Thottal Thodarum

Sep 12, 2009

ஈரம் – திரை விமர்சனம்

eeram


ரொம்ப நாள் ஆயிற்று இந்த ஜெனரில் படம் பார்த்து, அதுவும் இந்தளவுக்கு டெக்னிகல் எக்ஸலன்ஸோடு. மிரட்டியிருக்கிறார்கள் மேக்கிங்கில்.


சிந்துவின் சாவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  சிந்துவின் சாவு பற்றிய விசாரணையை, துவங்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி வருகிறார். தற்கொலையாக கருதப்படும் சாவை, ஏ.ஸி மட்டும் கொலையாக பார்க்க, தொடர்ந்து அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கொலை செய்யப்பட, மேலும் இறுகுகிறது சிக்கல், யார் கொலையாளி என்று தெரியாத நிலையில், கொலைக்கான ஆயுதம் தண்ணீர் என்பதை கண்டுபிடிக்கிறான். ஏஸி, சிந்துவின் முன்னாள் காதலனும் கூட,  கடைசியில் சிந்து கொலை செய்யப்பட்டாளா..? அல்லது தற்கொலையா? மற்றவர்கள் இறந்ததுக்கான காரண்ம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாய் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
eera


படத்தின் முதல் காட்சியே நம்மை சீட் நுனிக்கு கொண்டு வருகிறார்கள், மாடி படிகளில் தண்ணிர் வழிவது, பாத்டப்பில் சிந்து மூழ்கி இறந்து கிடப்பது,  என்று ஆரம்பித்து, அதற்கு பிறகு வரும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளாகட்டும், மழை காட்சிகளாட்டும், உதயம் தியேட்டர் பாத்ரூமில் நடக்கும் அமானுஷ்ய காட்சியாகட்டும், சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
eram 6


முதல் பாதி முழுவதும் இடையிடையே சிந்துவிற்கும், ஆதிக்குமிடையே ஆன காதல் கதை இயல்பாய் விரிகிறது. இரண்டாம் பாதியில் சிந்துவின் ப்ளாஷ்பேக், “என்னை பாத்து சொல்லு” என்ற டயலாக்கை சரண்யா மோகன், சொன்னதும், ஆதி ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார், சில்லிட்ட உணர்வோடு, அதை நான் தியேட்டரில் உணர்ந்தேன்.
eram3


மிருகம் படத்தில் நடித்த ஆதீயா இது, மிக அழகான கண்ட்ரோல்ட் பெர்பாமென்ஸ், டயலாக் டெலிவரியிலாகட்டும், பாடி லேங்குவேஜிலாகட்டும், அவ்வளவு இயல்பு.

நந்தாவுக்கும் இது ஒரு ரி எண்ட்ரி படம்தான். மிக அழுத்தமான கேரக்டர். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பல இடங்களில் அமைதியாய் உடல்மொழியிலேயே நடித்திருக்கிறார். உள்ளுக்குள் பயம் ஏற்படுகிறது.



கடல் பூக்கள் சிந்துமேனனுக்கு இது ஒரு ரி எண்ட்ரி படம். பக்கத்துவீட்டு பெண்ணை பிரதிபலிக்கும் தோற்றம். அதிலும் அவர் இறக்கும் காட்சியில் மனதை பிசைகிறார். அதே போல் சரண்யா மோகனும் பல இடங்களில் கண்களாலேயே மிரட்டியிருக்கிறார்,
eram 8

ஏ.ஸியின் நண்பனாக வரும் காதல் கண்ண்னுக்கு மிகப் பெரிய ப்ரேக். நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். வாய்ப்பை. எதிர் வீட்டு மாமி, அந்த காலேஜ் பெண், அவளின் காதலன் என்று எல்லோருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்கள்

படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமான இரண்டு பேர் அது ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் தமனும் தான். இரண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு, நம்மை மெல்ல ஆக்கிரமிக்கிறார்கள், ஊடுருவுகிறார்கள், சில்லிட வைக்கிறார்கள். அவவளவு அற்புதமான உணர்வு. தமனை பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.
eram 7

எதிர் வீட்டு மாமி சாகும் காட்சியில் தண்ணீரே ஒரு கேரக்டர் ஆகி, அவளை கொலை செய்யும் காட்சியின் ஒளிபதிவும், பிண்ணனி இசையும் அபாரம். அதே போல் உதயம் தியேட்டர் காட்சி திடுக்கிட வைக்கிறார்கள் இருவரும். இந்த திரைபடத்தின் ரியல் ஹிரோஸ் இவர்கள் இருவர்தான்.



