Thottal Thodarum

Oct 31, 2009

கண்டேன் காதலை – திரை விமர்சனம்

thikanden_kathalai

தன் அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன் போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில் எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத், லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல, பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும் வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத் மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன?

பரத் பெரிய கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான். அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே. அய்யோ..
Kandein_kadhali_016

தமன்னா முடிந்தவரை கரீனா கபூரை பாலோ செய்திருக்கிறார். அப்போ இருந்த அவரின் உடல் அளவு உட்பட, பட் கரீனாவின் ஹிந்தி கேரக்டரில் அவர் ஒரு லொட, லொட, பெண் என்றளவில் தான் நம் மனதில் நிற்பார். இதில் தமன்னாவை பார்க்கும் போது லூசோ என்று கேள்வி எழுந்து, பரத் வேறு அதையே கேட்டு, உறுதிபடுத்துகிறார். அதனால் கொஞ்சம் தமன்னாவின் கேரக்டர் மேல் ஈடுபாடு குறைவது நிஜம்.

படத்தில் ஒருவர் வந்தால் மட்டும் தியேட்டரே குபீரென சிரிக்கிறது. அவர் வேறு யாருமில்லை சந்தானம் எண்ட்ரியில்தான். மனுஷன் இன்னொரு கவுண்டராகி கொண்டிருக்கிறார். படம் நெடுக அவரின் ராஜ்யம் தான். படத்தை பெரும்பாலும் கீழே விழும் போது இவர்தான் காப்பாற்றுகிறார்.
kandein-kadhalai-01

ஹிந்தியில் படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள், அதிலும் பரத்தும், தமன்னாவும் ஓட்டலில் பேசும் வசனங்கள், சின்ன சின்னதாய் இருந்தாலும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் இருக்கும், ப்ட்டுக்கோட்டை பிரபாகர், இந்த காட்சியில் நிறைய இடங்களீல் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பல இடங்களில் சவ, சவ வென்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். காரணம் மொழிமாற்றம்.

ஹிந்தியில் இப்ப்ட வெற்றிக்கு மிக உறுதுணையாய் இருந்தது பாடல்கள், ஏதோ கேட்க சுமாராய் இருக்கிற மாதிரியான பாடல்கள்தான். மெலடி கிங் வித்யாசாகர் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஏமாற்றி விட்டார்.

முத்தையாவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. வயல் வெளி, நடுவில் குடில் என்று பஞ்சாப் வயல் வெளியை மீட்டு எடுத்து வந்திருக்கிறார்கள்
ee758_kandein-kadhalai-movie-stills-8

ஹிந்தியில் ஷாகித்துக்கு, கரினாவின் வீட்டிற்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றத்தை அவரின் பஞ்சாபி பிண்ணனியில் இன்ரஸ்டாக சொல்லியிருப்பார்கள். இதில் அதில் மிஸ்ஸிங். திரைக்கதையில் தேனிக்கு வந்தும் எல்லோரும் ஒரு டீவி சீரியல் குடும்பம் போலவே இருப்பது ஒட்டவில்லை. கொஞ்சம் இயக்குனர் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹிந்தியில் இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாய் இருந்தது படத்திற்கும் அப்பாற்பட்ட, சாகித், கரீனா, காதல் முறிவு, சமயத்தில் வெளியான காதல் படம். அதுவே பெரிய ட்ராயிங் அட்டென்ஷனாய் படத்தில் அமைந்தது, அதே போல் அவர்களுக்குள் படத்தில் தெரிந்த கெமிஸ்ட்ரி. இதில் மிஸ்ஸிங்}

படத்தில் எனக்கு பிடித்த காட்சி.. தமன்னா தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரனிடம், தண்ணி காசு கொடுத்து வாங்குறதே அநியாயம் இதில அதிக விலை வேறயா.. யாரும் கேட்காததினாலேயே நீங்க செய்யறது சரிங்கிற மாதிரி ஆயிருச்சு.. நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் என்று சண்டை போடும் காட்சி, இதில் ஒரு கருத்தை மக்களுக்கு வைப்பது மட்டுமில்லாமல், இவ்வாறு சண்டை போடும் நேரத்தில் மீண்டும் தமன்னா ரயிலை மிஸ் செய்கிறார். ஐ.லைக்.. இட்

கண்டேன் காதலை – கண்டாச்சு.. காதல் எங்கே..?

டிஸ்கி:

உ.பொ.ஒ.வில் நான் ஹிந்தி படத்தை கம்பேர் செய்ய வேண்டாம் என்றிருந்தேன். ஆனால் இந்த படம் பார்க்க, பார்க்க, அந்த படம் ஞாபக்ம் வ்ந்து தொலைக்கிறது. அதுதான் உ.பொ.ஒவில் கமலின் வெற்றி.


Oct 29, 2009

This Is It – A Musical Ecstasy

thisisit

மைக்கேல் ஜாக்ஸன் இறப்பதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த This is it என்கிற கான்செர்ட்டுக்கான முன் நடந்த ஏற்பாடுகள், ரிகர்சல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு டாகு- மியூசிகல படமாய் வெளிவந்திருக்கிறது.
thisisit3

வழக்கமாய் பேக் ஸ்டேஜ் விஷயங்களை பார்ப்பதற்கு எல்லோருக்குமே பிடிக்கும். அதிலும் பிரபலமான ஆட்களின் பேக் ஸ்டேஜ் விஷயஙக்ள் என்றால் நம்முடைய ஆர்வம் இன்னும் அதிகமாய் எகிறும். அப்படியிருக்க, எம்.ஜேவின் பேக் ஸ்டேஜ் ரிகர்சல்கள் என்றால் கேட்க வேண்டுமா..? அதிலும் அவருடய நடக்காத சோல்ட் அவுட் கான்செர்டுக்கான ரிகர்சல் என்றால் ..? உலகம் முழுக்க ரத்தத்தில் அட்ரிலின் எகிற ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர். அதில் நானும் ஒருவன்.728x90_thisisit

முதல் காட்சியில் அவருடன் பணியாற்றும் சிலருடய பேட்டியுடன் படம் ஆரம்பிக்கிறது. இளைஞர்கள், மிகவும் இளைஞர்கள், எம்.ஜேவுடன் பணியாற்றுவதே பெரிய பாக்கியமாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓவராய் சிரித்து, பேச முடியாமல் கண்களில் கண்ணீருடன் ததும்ப, This is it என்று டைட்டில் ஆரம்பிக்க உலகின் ஈடு இணையில்லா எண்டர்டெயினரின் படம் ஆரம்பிக்கிறது. தியேட்டர் எங்கும் உற்சாக கூச்சல்கள் தியேட்டர் கூரைகளில் அதிர, எம்.ஜேவின் கான்செர்ட்டுக்கான பாடல்களின் ரிகர்சல்கள் வரிசையாய் அணிவகுக்க, எம்ஜே

எம்.ஜேவின் பாடல்களை பற்றி இதில் நான் சொல்லப்போவதில்லை. அது உலகம் அறிந்தது. ஆனால் எம்.ஜே. என்கிற ஒரு கலைஞனின் ஈடுபாடு, திறமை, முயற்சி, இன்வால்மெண்ட், தான் என்னை பிரம்மிக்க வைக்கிறது.
ThisIsItMJ

ஒரு காட்சியில் பியானோ நோட்களில் உள்ள சிறு நுணுக்கத்தையும், சொல்லி அதை வெளீ கொணரும் காட்சி, அதே போல் லீட் கிடாரிஸ்ட் பெண் பாடல் முடியும் போது தனி ஆவர்தனம் போல தனியே வாசித்து முடிக்கும் இடத்தில் ஒரு இடத்தில் நிறுத்த, எம்.ஜே. அதை இன்னும் ப்ரோலாங் செய்யச் சொல்லி “இங்கே உனக்கான பெயர் வாங்கும் இடம்” இன்னும், இன்னும் என்று சொல்லி சக் கலைஞரை ஊக்குவிக்கும் காட்சி, ஒரு இடத்தில் இசையும் அவரது நடன அசைவும் ஒருங்கே ஆரம்பிக்கும் இடத்தில் பிசிறடிக்க, மீண்டும் ஒரு முறை ரிகர்சல் என்று சொல்லிவிட்டு, இதுற்காகத்தான் இவர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆடியன்ஸ் இருக்கும் சைடை காட்டி சொல்லும் காட்சியை பார்க்கும் போதும், உடலில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்து கொண்டு பாடல்களை பாடி ஆடி, அங்கேயிருக்கும் அனைவருக்குமான் எனர்ஜி லெவலை தன்னுடய பெர்மான்ஸின் மூலமாய் ஏற்றி கொண்டிருக்கும் எம்.ஜேவை ஏன் உலகின் சிறந்த கலைஞனாய் மக்கள் கொண்டாடினார்கள் என்பது புரியும்.thisisit1

