Thottal Thodarum

May 28, 2009

உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1

220px-Akira_Kurosawa அகிரா குரஸேவா.. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி..

1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால் நடத்தப்பட்ட ஒரு பள்ளிகூடத்தின் இயக்குனராக இருந்தார். அவரது குடும்பம் ஒரு அபவ் ஆவரேஜ் குடும்பமாய்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் அகிரா..

1936ஆம் ஆண்டு  ஜப்பானின் ஒரு PCL  என்கிறா ஸ்டூடியோவில் இயக்குனர் கஜிரோ ஐயமமோட்டோ என்கிறவரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் கழித்து 1943ல் அவரது முதல்  படமான Shanshiro Sugata  படம் வெளியானது. அதற்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஜப்பானிய போர்காலங்களில் வெளியானதால், கிட்டத்தட்ட ஜப்பானிய அரசின் பெருமைகளை விள்க்கும் படங்களாகவே இருந்தது.

The Most Beautiful People  என்கிற ஒரு படம் ஜப்பானிய இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவதை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படி கிட்டத்தட்ட பத்து படங்கள் இயக்கியிருந்தாலும் அகிராவை உலகுக்கு தெரிய படுத்திய படம் 1950ல் வெளிவந்த பீரியட் படமான Roshaman தான். வெனீஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருது பெற்று ஜப்பானிய சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

இவரின் படம் உலக அளவில் வெற்றி பெற்றதை மிக சாதாரணமான வகையில் ஒரு சின்ன செய்தியாய்தான் பத்திரிக்கைகள் வெளியிட்டது. இந்த ரோஷமான் படம் உலகில் பல மொழிகளில் பல படங்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்கிறது. தமிழில் ஏ.வி.எம். தயாரிப்பில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய அந்த நாள் திரைப்படம் முழுக்க, முழுக்க, ரோஷமானின் திரைக்கதை உக்தியை வைத்து எடுக்கப்பட்ட படம். அதே போல  சமீபகால படமான விருமாண்டியிலும் இந்த படத்தின் தாக்கத்தை உணரலாம்.

இவரின் ப்ல படங்கள் உலகின் பல மொழிகளில் திருடப்பட்டோ, உரிமை வாங்கப்பட்டோ திரைப்படமாய் வெளிவந்திருக்கிறது. 1952ல் வெளிவந்த Shichinin no  samurais (Seven Samurai’s) என்கிற படம். ஆங்கிலத்தில் கெளபாய் படமாய் மாற்றப்பட்டு The Maganificient seven  என்று வெளிவந்தது. ஏன் நம்ம ஊர் ஷோலே கூட ஏழு சமுராயின் தழுவல் என்றால் அது  மிகையாகாது. ஒரிஜினல் ஏழு சமுராய்கள் கிட்டத்தட்ட மூணரை மணி நேரம் ஓடும் படம்.  அகிரா இப்படத்தில் படம்பிடித்தவிதமும், நடிகர்களின் நடிப்பும் நம்மை கட்டிப் போட்டுவிடும். அதே போல ரோஷமான் படத்தில் ரவுண்ட் ட்ராலி இல்லாத காலத்திலேயே சுற்றி வருவது போல கேமரா கோணங்களை வைத்து படம்பிடித்துவிட்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் கூட ஜெர்க் இல்லாமல் ஒரு முழு ரவுண்ட் ட்ராலி ஷாட் போல கொடுத்திருப்பார். இது போல இவரின் படங்களில் இவர் செய்த புதுமைகள் பல.

இவரின் படஙக்ளில் இவர் மிகவும் அதிகமாய் வைப்பிங் என்கிற ஒரு உத்தியை பயன்படுத்துவார்.  முப்பது திரைபடஙக்ளை இயக்கியவர் அகிரா குரஸேவா.  அதே போல் பல கேமராக்களை பயன் படுத்தி, விதவிதமான் கோணஙக்ளில் படம் எடுப்பதை தன்னுடய ஸ்டைலாய் கொண்டிருந்தார்.  அவருடய செவன் சமுராய்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுத்திருந்த பல கோண காமிரா காட்சிகள் படத்திற்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை  மிரண்டு போய் படம் பார்த்தவர்களூக்கு தெரியும். படத்தின் பெர்பக்‌ஷனுக்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். அதற்காக எவ்வளவு நேரமானாலும் செலவானாலும் அதை பற்றி கவலை படமாட்டார்.

