Thottal Thodarum

Apr 20, 2013

உதயம் NH4

 இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை NH4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை தான் கதைக்கு களன். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு, கதை திரைக்கதையில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கி வந்திருக்கும் இந்த படம் ஒர் ரோடு மூவி டைப். பெரும்பாலான ரோட் மூவிக்கள் சுவாரஸ்யமான திரைக்கதையில்லாமல் சொதப்பிவிடுவது உண்டு. அதில் இது எந்த வகை? 


என்ன தான் ரோடு மூவி, ஹைவே கதைக்களன் என்றாலும் வழக்கம் போல, பணக்கார அமைச்சரின் பெண், சாதாரணன் ஹீரோ. இவர்களுக்குள் காதல். போலீஸ் துரத்தல் என்று பழசான கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் கொஞ்சம் சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார்கள். நான் லீனியராய் போகும் திரைக்கதை படத்திற்கு எவ்வளவு பலமோ, அதே நான்லீனியர் திரைக்கதையிலிருந்து லீனியருக்கும் வரும் போது சப்பென ஆகிவிடுகிறது.
படம் நெடுக, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், ஹிந்தி என கலந்து கட்டி வசனம் பேசுகிறார்கள். என்ன தான் கதை பெங்களூரில் நடந்தாலும், வழக்கம் போல நார்த் மெட்ராஸ் பசங்கள், சரக்கு, பிகர், பஃப் என்று காலேஜ் போவதைத் தவிர பஃபுகளிலேயே உலா வருகிறார்கள். பெங்களூரில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இளைஞர்கள் கூட இப்படி தினம் செலவு செய்ய முடியாது. 
சித்தார்த் படம் நெடுக உம்மென்றே வருகிறார். கேட்டால் மெச்சூர்ட் கேரக்டர் என்று ஹீரோயின் வாயால் சொல்ல வைத்துவிடுகிறார்கள். மற்றபடி இந்த கேரக்டரில் வேறு யாராவது நடித்திருந்தால் கூட பெரிய வித்யாசம் இருந்திருக்காது. வெற்றி மாறனுக்கு டாப்ஸி போல கொஞ்சம் ஆங்கிலோ இந்திய சாயல் உள்ள பெண் தான் பிடிக்கும் போல அர்ஷிதா அப்படித்தான் இருக்கிறார். இவரும் படிப்பதைத் தவிர பஃப் காபி டேக்களில் வலம் வருகிறார். அழகாய் இருக்கிறார். நடிப்பைப் பற்றி சிலாகிக்க ஏதுமில்லை. இப்படத்தின் மூலமாய் ஹிந்தி நடிகர் கே.கே அறிமுகமாகியிருக்கிறார். திறமை வாய்ந்த நடிகர். அவருடய திறமைக்கு பொறியிட்டிருக்கிறார்கள். அநாயசமாய் கையாண்டிருக்கிறார். இருந்தாலும் அவ்வளவு பில்டப்புக்கு பேஸ்மெண்ட் வீக்காய் போனது  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கூட நடித்திருக்கிறார்.

படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. கிட்டத்தட்ட இந்த இளைஞர்களுடனேயே அலைவது போல கூடவே அலைந்திருக்கிறார். ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் யாரோ இவன் கொஞ்சம் இளையராஜாவின் “என் கண்மணியின் வாசம் அடித்தாலும், க்யூட் மெலடி. கானா  பாலாவின் பாடல் தனியே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இடைச் சொருகல்.
கதை, திரைக்கதை வெற்றி மாறன். கதை என்பது பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. நான் லீனியரில் சொல்லப்பட்ட திரைக்கதைதான் படத்தின் முதல் பாதிக்கான சுவாரஸ்யம். முக்கியமாய் பப் கலாச்சாரம், ஆங்கிலம் பேசத் தெரியாமல் பிகர்களை கரெக்ட் செய்ய முடியாமல் அவதிப்படும் நார்த் மெட்ராஸ் கருப்பு இளைஞர்கள். பிஜி, கதாநாயகியின் நண்பன், அவனின் ஒரு தலைக்காதல், இளைஞர்களிடையே ஏற்படும் காதல் பொறாமை. போன்றவைகளை காட்டியதில் ஒர் டீடெயிலிங் இருக்கிறது என்றாலும் லாஜிக் பல இடங்களில் உதைக்கிறது. வெறும் முப்பது சதவிகிதம், நாற்பது சதவிகிதம் எடுத்தவனெல்லாம் என்னதான் கேப்பிட்டேஷன் பீஸ் கொடுத்து படித்தாலும் சேர்த்துக் கொள்வார்களா? ஹீரோயினுக்கு 18 வயசு ஆகவில்லை என்கிறார்கள். +2 முடித்து மூன்றாவது வருடம் படிக்கும் மாணவிக்கு பதினெட்டு வயசு ஆகியிருக்காதா?  சித்தார்த் போன்ற ஹீரோ நடிப்பதால் ஹீரோவாக காட்ட வேண்டிய அவசியத்தில் கையில் ரெண்டு துணி நிறைய ஆணியை ஓடுகிற வண்டியின் முன் வீசி எறிந்து ஹீரோயினைக் காப்பாற்றுவது எல்லாம் ஓவரோ ஓவர். ஆரம்பத்தில் எல்லா ஊர் ரூட்டுகளையும் காட்டி ஒரு மாதிரி பில்டப் செய்துவிட்டு, குப்பத்திலிருந்து காணாமல் போன ஹீரோயினை காப்பாற்ற திடீர் திடீர்ரென சித்தார்த் முளைப்பது ஓட்டையோ ஓட்டை. சித்தார்த் கெட்டவர் என்று சொல்லி கதை சொல்ல ஆர்ம்பித்து, அவர் தான் அந்தப் பெண்ணை கடத்தினார் என்று ஆரம்பிக்க சொல்லப்படும் காட்சிகள் சுவாரஸ்யம். ஆனால் அவர்களின் காதல் கதையைக் கூட அவருடய ரூம் மேட் ப்ளாஷ்பேக்காய் சொல்வது சரி. ஆனால் காதலினிடமிருந்து பிரித்து கூட்டிக் கொண்டு போகப்படும் ஹீரோயின் ஏன் கே.கேயிடம் தன்  காதல் வளர்ந்த கதையை சொல்ல வேண்டும்?. பதினெட்டு வயசானால் பொண்ணு மேஜராகிவிடும் என்பதால் விட்டு விடுவார்கள் என்ற லாஜிக்கே கொஞ்சம் ஹி..ஹிதான். அதிலும் அப்பா அப்படி என் பொண்ணு வரலைன்னா அவனோட சேர்த்து அவளையும் கொன்னுடு எனும் வசனமெல்லாம் கெளரவம் படத்தில் வர வேண்டிய ஹானர் கில்லிங் வசனம்.பாதி படத்திலேயே கே.கே. க்ளைமாக்ஸில் இவர்களை விட்டு விடுவார் என்று அவருடய போன் மனைவி கேரக்டர் மூலம் மிகச் சுலபமாக புரிவதால் டெம்போ மிஸ்ஸிங்.
இயக்குனர் மணிமாறனுக்கு முதல் படம். அந்த வகையில் நல்ல மேக்கிங்கில் படத்தை அளித்திருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிள், கே.கேயின் போன் மனைவி, மகன், ஹீரோயினின் மன மாற்றத்திற்கான பஜ்ரங்தள பப் அட்டாக், ஹாக்கர் ஆள், என சிறுசிறு கேரக்டர்கள் மூலம் நிறைய விஷயங்களை சொல்கிறார். ஆனால் லாஜிக்கலாய் தமிழ் தெலுங்கு என ரெண்டு மொழிகளில் போக வேண்டும் என்பதால் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிற்கே வராமல் குப்பத்திலேயே டெண்ட் அடித்து உட்கார்ந்துவிட, அதற்கு பிறகு கதையிலும் ஏதுமில்லாததால் சப்பென முடிந்துவிடுகிறது. அருமையான ஆரம்பம். கொஞ்சம் க்ளிஷேவான அமைச்சர் அப்பா, பெண், லோக்கல் பையன் காதல், டெரர் வில்லன், என்ற க்ளிஷே இருந்தாலும் நான்லீனியர் கதை சொல்லலில் இருந்த விறுவிறுப்பு என பல ப்ளஸ்கள் முதல் பாதியில் இருந்தாலும், அத்தனை பில்டப்பையும் சப்பென்று ஆக்கிய இரண்டாம் பாதியினால் படம் ஆவரேஜ் ஆகிவிடுகிறது.

Post a Comment

7 comments:

Ponchandar said...

அடடா... படம் ஆவரெஜ்தானா ???? அப்போ ட்வுன்லோடிட வேண்டியதுதான் ! !

Anonymous said...

மிகச் சரியான விமர்சனம்.. சிறிது மைனாவின் சாயலும் தெரிந்தது.. ஒரு லவ் ஜோடி, அவர்களைத் துரத்தும் போலீஸ் ஆபிஸர், அவருக்கு வீட்டில் இருந்து வரும் போன்கால், வீட்டுக்கு போக வேண்டிய கட்டாயம்.. இப்படி இது ஒரு ரோட்டோர மைனா... ஆனால் மைனாவில் இருந்த பீல் மிஸ்சிங்க்..

Tamilthotil said...

பின் பாதி நீங்கள் சொல்வது போல் தான் அமைந்துள்ளது...

செந்தில் said...

ஆனாலும் இந்த மொக்க படத்துக்கு இவங்க காட்டின trailer இருக்கே, முடியல.கேபிள் சார் பாவம் பாத்து பொழைச்சு போங்கன்னு சுமார்-ன்னு போட்டுட்டார்.இதுக்கே வொர்த் இல்ல..

குரங்குபெடல் said...

அண்ணே

ஏன் எப்போதும் ரயில்வே ஸ்டேசன்ல


இன்னொருதரை மிஸ் பண்ணனுன்றதுக்ககவே

தண்ணி வாங்க ஒருத்தர் மட்டுமே போறாங்க . . .

Unknown said...

சேம் பீலிங்

arul said...

nice review