Thottal Thodarum

Aug 26, 2008

நாயகன் - ஓரு நிஜ விமர்சனம்


நாயகன் பழைய கமல் நடித்த படத்தின் பெயரை வைத்து மக்கள் மனதில் ஈஸியாக மார்கெட்டிங் செய்தாகிவிட்டது. ஏற்கனவே பல பேர் எடுத்து கிழித்து விட்ட ஆங்கில படமான “செல்லூலர்” திரைபடத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிந்து வந்திருந்த பலரின் புருவங்களை உயர்த்திய படம்.

ஜே.கே.ரித்தீஷின் புண்ணியத்தால் ஏற்கனவே பப்ளிசிட்டியில் குறையில்லாததால். தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனது ஓண்றும் ஆச்சர்யமில்லை.

ரமணா,சங்கீதா,ஆனந்தராஜ், போன்றவர்களீன் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.ரித்தீஷீன் நடிப்பு, அப்படி ஓன்றும் நக்கலாய் சிரிக்கிறமாதிரியில்லை. அவரை பற்றி ஓரு கிண்டலான எண்ணம் கொண்டவர்கள் கூட படம் முடிந்து வெளிவரும் போது பெரிதாக அவரை கிண்டல் செய்ய முடியவில்லை.

சில சமயம் ரஜினி ரேஞ்சுக்கு அவர் தரும் பில்டப்பை பார்க்கும்போது சிரிப்பாக் இருந்தாலும், தேவையில்லாமல் படத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் அந்த பில்டப் இருப்பதால் ஓண்றும் பெரிதாக தெரியவில்லை.

ஷாவின் கேமரா படத்தின் வேகத்திற்கு ஈடாக உழைத்திருக்கிறது. ஆங்கில படத்தில் வரும் லொகேஷன்களை போலவே தேடி பிடித்திருக்கிறார்கள். ரித்தீஷை பல இடங்களில் காப்பாற்றியிருப்பவர் கேமராமேன் ஷாவும், எடிட்டரும் தான். அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிஜமாகவே காமெடியாகியிருக்கும்

மொத்தத்தில் சொல்லப் போனா.. சமீபத்திய மிக எதிர்பார்து போய் பார்த்த படங்களான குசேலன், சத்யம் போன்ற படங்களை விட எதிர்பார்பில்லாமல், ஜே.கே.ரித்தீஷை கிண்டல் செய்யலாம்ன்னு போன நாயகன் எவ்வளவோ பரவாயில்லை.
Post a Comment

1 comment:

பாலா said...

இதன் டிவிடி-ஐ ரிலீஸ் செய்யாத அய்ங்கரனை கடுமையாக கண்டிக்கிறேன்.