Thottal Thodarum

Aug 19, 2008

சதயம்: ஓரு நிஜ விமர்சனம்



"சட்டமும் சாமியும் ஓண்ணு. சாமிதான் கண்ணை குத்தணும், சட்டம் தான் கடமையை செய்யணும்"ங்கற ஓரு அருமையான குழந்தைத்தனமான ஓரு கருத்தை 25கோடி ரூபாய் செலவு செஞ்சு நம்ம வெறுப்பேத்தியிருக்காங்க.

சின்சியரான போலீஸ் ஆபீசர் சத்யமாக விஷால். உடலை நன்றாக கட்டுப்கோப்பாக வைத்திருக்கிறார். விறைப்பாக நிற்கிறார். ரோபோ போல் அங்கும், இங்கும் திருமபுகிறார்.

இயக்குனர் ராஜசேகர் இவரை ஏத்தி விட்டே படம் வாங்கியிருக்கார் போலருக்கு
படத்துல ஹீரோவுக்கு ஓரு பந்தாவான அறிமுக காட்சி இருந்து பார்த்து இருக்கோம். ஆனா படத்தில் முதல் பாகத்தில் முக்கால் வாசி நேரம் அறிமுக காட்சி போலவே பத்து சீன் வந்தா.. ஆவ்...

நயந்தாரா.. விஷால் போலவே அவரும் நல்லா உடம்பை மெயின்டென்யின் பண்ணியிருக்காரு. அவங்களோட சம்பளத்தை ஏத்தியிருக்காங்க, அத தவிர நடிப்புல எந்த ஏத்தத்தையும் காணோம். அதுசரி கதையில் அவருக்கு ஏதாவது கொடுத்தாதானே ஏத்திக்கறத்துக்கு.

படத்துல வில்லன் போல வரும் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா.. சூப்பர். அவருடைய பாடி லேங்குவேஜூம், நடையும், சிம்பிளீ சூப்பர். அதோட அவரோட கேரக்டருக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தை விஷாலுக்கு கொடுத்திருந்தா படமும் நல்லா இருந்திருக்கும்.

இசை..ஹாரிஸ் ஜெயராஜாம்...

ஓளீப்பதிவு: r.d . Rajaseகர் சும்மா சொல்லக்கூடாது, படத்துல அவருக்கு கொடுத்த காசுதான் பிரயோஜனம். நம்ம காசுக்கும் அது தான் ஓரத்.

பாயிண்ட் ஆப் வியூ இல்லாத கதையினால். விஷால் என்னதான் விழுந்து புரண்டு சண்டை போட்டாலும், ஓண்ணும் வேலைக்காகல, தேவையில்லாம, அவங்க அம்மாவையெல்லாம் சாகடிச்சு.. சசு..சசு...

மொத்ததுல கொடுத்த 60ரூபா தண்டம்
Post a Comment

3 comments:

அமுதன் said...

எல்லாம் சரி. ஆனா, எதுக்காக இந்த படத்தை எல்லாம் போய் பார்க்கிறீங்க!!

senthil said...

Romba nandri thalaiva... en manasula pattatha appadiye eluthi irukkeenga.

Cable சங்கர் said...

அமுதன், நாமக்கல் சிபி, மற்றும் செந்தில் அவர்களூக்கு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி