பசங்க - திரைவிமர்சனம்

pasanga2

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை  வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.

pasanga

ஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை.  ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள்.  ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர்.  அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர்.
pasanga3

எதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே  போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சபதம் போட நடந்ததா என்பது கதை.  இதற்கு நடுவே அன்புவின் சித்தப்பாவுக்கும், எதிர்வீட்டு ஜீவாவின் அக்காவுக்கும் காதல். இவர்கள் சண்டையில் இருவர் குடும்பங்களிடையே பூசல் வேறு. என்னடா இது ஒரே ரிவென்ஞ் கதையா இருக்கே என்று நினைக்காதீர்கள்.. வாழ்க்கையில்  நாம் தாண்டி வந்த பல விஷயங்களை நமக்கே திரும்ப காட்டியிருக்கிறார்கள் உயிரோட்டமாய்.
pasanga4

படம் பூராவும் நடித்திருக்கும் சிறுவர்கள் நடித்த மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. நம் கண் முன்னே வாழ்கிறார்கள். கதை நாயகர்களாய் வரும் இரு சிறுவர்களை தவிர, பகடா எனும் ஜால்ரா பையன், ஏத்திவிட்டே இருக்கும் மணி,  சோடாபுட்டி அப்பத்தா சிறுவன், ஜீவாவின் அத்தை பெண், அன்புவின் கடைசி தம்பி அந்த நண்டு, அவன் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது.  இருவரின் பெற்றோர்களாய் வருபவர்கள் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். செல் போன் ரிங்டோனை வைத்து வரும் காதல் காட்சிகள் புதுசு. இருவரின் காதல் காட்சிகள் மிக இயல்பு.
pasanga5

புதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா  பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது,  சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.
pasanga7

யோக பாஸ்கரின் எடிட்டிங் அருமை. ஜேம்ஸ் வசந்தனின் பிண்ண்னி இசை ஒகே. பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. பாலமுரளியின் குரலில் வரும் பாடலும் அதை படமாக்கிய விதத்தால் ஒகே. ஜேம்ஸ் வசந்தனும், ஜோஸ்வா ஸ்ரீதர் போல் ஒன் ப்லிம் ஒண்டர் ஆகிவிடுவாரோ..?
pasanga11

இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் படத்திலேயே குழந்தைகளை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க துணிவு வேண்டும்.  அதில் வெற்றி பெற்றிருக்கிறர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு சம்மர் வெக்கேஷனில் படம் ஆரம்பித்து அடுத்த இறுதியாண்டுக்குள் நடக்கும் விஷயங்களை  மிக இயல்பாய் திரைக்கதை அமைத்து, அதில் நைசாய் பெரியவர்களுக்கான ஒரு கதையையும், குழந்தைகளின் வாழ்கை பெரியவர்களால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை வாழைபழ ஊசியாய் சொருகியிருக்கிறார். 
pasanga10
ஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. கொஞ்ச்ம் நீளம் என்றாலும் தேவையே. எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய்  வந்திருக்கிறது அவரின் வசனங்கள்.  இன்றைய குழந்தைகள் மனதில் சினிமா எந்தளவுக்கு ஆழமாய் ஊடுருவியிருக்கிறது என்பதை மிக அருமையாய் ஒரு பாடலின் மாண்டேஜில் காட்டிவிடுகிறார். அதே போல் அந்த கைதட்டல் காட்சியும், அதற்கான க்ளைமாக்ஸும் சூப்பர்.

படத்தில் குறைகளாய் ஆங்காங்கே சிற்சில விஷயஙகள் இருந்தாலும் சொல்ல மனசில்லை..   படம பார்த்துவிட்டு கைதட்டி ஆரவாரித்து இயக்குனரையும், தயாரிப்பாளரையும் உற்சாகபடுத்துங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு அந்த தகுதியுண்டு. 


பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் குழந்தைகளுடன் பார்கணும்)



Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

பாலா said…
என்ன.. ஆச்சரியம்..? நாந்தான் இன்னிக்கு ஃபர்ஸ்டா? :) :)

விமர்சனத்தை பத்தி என்ன சொல்ல...? :) :)

டிவிடி வரட்டும்..!! :) பார்த்துட்டு சொல்லுறேன்
One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.
Anonymous said…
http://pnaptamil.blogspot.com/2009/04/blog-post.html
Thanks Shankar...

I will watch this movie with my family. It's a nice review...

Prabhagar...
எங்க கேப்டன் பட விமர்சனம் எழுதாம இதை முதலில் எழுதியதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். நெஜமா நீங்க மரியாதை படம் எப்படி இருக்குன்னு எழுதுவிங்கன்னு வெயிட் பண்ணினேன்.
பசங்க கையில் துப்பாக்கி ?? ம்ம்ம்..
அப்பொ படத்த பார்க்கலாம்... டிக்கெட போட்றேன்
ம்ம்ம். பார்த்துடலாம் ஜூனியரோட:)
Sukumar said…
பரவாயில்ல தல இந்த வாரமாவது ஒரு படம் பாக்கலாம்னு சொல்றீங்க.... சரி பாத்துடுவோம்... உங்க விமர்சனம் ரொம்ப நல்ல இருக்குங்க,,,,உங்க தெறமைக்கு நீங்க எதாவது டிவி-ல கால் மேல கால் போட்டு உட்க்கார்ந்து விமர்சனம் பண்ணலாம்.... நல்லா வருவீங்க தல .....உங்க கிட்ட இருந்து நெறைய எதிர்பாக்குறோம்....
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
சங்கர் சார், உங்க விமர்சனம் கிட்ட
என்னால நெருங்க முடியல..

சின்னச் சின்ன நுவான்ஸ் டீடெயிலுடன் நல்ல விமர்சனம்.

உங்க விமர்சனம் பார்த்து.. விமர்சனம் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்...

ஹஸன் ராஜா.
அப்ப்பா!வழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்ப வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
உள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.
Ganesan said…
அண்ணே,

நம்ம கதானாயகி வேகா பத்தி ஏதாவது சொல்லுங்க‌
//என்ன.. ஆச்சரியம்..? நாந்தான் இன்னிக்கு ஃபர்ஸ்டா? :) :)

விமர்சனத்தை பத்தி என்ன சொல்ல...? :) :)

டிவிடி வரட்டும்..!! :) பார்த்துட்டு சொல்லுறேன்

//

பின்னே பதிவு போட்டு பத்து நிமிஷதுக்கெல்லாம் நடுராத்திரியில நானும் விடியற்காலையில உங்களையும் விட்டா வேற யார் போடுவாங்க..

சூப்பர் படம் பாலா..
//One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

//

உங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
//http://pnaptamil.blogspot.com/2009/04/blog-post.html//

பார்த்துவிட்டேன் பிஎன்பி.. மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும். என்னை பொருத்த வரை எனக்கு பாடல்கள் படத்தின் தடைகற்களாகவே இருக்கிறது.
Sukumar said…
//One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

//

உங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்
//Thanks Shankar...

I will watch this movie with my family. It's a nice review...

Prabhagar...//
மிக்க நன்றி பிரபாகர்.. உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்..
//எங்க கேப்டன் பட விமர்சனம் எழுதாம இதை முதலில் எழுதியதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். நெஜமா நீங்க மரியாதை படம் எப்படி இருக்குன்னு எழுதுவிங்கன்னு வெயிட் பண்ணினேன்.
பசங்க கையில் துப்பாக்கி ?? ம்ம்ம்..

