டி சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்ற பயம் வரும் நேரத்தில் சிங்கப்பூர் நண்பர் ராமை சென்னையில் சந்தித்தேன். அவர் சிங்கப்பூரை விட்டு மொத்தமாய் வந்துவிட்டதாகவும், இங்கே சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு நண்பருடன் சேர்த்து சில ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்று சொன்னார். சமீபகாலமாய் கொஞ்சம் நன்றாக சம்பாதித்து செட்டிலானவர்களின் எதிர்கால குறிக்கோள் கிராமத்தில் விவசாயம் செய்வது என்றுதான் சொல்கிறார்கள். கார்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களுக்கு விவசாயம் ஃபேஷனாய் இல்லாவிட்டாலும் நல்ல வியாபாரமாகவாவது படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@


ஒரு வாரமாய் பரபரப்பாய் இருந்த அஞ்சலி மேட்டர் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. அவரின் வெளியேற்றம் பற்றி ஆளாளுக்கு ஒர் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாகவே பிரபலமானவர்களைப் பற்றி பேசுவார்கள் நடிகை என்றால் கேட்க வேண்டுமா? பேசத்தான் செய்வார்கள். பெரும்பாலான நடிகைகளின் வாழ்க்கைக்கு பின்னால் இம்மாதிரியான சோகங்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. முழுக்க, முழுக்க அவர்களை வைத்து அவரை சுற்றியுள்ளவர்கள் செட்டிலாவதும். மார்கெட் போனதும் நடிகை மட்டும் அவஸ்தையில் நிற்பது என்பது மிக சாதாரணமாய் நடந்தேறும் அவலம். ஒரு வேளை அஞ்சலி புத்திசாலித்தனமாய் முடிவெடுத்திருக்கலாம். வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் ஸ்ரீபெரும்பதூர் செல்லும் வழியில் உள்ள டோலில் ஐந்து ரூபாய் சில்லறைக்கு பதிலாய் பிஸ்கெட் பாக்கெட் கொடுக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். ரெண்டு நாட்கள் முன்பு ஃபோர்ட் கம்பெனியில் பணிபுரியும் நண்பன் பரத் போன் செய்தான். “தல.. நீங்க எழுதினது போலவே நான் போகும் போது சில்லறைக்கு பதிலா பிஸ்கெட் பாக்கெட் தான் கொடுத்தாங்க. டோலைத் தாண்டினதும்தான் அய்யோ கேட்காம வந்திட்டமேன்னு ஞாபகம் வந்திச்சு. திரும்ப வரையில அதே போல கொடுத்தாங்க. திரும்பக் கொடுத்துட்டு என் ஐஞ்சு ரூபாய் கொடுங்க என்று சண்டைப் போட்டு வாங்கி வந்தேன். இப்பத்தான் எனக்கு திருப்தியா இருந்திச்சு.என்றான். அன்றைக்கு இவர் சண்டைப் போட்டு வாங்கியதைப் பார்த்து இன்னும் சில பேரும் கேட்டதாய் சொன்னான். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. நிச்சயம் கேட்டால் கிடைக்கும் தொடர்ந்து கேட்டுப் பாருங்க பின்னாளில் கேட்கவே தேவையிருக்காது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
திருமண வீடுகளில் முன்பெல்லாம் பந்தியில் ஒர் டம்ளரை வைத்து குடிப்பதற்கு தண்ணீர் ஊற்றுவார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அவ்விடத்தை 500ml தண்ணீர் பாட்டில்கள் ஆக்கிரமிக்க ஆர்மபித்தது. இப்போது முழுக்க முழுக்க தண்ணீர் பாட்டில் தான் கொடுக்கிறார்கள். ஒரு விதத்தில் நல்ல தரமான குடிநீர் வேண்டி கொடுப்பது தான் என்றாலும். விருந்துக்கு வருகிறவர்களில் பல பேர் சும்மா பேருக்கு ஒரு வாயோ, அல்லது பாதியோ குடித்துவிட்டு அப்படியே விட்டு விடும் பாட்டில் தண்ணீரை குப்பையில் தான் போடுகிறார்கள். தயவு செய்து அப்படி செய்யாமல் அக்குடிநீரை உங்களோடு எடுத்து வந்து வேண்டும் போது குடித்துக் கொள்ளுங்கள். தண்ணீரை வீணாக்குவது போன்ற மாபாவம் வேறேதுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸின் மறைவைப் பற்றி நினைக்கும் போது  ஏனோ உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னும் ஞாபகம் வந்தது.  மாலை நேரங்களில் எப்போது அவர் அங்கே இருப்பதை வழக்கமாய் கொண்டிருந்தவர். சட்டைப் பையில் 10க்கும் மேற்பட்ட பேனாக்களுடன் தலையில் டர்பனுடன் யாருடனாவது பேசிக் கொண்டோ, அல்லது எழுதிக் கொண்டோ இருப்பார். என்னையும் அறியாமல் ஒவ்வொரு முறை அங்கே போகும் போது அவர் இருக்கிறாரா என்று பார்த்துவிட்டு காஷுவலாய் அவரை க்ராஸ் செய்து ஒர் வணக்கம் வைத்துவிட்டு வருவேன். ஏனோ தெரியவில்லை. சில பேரை பார்த்தால் எனக்குள் இருக்கும் ஒர் பிம்பத்தை உடைக்க ஆசையில்லாமல் பேசாமல் தூரத்தில் இருப்பதே வழக்கம். அவரது பாடல்களைப் பற்றி எல்லாருக்கும் ஒர் நாஸ்டால்ஜியா இருக்கும். அவரின் சோகப் பாடல்களை விட, காலங்களில் அவள் வசந்தம் என்கிற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஜெமினி போன்ற மென்மையான நாயகர்களுக்கு மிக மென்மையான ஒர் குரலில் காதல் வழிய பாடியிருப்பார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களில், குரலில் இருக்கும் தனித்தன்மை நமக்கு வித்யாசமான உணர்வை, நெகிழ்வை, சந்தோஷத்தை அளித்துக் கொண்டேயிருப்பார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உன்னைவிட உன் அருகாமை எனக்கு அதிகமாய் தேவைப்படுவது வலிக்கிறது.