பிண்ணணியில் உள்ள டெக்னாலஜியில் ஆரம்பித்து தன்னுடய கம்பேக் கான்செர்டாக வர அவரின் உழைப்பும், அதற்கு உறுதுணையாய் இருந்த டெக்னீஷியன்களின் உழைப்பு, அவர்களின் பேட்டி என்று அருமையாய் எடிட் செய்து, தேவையில்லாமல் அவரின் கடைசி காலஙக்ளை காட்டி பச்சாதாபத்தை ஏற்படுத்தாமல், எம்.ஜேவின் இசை எப்படி இசையுள்ள வரை வாழுமோ, அது போல நம்மிடையே இன்றும் இசையால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூழு நீள மீயூசிகல் டாகுமெண்டரியாய் கொடுத்திருக்கும் இயக்குனர் கென்னி ஒரட்டேகா வுக்கு இசை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடத்தான் போகிறார்கள்.

இசையெனும் உற்சாக போதையை, அது தரும் எக்ஸ்டஸியை உணர துடிப்பவர்களூக்கு This Is It

டிஸ்கி: இன்னும் எழுத வேண்டும் போல் தான் இருக்கிறது, படம் பார்க்கும் போது கிடைக்கும் உணர்வை படிப்பவர்கள் மிஸ் செய்ய வேண்டாம் என்று தான் எழுதவில்லை. Long Live MJ

Technorati Tags: ,,


துரை..நான்.. ரமேஷ் சார்.. படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 27, 2009

தியேட்டரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-2

nayagan_dvd_film சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே.

இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்?

என்பதுகளில் திரையரங்குகளை தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்ற நிலையில் வந்த தொலைக்காட்சி பெட்டி தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே ஒரு ஆட்டு ஆட்டியது என்றால் அது மிகையில்லை.  வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான். கூடவே ஞாயிற்று கிழமை சினிமா வேறு மக்களை கட்டி போட ஆரம்பிக்க,  டிவி மெல்ல எல்லார் வீடுகளிலும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, மெல்ல உள்ளே வந்தது விடியோ கேசட் என்னும் ஒரு மாற்று பொழுதுபோக்கு,.

சினிமாவை தியேட்டரில் மட்டுமல்லாமல், வீட்டின் தொலைக்காட்சியிலும் காணலாம் என்றிருந்த காலத்தில் நாம் விரும்பும் படங்களை விடியோகேசட்டாய் வெளிவர, மக்களுக்கு இன்னும் சந்தோசம்.  வீடியோ கேசட்டுகள் பிரபலமாக, பிரபலமாக, ஒவ்வொரு ஏரியாக்களீலும் வீடியோ லெண்டிங் லைப்ரரிகள் புற்றீசல் போல் உருவாக, மெல்ல பழைய படஙக்ள் மட்டுமே லைப்ரரிகளில் கிடைத்துவந்த காலங்களில் புதிய படங்கள் திருட்டு தனமாய் தியேட்டர்களிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டோ, அல்லது தியேட்ட்டர்களில் பெட்டியை கொண்டு போகும் ஆட்களூடன் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு, திருட்டு தனமாய் ஒளிப்பதிவு செய்தோ, படங்கள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே வெளிவர ஆரம்பிக்க, தியேட்டர்களில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

தியேட்டர்களில் கூட்டம் குறைய குறைய என்ன செய்வது என்று புரியாமல் விழித்தனர் திரையுலகினர்.  விடியோ பைரசிக்காக ஒரு தனி டீமையே படப் பெட்டிகளுடன் அனுப்பி பார்த்தார்கள், படம் ரிலீஸானவுடன் ஒரு பக்கம் தயாரிப்பாளர் போலீஸ் ரைய்ட் விட, இன்னொரு பக்கம் வீடியோ ரைட்ஸ் வாங்கிய உரிமையாளர்களே, பைரஸியாய் படஙக்ளை வெளியிட ஆரம்பித்தனர். ஏனென்றால் அவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு பிறகு தான் ஒரிஜினல் கேசட்டை வெளியிட உரிமையிருக்கும்  அதனால் முன்பே பைரஸி கேசட்டை விட்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர். பின்பு இதையே காரணம் சொல்லி தயாரிப்பாளர்களிடம் மூன்று வருடம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து இரண்டு வருடம், ஒரு வருடம், ஆறு மாதம் என்று ஆகி படம் ரிலீஸ் ஆன ரெண்டாவது நாள் வீடியோ கேசட் வெளியிட்டார்கள்.

அப்படி விடியோவிலும், தியேட்டரிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே ரிலீஸாகி வெற்றி பெற்ற முதல் படம் நாயகன்.
தொடரும்…



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 26, 2009

கொத்து பரோட்டா –26/10/09

சில பேர் தாங்கள் செய்தது தவறு என்று “போதையின்” உச்சத்தில் இருக்கும் போது, தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை திறந்திருப்பதும்,  அடிபட்டவர் நடந்த சம்பவத்தை எழுதிவிட்டார் என்பதும், மேலும் தான் குடித்திருந்ததை நிருபிக்க, வந்திருந்த நண்பர்கள் கூட மதுவருந்தி போதையில் இருந்ததாய் ஆளுக்கொரு ஒரு பீர் அடித்திருந்து, அதுவும் இந்த பிரச்சனையை கேள்விபட்டு டென்ஷனாகி, மூச்சா போய்விட்டு வந்தவர்களை பார்த்து போதையில் இருந்தார்கள் என்று சொன்னது எவ்வளவு மிகைபடுத்தல் என்பதை, கூட இருந்து பீரடித்து, மூச்சா போனவர்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட என் பாக்ஸ் திறந்தே இருக்கும்.

****************************************************************** 
செவிக்கினிமை
ரொம்ப நாளாகிவிட்டது இந்த பாட்டை கேட்டு, ரட்சகன் படத்தில் நாகார்ஜுன்,  சுஷ்மித சென்னை அலேக்காய் தூக்கிய படி பல மாடி கட்டிடங்களில் படியில் ஏறி போவதாய் காட்சி, “கனவா.. இல்லை காற்றா.?” என்ற ஸ்ரீனிவாஸ் உருகியிருக்கும் அந்த பாடல். சுகம். முக்கியமாய் வைரமுத்துவுன் வரிகள் அருமையோ.. அருமை.

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்,

நீரில் பொருள்கள் எடை இழக்கும்,

காதலில் கூட உடல் எடை இழக்கும்

என்று கண்டு கொண்டேனடி, நான் கண்டு கொண்டேனடி,

என்பவர், அடுத்த வரியில்

காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை  அறியாது. என்று முடித்திருப்பார். ஹாட்ஸ் ஆப்.

கிட்டத்தட்ட இதே ட்யூனை ஹாரிஸ் கொஞ்சம் ரிதமை மாற்றி,  தாம் தூம்\என்ற படத்தைல் “ ஆழியிலே முக்குளிக்கும் அழகே” என்று போட்டிருப்பார்.

******************************************************************** 
இந்த வார குறும்படம்
மிரட்டலான படம. கொஞ்சம் லாஜிக் இடிச்சாலும்…

*********************************************************** 
சாப்பாடுக் கடை
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிர் தெருவில் சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும், சப்பாத்தி என்றால் சைதப்பேட்டையில் மிகவும் பேமஸான கடை. ஒரு காலத்தில் மிக சின்ன கடையாய் இருந்த இடம், இப்போது, சற்றே பெரிய கடையாய் ஆகியிருக்கிறது. கையேந்தி பவன் தான். ஆனால் சூடான சப்பாத்திக்கு அவர்கள் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம்  .. அங்கேயே தோசை, இட்லி, சாம்பார் சாதம் கூட கிடைக்கிறது. குறைந்த விலையில்.

******************************************************************** 
பிக்ஸார் கம்பெனி உருவான கதை  மிக அருமையாய் எழுதப்பட்ட ஒரு தொடர், Informative and Interesting. நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட இந்த தொடர் என் நண்பர் HollyWood Bala  எழுதியது என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது. நிச்சயமாய் இது ஒரு முதுகு தொறிதல் ரெபரன்ஸ் அல்ல. படிப்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள தகவல் உள்ள பதிவு. புத்தகமாய் வருவதற்கு ஏற்ற பதிவுகள். எழுதிய ஹாலிவுட் பாலாவுக்கு பாராட்டுக்கள்.

******************************************************************** 
ஏஜோக்

ஒரு மாமிச கடைக்காரனின் முன் ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து நின்று இது உனக்கு வாபிறந்தது என்று கூறி பிரசச்னை செய்ய,  வேறு வழியில்லாமல் அந்த குழந்தை 16 வயது வரும் வரை, இலவசமாய் மாமிசம தருவதாய் ஒத்துக் கொண்டான். இப்படியாய வருடங்கள் போக, அந்த பையனும் தன்க்கு நாளை பதினாறு வயதாக போகிறது என்று சொல்ல அந்தா நாளுக்காகத்தான் காத்திருந்தேன். என்று சொல்லிவிட்டு.. உன் அம்மாவிடம் போய் இதுதான் நான் கொடுக்கும் கடைசி மாமிசம் என்று சொல்லிவிட்டு அவளின் முகத்தில் தெரியும் எக்ஸ்ப்ரெஷனை பார்த்து சொல்ல சொல்ல, அதை அப்படியே சொன்ன மகன், அதை கேட்ட அவள், இத்தனை வருடமாய் இலவச மளிகை, இலவசபால், இலவச வாடகை என்று இலவசமாய் தான் வாங்கி கொண்டிருந்ததாய் சொல்,  அவன் எக்ஸ்பிரஷனை பார்த்து சொல் என்றாள்.

 



ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 23, 2009

All The Best- Hindi Film Review

all the best

பர்தீனும், அஜெயும், நண்பர்கள், பர்தீனின் பணக்கார அண்ணன் சஞ்செய் தத் மாதம் தரும் லட்ச ரூபாய் பாக்கெட் மணியை வைத்து காலத்தை ஓட்டுபவன். அஜெயும், அவனது மனைவி பிபாஷாவும் ஒரு நொடித்து போன ஸ்டாப் பட்டனை அழுத்தினால் நிற்காத டிரெட்மில்லை வைத்து ஜிம் நடத்தி நொந்து போனவர்கள்.

பர்தீனும் அவனது காதலியும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாய் அவனது அண்ணனிடம் சொல்லியிருக்க, அதே நேரத்தில் செலவுக்காக லோக்கல தாதா ஜானிலீவரிடம் கடன் வாங்கியிருக்க, அந்த கடனை அடைக்க, பங்களா வீட்டை வாடகைக்கு விட லாட்டரியில் விழுந்த காசினால் பணக்காரனான ஒருவனுக்கு வாடகைக்கு விட அட்வான்ஸ் வாங்கி அந்த பணததை தாதாவிடம் கொடுத்துவிட, அந்நேரத்தில் பர்தினின் அண்ணன், ப்ளைட் கேன்ச்லாகி வெளிநாட்டிலிருந்து வந்து கோவா எர்போர்டிலிருந்து பேச, குழப்பத்துடன் அவரை வீட்டுக்கு கூட்டி வர, வீட்டில் இருக்கும் அஜயின் மனைவி பிபாஷாவை பர்தீனின் மனைவி என்று சஞ்செய் நினைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது குழப்பம், ஒரே கலாட்டா தான்

படம் நெடுக டயலாக் காமெடிதான். பர்தீனை விட அஜய் தூள் பரத்தியிருக்கிறார். க்ளாஸ் டம்பளரில் ஸ்பூனினால் அடித்து சங்கேதமாய் பேசும் தாதா ஜானி லீவர், பர்தீனின் காதலி வித்யாவின் அப்பா அஸ்ரானி,  கடித்து, கடித்து ஹிந்தி பேசும் சமைல்காரி, ஜானிலீவரின் அல்லக்கைகள், வீட்டை வாட்கைக்கு எடுத்து, சாமான்களுடன், வீட்டு வாசலில் காத்திருக்கும் புது பணக்காரன்,  அவனுடன் நிறைமாத கர்பிணி மனைவியை ஹாஸ்பிடலில் போய் சேர்க்க காத்திருக்கும் டிரைவர், இவர்கள் சொல்வதையெல்லாம், நம்பியும், நம்பாமலும், அரைகுறையாய் குழம்பி போய், பார்பவனையெல்லாம் அடித்து துவம்சம் செய்யும் சஞ்செய்தத். க்ளைமாக்ஸில் வரும் டபுள் ஆக்‌ஷன் பிபாஷா. என்று எல்லோருமே தங்கள் பாத்திரஙக்ளை உணர்ந்து ஜாமாய்த்திருக்கிறார்கள்.

allthe best

காமெடி படமென்பதால் பெரிசாய் லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது. படம் முழுவதும் நகைச்சுவைக்கான இயல்பான ஒன்லைனர்களும், பரபரப்பான திரைக்கதையும், படத்திற்கு பெரிய பலம்.

ஜானி லீவர் ஒரு ஹிந்தி மயில்சாமி. மனுஷன் படம் முழுக்க பேசாமலேயே கலக்க, க்ளைமாக்ஸில் சஞ்செய் அடித்த அடியில் அவருக்கு பேச்சு வந்து சஞ்செய்யும், நீக்ரோ ஆட்களும் பேசும் பாஷையை இவர் மொழி பெயர்த்து சொல்லும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியாது மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அதே போல் சஞ்செயும், அஜய்யும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி தூங்க போகும் இடமும் அதகளம்.

All The Best – Laugh Riot



சினிமா வியாபாரம்-9 படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 21, 2009

தியேடடரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-1

kaamadhenu

திபாவளி,பொங்கல் என்ற பண்டிகை நாட்கள் வந்தால்  பண்டிகையை அடுத்து ஞாபகத்துக்கு வருவது சினிமாதான். அதிலும் முதல் நாள் முதல் காட்சி பார்பது என்றால் அதில் இருக்கும் கிக்கே தனிதான் இளைஞர்களுக்கு எந்த காலத்திலும்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தியேட்டர் ராசியாய் இருந்த காலம் இருக்கிறது. சென்னையில் சித்ரா என்று ஒரு திரையரங்கம் இருந்தது அங்கே வழக்கமாய் எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கே வெளியிட்டால் நிச்சய வெற்றி என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது.  சிவாஜி படங்கள், பிளாசாவிலோ, அல்லது கொஞ்ச காலங்களுக்கு பிறகு சாந்தியிலேயோ வெளியாகும்.

இப்படி ஒவ்வொரு தியேட்டருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மக்களிடையே அதிகம் ஆக, ஆக, தியேட்டரில் ஆட்கள் உட்கார்ந்து பார்க்கும் இருக்கைகள் அதிகமாகி கொண்டே வர ஆரம்பித்தது. மதுரை தங்கம், திருச்சி, கலையரங்கம் போன்ற அரங்கங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளாய் இன்று வரை இருக்கிறது.. மதுரை தங்கம் தெற்கு ஆசியாவில் பெரிய தியேட்டராய் இருந்தது. இப்போது பல பிரச்சனைகளால் மூடிக்கிடக்கிறது.