1970களில் இவரது படஙக்ளின் தோல்விகளால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னுடய கை நரம்புகளை முப்பது இடஙக்ளில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதன் பிற்கும் கூட அவருக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அந்த சமயங்களில் அவர் ஜப்பனிய தொலைகாட்சியில் தோன்றியும் அதற்கு நிகழ்ச்சிகளை இயக்கியும் பொருள் சேர்த்தார்.

இவரின் சிறந்த படமாய் இவர் சொல்வது 1980ல் வெளிவந்த Kagemusha வைதான். இவரின் எல்லா படங்களிலும் ஒரே ஆட்களை வைத்து படமெடுபபதையே அவர் வழக்கமாய் கொண்டிருந்தார்.  Takashi shimura  என்கிறவரை வைத்து, சுமார் 19 படங்களை சிறு மற்றும் ஹீரோவாக வைத்து எடுத்திருக்கிறார். அதே போல் Tashiro Mifune என்பவரை வைத்து, 16 படஙக்ளில் லீடிங்க் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்.

அகிராவுக்கு இந்தியாவின் சத்யஜித்ரேவை மிகவும் பிடிக்கும். அவரது வாழ்கையில் பெரும்பாலும் சினிமாவை தவிர வேறெதையும் சிந்திகாதவர் என்றே சொல்லலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவரின் சிந்தனை சினிமாவை சுற்றியே இருக்கும் என்கிறார் அவரின் மனைவி Yoko Yaguchi இவரும் ஒரு நடிகையாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய். வழக்கமான ஜப்பனியர்களின் உயரத்தை விட இவரது உயரம் அதிகமே சுமார் ஆறடிக்கு மேல்..

Madadayo (1993) என்கிற படமே இவர் கடைசியாய் இயக்கிய படம். அதன் பிற்கு தனது 88ஆம் வயதில் 1998ஆம் ஆண்டு அவர் காலமானார்.  உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் புகழப்பட்டு, மதிக்கப்பட்ட, இன்றளவும் மதிக்கப்படும்  அகிரா குரஸேவாவை ஜப்பானிய சினிமா உலகம் அவ்வளவு சிறப்பாக மதிக்கவில்லை என்பது சோகமே.

டிஸ்கி

இந்த கட்டுரை பல ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே..


Post a Comment

42 comments:

நையாண்டி நைனா said...

அண்ணே சொல்லுறேன்னு தப்பா நெனைக்காதீங்க... இப்ப இதே பீல்டை தொவச்சு தொங்க போடுற நம்ம நண்பர் முரளி கண்ணனும் எழுதிகிட்டு இருக்கார்... அதுவும் நட்சத்திரமா இருந்து... அவரும் இதை மாதிரி எழுத நினைச்சிருப்பார். நாம் கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே..

நான் சொல்லுறது தப்புன்னா சாரி....

நையாண்டி நைனா said...

/*இன்றளவும் மதிக்கப்படும் அகிரா குரஸேவாவை ஜப்பானிய சினிமா உலகம் அவ்வளவு சிறப்பாக மதிக்கவில்லை என்பது சோகமே.*/

அங்கேயும் நம்மளை மாரிதானா!!! இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!!!

க.பாலாசி said...

//இந்த கட்டுரை பல ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே..//
அறிய தகவல்கள் எங்கிருந்து சேகரிக்கப்பட்டாலும், அந்த பெருமை சேகரித்தவரையே சாரும். நல்ல தகவல்களை தேடித்தரும் கேபிளாருக்கு எனது வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

அறியப்படாத இயக்குனர்களை பற்றி அனைத்தும் சொல்லுங்க தலைவா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புதமான தகவல்கள் ஷங்கர்

ஸ்ரீ.... said...

மிகச் சிறந்த தொகுப்பு. இதுபோன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய எழுதுவீர்கள் என எதிபார்க்கிறேன்.

ஸ்ரீ....

shabi said...

தோரணை விமர்சனம் எங்க போடுங்க

கலையரசன் said...

மார்டின் ஸ்கார்சசி, கபோலா, வொங்கர், வால்டர் செலஸ்
அவர்களை பற்றியும் பதிவு எழுதுங்கணே!

Vidhya Chandrasekaran said...

ம்ம்

ஷண்முகப்ரியன் said...

நான் ’ரோஷமான்’ படத்தைப் பல பல வருடங்களுக்கு முன் கலைவாணர் அரங்கத்தில் பார்த்து விட்டு மிரண்டு போய் நின்றிருந்தது இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது,ஷங்கர்.
மகத்தான் அந்த இயக்குநருக்கு அந்த நாட்டில் மரியாதை இல்லை என்ற உங்கள் புதுக் கூற்று எனக்கு வியப்பாக இருந்தது.
சரி,நம் ஊரில் மட்டும் நாம் சத்யஜித் ரேயைக் கொண்டாடுகிறோமா,என்ன?

Ashok D said...

ஜன்னல்களை பட்டென மூடுவது, குதிரைகள் புழுதி பறக்க ஓடுவது, காற்றில் ஒற்றை ஜன்னல் கதவு அடித்துக்கொள்வது.... இப்படி நிறைய கற்றுக்கொடுத்தவர்... அகிராவை பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்...

Raj said...

):::

அக்னி பார்வை said...

எங்கள் தலைவர் பேரரசுவிலிருந்து ஆரம்பித்திருக்கலாம் ஆனால் வரும் காலங்களில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.....

அகிரா ஒகே தான்

முரளிகண்ணன் said...

நையாணடி நைனா,

நான் தமிழ் படங்கள் மட்டுமே அதிகம் பார்த்தவன்.

கேபிள் சங்கரோடு ஒப்பிடுகையில் உலக சினிமா பற்றிய என்னுடைய அறிவு 1% கூட இருக்காது.

அவரிடம் நான் அடிக்கடி இதைப்பற்றி பேசி அறிந்துகொள்வேன்.

அவர் எழுதுவது எனக்கு மிக மிக உபயோகமாக இருக்கிறது.

கேபிள்ஜி தொடருங்கள், உங்களைத் தொடர காத்திருக்கிறோம்.

butterfly Surya said...

சங்கர நாராயணன்

நல்ல தொகுப்பு.. ஆனால் இன்னும் நிறைய எழுதலாம்.

சோகமான நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு..


1923ல் ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம்

1928 உலகை உலக்க்கிய Great Depression.

1933ல் அவர் சகோதரரின் தற்கொலை..

1935-36 Photochemical Laborotary Film Studio { PCL } வேலைதான் இவர் வாழ்க்கையே மாற்றி அமைத்தது.

1950ல் ரோஷமான் படம் திரைப்படவிழாவில் வென்றது அவர் மனைவி சொல்லியே அவருக்கு தெரிந்தது.. அது தான் சோகத்திலும் சோகம். விழாவில் பங்கு பெற்றது கூட அவருக்கு தெரியாது...


இப்படி சொல்லி கொண்டே போகலம். அதுவே பதிவாகி விடும்.

Cable சங்கர் said...

//அண்ணே சொல்லுறேன்னு தப்பா நெனைக்காதீங்க... இப்ப இதே பீல்டை தொவச்சு தொங்க போடுற நம்ம நண்பர் முரளி கண்ணனும் எழுதிகிட்டு இருக்கார்... அதுவும் நட்சத்திரமா இருந்து... அவரும் இதை மாதிரி எழுத நினைச்சிருப்பார். நாம் கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே..