//

மரியாதை மாதிரியான நூறு டுபாக்கூர் படம் பார்பதற்கு, அதை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு பதிலாய் இம்மாதிரியான படத்தை பற்றி எழுதினாலாவது புண்ணியம் கிடைக்கும்.
//அப்பொ படத்த பார்க்கலாம்... டிக்கெட போட்றேன்//

என்னது இன்னும் கிளம்பலையா..? உடனே பார்த்துட்டு போன் பண்ணுங்க..
//ம்ம்ம். பார்த்துடலாம் ஜூனியரோட:)//

நிச்சயமாய் பாருங்க வித்யா. கண்டிப்பா படம் உங்களுக்கு பிடிக்கும்.
//உங்க தெறமைக்கு நீங்க எதாவது டிவி-ல கால் மேல கால் போட்டு உட்க்கார்ந்து விமர்சனம் பண்ணலாம்.... நல்லா வருவீங்க தல .....உங்க கிட்ட இருந்து நெறைய எதிர்பாக்குறோம்....
//

இதுல ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே.. சுகுமார்.
//நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

//

கண்டிப்பா தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் முத்துராமலிங்கம்
//சங்கர் சார், உங்க விமர்சனம் கிட்ட
என்னால நெருங்க முடியல..

சின்னச் சின்ன நுவான்ஸ் டீடெயிலுடன் நல்ல விமர்சனம்.

உங்க விமர்சனம் பார்த்து.. விமர்சனம் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்...

ஹஸன் ராஜா.//

இப்பவே கலக்க ஆரம்பிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள் ஹஸன்.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
//அப்ப்பா!வழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்ப வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
உள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.

//

இம்மாதிரியான படங்களை துணிந்து தைரியமாய் எடுக்கும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இம்மாதிரியான படஙக்ளை ஆதரிக்கவில்லை என்றால் நான் என்ன சினிமா ரசிகன்>
//அண்ணே,

நம்ம கதானாயகி வேகா பத்தி ஏதாவது சொல்லுங்க‌//

ஷோபிகண்ணுவாக உலவுகிறார்.
Sukumar said…
// மரியாதை மாதிரியான நூறு டுபாக்கூர் படம் பார்பதற்கு, அதை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு பதிலாய் இம்மாதிரியான படத்தை பற்றி எழுதினாலாவது புண்ணியம் கிடைக்கும். ///


எங்கள் அண்ணா, தன்மான தங்கம், கருப்பு நம்பியார் ... ச்சே சாரி கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்தை அவமானபடுத்தியதை வன்மையாக ஆட்சேபிக்க்றேன்.... அப்ப இவரை விட்டா அவசரத்திற்கு யாரை கலாய்த்து பதிவு போடுவீர்கள்.....?
Raju said…
Trade Mark விமர்சனம் கேபிள்...
நீங்க வருங்கால பிரதமரை பகைச்சுக்குற மாதிரி தெரியுது..!
பாத்து பக்குவமா நடத்துக்குங்க..!
Super Review..
But I expected some words about vega..!!

//One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.//

உங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்..
//எங்கள் அண்ணா, தன்மான தங்கம், கருப்பு நம்பியார் ... ச்சே சாரி கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்தை அவமானபடுத்தியதை வன்மையாக ஆட்சேபிக்க்றேன்.... அப்ப இவரை விட்டா அவசரத்திற்கு யாரை கலாய்த்து பதிவு போடுவீர்கள்.....?//

:):)
நேத்துதான் பார்த்தேன் தல். ”நறுக்” படம்ல? அப்புறம் டைரக்டரும் எங்கூர்காருதான். நான் ஜிங்கரா அறிமுகமான அதே நாள்ல அவர் டைரக்டரா அறிமுகமாகி இருக்காரு.
//நேத்துதான் பார்த்தேன் தல். ”நறுக்” படம்ல? அப்புறம் டைரக்டரும் எங்கூர்காருதான். நான் ஜிங்கரா அறிமுகமான அதே நாள்ல அவர் டைரக்டரா அறிமுகமாகி இருக்காரு//

நான் நேத்து காலையிலேயே பாத்துட்டேன். டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. உங்க ஊர்கார டைரக்டர் ஹிட் ஆனாப்புல நீங்களும் பிரபல பாடகராய் மனதார வாழ்த்தும் உங்கள் நண்பன்.
butterfly Surya said…
Thanx Thala.

வழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்ப வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
உள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.
தராசு said…
அருமையான விமர்சனம் தல. அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுதி இருக்கீங்க

கலக்குங்க.
குகன் said…
உங்களுக்கு முன்னாடி விமர்சணம் எழுதனும் பார்த்தேன் முடியல... மனம் தளராமல் நானும் 'திரை விமர்சணம்' எழுதியிருக்கிறேன். பார்த்திட்டு சொல்லுங்க தல...

http://guhankatturai.blogspot.com/2009/05/blog-post.html
டி.வி.டி வந்த உடனே பார்த்துரலாம் தல... இங்க ரிலீஸ் பண்ணமாட்டானுங்க போலத் தெரியுது...
Ashok D said…
3,4,6,8 படங்கள் நல்லாயிருக்கு, விமர்சனம் படு போர்... நல்லாவேயில்லை
(எத்தனை தடவ தான் நல்லாயிருக்குன்னு சொல்லரது... ஒரு changukku தான்):-)
மணிஜி said…
நைட்டு எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனிங்க?திட்டு கிட்டு எதாவது உண்டா?நா 12 .30 மணி.திறமையான விமர்சனம்.அடுத்த வாட்டி என்னையும் படத்துக்கு கூப்பிடுங்க
படம் பார்க்கத்தூண்டி விட்டீர்கள்
Anbu said…
படம் பார்க்கத்தூண்டி விட்டீர்கள்\

anna
பட விமர்சனம் சூப்பர். ஸ்டில்களும் அபாரம். (டிசைனிங் யார் தல?)

அதுவும் முதல் ஸ்டில்லோட கேப்ஷனைப் பார்த்ததும் ஆடிப்போய்ட்டேன். இன்றைய என் பதிவைப் பிரதிபலிக்குதேன்னு...
sriraj_sabre said…
This comment has been removed by the author.
sriraj_sabre said…
first ஸ்டில் வச்சே நூறு படத்துக்கு சமம்கறது புரியுது தல...
படத்தை பாத்துர வேண்டியதுதான்
கார்த்திகேயன் said…
கொஞ்சம் இழுவை என்றாலும் மிக அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு திரைப்படம் முழுவதும் நகைச்சுவை.இது போன்றே படங்களே மீண்டும் மக்களை திரை அரங்குகளுக்கு வரவழைக்கும். பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் திரை அரங்கில் பார்கணும்)
Anonymous said…
Sankar, How many times you watch the movie before writing the review. If you say "ONE" then i have no words to praise you....the amount of details you are able to provide in your review is awesome..keep it up...
Cheers, sudhakar
Thamira said…
நல்ல படமா? அப்ப சரி.!
//நல்ல படமா? அப்ப சரி.!//

நிச்சயமா நல்ல படம் ஆதி..
//Sankar, How many times you watch the movie before writing the review. If you say "ONE" then i have no words to praise you....the amount of details you are able to provide in your review is awesome..keep it up...
Cheers, sudhakar//

மிக்க நன்றி சுதாகர்.. நான் ஒரு முறை தான் படங்களை பார்ப்பேன்.. சில படங்களை ஒரு முறை பார்பதற்குகூட ரொம்ப கஷ்டப்பட வேண்டும்.
//டி.வி.டி வந்த உடனே பார்த்துரலாம் தல... இங்க ரிலீஸ் பண்ணமாட்டானுங்க போலத் தெரியுது...//

எப்படியாவது படத்தை பாருங்க
//3,4,6,8 படங்கள் நல்லாயிருக்கு, விமர்சனம் படு போர்... நல்லாவேயில்லை
(எத்தனை தடவ தான் நல்லாயிருக்குன்னு சொல்லரது... ஒரு changukku தான்):-)//

:)
//படம் பார்க்கத்தூண்டி விட்டீர்கள்//

நிச்சயமா பாருங்க புருனோ.. அன்பு.. மிக்க நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
//பட விமர்சனம் சூப்பர். ஸ்டில்களும் அபாரம். (டிசைனிங் யார் தல?)

