தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல். என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்க...
Comments
வாழ்த்துக்கள்.. அருமையான படம்... நல்ல திருப்பம்.. எல்லோருமே நல்லா நடிச்சிருக்காங்க.. மனைவியா வர்றவங்க அந்த பதட்டத்தை அப்படியே பிரதிபலிச்சிட்டாங்க.. அவங்க பதட்டம் என்னையும் தொத்திக்கிச்சுன்னா பாத்துக்கங்களேன்..
நல்ல மெஸேஜ்..
நிறைய செய்யுங்க.. இது போல..
அன்புடன்,
சீமாச்சு...
வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
வால்பையன்
படம் நல்ல செய்திகளைச் சொல்கிறது. இறுதித் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
வழக்கமாக சமூகப்பிரச்சாரப் பட வகைகளில் முடிவில் 'மெஸ்ஸேஜ்' கொடுத்து மொக்கையாக முடிப்பார்கள்.. இதில் வாழைப்பழ ஊசி போல் செய்தி சொல்லி உள்ளீர்கள்..அருமை...
வழியில் யாருக்காவது அடிபட்டால், உடனடியாக உதவத்தூண்டுகிறது தங்கள் படம். பாத்திரத்தேர்வு,இசை(நாயகி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் காட்சிகளில் ), ஒளிப்பதிவு, குறிப்பாக படத்தொகுப்பு அபாரம்...
//கதாநாயகியை செக்ஸியாக காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி எடுக்க வில்லை,பதட்டத்தில் யாருமில்லாத வீட்டில் கணவனை காணாது இருக்கும் பெண்ணிடம் உள்ள இயல்பை காட்ட நினைத்து படமாக்கபட்டது.//
நல்ல கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள்...(மழைக்கட்சியில் கூட கலையாத மேக்கப் போடுவதுதான் நமது வழக்கம்..)
ஆனால் தங்களின் இந்த முரண்தான் இயல்பை அழகாகக் காட்டுகிறது...
சுருங்கக்கூறின் தங்களின் இக்குறும்படம் ஒரு குறள்.
விரைவில் ம்ற்ற படங்களையும் பார்த்து விட்டு வருகிறேன்...
-gopi