Thottal Thodarum

Dec 5, 2009

ரேணிகுண்டா –திரை விமர்சனம்

ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

renigunda-stills-003 சந்தர்ப்ப வசத்தால் தாய் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலை செய்தவனை, கொல்ல நினைத்த போது போலீஸிடம் பிடித்து கொடுக்கப்படூம் ஒரு பதின்வயது இளைஞனின் திசை மாறி போகும் வாழ்க்கையின் சீல தினஙகளை கண் மூன்னே ஓட விட்டிருக்கிறார்கள்.

ஜானி ஜெயிலில் அடைக்கப்பட அங்கே போலீஸ்காரர்களால் அடித்து, துவைக்கப்படுவதை பார்த்து அவனை காப்பாற்றும் நால்வர் படை, ஒரு கட்டத்தில் அவனை தங்களிடம் தஞ்சம் அடைந்த கோழியை அடை காப்பது போல நால்வ்ரும் காக்க, ஜெயிலில் அவர்களுக்கு பெயீலெடுக்க யாரும் வராததால், அவர்கள் ஜெயிலிருந்து தப்பிக்க, போகும் போது ஜானியையும் கூட்டி போகிறார்கள். போகிற வழியில் ஜானியின் குடும்பத்தை கொலை செய்த ரவுடி கருணாவை பட்டப்பகலில் நால்வரும் ஒரு மார்கெட் மத்தியில் போட்டு தள்ளிவிட்டு, பாம்பேக்கு ரயிலேற, வழியில் டி.டி.ஆரிட்ம் பிரச்சனை, ரேணிகுண்டாவீல் இறங்கல், பழைய ஜெயில் மேட்டிடம் அடைக்கலம், அங்கே ஜானுக்கும், லோக்கல் பெண்ணூக்குமான காதல், தமிழ்நாட்டு போலீஸ் துரத்தல், க்ளைமாக்ஸ்.

renigunda-stills-024 நான்கு ரவுடிகளில் டப்பாவாக வரும் குள்ள இளைஞன் மனதை கவர்கிறார். ஜெயிலில் சேட்டிடம் கொலை செய்ததை பெருமையாய் “ஆல் டீம் ஒர்க்” என்பதாகட்டும், கோப்பட வேண்டிய காட்சிகளில் எல்லாம் சரியாக ரீயாக்டாகி, பொங்குவதாகட்டும், காதல் வயப்பட்டு, கூலிங்க்ளாஸ் போட்டு அலைவதாகட்டும், தோல்வீயில் தெலுங்கு அடீஆத்தாடியை சத்தமாய் வைக்க சொல்லி சோகமாய் தம் அடிப்பதாகட்டும் மனுஷன் உய்ரம் தான் குள்ளம்.

மற்ற மூவரில் டீம் ஹெட்டாய் வரூம் குண்டு பையன் நீஷாந்துக்கு பெரிதாய் வேலையில்லை என்றாலும், நினைவில் நிற்கிறார். மற்றவர்களும் அஃதே.

renigunda-stills-006 கதையின் நாயகன் ஜானிக்கு நடிப்பதற்கு பெரிதாய் ஏதும் வாய்ப்பில்லை. பெரும்பாலான காட்சிகளில் மெளனமாகவே இருக்க வேண்டிய காட்சியமைப்பினால், ஒரே மாதிரி பொதுவான பார்வையில் அலைகிறார். காதல் காட்சிகளில் கொஞ்சம் ஓகே. அதே போல் நண்பர்களை நட்டாற்றில் விட்டவனை வெறி கொண்டு குரல்வளையை கடிக்க, வெறி கொண்டு கொல்லும் காட்சியில் ஆக்ரோஷம் எல்லாம் இவருக்கு பதிலாய் கேமரா நடிக்கிறது.