நான் சொல்லுறது தப்புன்னா சாரி....

//
இல்ல நைனா.. அவர் கிட்ட கேட்டுட்டுதான் எழுதறேன்.

Cable சங்கர் said...

//அங்கேயும் நம்மளை மாரிதானா!!! இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!!!//

உலகம் பூராவும் இப்படித்தான் வாழுற போது எவனையும் கண்டுக்க மாட்டானுங்க. :(

Cable சங்கர் said...

//அறியப்படாத இயக்குனர்களை பற்றி அனைத்தும் சொல்லுங்க தலைவா!//

நிச்சயமாக வால்.. என்னால் முடிந்த வரை சொல்கிறேன். இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

Cable சங்கர் said...

//அற்புதமான தகவல்கள் ஷங்கர்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்...

Cable சங்கர் said...

//மிகச் சிறந்த தொகுப்பு. இதுபோன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய எழுதுவீர்கள் என எதிபார்க்கிறேன்.

ஸ்ரீ....

//

நிச்சயம் ஸ்ரீ.. உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Cable சங்கர் said...

//தோரணை விமர்சனம் எங்க போடுங்க//

இன்னமும் பாக்கலை.. பார்த்தவுடன் கண்டிப்பாய் போடுகிறேன்.

Cable சங்கர் said...

//மார்டின் ஸ்கார்சசி, கபோலா, வொங்கர், வால்டர் செலஸ்
அவர்களை பற்றியும் பதிவு எழுதுங்கணே!

//

வர்றாங்க..வர்றாங்க.. கலையரசன்..

Cable சங்கர் said...

//நான் ’ரோஷமான்’ படத்தைப் பல பல வருடங்களுக்கு முன் கலைவாணர் அரங்கத்தில் பார்த்து விட்டு மிரண்டு போய் நின்றிருந்தது இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது,ஷங்கர்.
மகத்தான் அந்த இயக்குநருக்கு அந்த நாட்டில் மரியாதை இல்லை என்ற உங்கள் புதுக் கூற்று எனக்கு வியப்பாக இருந்தது.
சரி,நம் ஊரில் மட்டும் நாம் சத்யஜித் ரேயைக் கொண்டாடுகிறோமா,என்ன?

//

சார் அவருக்கு நான் மரியாதை இல்லை என்று சொல்லவில்லை.. நாம் அவரை தலையில் வைத்து கூத்தாடுகிறோமே அது போல அவர் அங்கு மதிக்கபடவில்லை என்பது உண்மைதான். நீஙக்ள் சொன்னது போல நாம் சத்யஜித்ரேவை கொண்டாடுகிறோமா என்ற கேள்வி சரியே..

Cable சங்கர் said...

//ஜன்னல்களை பட்டென மூடுவது, குதிரைகள் புழுதி பறக்க ஓடுவது, காற்றில் ஒற்றை ஜன்னல் கதவு அடித்துக்கொள்வது.... இப்படி நிறைய கற்றுக்கொடுத்தவர்... அகிராவை பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்//

அசோக்.. அகிராவை பற்றி எழுதவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து பதிவாவது போட வேண்டியிருக்கும். முடிந்த வரை சுருக்கமாய் சொல்ல முயன்றிருக்கிறேன்...

Cable சங்கர் said...

நன்றி ராஜ்.. வித்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

//எங்கள் தலைவர் பேரரசுவிலிருந்து ஆரம்பித்திருக்கலாம் ஆனால் வரும் காலங்களில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.....

அகிரா ஒகே தான்//

என்னா ஒரு பேராசை.. அவர் எல்லாம் இந்த் ஜென்மத்தில இந்த லிஸ்டுல வரமுடியாது.. நீஙக்ள் சொன்னது போல் அகிரா ஓகேவாத்தான் இருக்கும் அதற்கான காரணத்தை சொல்கிறேன்.

Cable சங்கர் said...

//கேபிள்ஜி தொடருங்கள், உங்களைத் தொடர காத்திருக்கிறோம்//
நன்றி.. முரளி..

