click here

TT

Thottal Thodarum

Aug 30, 2008

தாம்-தூம்- திரை விமர்சனம்


இயக்குனர் ஜீவா இருந்திருந்து அவரின் படத்தை பார்த்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மிக அருமையாக வந்திருக்க வேண்டிய ஓரு திரில்லர் படத்தை, போட்டு குழப்பி,தவறான காஸ்டிங்கினாலும், திரைக்கதையினாலும் சொதப்பிவிட்டிருப்பது பரிதாபம்.

சென்னையின் ஓரு பிரபல மருத்துவ்ரின் மகனான கெளதம் சுப்ரமணியம் ஓரு கான்பரன்ஸ் விஷயமாய் ரஷ்யா போக, அங்கே நட்பாகும் ஓரு ரஷ்ய பெண் அவரது அறையில் கொல்லப்பட, அதனால் அவர் கைதாக, இங்கே அவரின் காதலி பொள்ளாச்சியில் திருமணத்திற்காக காத்திருக்க, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

படிக்கும் போது மிக இண்ட்ரஸ்டான ஓரு திரில்லர் திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் இருந்தும், படம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ரஷ்யாவிற்கும், பொள்ளாச்சிக்குமாய் அலைபாயும், திரைக்கதை படத்தின் வேகத்தை கூட்டுவதற்கு பதிலாக, மேலும் சுருதியை குறைக்கிறது.

பொள்ளாச்சி காதலியாக, கங்கணா ராவத், கொஞ்சமும் பொறுந்தாத டிசைனர் அவுட்பிட்களுடன் கிராமத்து சுட்டிப் பெண்ணாக வருவதும், அவரின் அப்பா ஏதோ மிகப் பெரிய ஆள் என்பது வசனதிலேயே பில்டப் செயவதும், ரவியின் மாமாவிற்கும் அவருக்கும் ஏதோ ஓரு பிரச்சனை என்பது போல பில்டப் செய்வது எதற்கு என்றே தெரியவில்லை,
மிக நல்ல நடிகர்களான சேத்தன், போஸ் வெங்கட், ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளார்கள்.

கிராமத்தில் பஸ்ஸை பிடிக்க,ரேஸ் வைப்பது, டூரிங் கொட்டாயில் மலையாள பிட் படம் பார்பது, ரம்மியில் செல்போனை தொலைப்பது என்று ஆங்காங்கே “பளீச்” என்றாலும் இன்னம் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக் இருந்திருக்கும்.

ரஷ்யாவில் ரவிக்கு உதவும் இந்திய லாயராக லஷ்மிராய்.. அப்படி ஓன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஓரு வேளை அவர் கங்கணா பாத்திரத்தில் நடித்திருந்தால் மிக அருமையான ஓரு கிராமத்து காதலியை கண் முன்னே நிறுத்தியிருப்பாரோ.. என்று தோன்றுகிறது.

ஜீவாவின் அருமையான ஓளீப்பதிவில் ரஷ்யாவும், பொள்ளாச்சியும் மிளீர்கிறது என்று சொன்னால் அது சும்மா வார்த்தை தான். இனி எங்கே உங்கள் படங்களை பார்பது ஜீவா?

அதுவும் ரஷ்யாவில் சேசிங் காட்சிகளில் சிம்பிளீ சூப்பர்ப்..

ரவி போலீஸிலிருந்து தப்பித்து ரஷ்யாவின் அந்தனை முக்கிய இடங்களிலும் சர்வசாதாரணமாக நடமாடுவது படத்தில் காமெடி இல்லாததை போக்குகிற்து. கடைசியில் வில்லனாய் ஜெயராம். சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஜெயராம்.

படத்தில் நம்மை எல்லாம் கட்டி போட்டு உட்கார வைப்பது ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களூம், பிண்ண்னி இசையும், ஹேட்ஸ் ஆப் ஹாரிஸ்.

மொத்ததில் ஜெயம் ரவிக்கு தாம்=தூம் திருஷ்டி கழிப்பாக இருக்கும்
Post a Comment

7 comments:

கிரி said...

//மொத்ததில் ஜெயம் ரவிக்கு தாம்=தூம் திருஷ்டி கழிப்பாக இருக்கும் //

வருத்தமாக உள்ளது.

உங்களுடைய டெம்ப்ளேட் அழகாக உள்ளது

cable sankar said...

நன்றி கிரி.
மேலும் பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள். நன்றி

தமிழ்ப்பறவை said...

விமர்சனம் அருமையாக உள்ளது ...(அதென்ன பெயர் கேபிள் சங்கர்..? )சி.ஐ.டி. சங்கர்,ஆட்டோ சங்கர்,மகாநதி சங்கர் வரிசையில் இன்னொரு சங்கர்... ச்சும்மா உங்க பேருக்கு ,பேருக்கு விமர்சனம் எழுதிப்பார்த்தேன்...

rapp said...

ரெட் கார்னர் தானே சொல்லி இருக்கீங்க அந்தப் பதிவில்?

cable sankar said...

//நண்பா அந்த படம் பேரு ரெட் கார்னர், உலக மகா மொக்கை படம் ,
இந்த படம் சைனால தடைபண்ணிட்டாங்க , சீனாவோட அரசியல்ல நடக்கற ஊழல விமர்சனம் பண்ணிட்டாங்கனு’//

சும்மா இருக்கட்டுமேன்னுதான் நன்றி

cable sankar said...

ஆமாம் ரெட் கார்னர் தான் ராப். உங்கள் வருகைக்கு நன்றி

cable sankar said...

(அதென்ன பெயர் கேபிள் சங்கர்..? //.

வெறும் சங்கர் வேணாமேன்னுதான்.
மேலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.