
நான் சமீபத்தில் தான் இந்த பாடலை தமிழில் கேட்டேன். மணிரத்னத்தின் 'குரு" திரைப்டத்தில் வரும் "மய்யா..மய்யா" என்ற பாடலை ஹிந்தி யில் கேட்டிருக்கிறேன். அதை தமிழில் சில நாள் முன்பு கேட்டு, வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களையும், அவரின் இலக்கிய செரிவையும் கண்டு அசந்துவிட்டேன். ஓரு ஐயிட்டம் சாங்கில் இப்படி எழுதியிருக்கிறாறே ?
இந்த பாடலை அளித்தமைக்காக எல்லோரும் வைரமுத்துவிக்கு ஓரு "ஓ" போடுங்க.
இதோ அந்த பாடல்.
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
தினம் ஆடை சந்தையிலே
முதலில் தோற்பவள்
இரு குறையட்டும் திரு விளக்கு
நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு
அட!! கடவுளை அடையும் வழிகள்
என் மேல் எழுதிருக்கு
மய்யா மய்யா
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்
மய்யா மய்யா
என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும்
பொய்யா பொய்யா…
என்னா பாட்டு பா.. சோக்காகீது..
Comments
http://chinaudioblog.blogspot.com/2007/07/mayya-mayya-tamil.html
Chinmayi's song.