Cable சங்கர் said...

//சங்கர நாராயணன்

நல்ல தொகுப்பு.. ஆனால் இன்னும் நிறைய எழுதலாம்.

சோகமான நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு..


1923ல் ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம்

1928 உலகை உலக்க்கிய Great Depression.

1933ல் அவர் சகோதரரின் தற்கொலை..

1935-36 Photochemical Laborotary Film Studio { PCL } வேலைதான் இவர் வாழ்க்கையே மாற்றி அமைத்தது.

1950ல் ரோஷமான் படம் திரைப்படவிழாவில் வென்றது அவர் மனைவி சொல்லியே அவருக்கு தெரிந்தது.. அது தான் சோகத்திலும் சோகம். விழாவில் பங்கு பெற்றது கூட அவருக்கு தெரியாது...


இப்படி சொல்லி கொண்டே போகலம். அதுவே பதிவாகி விடும்.

//

ஆமாம் வண்ணத்து பூச்சியாரே.. அவரது குடும்பம் பற்றி.. அவர் பிறப்பதற்கு முன்பே அவருடய சகோதரிகள் திருமணமாகி போனது.

பூகம்பத்தால் அவர்கள் அடைந்த டிப்ரஷன்.. ச்கோதரன் தற்கொலை.. ரோஷமான் படத்தை யாரோ ஒரு பெண் போட்டிக்கு அனுப்பி வைத்த்து, அவரின் பட தோல்விகள், பொருளாதார ரீதியாய் அவர் பெற்ற அவமானங்கள், அவரின் மெண்டர் டைரக்டர் பற்றி, ஒவ்வொரு படத்திலிரும், காற்று, மழை, புயல், பனி என்று பல விஷயஙக்ளை ஒரு கேரக்டராகவே உபயோகபடுத்தியது. அவரின் டெக்னிகல் உபாயங்கள், என்று எழுத பல விஷயங்கள் இருக்கிறது.. இப்படி எழுதி கொண்டேயிருந்தால் சுமார் ஐந்திலிருந்து ஆறு பதிவு வந்துவிடும்.. முடிந்த வரை சுருக்கமாய் கொடுக்க முயற்சித்துள்ளேன். இத் தொடருக்கு வரும் வரவேற்ப்பை வைத்து மேலும் எழுதலாம் என்று இருக்கிறேன். வண்ணத்துபூச்சியாரே..

Venkatesh Kumaravel said...

நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வண்ணம் பெரும்பாலான உலக இயக்குனர்களை அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாததில்லை, எஸ்.ரா தீராநதியில இப்புடி ஒரு தொடர் எழுதினாரு.. அயல் சினிமா. அண்ணே... நான் இவரின் படங்களில் அதிகம் பார்த்ததில்லை. இருந்தாலும் த்ராணியை வரவழைத்து கேட்கிறேன்... குரசாவா வெர்சஸ் செர்ஜியோ லியோனி? மின்னஞ்சலில் தொடவதென்றாலும் சரி... venkateshkumarvel@gmail.com

butterfly Surya said...

நிறைய எழுதுங்கள்.

இந்த புழு பூச்சியையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வளர்த்து விடுங்கள்.

பெட்ரோ அலமதோவரின் பதிவு.

முடிந்தால் டிஸ்கிக்கும் கீழே லிங்க் கொடுங்கள்.

http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.html

கோபிநாத் said...

ஆகா!! தல தெரிஞ்சிக்க வேண்டிய பகுதி (உலக இயக்குனர்கள்)

தொடருங்கள்...;)

பாலராஜன்கீதா said...

இதுபோன்ற இடுகைகளை வரவேற்கிறோம்.

அத்திரி said...

நல்ல தொகுப்பு அண்ணே...............

பிரபாகர் said...

டியர் சங்கர்,

அகிரா குரஸேவவை பற்றி பல ஊடகங்களின் வாயிலாகவும், சினிமா நண்பர்களின் வாயிலாகவும் தெரிந்திருந்தாலும், உங்களது பதிவில் பல புது விஷயங்கள்...