நடுவில் அதை ஜி.வி.பிலிம்ஸ் வாங்கிவிட்டதாக கூட சொன்னார்கள். அதை பற்றிய தகவல்கள் அவ்வளவாக அதன் பிறகு வரவில்லை.
bhuvaneswari

மதுரை தங்கத்தில் ஹவுஸ்புல் காட்சிகள் என்றாலே ஒரு காட்சிக்கு இரண்டாயிரம் டிக்கெட்டுக்களுக்கு மேல் என்று சொல்வார்கள். அந்த திரையரங்கில் பாக்யராஜ் கொடி கட்டி பறந்த காலத்தில் தூறல் நின்னு போச்சு படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது என்றால் பார்த்து கொள்ளுங்க்ள் படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று. அந்த படத்திற்கு பிறகு என் தங்கச்சி படிச்சவ என்கிற படத்திற்கு ஓரளவுக்கு நல்ல கும்பல் வந்ததாம்.

நாடகம், தெருகூத்திலிருந்து மெல்ல, சினிமா தன் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்க, மக்களுக்கு சினிமாவை தவிர வேறு பொழுது போக்கு விஷயங்கள் இல்லாததால் சினிமாவிற்கான வரவேற்ப்பு அதிகமாக, அதிகமாக், புதிதாய் நிறைய திரையரங்குகள் ஆரம்பிக்க பட்டது.

ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு விதமான ஸ்பெஷல் இருக்கும். அந்த காலங்களி பெண்கள் நிறைய பேர் சினிமா பார்க்க வந்த காலங்களில் தியேட்ட்ர்காரர்கள் பெண்களுக்கு முக்யத்துவம் கொடுத்து பெண்களுக்கான டிக்கெட்டுகள் கொடுத்துவிட்டுதான் ஆண்களுக்கு கொடுத்த காலஙக்ள் உண்டு.

தியேட்ட்ர்கள் அதிகமாகும் காலகட்டத்தில்தான் 70mm, சினிமாஸ்கோப் திரைகள், நல்ல ஒலியமைப்பு உள்ள் தியேட்டர்கள் என்று பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள் திரையரக்கு உரிமையாளர்கள்.

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே.

இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்?

டிஸ்கி:

இந்த தொடர் பற்றிய கருத்துகளையும், உங்களுக்கும் தெரிந்த தியேட்டர்களை பற்றிய செய்திகளையும் நீங்கள் பின்னூட்டினால் உதவியாக இருக்கும். எனக்கு சென்னை பற்றிய அறிமுகம் உளள அளவிற்கு மற்ற ஊர்களை பற்றி இல்லாததால், உங்கள் அனுபவஙக்ளை, சொல்லுங்கள்.



ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 20, 2009

Blue – Hindi Film Review

நான்கரை லட்சம் ஹிட்ஸ் தந்த பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி...

 blue1

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு நம்மூர்ல சொல்வாங்க. ஆனா இவங்க அளக்காம கடல்ல 95 கோடிய போட்டுருக்காங்க. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அக்‌ஷய்குமார், சஞ்செய்தத், லாராதத்தா, காத்ரீனா கைஃப், என்ற நட்சத்திர பட்டாளம், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம், என்று எதிர்பார்ப்பு எகிற வைத்த படம்.

1949ல் Lady of Blue என்கிற கப்பல் இந்தியாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷஙக்ளை ஏற்றி கொண்டுவந்த கப்பல் பஹாமாஸ் தீவில் மூழ்கிவிட,  அதை எடுக்க போகும் மூவர் பற்றிய கதை.Blue01

சஞ்செய், அக்‌ஷ்யின் கப்பல் கம்பெனியில் வேலை செய்பவன், நேர்மையானவன், ஆழ்கடல் நீச்சலில் ஜித்தன், தன் முந்தய அனுபவத்தினால் அந்த பொக்கிஷத்தை அடைய ஆசைபடாதவன்
அக்‌ஷய் பணக்காரன், எப்போதும் வெற்றியை மட்டுமே பேசுபவன், ஸ்திரிலோலன், என்றாவது ஒரு நாள் அந்த பொக்கிஷத்தை அடைய சஞ்செய்யை உசுப்பேற்றி கொண்டே இருப்பவன்.

சாம் அவனுடய வீக்னெஸ் பைக், மற்றும் பைக் ரேஸ்.. ஒரு பிரச்சனையில் தாதா ராகுலிடம் மாட்டிக் கொண்டுவிட, அவனுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பித்து, அண்ணிடம் வந்து தஞ்சம் அடைகிறான்.blue

மோனா லாராதத்தா சஞ்செய்யின் காதலி. காத்ரினா சாம் காதலிக்கும் பெண். ஒரு கட்டத்தில் வில்லன் சாமை தேடி பஹாமாஸ் வந்து சஞ்செய்யின் காதலியை கடத்தி போய் சாம் கொடுக்க வேண்டிய பணத்தை க்கொடுத்துவிட்டு போ என்று சொல்ல வேறு வழியில்லாமல் மூவரும், கடலுக்குள் பொக்கிஷத்டஹி தேடி போகிறார்கள். அவர்களுக்கு பொக்கிஷய்ம் கிடைத்ததா..? வில்லன் என்ன செய்தான்? என்பது போன்றா கேள்விகளுக்கு 95 கோடி செலவு செய்து பதில் சொல்லியிருக்கிறார்கள்.WWW.OKGOT.COM

கதையின் ப்ளஸ் பாயிண்டான அண்டர் வாட்டர் காட்சிகள் மிரட்டல். அருமையா ஒளிப்பதிவு, அதற்கான லைட்டிங் என்று மிரட்டியிருக்கிறார்கள். அதே போல அந்த காட்சிகளுக்கான பிண்ணனி இசையும சூப்பர். அதே போல் அந்த பைக் சேஸிங் காட்சிகளும்  மிரட்டல்.

LEISURE BOLLYWOOD

மிக மிக செயற்கையான காட்சிகளால் நம்மை டேய் போய் சீக்கிரம் எடுங்கடா என்று புலம்ப வைகிற அளவுக்கு திரைக்கதை மொக்கை. இத்தனைக்கும் 2 மணி நேர படம்தான். ஆனால் டயர்ஸம்.

லாரா அண்டர்வாட்டரில் அழகாய் இருக்கிறார். கச்சிதமான உடலமைப்பு. சஞ்செய், அக்‌ஷய், என்று எல்லோரும் பெரிதாய் சொல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

blue-hindi-movie-songs

புது இயக்குனர் ஆண்டனி டிசோஸாவுக்கு இது ஒரு பெரிய ப்ரேக். கதை திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் எங்கேயோ போயிருக்க வேண்டிய படம். கதையின் முக்கிய தளத்துக்கு வருவதற்கே ஒண்ணேகால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதே போல் அந்த அண்டர்வாட்டர் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் கூட பெரிய அட்வென்சர் ஏதுவுமில்லாத விஷயஙக்ளாகவே காட்டியிருப்பது பெரிய மைனஸ். இம்மாதிரியான காட்சிகளை நாம் டீவியில் நேஷனல் ஜியோகிராபியில் பார்த்திருக்கிறோம். என்ன பெரிய திரையில் நிச்சயம் பிரம்மாண்டமாய் இருக்கிறது.

க்ளைமாக்ஸில் ட்டுவிஸ்ட் வைத்து கதை சொல்கிறேன் பேர்விழி என்று அக்‌ஷய்க்கு ஒரு கதை சொல்வது செம காமெடி.  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தனியே கேட்பதற்கு நன்றாய் இருந்தது படத்தில் ஒட்டவில்லை.

Blue – Go For the Exotic Under Water Visual.

டிஸ்கி:

படத்திற்கு ஐடிபிஐ பேங்க் மட்டும் 40 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டும் சுமார் 17 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.

