Thottal Thodarum

Aug 26, 2008

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-2

அந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று விஜய்காந்த் போல கண்கள் சிவந்து, உடலெல்லாம் சூடாகி,கன்னத்து சதை எல்லாம் ஹைஸ்பீடில் ஆடததுதான் பாக்கி,

" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்.."

என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் " சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்.." எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி " சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. " சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்.." என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..நம்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆனா...

ஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும்,

"சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:"

கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.

சரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து...


" வாட் கேன் ஐ டூ பார் யூ?"


நான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால்


" சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... " என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது..


" சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்?" என்றேன்..


அதற்கு அவர் சிறிதும் அசராமல் " அப்படியா? சொன்னாங்க? :" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....


தொடரும்..(கோச்சிக்கதீங்க.. ரொம்ப படிச்சா போரடிக்கும்னுதான்...)


Post a Comment

3 comments:

யாத்ரீகன் said...

hmmm.. govt banks-ku indha vidhathula private banks alternative-nu market panraanga.. but the reality hasnt changed much ?

Cable சங்கர் said...

வாங்க யாத்ரீகன், எல்லாமே கானல் நீர் தான். இக்கரைக்கு அக்கரை பச்சைதான்

Unknown said...

எனக்கு இது போல் பெங்களூர் நடந்தது ...