முதல் படத்திலேயே வழக்கமான கதை களத்தை தொடாமல் சென்ற இயக்குனர் அறிவழகனை பாராட்ட வேண்டும்,  தற்கொலையை கொலை என்று சந்தேகிக்க, அழுத்தமான காரணம் இல்லாததும், படம் கொஞ்சம் நீளமாய் இருப்பது,க்ளைமாக்ஸ், போன்றவை குறையாக இருந்தாலும், காட்சிகளை கிராப்ட் செய்திருக்கும் அழகுக்காகவே மீண்டும்  பார்க்க வேண்டும் என்று  தோன்றுகிறது. படம் முழுவதும் மழையை ஒர் கேரக்டராகவே உலவ விட்டிருப்ப்பது அருமை.  இம்மாதிரியான  படங்களில்  வழக்கமாய் கதைக்கு பெரிய முக்யத்த்டுவம் கொடுக்க மாட்டார்கள். இவர் அதிலிருந்து விலகி ஒரு அழகிய காதல் கதையையும் சொல்லியிருக்கிறார்.

அதே போல் க்ளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாமோ என்று  தோன்றுகிறது. படம் முழுவதும் இயக்குனரின் கைவண்ணம் அவரது மேக்கிங்க் ஸ்டைலிலேயே  தெரிகிறது. ஷங்கரின் பட்டறையிலிருந்து இன்னொரு ஸ்ட்ராங் அவுட்புட்.

ப்டத்தில் குறைகளே இல்லையா என்று கேட்கலாம்..? இருக்கு அதனாலென்ன எனக்கு பிடிச்சிருக்கு I Recommend.. :)


ஈரம் – மனம் முழுவதும்.



டிஸ்கி:
படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

54 comments:

Sukumar said...

ஹே நான்தான் மொதல்ல

Sukumar said...

I Recommend.. :) சொல்லிட்டீங்கள்ள இன்னிக்கே பாத்துருவோம்.....

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு கேபிள் சங்கர்.

கந்தசாமி படத்திற்கு பதிவர்கள் கண்ணை மூடி கொண்டு எழுதுகிறார்கள் என்று கத்திய கூட்டம் இந்த பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.

படம் நன்றாக இருந்தால் பக்கம் பக்கமாய் பாராட்டி விமர்சனம் எழுதும் எங்க கேபிள் சங்கரின் பதிவை படியுங்கள்

தராசு said...

//படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.//

நீங்க என்ன மேட்டருக்காக விமர்சனத்தை படிக்க வேண்டாம்னு சொன்னீங்களோ, முதலில் அதற்கான கண்டனத்தை பதிவு செஞ்சுட்டுத்தான் இந்த பதிவையே படிச்சேன்.

மேவி... said...

"ராம்ஜி.யாஹூ said...
நல்ல பதிவு கேபிள் சங்கர்.

கந்தசாமி படத்திற்கு பதிவர்கள் கண்ணை மூடி கொண்டு எழுதுகிறார்கள் என்று கத்திய கூட்டம் இந்த பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.

படம் நன்றாக இருந்தால் பக்கம் பக்கமாய் பாராட்டி விமர்சனம் எழுதும் எங்க கேபிள் சங்கரின் பதிவை படியுங்கள்"

repeatu

பிரசன்னா கண்ணன் said...

வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைச்சுருக்கே.. பாத்துட்டு சொல்றேன் எப்படி இருக்குன்னு..

ஷண்முகப்ரியன் said...

படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.//

இன்னும் படம் பார்க்கவில்லை.
இந்த டிஸ்கிக்காகவே உ.த்.வின் விமர்சனத்தைப் படிக்கப் போகிறேன்.!

Muthukumar said...

Romba naalukkapuram oru nalla padama?...

ஜெட்லி... said...

உ.த. அண்ணனுக்கு ஆப்பு வச்சிடிங்கலே.....


எனக்கு ஒரு டவுட்
ஆதிக்கு சொந்த குரலா அல்லது டப்பிங் குரலா?

அகல்விளக்கு said...

ஹய்யா....

நல்லா படமா !!!

நாளைக்கே பாத்துற்றோம்.

பின்னோக்கி said...

சஸ்பென்ஸ் படத்திற்கு விமர்சனம் எழுதுவது எளிதல்ல காரணம் எந்த ஒரு இடத்திலும் சஸ்பென்ஸ் சொல்லிவிடக்கூடாது. அதே நேரம் கதையைப் பற்றியும் சொல்ல வேண்டும். காமிரா மேன் மிரட்டியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக பார்க்கவேண்டும் (கந்தசாமி பார்க்காமல் சேமித்த காசை இதற்கு செலவு பண்ணலாம்). நல்ல வேளையாக நீங்கள் ஹாலிவுட் திரில்லர் படங்களை கம்பேர் பண்ணாமல் எழுதிய உங்களைப் பாராட்ட வேண்டும்.

அன்பேசிவம் said...

இடைவெளைக்கு பிறகு எல்லோருக்கும் தெரிந்தகதைதான் என்றாலும் கடைசி காட்சிவரை உட்கார வைத்தது இயக்குனரின் வெற்றிதான்.

என்னை பொருத்தவரை கேமிரா அட்டகாசம் அதில் மாற்றுகருத்தே இல்லை. ஆனால் கேமிராவும் இசையும் இன்னும் கொஞ்சம் கதையோடு பிரயாணப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. ஸ்பீல்பெர்க்கின் ஜுராசிக் பார்க்கில் தம்ளரில் த்ண்ணீர் அதிர்வதிலிருந்து ஒவ்வொரு பிரேமிலும் பயத்தை கூட்டிக்கொண்டே போவார்கள், அதுபோல ஒரு விசயம் மிஸ்ஸிங்.

இது கம்பேரிசனா என்று தெரியவில்லை, ஆனால் இப்படி இருந்திருக்கலாமென்று தோன்றியது.

ஆதியின் குரல் வெகு கம்பீரம்.

Dark Water பார்த்திருகிங்களா?

அன்பேசிவம் said...

இன்னும் சிரமபட்டிருந்தால் ஈரம் ரொம்ப நாளைக்கு காயமல் இருந்திருக்கும்.மொத்ததில் ரொம்ப நாளைக்கு பிறகு டெக்னிக்கலா ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி, அறிவழ்கன், மனோஜ் பரமஹம்சா, தமன் வாழ்த்துக்கள்.

Ashok D said...

நேர்மையான விமர்சனம்

குசும்பன் said...

//இசையமைப்பாளர் தமனும் தான்.//

பாய்ஸ் படத்தில் நடிச்ச குண்டு பையன் தானே இந்த தமன்!

//படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்//

விமர்சனம்? அவ்வ்வ் அண்ணே அது திரைகதை ஜெராக்ஸ் காப்பி, ஆகையால் எப்பொழுதும் படிப்பது இல்லை! ஏன் இப்படின்னு கேட்டா அதுக்கு ஒரு பத்து பக்கத்துக்கு விளக்கம் கொடுக்கிறார் தேவையான்னே இது?:)))

குசும்பன் said...

//D.R.Ashok said...
நேர்மையான விமர்சனம்
//

என்ன கொடுமைங்க இது? போகிற போக்கை பார்த்தா ஹமாம் சோப் விளம்பரம் மாதிரி ஆகிடும் போல!

வரதராஜலு .பூ said...