தேவி பாரடைஸ் சீட் மட்டும் ஓகே. முன்பிருந்த சவுண்ட் இல்லை. ஏசியும் அவ்வப்போது கட் செய்துபோடுவது மிக அநியாயம். சத்யம ஏன் சென்னையின் முக்கியமான ஒரு எணடர்டெயின்மெண்ட் செண்டராக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

Technorati Tags: ,


ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 19, 2009

கொத்து பரோட்டா –19/10/09

இந்த வருஷம் தீபாவளி அவ்வளவு சுரத்தாவே இல்லைன்னு தோணுது. ரிஸெஷன் கூட ஒரு காரண்ம்னு சொல்றாங்க. ரிலீஸான படங்களும் பெரிசா இல்லை. மக்கள் கையில காசு அவ்வளவா இல்லை. அதனால பட்டாசு, மற்றும் பல விற்பனைகள் கூட மந்தமாயிருந்த நிலையில. ஒரு இடத்தில மட்டும் மந்தமேயில்லாம, கொஞ்சம் கூட சுணக்கமில்லாம இருந்தது எதுன்னா அது டாஸ்மாக்ல மட்டும் தான் மப்பும் மத்தாப்புமா.. சாரி மந்தாரமா வியாபாரம் நல்லா நடந்திச்சி.. தமிழ் நாடு முழுக்க 240 கோடி வசூலாம்.  ஹாப்பி தீபாவளி. அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Image0322 Image0323

விரைவில் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் போகிறது. மிக மட்டமான தியேட்டர் பராமரிப்பு, டி.டி.எஸ், க்யூப் டிஜிட்டல் புரொஷக்‌ஷன், நல்ல சீட்டுகள், முழு ஏசி  போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு கொடுக்காமல், அநியாய கொள்ளையாய் 100,80,70 என்று புதிய படங்களுக்கு டிக்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் திரையரங்குக்கு அந்த ஏரியாவை சுற்றியுள்ள, அண்ணாநகர், மதுரவாயல், அமிஞ்சிக்கரை போன்ற இடங்களில் உள்ளவர்கள் தான் வருவார்கள். விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கவிருக்கும் பி.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ் இவர்களின் கொட்டத்தை அடக்கும் என்றே தோன்றுகிறது. எந்த விதமான வசதிகளையும் பெறாமல் நூறும், நூற்றி இருபதும் கொடுத்து பார்க்கும் மக்களுக்கு ஒரு பெரிய ரிலீப்
Image0327Image0328 . $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
குறும்படம்
Mathieu Ratthe என்கிற கனடிய குறும்பட இயக்குனர், இயக்கியுள்ள இந்த ப்டத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு விட்டேன். சினிமாடோகிறாபியாக இருக்கட்டும், எடிட்டிங்காய் இருக்கட்டும் மிரட்டியிருக்கிறார். LOVEFIELD. இவர் படமெடுப்பதற்காக ஸ்டீபன் கிங்சின் ஒரு கதையின் ஒரு சீனை மட்டும் படமாய் உருவாக்கி தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார். அவரின் குறும்படம் உங்கள் பார்வைக்காக.

#######################################################################
சாப்பாட்டுகடை
ஏற்கனவே சத்யமில் முதல் மாடியில் இருக்கும் இட்லி எனப்படும் 100% வெஜிடேரியன் புட் ஜாயிண்டை பற்றி எழுதியிருந்தேன். அங்கே சமீபத்தில் ஒரு கார்பரேட் லஞ்ச் ஆபர் போட்டிருந்தார்கள் நூறு ரூபாய்க்கு,  இரண்டு இட்லியோ, ஆப்பமோ, பொங்கலோ, தோசை, அல்லது அடை, அல்லது பெசரட்டு, மெதுவடை அல்லது மசால் வடை, அல்லது கீரைவடை, காபி/டீ/ ஜூஸ்/லஸ்ஸி. நிச்சயமாய் அந்த ரெஸ்டாரண்டுக்கு 100ரூபாய் ரொம்பவும் சீப். நான் கீரைவடையும், அடை அவியல், இரண்டு இட்லியும், ஒரு லஸ்ஸியும் சாப்பிட்டேன். டிவைன்.
#########################################################################

ஏஜோக்
ஒரு விமானம் க்ராஷ் ஆகும் நிலைமையில் இருக்க, விமானத்தில் இருந்த ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் களைந்துவிட்டு,”நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி இங்கே யாராவது ஆம்பளை இருந்தா வாங்க.. சாகறதுக்கு முன்னாடி என் பெண்மையை நான் உணரணும் என்று கூப்பிட. ஒரு ஆம்பளை எழுந்து தன் சட்டையை கழட்டி “ அப்படின்னா போய் இந்த ஷர்டை அயர்ன் பண்ணிட்டுவா” என்றான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரு அழகான பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க வர, அவளின் அழகில் மயங்கிய டாக்டர் தன் தொழில் தர்மத்தை மீறி அவளை பேண்டை கழட்ட சொல்ல, “ எதுக்காக இப்படி சொல்கிறேன் தெரியுமா என்று டாக்டர் கேட்க, தொடைகளில் ஏதாவது தழும்பு இருக்கான்னு பார்க்க தானே என்றாள். அடுத்து அவளவு மேலுடை, ப்ரா எல்லாவற்றையும் கழட்டி விட சொல்லி, அவளது மார்பகத்தை பிசைய, “எதுக்காக இப்படி பண்றேன்னு தெரியுமா..? என்று கேட்க, அவள் தெரியுமே.. ப்ரெஸ்ட் கேன்ஸர் இருக்கான்னு பார்க்கத்தானே என்றாள். இப்போது டாக்டர் இன்னும் முன்னேறி அவளை மேட்ட்ர் செய்து கொண்டிருக்க,” இப்ப எதுக்காக இதை செய்யறேன்னு தெரியுமா..? என்று கேட்க, “தெரியுமே. எனக்கு வி.டி. அதுக்குத்தான் ட்ரீட்மெண்டுக்கு வந்தேன். அது உங்களுக்கு வரப்போவுது” என்றாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என் டிஜிட்டல் கேமராவில் எடுத்த முதல் படங்கள்
DSC00272 DSC00270 DSC00273 DSC00274 DSC00275 DSC00276



ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 18, 2009

ஆதவன் – திரைவிமர்சனம்

aadhavan-15-10-09

தசாவதாரத்துக்கு பிறகு, கே.எஸ். ரவிகுமார், அயனுக்கு பிறகு சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ் காம்பினேஷன், குருவியின் தோல்விக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்ந்தால், நீங்கள் இதுவரை பார்த்த தமிழ் சினிமாக்களை அத்தனையையும் உங்கள் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வர வைக்கும் படம்.

காசு கொடுத்தால் கொலை செய்யும் ஆதவன். அல்வா சாப்பிடுவது போல் கொலை செய்பவன். ஜட்ஜை கொலை செய்யும் முயற்சியில் ஃபெயிலியர் ஆகிவிட, அதனால் பணம் கொடுத்த ஆள் இவர்களை மிரட்ட, இன்னும் பத்து நாட்களில் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவர்களின் வீட்டோடு வடிவேலுவை மிரட்டி உள்ளே போக, அதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியாதது இல்லை. பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்னவென்று. அவ்வள்வு அற்புதமான திரைக்கதை.

ரவிகுமார் ஏற்கனவே மின்சார கண்ணாவில் ஒரு கும்பலை வைத்து செய்த விஷயத்தை மீண்டும் தூசு தட்டி மேலும் குடும்ப கும்பலோடு கொடுக்க நினைத்து இருக்கிறார். சேம் ப்ளட்.
aadhavan-movie-wallpaper14

வடிவேலு, சூர்யா காம்பினேஷனில் படம் பூராவும் வருகிற நகைச்சுவை காட்சிகள் மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான். நயன்ந்தாரா வழக்கம் போல் சிக், கிக்காக இருக்கிறார், முகத்தில் தான் கிழடு த்ட்டி இருக்கிறது. மற்றபடி படம் பூராவும் ஒரு மூன்று குடும்பம், அதன் குழந்தை குட்டிகள், குடும்பமாய் பாட்டு, என்று 50பேர் இருந்து கொண்டு  வெறுபேற்றி இருக்கிறார்கள்.
athavan_00020

இருக்கிற வெறுப்பில் எண்ணையை ஊற்றுவது பொல் சரோஜாதேவி. பார்க்கிற வயசிலேயே அவர் கொஞ்சி, கொஞ்சி பேசும் வசங்கள் எனக்கு எரிச்சல் மூட்டும், இதில் இன்னும் எரிச்சலாகவே இருக்கிறது.  கொடுமைடா சாமி. கதை ரமேஷ்கண்ணா என்பதாலும் அவ்ர் ரவிகுமாஅரின் நண்பர் என்பதாலும் படத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டரில் வந்து உயிரை எடுக்கிறார்.

