எல்லோரும் கடைசியா "குடி"ச்சுக்கங்க....

ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது.

அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக, ரோட்டின் முனையில் நின்று கொண்டு பிடிப்பதை விட்டு விட்டு அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)

Comments

Excellent Idea............really u have given a worth solution to solve many problems.
Bleachingpowder said…
எனக்கு இந்த விசியத்துல ரொம்ப நாளா ஒரு சந்தேகம். குடிச்சுட்டு வண்டி ஓட்டினா தப்பா. இல்லை நிர்ணயக்கபட்ட அளவை மீறி குடித்து வண்டியோடினால் தான் தப்பானு.

எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட அளவை தாண்டி மது அருந்திவிட்டு வண்டியோட்டினால் தான் பிடிப்பார்கள். இந்தியாவிலும் அப்படிதான், ஆனால் அதை காவல் துறை கடைப்பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன்
எல்லா நாடுகளை போல ஓரு குறிப்பிட்ட அளவு மது அருந்தி வண்டியோட்டலாம். ஆனா அந்த ரூல்ஸ் எல்லாம் நமக்கும் தெரியாது, போலீசுக்கும் தெரியாது. போலீசுக்கு தெரிஞ்சததெல்லாம் கட்டிங் வாங்கிறது, இல்ல, கேஸ் போடறது.அத தவிர வேற ஏதும் தெரியாது.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.