Thottal Thodarum

Dec 30, 2008

King - Telugu Cinema Review



ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார்.

இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது.

நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார்.

பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜினியர் சரத்தாகவும் அவரின் அண்ணன் ஸ்ரீஹரியிடமும், த்ரிஷாவிடம் ஆட்டம் காட்டுவது பல படங்களில் பார்த்தாலும் பரவாயில்லை. அதிலும் ஸ்ரீஹரி தப்பு தப்பாய் எதையாவது படம் வரைந்து எப்படி தன் கிரியேட்டிவிட்டி என்று சல்ப்புவது மெம காமெடி ரவுடி.அதே போல் ஒரிஜினல் சரத்தாக வரும் சுனிலின் காமெடியும் சூப்பர்.

இசை தேவிஸ்ரீபிரசாத் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஓம் சாந்தி ஓம் பாணியில் இருக்கிற அழகு தெலுங்கு ஹீரோயின்களை வைத்து பாடும் பாடல் ஒன்றும் பிரமாதமில்லை. என்ன அனுஷ்கா வருவதால் ம்ஹூம்..

இந்த படத்திலும் இயக்குனர் ஸ்ரீனிவைட்லாவுக்கு மிகப் பெரிய பலம் பிரம்மானந்தம்.. படம் பூராவும் மனுசன் இசையமைப்பாளர் ஜெயசூரியாவாக வந்து பின்னி எடுக்கிறார். அதே போல் பல படங்களின் காட்சிகள் பயன்படுத்த பட்டிருக்கிறது.. உதாரணமாய் ரேஸ், கோல்மால், சந்திரமுகி, என்று கலந்துகட்டி விட்டிருக்கிறார். செகண்ட் ஆப்பில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள், டர்ன்கள், அதுவே படத்துக்கும் பலவீனமாகவும் இருக்கிறது. என்ன ஒரு ஆறுதல் என்றால் வழக்கமாய் க்ளைமாக்ஸில் சண்டையில் முடிப்பார்கள், அப்படியில்லாமல் சட்டென்று முடிந்தது ஒரு ஆறுதல்.


மொத்ததில் கிங் ஒரு பக்கா மசாலா..
Post a Comment

2 comments:

நட்புடன் ஜமால் said...

\\திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார்.\\

ஏன் ஏன் ...

Cable சங்கர் said...

//ஏன் ஏன் ...//

அப்படித்தான் இருக்கிறாஙக அதிரை.. அது சரி உஙக் ஓட்ட போட்டீங்களா..?