சூர்யாவின் பத்து வயது நடிப்பு சி.ஜியின் தோல்வி அந்த ப்ளாஷ் பேக் படு அமெச்சூர் தனம்.
adhavan

ஹாரிஸ் வழக்கம் போல் ஹிட்டடித்து இருக்கிறார். பிண்ண்னி இசை மிகவும் சொதப்பல். கனல் கண்ணனின் சண்டை பயிற்சி அயனின் மிச்சம் District B17ல் விடுபட்ட சில ஷாட்களின் ரி ஷூட். டோன் மாக்ஸின் எடிட்டிங் ஓகே.

சூர்யா போன்ற நடிகர்களிடமிருந்து கமர்ஷியல் படமென்றாலும் கூட ஏதாவது இருக்கும் என்று  எதிர்பார்த்து போகும் ரசிகர்களை சூர்யாவும் ரவிகுமாரும் சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள்.

சூர்யா உங்களையும் விஜய் அஜித் என்ற லிஸ்ட்லில் சேர்த்துவிட்டுட்டாங்களே..  கமர்சியல் வெற்றி பெற்ற ஹீரோக்கள் இம்மாதிரி நேரங்களில் தான் உசாரா இருக்கணும். சூர்யா பார்த்து நடந்துக்கங்க.
சூர்யாவின் “ஆதவன்” என்று டைட்டில் போடுவதற்கு பதிலாய் வடிவேலுவின் “ஆதவன் “ என்று போடலாம்.
ஆதவன் – மொக்கை (வடிவேலுவை தவிர)

டிஸ்கி:
நைட் ஷோ படம் பார்த்ததில் படத்தின் மொக்கை தாஙக் முடியாமல் தூக்கம் வேறு சொக்கி, சொக்கி அடிக்கிது. அதனால் நைட்ஷோ தவிர்பது .நல்லது. இன்னொரு எச்சரிக்கை உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு அவர் ஹீரோவாக ஒரு நடிக்கிறாராம்.


வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் கேபிள் சங்கரின் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 16, 2009

பேராண்மை – திரைவிமர்சனம்

வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் கேபிள் சங்கரின் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Jayam-Ravi-Peranmai-Stills-pics (1)

கோட்டாவில் படித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீஸராய் உயர்ந்து நிற்கும் துருவனும், ஐந்து என்.சி.சி கேடட் பெண்களும் சேர்ந்து நம் நாட்டின் பசுமை புரட்சிக்காக அரசு ஏவ இருகும் ராக்கெட்டை அழிக்க வரும் வெளிநாட்டு கூலிப்படையின் முயற்சியை தடுப்பதே கதை. 

மேம்போக்காக பார்த்தால் ஏதோ பாண்டஸி வகையை போல தெரிந்தாலும் படம் முழுக்க இயக்குனரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு.. ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்.சி.சி பயிற்சிக்காக வரும் ஒரு காலேஜ் குரூப் வந்து சேர, அங்கே பயிற்சியாளராக வருகிறார் துருவன் எனும் ஆபீஸர். அவர் பழங்குடியினர் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முன்னேறியவர்.  ஊருக்குள் வரும் முன்னரே பழங்குடியினராக பார்த்த ஒருவனை தங்களது  பயிற்சியாளராய் ஏற்க மறுக்கும் ரவுடி பெண்களான ஐந்து பேர். அவரை துரத்த நினைத்து இந்த மாணவிகள் செய்யும் முயற்சிகள் எல்லாம் பாதி வெற்றியும், தோல்வியுமாய் முடிய, அதில் ஒரு பெண் ஒரு தலையாய் அவரை காதலிக்கவே ஆரம்பிக்கிறார்.  
peranmai
ஒரு கட்டத்தில் கடைசி நாளாக இது வரை மக்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதிகுள் ஒரு நாள் பயிற்சிக்கு ஐந்து பேரை செலக்ட் செய்து துருவன் செல்ல, அடாவடி ஐந்து பெண்கள் அவனை பிரச்சனைக்குள்ளாக்க, முயற்சிக்கும் வேளையில் ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளில் நடமாட்டத்தை பார்க்கும் ஒரு பெண் துருவனிடம் சொல்ல அன்னிய சக்திகளில் சதி திட்டத்தை முறியடிக்க, ஐந்து பெண்களுடன் போராட்டத்தில் இறங்குகிறான் துருவன் , அவன் ஜெயித்தானா, அந்த பெண்கள் அவனுக்கு உதவினார்களா..? என்பது வெள்ளிதிரையில்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (2)

ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம். கமலஹாசனுக்கு பிற்கு கோவணத்துடன் ஒரு நீள காட்சியில் வலம் வருகிறார். பயிற்சியாளராய் அவரின் பாடி லேங்குவேஜ், சண்டை காட்சிகளில் அவர் காட்டும் வேகம், பெண்களிடம் அவரின் அதட்டல் உருட்டல் செல்லுபடியாகாமல் திண்டாடும் போது காட்டும் பொறுமை.  அவரின் ப்ளான் எக்ஸிகியூஷன் போன்றவற்றில் காட்டும் நிதானம், ஆக்‌ஷன் காட்சிகளிலும், மரம், மலையில் ஏறும் காட்சிகளில் அங்கேயே வாழ்ந்தவர் போல் காட்டும் லாவகம், ரவி உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (4)

அவரின் உயர் அதிகாரியாய் வரும் பொன்வண்ணன் கேரக்டரும் அருமை. மலைஜாதியிலிருந்து ஒருவர் இந்த நிலைக்கு வந்ததை ஒவ்வொரு முறை பேசும் போதும், மட்டம் தட்டியே பேசுவதும், அவனின் வளர்ச்சி பொறுக்காமல், அவனை ஒரு காம கொடூரன் ரேஞ்சில் பில்ட்ப் செய்து அவனை கொல்ல ஆர்டர் வாங்குவதும், கடைசியில் வீர பராக்கிரம விருதை அவர் வாங்குவதும். படம் முழுக்க, இயக்குனர் தான் சொல்ல நினைக்கும் கருத்துகளை எல்லாம் இவரின் கேரக்டர் மூலமே சொல்லியிருப்பது அருமை.

ஐந்து பெண்களும் ஆரம்ப காட்சிகளில் அடிக்கும் லூட்டிகளுக்கும் இணையாய் காட்டில் அவர்கள் துருவனுடன் செய்யும் சாகசங்களில் அவர்களின் முழு ஒத்துழைப்பு தெரிகிறது. ஐந்து பெண்கள் இருந்தாலும் அடர் காட்டை போலவே ஒரு இறுக்கம் படம்  ம்ழுவதும் இருக்கிறது. ஒருதலையாய் துவனின் மீது காதல் வயப்படும் சரண்யாவை தவிர. ஏதோ வந்தோம், ஆடினோம், பாடினோம் என்றில்லாத கேரக்டர்கள்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (5)

அந்த அமெரிக்க வில்லன் 70mm சைஸ் உடம்பை வைத்து கொண்டு பயமுறுத்துவதை தவிர, வேறேதும் பெரிதாய் செய்யவில்லை. டெர்மினேட்டர் பட ஹீரோவாம் மெஷின் போலவே படம் முழுவதும் வருகிறார்.

படத்தின் கேமராமேன் சதீஷ்குமாருக்கு சுற்றி போடுங்கள்.. அடர்காடுகளுக்குள் ஓடுகிறார், தாவுகிறார், நடக்கிறார், பாய்கிறார், தண்ணீரில் நடக்கிறார். நம் கண் முன்னே காட்சிபடுத்தியிருக்கிற உணர்வே இல்லாத வகையில் காட்டையும், அருவியையும், ஏரியையும், விரித்திருக்கிறார். இடைவேளையின் போது ஒரு காட்சியில், ஒரே ஷாட்டில் ஒரு மலையில் இருக்கும் கதாநாயக, ஹீரோயின்களிலிருந்து கிளம்பும் கேமரா, அப்படியே பயணித்து கீழே இருக்கும் வில்லன் இடத்தையும், அங்கேயிருந்து அவர்கள் போக இருக்கும் இடத்தையும், ராக்கெட் தளத்தையும் காட்டி இடைவேளை போடும் போது எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருந்தது.. படம் முழுக்க இவரின் ஆளுமை அதிகம் என்றால் அது மிகையில்லை.

peranmai-movie-stills-5.jpg_800

வித்யாசாகரின் பிண்ணனி இசை சுமார் ரகம் தான். பாடல்கள் படத்தில் பெரிதாய் பிரஸ்தாபிக்க படவில்லை என்றாலும், முதல் பாடல் பரவாயில்லை ரகம், காட்டில் மாண்டேஜில் பாடப்படும் பாடலில் வைரமுத்துவின் ஆளுமை.