//ராம்ஜி.யாஹூ 9:16 AM

கந்தசாமி படத்திற்கு பதிவர்கள் கண்ணை மூடி கொண்டு எழுதுகிறார்கள் என்று கத்திய கூட்டம் இந்த பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.//

ரிப்பீட்டு

// படம் நன்றாக இருந்தால் பக்கம் பக்கமாய் பாராட்டி விமர்சனம் எழுதும் எங்க கேபிள் சங்கரின் பதிவை படியுங்கள் //

டபுள் ரிப்பீட்டு

சங்கதி said...

திருட்டு விசிடி பார்த்துவிட்டு கதிரை நுனி என்ரெல்லாம் கதை விடாதீங்க சார். இணைச்சிருக்க படங்களைப் பார்த்தால் திருட்டு விசிடி போல இருக்கு.

Unknown said...

சரி பாத்துருவோம்...ஆனா மும்பைல ரிலீஸ் ஆகலையே...:((((

Venkatesh Kumaravel said...

//ஜெனரில்//
Genre? சரியான உச்சரிப்பு ஸான்ர என்பதே.

Venkatesh Kumaravel said...

எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றப்ப தான் பயமா இருக்கு. நாடோடிகள், பசங்க ரெண்டு பட விமர்சனங்கள் நல்லா இருந்துச்சு. படங்கள்? ஒருவேளை உருப்படியான படங்களே வராததால் சுமார் படங்களும் சூப்பரா இருக்கோ? தொண்ணூறுகளின் ஆரம்பகாலம் மாதிரி தமிழ் சினிமா ஏன் சார் மறுபடி இப்புடி ஆயிருச்சு!?

srinivasan said...

GOOD COMMENTS KEEP IT UP.REPORTS WTHOUR BIAS OR PREJUDICED.

WISHES
REGARDS
TANJAISEENU

srinivasan said...

GOOD COMMENTS KEEP IT UP.REPORTS WTHOUT BIAS OR PREJUDICED.

WISHES
REGARDS
TANJAISEENU

Prabhu said...

நீங்க சும்மா இல்லாம உ.த. விமர்சனம் படிக்காதன்னு சொல்ல, நான் போய் முதல் லைன் படிச்சதும் சப்புன்னு ஆகி மூடிட்டேன். பின்ன ரெண்டு மூணு விமர்சனத்துல மறைச்ச விஷயத்த ஒரே முதல் வரில உடைச்சிட்டாரே!

Prabhu said...

நீங்க சும்மா இல்லாம உ.த. விமர்சனம் படிக்காதன்னு சொல்ல, நான் போய் முதல் லைன் படிச்சதும் சப்புன்னு ஆகி மூடிட்டேன். பின்ன ரெண்டு மூணு விமர்சனத்துல மறைச்ச விஷயத்த ஒரே முதல் வரில உடைச்சிட்டாரே!

பாலா said...

//////
எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றப்ப தான் பயமா இருக்கு. நாடோடிகள், பசங்க ரெண்டு பட விமர்சனங்கள் நல்லா இருந்துச்சு. படங்கள்?
/////////

சரியா சொன்னீங்க வெங்கி. அதே மாதிரி லிஸ்டில் ‘சுப்ரமணியபுரம்’ முதல் பாதியையும் சேர்த்துக்கலாம்.

படத்த போடுங்கடான்னு... கத்தனும் போல தோணுச்சி.

///////
ஒருவேளை உருப்படியான படங்களே வராததால் சுமார் படங்களும் சூப்பரா இருக்கோ?
///////

நீங்க நினைப்பதைதான் நானும் நினைக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

appa paathuralaam.

சிம்பா said...

வணக்கம் சங்கர் அண்ணா... இது ஒரு கிரைம் சுப்ஜெக்ட் என்று நினைத்து, விமர்சனங்களை பார்ப்பதற்கு முன்னாள் படம் பார்த்துவிட்டேன். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை... சற்றும் எதிர்பாராத திருப்பம்...

காற்று வரும் திசையை எதிர்த்து குடை பறக்கும் காட்சி கூட மிகவும் அருமை... அந்த இடத்தில் எனக்கு சிறிது சந்தேகம் எழுந்தது...

