Thottal Thodarum

Aug 5, 2008

குசேலன்????

சமீபத்தில் நான் பார்த்து நொந்து போன படம் குசேலன். ஓரு ஏழை நண்பனுக்கும், ஓரு சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நட்பை பற்றி "பறையும்" கதை. மலையாளத்தில் மிக அருமையாக, எடுக்கப்பட்ட அருமையான படம். அதை எவ்வளவு கேவலமாக கெடுக்க முடியுமோ, அவ்வளவு அருமையாக கெடுத்திருக்கிறார்கள்.

ஓரு தனிமனிதனை துதி பாடுவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது.தேவையில்லாமல் படம் முழுவதும் ரஜினியை விரவி,அவருக்கு இருக்க்கும் நல்ல பேரையும், கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சந்திரமுகி என்ற படத்தை எடுத்து ஓரு நல்ல மலையாள படத்தை கெடுத்த வாசுவுக்கு, மீண்டும் ஓரு நல்ல படத்தை பார்த்ததும் கை சும்மா இல்லை போலிருக்கிறது.

ரஜினி என்ற ஓரு காந்ததை வைத்து, பணம் பறிப்பதற்காகவே ஆரம்பிக்கபட்ட படம்தான் குசேலன்.

சுமார் ஆறு முதல் ஏழு கோடி ரஜினியின் சம்பளம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம், பிரமிட் சாய்மீரா என்ற கார்பரேட் நிறுவனம் சுமார் 65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தமிழ் , மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டது. தமிழில் பல ஏரியாவில் 20 முதல் 30 லட்சம் வரை MG வாங்கிக்கொண்டு வெளீயிடப்பட்டது, பல தியேட்டர்களீல் முதல் காட்சி வசூல் 90 சதவீகிதம் என்றால் அடுத்த காட்சியின் வசூல் அப்படியே பாதிக்கும் குறைந்துவிட்டது. அதற்கு அடுத்த காட்சி அதை விட குறைவு. இப்படி மரண் அடி கொடுத்திருகிறார்கள் மக்கள்.

படத்தில் ரஜினி சொல்வது போல், நல்ல கதையும், திரைக்கதையும் இல்லாவிட்டால் நான் நடித்தால் கூட படம் ஓடாது என்று சொன்னது போல் இந்த படம் அதற்கு ஓரு உதாரணமாய் அமைந்துவிட்டது.

ஆனால் ஓரு விஷயம், கண்மூடித்தனமாக பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து,வாங்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், அதை அவர்களீடமிருந்து வாங்கும் விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் அதிபர்களூக்கும், இந்த மாதிரியான அதிக ஹைப் செய்யப்பட்ட படங்களை முதல் நாளே அதிக விலை கொடுத்து பார்க்கும் என் போன்ற சினிமா ஆர்வலர்களுக்கும் இந்த படம் ஓரு பாடம்.


படத்தில் பசுபதி குசேலனாக வருகிறார். நிஜத்தில் இந்த படத்தை வாங்கியவர்கள் கண்ணனை போலிருந்து குசேலனாவது நிச்சயம்.

அவர்களை வேறு கண்ணன் வந்து காப்பாற்றட்டும்.
Post a Comment

2 comments:

Ravi said...

Very good review. I appreciate this.

சகாதேவன் said...

நன்றாக 'பறை'ந்திருக்கிறீர்கள்
சகாதேவன்