பாராட்ட பட வேண்டிய இன்னொருவர் ஆர்ட் டைரக்டர். காட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு என்ன ஆர்ட் டைரக்டர் என்று கேட்பவர்களுக்கு படத்தின் உபயோக படுத்தபட்டிருக்கும் அனைத்து தளவாடங்களும் அவர்கள் அமைத்ததுதான் தத்ரூபம்.

இயக்குனர் ஜனநாதன் தன்னுடய் கம்யூனிச கருத்துகளை எல்லாம் படம் பூராவும் ஏதாவது கொரு கேரக்டர் மூலம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுகிறார். பெண்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்களில்  இளமை துள்ளல்.  படத்தில் இவரது உழைப்பு மிக அதிகம். ஜெயம் ரவியுடன் பெண்கள் காட்டில் மாட்டியவுடன் அவரின் மூலம் காட்டின் நிகழ்வுகளை வசனங்களாய் அவர் சொல்ல, சொல்ல, கொஞ்சம், கொஞ்சமாய் நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம். அதே போல் அவர் எதிரிகளை எதிரி கொள்லும் முயற்சிகளை, அந்த பெண்களுக்கு சொல்லும் போது, சின்ன சின்னதாய் எவ்வளவு விஷயங்களை அவர் சொல்லி கொண்டே போகிறார், யானை சாணம், மரத்தின் கிளைகளை ஒடிக்கும் காரணம், சட்டை துணி மெல்லியதய் கேட்டு அதை அடையாளமாய் கட்டும் யுக்திக்கான் காரணம், போகும் வழியை படத்தில் கேரக்டர்கள் ம்றந்தாலும் நாம் மறக்க மாட்டோம் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் நம்மை பிரிபேர் செய்து கூட்டி போகிறார்..

இவ்வளவு தூரம் உழைத்தவர் திரைக்கதையில் அந்த ஐந்து பெண்களுக்கான கேரக்டர்களை கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் நம்பகத்தன்மை வ்ந்திருக்க கூடும். என்னதான் என்.சி.சியில் அவர்கள் இருந்தாலும, பட்டின காலேஜ் ஸ்டூடண்டுகள் தான். அவர்கள் திடீரென காட்டுக்குள் தனியே அலைய ஆசைப்படுவதும், திடீரென நாட்டுக்கு பிரச்ச்னை என்றதும் உயிரை பணயம் வைத்து ராணுவ தளவாடங்களை துருவன் சொல்லி கொடுத்த உடனேயே  லாவகமாய் பயன் படுத்துவதும், சாட்டிலைட் ஏவுகணைகளை அனாயாசமாக கையாள்வதும், வந்திருக்கும் வில்லன்கள் எந்த நாட்டுகாரர்கள், என்ன காரணத்திற்காக நம் ராக்டெட் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்கள் என்று சொல்வதற்கு பதிலாய் கூலிப்படை, அந்நிய சக்தி என்று சொல்வதும் கதையின் மீதான நம்பகத்தந்மையை குறைந்து ஒரு சாதாரண பேண்டஸி சப்ஜெக்டாய் போய்விடுகிறது. என்பதுதான் வருத்தம்

இந்த படத்தில் உழைத்த அனைவரின்  உழைப்பிற்காக ஒரு ராயல் சல்யூட்

பேராண்மை – வீர்யம்

டிஸ்கி:

வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.?  அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த  திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 15, 2009

நிதர்சன கதைகள்-12- நேற்று வரை

LIL013MB

எல்லோரும் இப்படித்தான் பார்ப்பார்களா..? என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படி எழுந்தாலும் ரோட்டில் இறங்கியவுடன், கண்களும் மனதும் அதை தேடி அலையத்தான் செய்தது நேற்றுவரை.

நான் செய்யும் காரியஙக்ள் எனக்கு கேவலமானதாகவோ, அவமானகரமானதாகவோ தெரிந்ததில்லை நேற்றுவரை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாய், இறுக்கமாய், உள்ளங்கை அளவாய், அளவுக்கதிகமாய், அபரிமிதமாய், டென்னிஸ்பந்தாய், தளர்வாய், சரிந்து சாய்ந்தாய், இருக்கா இல்லையா என்று கண்ணாமூச்சி காட்டு சிலதுமாய், டென்னிஸ் கோர்ட்டாய், அவைகளை பார்த்ததும் கிடைக்கும் போதையின் கிறக்கத்தை வேறு ஏதாவது தந்திருக்குமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன் நேற்று வரை.

பல சமயங்களில் என்னுள் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கு வடிகாலாய் அவைகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்று.. என்று பார்தவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளர்ச்சியின் உ தரும் வித்யாச உச்சம். இவைகள் எல்லாமே எனக்கு அஃறிணைகளாகவே தேன்றியது  நேற்று வரை.

இரவுகளின் ஓட்டத்தில், அங்கும் இங்கும் அலையும் வெளிச்சத்தின் ஊடே தெரியும், அந்த வெளிச்சத்திலிருந்து தப்பிக்க வேகமாய் ஓடும் போது துரத்தி, துரத்தி பார்க்கும் போது, சில சமயம் கிடைக்கும் அழைப்பும், பல சமயம் கிடைக்கும் எரிப்பும், கொடுக்கும் த்ரில்லுக்கு இணையாய் ஒரு எக்ஸ்டெஸியை கிடைக்கவே கிடைக்காது என்று தோன்றியது  நேற்றுவரை.

”சுகுணா. புடவையை நல்லா ஏத்திவிட்டு போத்திக்க” என்றேன் இன்று என் புது மனைவி வண்டியின் பில்லியனில் உட்காரும் போது..

டிஸ்கி:

தண்டோரா எழுதிய கவிதையின் கதை வடிவமாய்தான் இதை எழுதியிருக்கிறேன். நன்றி தண்டோரா..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Oct 14, 2009

Acid Factory - Film Review


ஒருவன் திடீரென கண்முழித்து பார்க்கிறான். தான் ஒரு பாழடைந்த பேக்டரியில் இருப்பதை உணர்கிறான். தன்னை பற்றி ஏதும் அவனுக்கு தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் ஒருவன் கைவிலங்கிட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஒரு சேரில் கட்டப்பட்டு, மயக்கமாக இருக்க, இன்னொருவன் தரையில் மயங்கி இருக்கிறான். ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் யாருக்கும் அவர்களை பற்றிய ஞாபகங்கள் இல்லை. தாங்கள் யார் எதற்காக வந்தோம், தங்களது பெயர் என்ன என்பது கூட தெரியாமல் இருக்க, அப்போது ஒரு போன் வருகிறது அங்கிருக்கும் ஒருவனை கொல்ல வேண்டும் என்று நான்கு ஐந்து பேர்களின் பெயரை ஒருவன் குறிப்பிட, குத்துமதிப்பாக அவனுடன் பேசி, இவர்களுள் யார், யாரை கொல்ல போகிறார்கள் என்று பயத்தினூடே, அலைய, திடீரென இன்னொருவன் வர, அவனை தொடர்ந்து ஒரு பெண்ணும் அங்கே தோன்ற, அவளுக்கும் அதே பிரச்சனை தான் யார் என்பதுதான். அவர்களூடய ஞாபக மறதிக்கு காரணம் அவர்கள் இருக்கும் ஆசிட் பாக்டரியில் உள்ள பெண்டேன் என்கிற ஆசிட்டினால் என்பதை அறிகிறார்கள்.