அனால் தொடரும் கதையை முற்றிலும் யூகிக்க முடியவில்லை... ஒளிப்பதிவு மிகவும் அருமை..

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் தேறுமா? என்று உங்கள்ட்ட கேட்கலாமா ....

இல்ல உ.த விடம் கேட்கலாமா ....

kanagu said...

appa kandipa paakalam nu solreenga..

paathuduvom :) :)

vivekfx(VFX) said...

அண்ணா இன்றுதான் இந்தப்படம் பார்த்தேன்!!!! மிரட்டியிருக்கிறார்கள் அதுவும் இடைவேளை முன்னாள் வரும் உதயம் தியேட்டர் காட்சி!!! திரையரங்கமே அதிர்ந்தது!!!! அருமையான விமர்சனம்.....படத்தில் நிறைய "சஸ்பென்ஸ்" உள்ளன கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய கருத்துள்ள படம்!!!!

பிரபாகர் said...

அண்ணா,

ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் உங்களின் விமர்சனத்தை படித்தால் தான் ஒரு நிறைவு ஏற்படுகிறது.

காரணம் உங்களின் பார்வை, டெக்னிகலான விமர்சனம்.

கண்டிப்பாய் இந்த படத்தை பார்க்கிறேன்.

பிரபாகர்.

மங்களூர் சிவா said...

அருமையான படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்.

மங்களூர் சிவா said...

/
டிஸ்கி:
படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.
/

முதல்ல அதை படிச்சிட்டு வரேன்
:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உயிரெழுத்து கேள்விகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2009/09/blog-post_13.html

Romeoboy said...

தல படம் செம மிரட்டல் ... டிரைலேர் பார்க்கும் போது ஏதோ வித்தியாசமா இருக்கும்ன்னு தான் போனேன் , தமன் ஓட இரண்டாவது படம்ன்னு நம்ப முடியாத அளவுக்கு rrல செம கலக்கு கலக்கி இருக்கார் ..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உங்க விமர்சனத்தால்

நானும் பாக்கப்போர்றேன்,

நானும் பாக்கப்போர்றேன்,

நானும் பாக்கப்போர்றேன்,

ஆமா சொல்லிட்டேன்

Cable சங்கர் said...

@sukumar
படம் பாத்தியா..?

@raamji
நல்லாயிருந்தா நல்லாருக்குனு சொல்ல போறோம்.

@தராசு
நீங்கதான்ணே கரெக்டா பிடிச்சீங்க.. பின்ன நம்ம யாரு :)

Cable சங்கர் said...

@பிரசன்னா

அய்யோ.. அப்படியெல்லாம் இல்லீங்கோ..

@ டம்பி மேவி
நன்றி
@ ஷண்முகப்பிரியன்
அவ்வளவு சொல்லியும் கேட்கலியே சார்..

@முத்து குமார்
ஆமாம்

Cable சங்கர் said...

@ஜெட்லி

டப்பிங்குனுதான் நினைக்கிறேன்

@அகல் விளக்கு
பாருங்க பாத்துட்டு சொல்லுங்க
@பின்னோக்கி

ஹாலிவுட் த்ரில்லர் படஙக்ளை கம்பேர் செய்து என்ன புண்ணியம்.. எங்கேயிருந்து வந்தாலும் நல்லா இருந்தா போதும்

@முரளீகுமார் பத்மநாபன்
டார்க் வாட்டர், த ரிங், மிரர், என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் படத்தின் ஒரிஜினல் கதையான லவ் ஸ்டோரிதான் நம்ம்மை படம் பார்க்க உட்காரவைத்தது.. அது இயக்குனர் அறிவழகனையெ சாரும்..

கொஞ்சம் லெந்த்.. அது மட்டும் குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்

Cable சங்கர் said...

@அசோக்
:)

@குசும்பன்
ஆமாம் அந்த பையன் தான்
ஏற்கனவே உ.தவிடம் கேட்டுட்டீங்களா..?
@அசோக்குக்கு நீங்க கேட்டகேள்வி.. நல்லாருக்கு

Cable சங்கர் said...