தெரிந்த விஷயத்தை பற்றி படிக்கும் போது ஆர்வத்தோடு அலட்சியமும் இருக்கும். ஆனால், மிகவும் அருமையாக பதித்திருக்கிறீர்கள், ஈர்ப்போடு.

பிரபாகர்.

Sanjai Gandhi said...

கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ரசிக்க நேர்ந்தது. முதல் சில நிமிடங்கள் ரசிக்க முடியவில்லை.. இவரைத் தானா இப்படி மெச்சுகிறார்கள் எனத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணம் மறைவதற்குள் என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். 4 மணி நேரங்கள் அமர்ந்து பார்த்துவிட்டு தான் சென்றேன். நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்.

Cable சங்கர் said...

//நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வண்ணம் பெரும்பாலான உலக இயக்குனர்களை அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாததில்லை, எஸ்.ரா தீராநதியில இப்புடி ஒரு தொடர் எழுதினாரு.. அயல் சினிமா. அண்ணே... நான் இவரின் படங்களில் அதிகம் பார்த்ததில்லை. இருந்தாலும் த்ராணியை வரவழைத்து கேட்கிறேன்... குரசாவா வெர்சஸ் செர்ஜியோ லியோனி? மின்னஞ்சலில் தொடவதென்றாலும் சரி... venkateshkumarvel@gmail.com

//

அவரை பற்றிய கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன் வெங்கி ராஜா.. இருவரும் வேறு வேறு தளஙக்ளில் இயங்கியவர்கள்.. இருவரும்க்கு ஒர் ஒற்றுமையும் உண்டு, பிரச்சனையும் உண்டு என படித்திருக்கிறேன். அதை பற்றி அவருடய பதிவில் சொல்கிறேன்..

Cable சங்கர் said...

//நிறைய எழுதுங்கள்.

இந்த புழு பூச்சியையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வளர்த்து விடுங்கள்.

பெட்ரோ அலமதோவரின் பதிவு.

முடிந்தால் டிஸ்கிக்கும் கீழே லிங்க் கொடுங்கள்.

http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.html

//

உங்கள் பதிவை படித்திருக்கிறேன். வண்ணத்துபூச்சியாரே.. புழு பூச்சியையும் வளர்த்துவிடுங்கள் என்பதெல்லாம் ரொம்ப தன்னடக்கமான வார்த்தை தலைவரே.

Cable சங்கர் said...

மிக்க நன்றி கோபிநாத், பாலராஜன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

நன்றி பிரபாகர், அத்திரி..

Cable சங்கர் said...

//கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ரசிக்க நேர்ந்தது. முதல் சில நிமிடங்கள் ரசிக்க முடியவில்லை.. இவரைத் தானா இப்படி மெச்சுகிறார்கள் எனத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணம் மறைவதற்குள் என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். 4 மணி நேரங்கள் அமர்ந்து பார்த்துவிட்டு தான் சென்றேன். நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்.

//

ரெட்பியர்ட் என்று ஒரு படம் இருக்கிறது.. அதுவும் மிக அருமையான படம்.. சஞ்செய்.. செவன் சமூராய்ஸை இதுவரை நான் நான்கு முறை தொடர்ந்து பார்த்திருக்கிறேன். அலுக்கவேயில்லை.. அதே கதை அமெரிக்க வர்ஷன் த மெக்னிபீஷியண்ட் செவன் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை.. அதுகூட யூல் பர்னருக்காக..

"உழவன்" "Uzhavan" said...

இப்படியெல்லாம் பதிவு போடாதீங்கண்ணா.. அப்புறம் நம்ம ஊரு படங்களைப் பார்க்க விருப்பம் இல்லாம போகும்.. பாவம் நமீதா நயன் லாம் எங்க போவாங்க :-)

K.S.Muthubalakrishnan said...

Sir, Good article , expect more from you