Thottal Thodarum

Apr 6, 2013

சேட்டை

 ரெண்டு வருடங்களுக்கு முன் ஹிந்தி திரையுலகின் கல்ட் ஹிட் படமான “டெல்லி பெல்லி”யின் தமிழாக்க முயற்சிதான் இந்த சேட்டை. மிக சிம்பிளான கதைதான். ஹன்சிகா ஒரு  ஏர்ஹோஸ்டஸ். தன் தோழிக்கு உதவுவதற்காக வைரம் கடத்தும் ரஷ்யனுக்கு அவனைப் பற்றி தெரியாமல் அவனிடமிருந்து ஒர் பார்சலைலை வாங்கிக் கொண்டு டெலிவரி செய்ய ஒப்புக் கொள்கிறாள். அந்த பார்சலை தன் பாய் ப்ரெண்ட் ஆர்யாவிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்க்க அழைக்கிறாள் அவர்களது திருமண நிச்சயதார்த்த விஷயமாய் பேச. அந்த பார்சலை தன் ரூம் மேட்டான நக்கி சந்தானத்திடம் கொடுத்து  விடச் சொல்ல, அவன் ரோட்டோரம் விற்கும், கண்ட இடத்தில் சொறிந்து விட்டு கொடுக்கும் இலியானா சிக்கனை சாப்பிட்டு விட்டு வயிறு ப்ரச்சனையாகி வீட்டில் கழிந்து கொண்டிருக்கிறான். தன் காதலி வேறு வெளிநாட்டில் செட்டிலான ஒருவரோடு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வரும் பிரேம்ஜியிடம் தனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போனேன் புட் பாய்சன் ஆகிவிட்டது என்று சொல்லி, போகிற வழியில் labபில் தன் ஸ்டூல் டெஸ்ட செய்வதற்கான சேம்பிளையும், அந்த கவரையும் அட்ரஸையும் கொடுக்க, முறையே சரக்கை பிரேம்ஜி மாற்றிக் கொடுத்துவிடுவதால்  வருகிறது ப்ரச்சனை. அந்த பார்சலில் இருப்பது வைரங்கள். வைரத்துக்கு பதிலாய் வில்லனிடம் நக்கி சந்தானத்தின் “ஆய்” சாம்பிள் போக, ரஷ்யனை அடித்து பின்ன ஆரம்பிக்கிறார்கள். அதற்கு அப்புறம்  என்ன நடந்தது என்பதுதான் கதை.

 
மிக மிக பரபரப்பாய், கூத்தும் குதூகலமாய் போன ஹிந்தி வர்ஷனைப் பார்த்தவர்களுக்கு இந்த தமிழ் வர்ஷன் சுத்தமாய் பிடிக்காமல் போக வாய்பிருக்கிறது. ஏனென்றால் ஹிந்தி வர்ஷன் ஹிட்டடித்ததற்கு முதல் காரணம் அப்படத்தில் வரும் filthy யான வசனங்கள். இல்லாவிட்டால் கதையில் பெரிய புதுமையில்லை தான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் அசத்தியிருப்பார்கள். அப்ப ஹிந்தியில் பார்க்காதவர்களுக்கு ரொம்ப பிடிக்குமோ என்று கேட்டால் அதையும் இல்லைன்னுதான் சொல்லணும். சந்தானம் படம் பூராவும் இருந்து, அவரின் நகைச்சுவை பகுதிக்கு வசனமெழுதியும் ஒன்றும் எடுபடாமல் போனது மிகப் பெரிய சோகம். அதே போல் பிரேம்ஜியின் கேரக்டர். வெங்கட்பிரபுவின் படத்தில் மட்டும் எடுபடுகிறவர் ஏன் மற்ற படங்களில் எடுபட மாட்டேன் என்கிறார் என்று புரியவில்லை. ஆர்யா.. வழக்கம் போல கேஷுவலாய் பேசி, ஓடியபடி வருகிறார். வில்லனாய் வரும் நாசர் வித்யாசமான் கெட்டப்பில் தோன்றினாலும் ஹிந்தியில் வரும் விஜய் ராசின் பத்து பர்செண்டை கூட ட ச் செய்ய முடியவில்லை என்றே சொல்ல வேண்டும் வழக்கமாய் இம்மாதிரியான ரீமேக் படங்களில் ஒரிஜினலை கம்பேர் செய்யக்கூடாது என்பதுதான் என் வழக்கம் அதையும் மீறி யோசிக்க வைத்துவிட்டார்கள்.