க்யூட்டான குட்டி ஹீரோயின், பல காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ், கண்களில் தெரியும் சோகம், உடல்மொழியில் தெரியும் குழந்தைத்தனம் எல்லாம் நம் மனதை கொள்ளை கொள்கிறது

renigunda-stills-014 இதை தவிர கதாநாயகியின் விபச்சார அக்கா, பங்கர், என்று மேலும் சில நினைவில் நிற்கும்கேரக்டர்கள். விபச்சார அக்கா, அவள் புருஷன்,குழந்தைகள் நிதர்சன குட்டிக்கதை.

நிஜமாகவே படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திதான். படம் முழுவதும் இவரின் உழைப்பு வியாபித்திருக்கிறது. அதிலும் அந்த பொட்டை அத்துவான காட்டில், ஜானி இருவரை கொலை செய்யப்படும் காட்சியில் கேமரா இன்னொரு கேரக்டர் ஆகவே அலைகிறது. படத்தில் எடிட்டிங்கும் தன் பங்குக்கு இந்த காட்சியில் விளையாடியிருக்கிறது. கணேஷின் இசையில் ஏற்கனவே

ஒக்காளீ பாடல் ஹிட். பிண்ணனியிசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குனர் சிங்கம்புலியின் வசனங்கள் ஆங்காங்கே டப்பாவின் மூலமாய் நினைவில் நிற்கிறார். பாராட்டபட வேண்டிய இன்னொருவர் சண்டை காட்சிகளை அமைத்த ராஜ்குமார். அந்த கெடுக்கிபிடி முறை தூள்.
renigunda-stills-026 புது நடிகர்கள், புது டெக்னீஷியன்கள் என்று எல்லாரையும் புதுமுகங்களாய் வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை கொடுப்பது என்பது சும்மா இல்லை. அதை திறம்படவே செய்திருக்கிறார். கதாநாயகியின் அக்கா கேரக்டருக்கான ஆர்டிஸ்ட் செலக்ஷன் அருமை. குறை என்று சொல்வதானால், காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாம். அது மேலும் இரண்டாவது பாதிக்கு மெருகேற்றியிருக்கும், அதே போல் புதுசாய் ஏதும் காட்சிகள் இல்லாதது குறையே. படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை போலவே இருப்பதால் அலுப்பூட்டவே செய்கிறது. டெம்ப்ளேட் காட்சிகளே படம் நெடுக வருவது திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என்று கொஞ்சம் மைனஸ்தான். அதே போல நடு நடுவே வரும் க்ளப் டான்ஸ் பாடல்கள், மதுரை ஜெயிலில் இருந்து தப்பிய பசங்கள் சாதாரணமாய் அலைவது, ஆந்திரா என்றால் அங்கே சட்டம் ஒழுங்கே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உலவவிட்டிருப்பதை தவிர, நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் இயக்குனர். பன்னீர் செல்வம்.

டிஸ்கி: இந்த படத்திற்கு இவர்கள் செய்த மார்கெட்டிங் மிக அருமை. அந்த மார்கெட்டிங்தான் படத்திற்கான ஓப்பனிங்கை ஏற்படுத்தியது.

ரேணிகுண்டா – Expectation drained…




தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும்,குத்துங்க எசமான்,குத்துங்க
Post a Comment

38 comments:

Tech Shankar said...

கலக்குங்க தலைவா.

வாழ்த்துகள். 500 ஃபாலோயர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

கே.என்.சிவராமன் said...

//ரேணிகுண்டா – Expectation drained… //

அக்மார்க் கேபிள் பஞ்ச் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மேவி... said...

"பைத்தியக்காரன் said...
//ரேணிகுண்டா – Expectation drained… //

அக்மார்க் கேபிள் பஞ்ச் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்"

athe thaan naanum solla ninaithen.. neenga sollitinga... ennoda nanbarum padathin marketing patri sirappaga sonnar.....

மேவி... said...

avatar padam epp nna release ????

Unknown said...

அப்போ படம் பாக்கலாம் அப்டின்னு சொல்றீங்கோ...,

Raju said...

