Thottal Thodarum

Apr 4, 2013

Amen

 மலையாள திரையுலகின் தற்போதைய ஹாட் ஸ்டார் பாஹத் பாசில் தான் போல. தொடர்ந்து ஹிட் படங்களாகவே அளித்து வருகிறார். இவரது அடுத்த ரிலீஸ் மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கும் ஒர் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சரி ஆமெனுக்கு வருவோம். குமரன்காரி எனும் ஒரு கேரள கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தையும், அங்கே பேண்ட் வாசிக்கும் குழுவை பின்னணியாய் வைத்து அமைக்கப்பட்ட கதை. 



அந்த சர்ச்சின் ஃபாதர் ஒர் ஓல்ட் ஸ்கூல் ஆள். ஊரும் அந்த சர்ச்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்.  அந்த சர்சின் பண்டில் நடத்தப்படும் லைவ் பேண்டை நடத்துவதா வேண்டாமா? என்ற சர்ச்சையில் இருக்கிறது. அதற்கு காரணம் தொடர்ந்து அந்த பேண்ட் ஊரில் நடக்கும் பேண்ட் போட்டியில் தோல்வியடைந்து கொண்டே வருகிறது. பாஹித் அந்த பேண்டின் முக்கிய கிளாரினெட் ப்ளேயரின் மகன். அவரின் மறைவிற்கு பிறகு தந்தையின் இடத்தை பிடிக்க முயலும் போதெல்லாம் தன் தந்தையின் நினைவினால் செயல்படுத்த முடியாமல் போகிறார். அவருக்கு கலர்ஸ் சுவாதிக்கும் சிறு வயது முதல் காதல். சுவாதி ஒர் பணக்காரப் பெண். இவரை காதலிப்பதால் சுவாதியின் வீட்டில் எதிர்ப்பு வலுவாகிறது. அந்நேரத்தில் சர்சுக்கு ஒரு இளம் பாதிரியார் வின்செண்ட் வருகிறார். இளமையும், தொலை நோக்கு பார்வையும் கொண்ட அவர் சர்ச்சிலிருந்து பழைய பாதிரியாரின் கட்டுப்பெட்டியான நடவடிக்கைகளை சரி செய்து, சர்ச் பேண்டை ஊக்குவிக்கிறார். இதனிடையில் தொடர் வெற்றிப் பெற்று வரும் எதிர் கோஷ்டி பேண்டில் உள்ளவரின் மகனுக்கும் சுவாதிக்கும் நிச்சயமாகிறது. ஒரு குழப்ப வேளையில் க்ளைமாக்சில் பாஹித்தின் டீம் பேண்ட் போட்டியில் வெற்றி பெற்றால் சுவாதியை திருமணம் செய்து தருவதாய் போட்டி வருகிறது. பாஹித் வென்றாரா? இல்லையா? என்பதுதான் கதை.
மிகச் சாதாரணமான லகான் பார்முலா கதைதான் என்றாலும் இவர்கள் எடுத்துக் கொண்ட களமும், பேண்ட் குழுவினரின் வாழ்க்கையும், கிராமத்தில் நடக்கும் கிறிஸ்துவ சர்சுகளின் பாதிரியார்களின் சுயநலமும், அதிகார துஷ்பிரயோகத்தையும் பட்டை உரித்திருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் நிறைய கேரக்டர்களை வைத்து பல சுவாரஸ்ய பின்னல்களை பின்னியிருக்கிறார்கள். ஊருக்குள்ளே இருப்பவர்களிடம் எதையாவது செய்து சண்டையைக் கிளம்பும் ஆள், எல்லா முக்கிய நேரத்திலும் எப்போதும் மரத்தின் மீது அமர்ந்தபடி கருத்து சொல்பவன். எதிர் கோஷ்டி பேண்ட் ஒனர், அவரது கூலிங் கிளாஸ் மனைவி. சர்த் பாதரின் அல்லக்கை, என பல சுவாரஸ்ய கேரக்டர்கள் மூலம் ஒரு விதமான கல்ட் நகைச்சுவையை அளித்திருக்கிறார்கள்.


படத்திற்கு மிகப் பெரிய பலம் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு அழகான ப்ளீசிங் விஷுவல்ஸ். ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு அழகு. கூடவே பலமாய் ஸூத்திங் கிளாரினெட், க்யூட் மெலடிபாடல்கள், மற்றும் பின்னணியிசையமைத்த பிரசாந்த் பிள்ளை.

அதிகார வெறிப் பிடித்த சர்ச் பாதராக நடித்தவரின் நடிப்பு அருமை. அதே போல புதியதாய் வரும் இளம் பாதிரியார் வின்செண்டாக வரும் இந்திரஜித்தின் நடிப்பு இம்ப்ரசிவ். எனக்கென்னவோ இந்த படத்தில் பாசித்தின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்றே தோன்றுகிறது. வழக்கம் போல் கலர்ஸ் சுவாதி. 

இயக்குனர் லிஜோ ஜோஸ் பிலிச்சேரி. தினமும் இரவில் சுவாதியின் வீட்டின் முன் போய் கிளாரினெட் வாசிக்கும் பாஹத், சுவாதி-பாஹத் சிறு வயது முதலான காதலை ஒரே ஒரு பாட்டிற்குள் மாண்டேஜுகளிலேயே சொல்லி அசத்திய விதம். பாதிரியார் வின்செண்டுக்கும் ஐரோப்பிய பெண்ணுக்குமிடையே ஆன உறவு. கிறிஸ்துவ பாதிரிமார்களையும் அதன் அதிகார பின்னணியையும் தைரியமாய் சொன்ன விதம். கள்ளுக்கடை ஓனரம்மா. கலாபவன் மணியின் கேரக்டர் படு கிளிஷே. அதிலும் அவரது ஒட்டுத்தாடி.. படத்திற்கு திருஷ்டி. இடைவேளைக்கு பிறகு இப்படித்தான் போகுமென்று ஒவ்வொரு காட்சியும் நமக்கு முன்னமே தெரிய வந்தாலும் குட்டிக் குட்டி சுவாரஸ்ய காட்சிகளால் வெற்றியடைந்துவிட்டார்.
 கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Creative said...

இயக்குனர் லால் ஜோஸ் பிலிச்சேரி - அல்ல லிஜோ ஜோஸ் பிலிச்சேரி

ganeshmurthi sivaraman said...

லகான்+நந்தனம்=ஆமென்!

Leo Mukesh said...

Fahad Fazil is the son of Director Fazil & he is riding high on the new wave of malayalam films...The DoP of Amen is Abhinandan Ramanujan. He is the one who shot "Kolaveri" video..