அதுவும் முதல் ஸ்டில்லோட கேப்ஷனைப் பார்த்ததும் ஆடிப்போய்ட்டேன். இன்றைய என் பதிவைப் பிரதிபலிக்குதேன்னு...//

நன்றி பரிசல்.. டிசைனரை விசாரிச்சு சொல்றேன். ஆமாம் பரிச்ல் உங்க பதிவுக்கு ஏத்த ஸ்டில்தான்.
//first ஸ்டில் வச்சே நூறு படத்துக்கு சமம்கறது புரியுது தல...//

ஆமாம் தமிழ் விரும்பி..மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
//படத்தை பாத்துர வேண்டியதுதான்//

ஆமாம் கண்டிப்பாய் பாருங்க..அத்திரி
//கொஞ்சம் இழுவை என்றாலும் மிக அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு திரைப்படம் முழுவதும் நகைச்சுவை.இது போன்றே படங்களே மீண்டும் மக்களை திரை அரங்குகளுக்கு வரவழைக்கும். பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் திரை அரங்கில் பார்கணும்)//

அதான் சொன்னேனே கார்த்திகேய்ன படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல திரைப்படத்தை தந்தமைக்காக பாராட்டத்தான் வேண்டும்..
Rafiq Raja said…
நீங்க சொல்லிட்டீங்கள... அப்ப பார்த்து விட வேண்டியதுதான்... பார்த்துட்டு வந்து கருத்து பதிகிறேன்.

ÇómícólógÝ
Shankar Sir,

Good Review
Shankar Sir,

Good Review
விமர்சனத்தை சீன் பை சீன் சொல்லுங்க அப்போதான் முப்பது ரூப மிச்சமாகும் ( டிவிடி காசுபா ).
//விமர்சனத்தை சீன் பை சீன் சொல்லுங்க அப்போதான் முப்பது ரூப மிச்சமாகும் ( டிவிடி காசுபா ).//

அதுக்கு நீங்க வரவேண்டிய இடம் இதுவல்ல.. நம்ம உண்மைதமிழன் கடைக்கு செல்லவும்.. :)
வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி முத்துபாலகிருஷ்ணன், காமிக்காலஜி..
Umesh said…
Am loving ur reviews.Jus check out mine:
http://theumeshblog.blogspot.com/2009/05/pasanga_06.html
Rafiq Raja said…
சங்கரே, படத்தை நேற்று தான் பார்த்தேன். அருமையான ஒரு படம், சமீபத்தில் எந்த ஒரு படத்திலும் நான் இப்படி நெக்குருகி பார்ததாக நியாபகம் இல்லை. இயக்குனர், தயாரிப்பாளருக்கு ஒரு ஷொட்டு.

// ஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. //

மொத்த படத்திலும் சிறந்த காட்சி அமைப்பே இது தான் என்று நான் கூறுவேன்.. ஒவ்வொரு பெற்றோருக்கும் சரியான உபதேசம்.. அதே நேரத்தில் இது என் பார்வைதான் என்று அவர் கூறும் விதமே பறைசாற்றுகிறது.

புருவத்தாலயே கதைகள் பல சொன்ன வேகாவை பற்றி எதுவும் கூறாமல் சென்ற உங்களுக்கு பிடியுங்கள் ஒரு குட்டை. ஆமா அந்த அம்மா பேரு... ஷோபிகண்ணா, சிவப்பிகண்ணா... சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறந்த படத்திற்கான அருமையான விமரிசனம், நன்றி சங்கரே.

ÇómícólógÝ
//எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய் வந்திருக்கிறது அவரின் வசனங்கள். //

வெரிகுட், அதுமட்டுமல்ல எதார்த்தம் என்கிற பெயரில் 'பசங்களை' திருட்டு தம் அடிக்க விடவில்லை. :)