இதற்கு நடுவில் கதையின் போக்கில் முன்னும் பின்னும் ஓடுகிறது அதில் படத்தில் காட்டப்படும் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒன்றாக இருக்கிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். ஐந்துவாரஙக்ளுக்கு முன்பு என்று ஆரம்பித்து, சொல்லப்படும் கதையில், இங்கே ஆசிட் பாக்டரியில் மாட்டியிருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு வார கழித்து நிகழும் நிகழ்வுகளில் வர, கதையின் முடிச்சு மேலும் இறுகுகிறது. இவர்களுக்கெல்லாம் தலைவனாய் ஒருவன் வெளியே வேறு ஒரு பெண்ணிடமிருந்து அவளது கணவனை கடத்தி வைத்துள்ளதாய் தெரிவித்து, பணத்தை கொண்டுவர சொல்ல, அவளின் உதவியுடன் போலீஸ் தலைவனை பிடிக்க முயல, பணத்தை மிக திறமையாய் கடத்துகிறான் தலைவன்.

நேரம் போகப் போக ஒவ்வொருவருக்காய் ஞாபகம் வர ஆரம்பிக்க, பிரச்சனை வலுக்கிறது. ஒரு வழியாய் தலைவன் அங்கே வர, கடத்தி வரப்பட்ட பணத்தை பங்கு பிரிக்க பிரசச்னை வருகிறது. ஏனென்றால் அந்த கும்பலில் ஒருவன் போலீஸ் ஆள் என்பதால் அது யார் என்ற ப்ரச்சனை வர.. மேலும் சண்டைகளும் சச்சரவுகளும் வெடிகக், க்ளைமாக்ஸ்

கொஞ்சம் அசந்தால் கூட அடுத்த சீன் புரியாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் மிகவும் கவனமாய் பார்க்க வேண்டும் அவ்வளவு நுணுக்கமான திரைக்கதை.
அதுமட்டுமிலலாமல் சரியான நடிகர்களை தேர்வு செய்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பழைய் வில்லன் நடிகர் டேனி, தியாமிர்ஸா, இர்பான்கான், மனோஜ்பாஜ்பாய், என்று ஒரே நடிகர்கள் அணிவகுப்புத்தான்.

படத்தின் மிக சிறப்பான விஷயங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி, மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள், ஒலிப்பதிவுக்கு ரசூல் பூக்குட்டி,

எவ்வளவுதான் இண்ட்ரஸ்டான திரைக்கதையாக இருந்தாலும் சில காட்சிகளில் இருக்கும் வேகம், வேறு சில காட்சிகளில் இல்லாமல் தொய்யத்தான் செய்கிறது. அது மட்டுமில்லாமல் போலீஸ் ஆபிஸராய் வரும் குல்ஷன்குரோவர் அவ்வப்போது வில்லனை திட்டிவதும், திட்டியே பாராட்டுவதும் என்று இருந்தாலும் பெரிதாய் ஒன்றும் செய்யாமல் வெறும் வெத்து வேட்டாய் இருப்பது ஒரே காமெடி.


இர்பான் கானுக்கு இதெல்லாம் ஜுஜுபி கேரகடர் ஊதி விட்டு கொண்டே போகிறார். வழக்கமான சஞ்செய்குப்தா ஸ்டைல் த்ரில்லர் படம்தான். இயக்குனர் சுபான் வர்மா அதை ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார்.

Acid Factory – வித்யாசமான த்ரில்லர் விரும்பிகளுக்கு

டிஸ்கி:
இந்த விமர்சனத்தை படித்ததும், ஹாலிவுட் சைக்கலாஜிகல் த்ரில்லரான “Unknown” மற்றும் “Saw” ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது..

Oct 13, 2009

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09

1. நினைத்தாலே இனிக்கும்

Ninaithale_Inikkum[5]

வழக்கம போல் சன்பிக்ஸர்ஸின் அதிரடி மார்கெட்டிங்கில் கவனிக்கப்பட்ட படம். மிக சுமாரான ஓப்பனிங். படம்மும் பெரிதாய் ஏதும் அதிரடி செய்யவில்லைன் என்றாலும் சென்னை போனற தமிழகத்தின் முக்கிய நகரஙக்ளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூல் என்றே சொல்கிறார்கள்.


2. மதுரை  சம்பவம்
madurai-01-big

ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம். ராம.நாராயணன் வாங்கி வெளீயிட்டதால் கலைஞர் டிவியின் திரும்ப திரும்ப,  ட்ரைலர் காட்டப்பட்ட படம். மிக மிக சுமாரான ஓப்பனிங். ஹரிகுமாரின் நடிப்பை தவிர படம் மோசமில்லை என்றாலும் அவரே மைன்ஸ் ஆகிபோனதால் வசூல் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.

3. ஈரம்
eeram

ரியாலிட்டி, லைவ் மேக்கிங் என்று தில்லாலங்கடி அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஹாரர்/ த்ரில்லர் வகையில் வந்து கலக்கி கொண்டிருக்கும் படம்.


4. உன்னை போல் ஒருவன்
unnaipol_oruvan_poster_wallpaper_stills

இணையத்தில் அந்த இசம், இந்த இசம், இந்துத்துவா, அவா, இவா, என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தாலும், இந்த மாதத்திற்கான சூப்பர் ஹிட் என்றால் மிகையாகாது. மிக பெரிய வசூலை படம் எடுத்து கொண்டிருக்கிறது.  தமிழ் சினிமாவிற்கு தேவையான வெற்றி


5. மதுரை தேனி- வழி  ஆண்டிப்பட்டி

Madurai_2_Theni_ _12_

மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியான திரைப்படம். சின்ன படமாய் இருந்தாலும் அதை மக்களிடம் சரியாக சேர்த்த படத்தின் பி.ஆர்.ஓ. சக்திவேலை பாராட்ட வேண்டும். திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் பிழைத்திருக்கும். அவ்ர்களது குறைந்த பட்ஜெட் கொஞ்சம், கொஞ்சமாய் அவர்களை காப்பாற்றவும் கூடும்.


6. கண்ணுக்குள்ளே..


வர வர இளையராஜா இசையமைத்தாலே மொக்கை படமாய் ஆகிவிடும் என்ற எண்ணம் மக்களிடையே வ்ந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் அதற்கு காரணம் ராஜா இல்லை படத்தின் இயக்குனர் என்பதை தெள்ள தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த படம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். படு ஸ்லோவான திரைக்கதை, சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், என்று படுத்திவிட்டார்கள். ஒரே வாரத்தில் போட்ட எல்லா தியேட்டர்களிலும் எடுக்கப்பட்ட படம்.


7. ஆறுமுகம்

arumugam-01

பரத், ரம்யாகிருஷ்ணன், சுரேஷ்கிருஷ்ணா, என்று பெரிய படமாய் வந்திருக்க வேண்டிய படம் தான். அண்ணாமலையையும், பாட்ஷாவையும், படையப்பாவையும் திரும்ப, பரத்தை வைத்து பார்க்க விருப்பமில்லாமல் ரசிகர்கள் நிராகரித்த படம்.


8. சொல்ல சொல்ல இனிக்கும்

SollaSollaInikkum3_1024

சில படங்கள் சுமாராய் இருந்தாலும் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் கவனிப்பில்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த கேட்டகிரியில் விழுந்து விட்ட படம். சரியான தியேட்டர்கள் இல்லாமை, அதைவிட் முக்கியம் உன்னை போல் ஒருவனுடன் வெளியானது எல்லாம் சேர்ந்துவிட்டது.


9.திரு திரு துறு துறு

Thiru-Thiru-Thuru-Thuru

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சத்யம் சினிமாஸும், ரியல் இமேஜும் சேர்ந்து தயாரித்திருக்கும் ப்டம். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் தமிழ் படம். மீண்டும் ஒரு அர்பன் ஹிட்.

இதை தவிர மேலும் ஒன்று இரண்டு ப்டஙக்ள் வெளிவ்ந்திருக்கிறது. அதை பற்றி பேசுவதற்கு ஏதுமில்லாததால். இம்மாத ரிசல்ட்.. சூப்பர் ஹிட் உன்னை போல் ஒருவன், ஹிட் கேட்டகிரியில் ஈரம், நினைத்தாலே இனிக்கும், அபவ் ஆவரேஜில் திருதிரு துறுதுறு.

இந்த மாதத்திலும் இரண்டு டிஜிட்டல் படங்கள். உன்னை போல் ஒருவன், மதுரை டூ தேனி ஆகியவை.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..