ஹன்சிகா, அஞ்சலி என்று ரெண்டு ஹீரோயின்கள். ஹன்சிகா சிக்கென ஆகியிருக்கிறார். அஞ்சலி குண்டடித்திருக்கிறார். இவருக்கு வேறு யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள் போல.. நடிக்க என்று பெரிய வாய்ப்பில்லை என்றாலும் ஆளுக்கொரு பாடலில் ஆடிவிட்டு, கொஞ்சம் கவர்சியாய் வளைய வருகிறார்கள். நத்திங் மச் டூ சே

இசை தமன். இவர் என்னைக்கு எல்லா பாடல்களிலும் பாடகர் குரல்களை கம்ப்யூட்டரைஸ்டு செய்யாமல் போடப் போகிறாரோ அப்போதுதான் விளங்கும். அகலாதே மட்டும் ஓகே. பின்னணியிசையில் நத்திங் மச். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் மும்பை தெருக்கள், வெளிநாட்டு லொக்கேஷன்கள் எல்லாம் பளிச் பளிச்.
இக்கதைக்கு இந்தியிலிருந்து தமிழுக்கு மாற்றி திரைக்கதையமைத்தவர்களில் தயாரிப்பாளர் தனஞ்செயனும் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட காட்சிக்கு காட்சி அப்படியே எடுத்திருக்கிறார்கள்.  ஆனால் இளைமையும், துள்ளலும் மிஸ்ஸிங்.. வசனங்களில் ஆங்காங்கே ஒரிரு இடங்களைத் தவிர புன்னகைக்க கூட முடியாமல் போய் விடுகிறது. காலிங் பெல் அடித்து வீட்டில் வந்துவிட்ட பிறகு அடிப்பது போன்றவை அதில் சேர்த்தி. காமெடி வசனத்தை விட ”சூயிங் கம் கூட மெல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும் ஆனா துப்பித்தான் ஆகணும்” என்கிற டயலாக் நச்.

இயக்குனர் கண்ணன். ஜெயம்கொண்டான், காதல், குடும்பக்கதை, அடுத்து வந்த ஜப் வீ மெட் ரீமேக். அடுத்ததாய் வந்தது, ஜீவாவின் நடிப்பில் வந்த வந்தான் வென்றான். இதோ மீண்டும் ஒரு ரீமேக். அதுவும் கல்ட் ஹிட்டான ஹிந்தியிலிருந்து. ஆனால் இவருக்கு காமெடி ஜெனர் சுத்தமாய் ஒத்து வரவேயில்லை. ஆங்காங்கே வரும் வெகு சில ஒன்லைனர்கள் தவிர சுத்தமாய் சிரிக்க முடியவில்லை. ரெண்டு மூன்று இடங்களில் கண்டின்யூட்டி மிஸ்ஸிங்.

Post a Comment

9 comments:

Anbazhagan Ramalingam said...

what happened ji

suresh said...

So settai-ottai

suresh said...

En 120 rupai panathai semikka udhaviyatharku nandi ......

குரங்குபெடல் said...

இந்த இயக்குனர் எல்லாம்

உதவி இயக்குனர் ஆக இருந்த போது

கற்காத விஷயங்களை இயக்குனர் ஆகி

ஒவ்வொரு படமாய் கற்றுகொண்டிருக்கின்றார் . .

காசு குடுத்து படம் பார்க்கும் நாம் இ.வா .க்கள் . . .



இதை போன்ற இன்னும் இருவர் . .


விஷ்ணுவர்தன் மற்றும் விஜய்

Ravikumar Tirupur said...

படத்தொகுப்பு எப்படி?

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்...

Anonymous said...

ரிசல்ட் எதிர்பார்த்ததுதான்... பதிவிற்கு நன்றி...

Anonymous said...

Aaryavin settai vettai padam madhiriye super hit,Oru chinna doubt avanum evlo naal dhan valikatha madhiriye nadipan...

sada said...

I am a regular visitor to your blog. Thank you. Free Tamil Ebook :
http://www.mediafire.com/file/ig41m5erqpt72hx/Free_Tamil_Ebook.PDF