Thottal Thodarum

Apr 12, 2013

ராஜா என்கிற ரசிகன்

இளையராஜா வழக்கமாய் இப்படி பேசிப் பார்த்திருக்க மாட்டீர்கள். அதுவும் சமீப காலமாய் அவர் குமுதத்தில் எழுதும் கேள்வி பதில்களில் இருக்கும் கோபமும், எரிச்சலுமான பதில்களை படிப்பவர்கள் என்ன தான் ரசிகராய் இருந்தாலும் கொஞ்சம் நெளியத்தான் செய்வார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட ராஜாவின் அகம் இல்லாத ஒர் பேச்சு. அழகு
  கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

நன்னயம் said...

இளையராஜாவிடம் இரண்டு முகங்கள் உண்டு.
ஒன்று பலரால் விமர்சிக்கப்படும் கோபமான, திமிரான இளையராஜா
இன்னொன்று (அதே பலரால் மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட) தனக்கு இசை உலகில் மூத்தோரை மிக அதிகமாக புகழ்வது, பணிவது (உண்மையில் இது போலியான/நடிப்பு முகம் அல்ல ) ராஜாவுக்கு வேஷம் போட தெரியாது.

உலக சினிமா ரசிகன் said...

இந்த காணொளியை தேர்வு செய்து ‘குன்றிலிட்ட விளக்காய்’ காண்பதற்கு வழி செய்ததற்கு நன்றி நண்பரே...

ராஜா ஒரு தெய்வக்குழந்தை.
இந்த மேடையில் பேசிய பேச்சாக இருக்கட்டும்.
குமுதம் கேள்வி-பதிலாக இருக்கட்டும்.
எல்லாமே ஒன்றுதான்.

அகத்திலிருந்து வருவதை ‘அகம்’ எனப்புரிந்து கொண்டால் அது ராஜாவின் குற்றமல்ல.

அரவிந்த் said...

சற்றே பெரிய பின்னூட்டம், விளம்பர இடைவெளிகளுடன்:

மிக நல்ல பகிர்வு. மிக்க நன்றி. எல்லா ராஜா ரசிகர்களுக்கும், உண்மையில் நல்ல விருந்து. முழுக்க முழுக்க அவர் ஒரு ரசிகனாக மாறி பேசியிருக்கிறார்.

[விளம்பரம் ஆரம்பம். குமுதத்தில் ராஜா பதில்கள் பற்றிய எனது பதிவு.

http://www.sivigai.blogspot.in/2013/03/b-b.html

விளம்பரம் முடிவு]

உண்மையில் ராஜாவின் இந்தப் பேச்சில் ரஹ்மான் பற்றி சொல்லுவார் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. ரஹ்மானுக்கு நடந்த பாராட்டு விழாவில் எப்படி கஷ்டப்பட்டு பேசினார் என்று தெரியும்.

[விளம்பரம் ஆரம்பம். அதைப் பற்றி எனது பதிவு.

http://www.sivigai.blogspot.in/2012/12/blog-post.html

விளம்பரம் முடிவு]

ராஜாவைப் பிடிக்காதவர்கள் எல்லாமே அவரிடம் குறையாக சொல்லும் ஒரு விஷயம், அவரது, பேச்சு. நண்பர்களுடன் எப்போது சண்டை வந்தாலும் முடிவில் ஒரே கேள்விதான் நான் கேட்பேன். "உண்மையிலேயே அவரோட இசை நல்லாவே இல்லையா யாரோடையும் ஒப்பிடாம சொல்லு" என்பேன். ஓரளவுக்கு அடங்குவார்கள். என்னதான் சொல்லுங்க, நமக்கு எப்பவுமே ராஜா, ராஜாதி ராஜாதான்.