@வரதராஜுலு

நன்றி

@ராம்சி
அது என்ன கதிரை நுனி. புரியலையே நான் தமிழ் படம் மட்டுமல்ல.. டிவிடி..ரொம்ப ரேராதான் பாப்பேன்.

@கமல்
நிச்சயமா பாருங்க கமல்

@ வெங்கிராஜா
அப்படியா..?
கம்பேரிடிவ்லி.. நீங்க சொன்ன மாதிரி வேறு படங்கள் இல்லாததால் ஓடுகிறது. என்பதை ஒத்துக் கொள்ள முடியாது.. நம்முடைய டேஸ்ட் வேறு , பொது ஜனத்தின் டேஸ்ட் வேறாக இருக்கிறது.. வெகு ஜனம் பிடித்து விட்டது என்றால் ஹிட்தான். அதற்கு நதிமூலம், ரிஷிமூலம் கிடையாது வெங்கி.:)

Cable சங்கர் said...

@சீனு
நன்றி

@பப்பு

நான் தான் சொன்னேனே பப்பு

@ஹாலிவுட் பாலா
வெங்கிக்கு சொன்ன அதே பதில்தான் உங்களூக்கும் பாலா.

@ரமேஷ்
பாருங்க

Cable சங்கர் said...

@சிம்பா

உங்களுக்கு பிடிச்சிருந்தாதா..?

@ஸ்டார்ஜான்
நீங்க பாத்துட்டு சொல்லுங்க

@கனகு
நிஜமாகவே ஐ ரெகமண்ட்

@ கேவிபிக்ஸ்
நன்றி
@பிரபாகர்
நன்றி பிரபாகர்

@ரமேஷ்
என்ன உயிரெழுத்து கேள்விகள்?

@ராஜராஜன்
நன்றி

@கிறுக்கல் கிறுக்கன்
நல்லா பாருங்க
நல்லா பாருங்க
நல்லா பாருங்க :)

யோ வொய்ஸ் (யோகா) said...

சங்கர் தயாரிக்கும் படங்கள் என்றுமே சோடை போனதில்லை..

நல்ல படம் என நினைக்கீறேன். பார்க்கனும்..

Truth said...

இங்க ரிலீஸ் ஆகல கேபிள். ஒரு சி.டி. கொரியர் பண்ணி விடுறீங்களா? :-)

ஜெட்லி... said...

கேபிள் அண்ணே
அது ஆதி குரல் தான்...
சமீபத்தில் ஜெயா டி.வி.யில் பார்த்தேன்
கேட்டேன்......

ஒவ்வாக்காசு said...

பார்த்திபன் படம் மாதிரி இருக்கு. பொங்கலில் முந்திரி மாதிரி அங்கங்கே 'பளிச்' காட்சிகள்... ஆனால் படம் SLOW. First Let-down from SHANKAR'S Table.

ஒவ்வாக்காசு.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி ஷங்கர்!! நாளைக்கே பார்க்க வேண்டியது தான்!!

வஜ்ரா said...

//
இந்த ஜெனரில் படம் பார்த்து
//

Genre என்பதை ஜான்ரு(ர்) என்று உச்சரிக்கவேண்டும். வகை என்ற தமிழ் வார்த்தை உபயோகிக்கலாம்.

வஜ்ரா said...

அது சரி, சென்னையில் இவ்வளவு மழை எப்போது பெய்யும் ஐயா ? எப்பப்பார்த்தாலும் மழையா இருக்கே!

வெண்பூ said...

நல்ல விமர்சனம் கேபிள்.. இன்னிக்குத்தான் படம் பாத்தேன். மிரட்டியிருக்காங்க.. தமிழ் சினிமா நிஜமாகவே புதிய உயரங்களுக்குச் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது.

KKPSK said...

தமன் music மிகவும் அருமை. இவருக்கு நல்ல எதிகாலம் இருப்பதாக தெரிகிறது. i liked songs very much. a properly packaged movie always becomes a hit..ie) when each one does their best.