சிங்கம்புலின்னா "ராம்சத்யா" தானே தல‌...?

அறிவில்லாதவன் said...

தூள் தல. அருமையான விமர்சனம். என்ன ஒரே வருத்தம் என்றால், நான் இருக்கும் மைசூரில் இந்த படம் வராது.

Ganesan said...

ரேணிகுண்டா--வ‌சூல் அண்டா

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இது தமிழ் படமா, இல்லை தெலுங்கு படமா.

எறும்பு said...

//அந்த கெடுக்கிபிடி முறை தூள்//

trailarla பார்த்தேன். வித்தியாசமாய் இருந்தது..

creativemani said...

அப்ப ரெண்டு டிக்கெட் போட்டுடவா கேபிள் சார்???

creativemani said...

ரெண்டாவது போட்டோவுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு (மனசேயில்லாம) Scroll செஞ்சு தான் முழு விமர்சனத்தையும் படிச்சேன்...

:)

க‌ரிச‌ல்கார‌ன் said...

ட்டாச்சு த‌ல‌

Ashok D said...

//ரெண்டாவது போட்டோவுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு (மனசேயில்லாம) Scroll செஞ்சு தான் முழு விமர்சனத்தையும் படிச்சேன்...//

ஹிஹிஹி எனக்கும்...
(எனக்கு தெரியும் உங்களுக்கு மக்களின் பல்ஸ் தெரியும்ன்னு)
(சோக்கா துடுப்பு போடறவராச்ச நீங்க)

தீபா said...

செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்த்தனை :-) சரி பண்ணுறதுக்காக சொல்லலை.கவனக்குறைவால் நேர்ந்த பிழை என்றால் தெரிவிப்பதற்காக இந்த பின்னூட்டம். :-)

பொழுது போகாமல் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்

வெற்றி said...

சமீபகால படங்களில் இது ஒன்னாவது தேறுமா தல??

உண்மைத்தமிழன் said...

யோவ்.. அப்படியென்ன அவசரம், அவசரமா போஸ்ட் போடணும்..? அதான் என் பிளாக்கை திட்டம் போட்டு, வட்டம் போட்டு, வைரஸை பரப்பி முடக்கிட்டீல்ல. அப்புறமென்ன..?

முதல் பாராவை படிச்சுப் பாரு.. என்ன சொல்லியிருக்கீன்றதை திரும்பியும் சொல்லு..!

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு நிறைய.. மண்டைய பிய்ச்சுக்க வைச்ச மாதிரி கதைச்சுருக்கம் சொன்னதுக்காக ஒரு மைனஸ் குத்து குத்திட்டேன்.

அன்பேசிவம் said...

தல நீங்க படத்தை பார்த்துட்டிங்க, விமர்சனம் எழுதிட்டிங்க. நான் இப்போதான் இந்த கதையின் கருவை படித்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக அடுத்த பதிவு......

Kabi said...

அப்ப படம் பாக்கலாம்...

கணேஷ் said...

எனக்கு படம் பிடித்து இருந்தது. அந்த ஹீரோயின் அக்கா, நச் as you said. ஹி ஹி ஹி..

Rajan said...

Thanks for the review.when i watched the trailor on TV,initially i thought this may be a telegu dubbing film.but ur review clarified that this is a straight tamil film.Will watch this for my collegemate-D.Singa puli Annavi alias Ram Satya alias Singapuli's dialogues and to appreciate the cameraman's work.thanks again for a detailed review.

Prabhu said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பாஸிடிவ் விமர்சனம் இல்ல?

butterfly Surya said...

பார்க்கணும் போலத்தான் இருக்கு..

மேக்கிங் ஸ்டைல் நல்லாயிருக்குன்னு சொல்றீங்கன்னு புரியுது..

சரியா தலை..?

மீன்துள்ளியான் said...

அண்ணே படம் சூப்பர் ..
டப்பா அட்டகாசம் போங்க ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

kanagu said...

அண்ணே இன்னிக்கு தான் படம் பாத்தேன்...

அருமை... ஆனா திருப்பங்கள் இல்லாம எல்லாமே எதிர்ப்பார்த்த மாதிரி இருந்துது....

ஆனாலும் கடைசியா பாத்த பல படங்கள்-ல இது தான் நல்லா இருந்துது..

Cable சங்கர் said...

@தமிழ்நெஞ்சம்
நன்றி தலைவரே

@பைத்தியக்காரன்
நிஜமாகவே நான் உணர்ந்தது தலைவரே

@டம்பிமேவி
ஆமாம் மிக சிறப்பான மார்கெட்டிங்.

Cable சங்கர் said...

@டம்பிமேவி
18ஆம் தேதி

@பேநாமூடி
ஆமாம் தலைவரே

@ராஜு
ஆமாம் ராஜு

@வால்பையன்
என்னது மைசூர்லயா.. ஓ நீங்க புது வாலா..?

@காவேரி கணேஷ்
ஆமாம்ண்ணே

@சைவகொத்துபரோட்டா
தமிழ் படம் தாண்ணே

Cable சங்கர் said...

@அன்புடன் - மணிகண்டன்
நிச்சயம்

அதுக்கு தானே போடறது

@கரிசல்காரன்
நன்றி

@அசோக்
நன்றி.. அது சரி அது என்ன துடுப்புபோடறதை பத்தி உள்குத்து

Cable சங்கர் said...

@தீபா

சரி பண்ணிட்டேங்க.. ஆனாலும் உங்க சங்கம் ரொம்ப ஸ்டாரங்காத்தான் இருக்கு:)

@வெற்றி
தேறிடும்

@உண்மைதமிழன்
அது சரிய்யா.. உங்க ப்லாக்கை வைரஸ் வேற விட்டு முடக்கணுமா..? அட கிரகமே..

Cable சங்கர் said...

@முரளிகுமார் பத்மநாபன்
எதிர்பார்க்கிறேன்

@கபி
நிச்சயம்
@கணேஷ்

ஆமாம் கணேஷ்

@ராஜன்
சிங்கம்புலி உங்க க்ளாஸ் மேட்டா ?

@பப்பு
ஆமாம்

பட்டர்ப்ளை சூரியா
ஆமா சூர்யா

Cable சங்கர் said...

@மீன் துள்ளியான்
ஆமாம்ண்ணே

@கனகு
அது ஒரு குறை தான் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய ஹிட்டாகியிருக்கும் என்பது என் எண்ண்ம்

geethappriyan said...

ஆகா தல,
அருமையான விமர்சனம்,கண்டிப்பாக பார்ப்பேன்.

masiad said...

padam ingu rilisagavilli

Thamira said...

பாக்கலான்றீங்களா? டைட்டில்தான் எனக்குப்பிடிக்கலை..

Cable சங்கர் said...

@கார்த்திகேயனும் அறிவுதேடலும்
நன்றி

@மசாய்ட்
நீங்க எந்த் ஊரு?

@ஆதிமூலகிருஷ்ணன்
நிச்சயமாய்

Romeoboy said...

தல நேத்துதான் படத்த பார்த்தேன். தியேட்டர்ல செம கூட்டம், முதல் பாதி ஒரு அளவு தான் இருக்கு , அடுத்த பாதி நல்லா இருக்கு. விமர்சனம் சூப்பர்

நர்சிம் said...

//Deepa said...
செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்த்தனை :-) சரி பண்ணுறதுக்காக சொல்லலை.கவனக்குறைவால் நேர்ந்த பிழை என்றால் தெரிவிப்பதற்காக இந்த பின்னூட்டம். :-)

பொழுது போகாமல் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்
//

இந்த பின்னூட்டம் நிறைய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

Fortune Solutions said...

After peranmai, this is the only movie to be watchable.. Splendid performed by Theepeti ganeshan