உனக்கான சந்தோஷத்தை யாராவது தருவார்கள் என்று எதிர்பார்ப்பதை விட நாமே அதை உருவாக்கிக் கொள்வது சிறப்பு

நான் பதில் சொல்லாமல் அமைதியாய் இருப்பது சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால் அல்ல கேட்க நீ தயாராகவில்லை என்பதால்

தினம் பேசாவிட்டாலும் மனதின் எங்கோ ஒரு மூலையில் நினைவுகளில் ஆழ்ந்திருப்பவன் தான் நண்பன்

என் கருவிழிகளை நனைத்துவிட்டு கல்லறையில் தூயில் கொண்டவனே.. கண்ணீர் அஞ்சலி கவிதைகள். ப்ப்பா.. கவிஞர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்ன தான் ஜாக்கிறதையா இருந்தாலும் பாப்கார்னை எவனாவது தட்டி விடத்தான் செய்யறாங்க

பெரிய சாமியார் செத்த துக்கத்துல அஸிஸ்டெண்டுங்க மூணு பேர் செல்ப் சூசைடாம். இவனுங்க பற்றற்ற சாமியாருங்களாம்.

உன்னை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நட்பு
  
நான் எப்படி இருந்தேன், இருக்கிறேன், இருக்கப் போகிறேன் என்ற மூன்று நினைப்புத்தான் என் வாழ்கையை தீர்மானிக்கிறது
  
பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுடன் உட்லன்ஸ் டிரைவின் மறைவும் ஞாபகம் வந்து தொண்டையை அடைக்கிறது.

உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல எனக்கு பயமில்லை. எங்கே நீ என்னை காதலிக்கவில்லை என்று சொல்லி விடுவாயோ என்றுதான் பயம்.

உன்னைவிட உன் அருகாமை எனக்கு அதிகமாய் தேவைப்படுவது வலிக்கிறது.
 IPL மேட்ச்களினால் மாநிலம் சார்ந்த வெறுப்புகள் அதிகரிக்கிறதோ என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
அடல்ட் கார்னர்
 Q. What do women and police cars have in common? 
A. They both make a lot of noise to let you know they are coming.

Post a Comment

6 comments:

குரங்குபெடல் said...

"IPL மேட்ச்களினால் மாநிலம் சார்ந்த வெறுப்புகள் அதிகரிக்கிறதோ என்று தோன்றுகிறது."


பலர் சொல்லுகின்றனர்



' கிரிக்கெட் மீதே வெறுப்பு அதிகரிக்கிறது என்று '


Unknown said...

//உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல எனக்கு பயமில்லை. எங்கே நீ என்னை காதலிக்கவில்லை என்று சொல்லி விடுவாயோ என்றுதான் பயம்.//

இரண்டாவது வரியில் சின்ன திருத்தம்..

எங்கே நீ அங்கிள் என்று சொல்லி விடுவாயோ என்றுதான் பயம்.

எப்பூடி? :-)

rajamelaiyur said...

தண்ணீர் பற்றி நீங்கள் சொன்னது மிகவும் உண்மை . இன்னும் 15 வருடங்களில் பயங்கர தண்ணீர் தட்டுபாடு வரும் ..

rajamelaiyur said...

இன்று
ரிலாக்ஸ் ப்ளீஸ்

விமல் ராஜ் said...

// கார்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களுக்கு விவசாயம் ஃபேஷனாய் இல்லாவிட்டாலும் நல்ல வியாபாரமாகவாவது படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது....

இது ஒரு நல்ல ஆரம்பம்மாக இருக்கட்டும் !!!!

reverienreality said...

தண்ணீரை வீணாக்குவது போன்ற மாபாவம் வேறேதுமில்லை.//

அதைக்காட்டிலும் நூறு மடங்கு கொடுமை அந்த பிளாஸ்டிக் பாட்டிலை குப்பையில் போடுவதே...