அழகான ஸ்லீக், எண்டர்டெய்னிங்.. காமெடி, திரில்லர் பார்கக வேண்டுமா..? இதோ.. 99
செல்போன் சிம்கார்டிலிருக்கும் நம்பரை வைத்து டூப்ளீகேட் சிம்கார்ட் தயாரித்து விற்பவர்கள் குணாலும், எம்டிவி புகழ் சைரஸும். இப்படி ஒரு சிம்கார்டை மும்பை தாதா மகேஷ் மஞ்ரேகரிடம் விற்க, அதில் அவர்கள் மாட்டுகிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று குணால், சைரஸும் சொல்ல, அவர்களை தாங்கள் கடன் கொடுத்தவ்ர்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் வேலையை தர, வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டு டெல்லி செல்கிறார்கள் இருவரும்.
டெல்லியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க, அங்கே வேலை செய்யும் சோஹலிடம் பழக்கம் ஏற்படுகிறது. டெல்லியில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கும் போமன் ஈரானியிடம் பணம் வசூலித்து சொல்ல, அவர்களுடய பணம் டாக்ஸியில் திருடு போகிறது. சூதாட்ட பழக்கத்தின் காரணமாய் நிறைய இடத்தில் கடன் பட்டிருக்கும் போமனின் மனைவி அவனை விட்டு பிரிந்திருக்கிறாள். காணாமல் போன பணத்தை சம்பாதிக்க, போமனின் உதவியை நாடுகிறார்கள் குணாலும், சைரஸும். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் செய்யும் ஒரு புக்கியை நம்பி வேறு ஒரு டிபால்டரான சினிமா நடிகர் ஒருவனிடம் தாதா சொன்னதாய் சொல்லி பணத்தை வாங்கி, மேட்ச் பிக்ஸிங்கில் கட்ட, இதற்குள் தாதாவுக்கு விஷய்ம் தெரிந்து, டெல்லி வர, போனிடம் எட்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பர்மெணண்டாக ஒரு அடியாளையும் வைத்து கொண்டு அலையும் ஒரு பைனாஸியர் இவர்கள் மூவரையும் துறத்த, மேட்ச் பிக்ஸிங்கில் குணால் வெற்றி பெற்றானா? குணால் சோஹல் காதல் என்னவாயிற்று என்பதை சிரிக்க, சிரிக்க, சுவையா தந்திருக்கிறார்கள்.
சைரஸுன் ஒன்லைனர் காமெடி அவ்வப்போது நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறது, அந்த ஆறாடி அடியாளுடன் அலையும் டெல்லி, பைனான்ஸியர் க்ளைமாக்ஸில் தன் பாடி லேங்குவேஜின் மூலம் கலக்குகிறார். போமன் வழ்க்கம் போல். சோஹலுக்கு பெரிதாய் சொல்லகூடிய வேடமில்லை. மகேஷ் மஞ்ரேக்கர் பக்கா காமெடி தாதா. கலக்கியிருக்கிறார். ஹீரோ குணாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.
இரட்டை இயக்குனர்கள் ராஜ்நிடிமோரோ, கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம். திரைக்கதையில் ஆங்காங்கே இடைவேளைக்கு முன் தொங்குகிறது. இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது..போமனின் மனைவிக்கும், இடையே நடக்கும் காட்சிகள் கொஞ்சம் இழுவை. 2000 ஆண்டில் நடந்த கிரிகெட் புக்கி பிரச்சனையை அழகாய் திரைக்கதையில் நுழைத்து இருப்பது புத்திசாலிதனம்.
99 – செஞ்சுரி ஐஸ்ட் மிஸ்..
மீண்டும் இந்த பதிவை தமிழ்மணத்திலும்,த்மிலிஷிலும் இணைப்பவர்களுக்கு நேத்து சொன்னதேதான் ஊருக்கு போய்ட்டு வ்ந்து கவனிக்கிறேன்./font>
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இந்த படம் எத்தனை வருஷம் கழிச்சு தமிழ்ல எடுப்பாங்க!
thanx.
Tamilish, tamilmanam ஓட்டு போட்டாச்சு... வந்து கவ்னிப்பிங்கன்னு!!! நம்புறேன்!
நம் ஊருக்குக் கொஞ்சம் ஹை ஃபை என்று நினைக்கிறேன்.
//
நன்றி நைனா..
இந்த படம் எத்தனை வருஷம் கழிச்சு தமிழ்ல எடுப்பாங்க!
//
இன்னும் நான் பார்த்த எழுத வேண்டிய படம் நிறைய இருக்கு.வாலு.டைம்தான் இல்ல
டிவிடில வரும்.. தியேட்டரில் வராது.. மாயாவி.
Tamilish, tamilmanam ஓட்டு போட்டாச்சு... வந்து கவ்னிப்பிங்கன்னு!!! நம்புறேன்!//
:):)
நம் ஊருக்குக் கொஞ்சம் ஹை ஃபை என்று நினைக்கிறேன்//
ஆமாம் சார்.. இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது..