Thottal Thodarum

Dec 23, 2008

Luckylookகின் விழா..


நமது தோழர் லக்கிலுக் அவர்கள் எழுதிய “விளம்பர உலகம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா, கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு குட்டி பதிவர் சந்திப்பு போலவே இருந்தது.

சரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன். மிக சொற்பமான கூட்டமே இருந்தது. லக்கி ரொம்ப நல்ல பிள்ளையாய் உட்கார்ந்திருந்தார். திரு.வள்ளியப்பன் அள்ள அள்ள பணம் நூலாசிரியர் அவர்கள் நூலை வெளியிட்டு பேசினார்.

பதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த,மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்..

விளம்பர உலகம் புத்தகத்துடன் மால்கம் எக்ஸ் என்ற ஓரு புத்தகத்தையும் அறிமுக படுத்தினார்கள். கேள்வி நேரத்தில் லக்கிலுக்கிடம் மீடியா சம்பந்தமான பல கேள்விகள் கேட்கபட்டன. அவரும், வள்ளியப்பன் சாரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்து கூறினார்கள். கேள்விகள் தேவையில்லாமல் திசைமாறி விளம்பர உலகின் அரசியல், நுண்ணரசியல் என்று கேனத்தனமாய் போனது.

அதில் முக்கியமான ஒரு கேள்வி.. ஏன் கருப்பான பெண்களை விளம்பர உலகம் வரவேற்பதில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ.. கேள்விகள்..

சரி ஒரு அட்டு பிகரை வைத்து விளம்பரம் எடுத்தால் நீங்கள் பாப்பீங்களா..? என்று பதிலுக்கு லக்கி கேட்பார் என்று பார்த்தேன். மேடையில் இருந்ததால் நல்ல பிள்ளையாய் வாய்மூடி கமுக்கமாய் இருந்துவிட்டார் போலும். கூட்டம் முடிந்ததும் வெளியே நான் லக்கியிடம் நீங்கள் இந்த மாதிரியான பதிலை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்று சொன்னேன். அதையே பா.ராகவன் வழிமொழிந்தார்.

அந்த மொட்டை மாடி கூட்டத்தில் அடுத்த புத்தகமான மால்கம் எக்ஸ் பத்தி கேள்வி கேட்பவர்கள் ரொம்ப குறைவாகவே இருந்தார்கள். அதிலும் அவரை பற்றி விட இஸ்லாம் அது இது என்று உட்டாலக்கடி அடித்து கொண்டிருந்தார்கள். அப்போது நர்சிம் ஒரு மாபெரும் கேள்வியை கேட்டு எல்லாரையும் திகைக்க வைத்தார் .. அது என்னவென்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பா.ராகவன் அவர்கள் அதற்கு ஒரு மாதிரியான் பதிலும் சொன்னார்.ஒரு நண்பர் இஸ்லாமில் பிரிவுகள் இல்லை என்று ஒன்றை சொல்லி மாட்டிக் கொண்டார்.

அந்த உருளைகிழங்கு சிப்ஸ் சூப்பர். ஹாட்சிப்ஸா..? அந்த பனிவிழும் மொட்டைமாடியில் அந்த சிப்ஸ், காபி சூப்பர்.. நேற்று காராசேவாம்.

அதுசரி இந்த புத்தகத்தை எழுதியது யாரோ யுவகிருஷ்ணாவாமே..? எனக்கென்னவோ.. லக்கிலுக்ன்னே.. வச்சுருக்கலாமோன்னு தோணுது....

வாழ்த்துக்கள் நண்பரே.. மென் மேலும் உங்கள் எழுத்து பணி வளர்க..

நேத்து போட்டோ எடுத்த மகானுபாவன்கள் யாராவது ரெண்டு போட்டோ இருந்தா இணையத்துல போடுங்க.. நானும் சுட்டு போட்டுர்றேன்.
Post a Comment

13 comments:

நட்புடன் ஜமால் said...

\\ரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன்\\

ஹா ஹா ஹா ...

நட்புடன் ஜமால் said...

\\சரி ஒரு அட்டு பிகரை வைத்து விளம்பரம் எடுத்தால் நீங்கள் பாப்பீங்களா..? \\

இப்படியாக ஒரு திரைப்படமே எடித்தால் என்னவென்று பல சமயம் நினைப்பதுண்டு.

Cable சங்கர் said...

//இப்படியாக ஒரு திரைப்படமே எடித்தால் என்னவென்று பல சமயம் நினைப்பதுண்டு.//

அதுசரி எங்க கொஞ்ச நாளா ஆளையே நம்ம பக்கம் காணோம்.. உங்க விமர்சனம் இல்லாம கதையெல்லாம் காத்திட்டிருக்கு.

கோவி.கண்ணன் said...

//பதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த, மற்றும் கோவி. கண்ணன் என்று நினைக்கிறேன். ஆகியோரும் மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்..//

:)

கண்ணன் தான் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று ஆத்திகர்கள் சொல்லுவார்கள். கோவி.கண்ணன் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நான் அங்கு வரவில்லை

Cable சங்கர் said...

//கண்ணன் தான் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று ஆத்திகர்கள் சொல்லுவார்கள். கோவி.கண்ணன் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நான் அங்கு வரவில்லை/

சாரி தலைவா.. நான் தான் தப்பா போட்டனனோ.. சரி பண்ணிர்றேன்.

Raj said...

))))>>:

narsim said...

கலக்கல் தலைவா.. இதுதான் "ஸ்பீட் போஸ்ட்டா??"

Cable சங்கர் said...

//கலக்கல் தலைவா.. இதுதான் "ஸ்பீட் போஸ்ட்டா??"//

அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இந்த அக்னி பார்வை அழுகுணி ஆட்டம் ஆடி சீக்கிரமே வீட்டிற்கு போய் புக்கை படிச்சுபுட்டு விமர்சனம் எளுதிபுட்டாரு.. ஆஆவ்வ்வ்வ்வ்..

நன்றி நர்சிம்.. யார் கேட்டாலும் அந்த கேள்விய சொல்லாதீங்க..? என்ன..?

Cable சங்கர் said...

//))))>>://

முதல் ரெண்டு சைன் புரிஞ்சுது.. அதென்ன ரெண்டு ஏரோ.. புள்ளி..?

writerpara said...

சங்கர், அது நாகப்பன் இல்லை. சோம. வள்ளியப்பன். அள்ள அள்ளப் பணம் நூலாசிரியர்.

Rafiq Raja said...

உருளைகிழங்கு சிப்ஸ் சூப்பர் // வயித்தெரிச்சலா கிளப்பாதீயும் ஓய்.

எழுத்துலகின் புது நாயகன் லக்கி'க்கு எனது வாழ்த்துக்கள்.

மற்றபடி ராணி காமிக்ஸ் பதிவகத்தில் கருத்தை பதிந்தமைக்கு நன்றி, நண்பரே. உங்கள் வலைப்பூவில் இருந்து எனது வலைபக்கங்களுக்கு சுட்டி அமைத்தால் நான் மிகவும் பெருமிதம் கொள்வேன்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

சங்கர், அது நாகப்பன் இல்லை. சோம. வள்ளியப்பன். அள்ள அள்ளப் பணம் நூலாசிரியர்.//

இதோ மாத்திடறேன்.