Thottal Thodarum

Mar 29, 2011

நான்.. ஷர்மி.. வைரம்.-3

25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி

peace____by_courtney_ann-d3cogac கேஷ் + என்ஜாய்மெண்ட் என்றதும் முதலில் பத்தாயிரம் ரூபாயை அவர்கள் சொல்லும் அக்கவுண்டில் கட்டிவிட்டு மீண்டும் போன் செய்தால் சென்னையில் இருக்கும் லோக்கல் நம்பர் தருவதாய் சொன்னாள். பத்தாயிரமா? என்று வாய்பிளந்து நின்றிருக்க, எதிர் முனையில் “ஹலோ..?.. ஹலோ?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.


அவ்வளவு காசு நம்மால் முடியாது என்று தெரிந்தாலும், தொடர்ந்து இம்மாதிரியான விளம்பரங்களை பார்த்து அதிலிருக்கும் நம்பர்களை கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன். அச்சமயத்தில்தான் இண்டர்நெட்டில் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சென்னையில் இருக்கும் நம்பருடன். உடனடியாய் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்களும் டெல்லி பார்ட்டி சொன்ன அதே தொகையைத்தான் சொன்னார்கள். என்னால் அவ்வளவு முடியாது என்றவுடன் சரி.. நேரே வா என்றழைக்க, நுங்கம்பாக்கத்திலிருந்தது அவர்களுடய ப்ளாட்.போன போது வாசலில் யாருமேயில்லை. “சார்..சார்’ என அழைத்து சிறிது நேரத்திற்கு பிறகு தொப்புளுக்கு கீழ் ஜீன்ஸ் போட்ட  ரெண்டும்கெட்டானாக ஒருத்தன் வந்தான். அவன் பார்வையிலேயே என்ன வேண்டும் என்ற கேள்வியிருந்தது. நான் போனில் பேசியதை சொல்ல, “பணம் கொண்டு வந்திருக்கியா?” என்றான். பேசும் போது கழுத்தை ஆட்டி, ஆட்டிப் பேசினான்.

“இல்லீங்க.. நேர்ல வரச் சொன்னாங்க..?”

அவன் என்னை ஒரு முறை மேலிருந்து கீழாய் பார்த்து, இடுப்பில் கைவைத்தபடி உள் பக்கமாய் தலையை திருப்பி, “மாஜி... இதர் ஆவோ” என்று கூப்பிட, உள்ளிருந்து ஒரு குண்டான பேரிளம் பெண் வந்தாள். அவள் போட்டிருந்த நைட்டியின் பட்டன்கள் ஏறுக்கு மாறாய் போடப்பட்டிருந்தது உறுத்தியது. இருவரும் கடகடவென ஹிந்தியில் எதோ பேசினார்கள். அவளின் பார்வை முழுவதும் என் மீதே இருந்தது. எனக்கு ஒரு மாதிரி குறு குறுவென இருக்க, அவள் பார்வையை தவிர்த்தேன்.

“ரெண்டாயிரம் ரூபாய் பணம் கட்டிட்டுட்டு போ.. ஒரு வாரத்தில உனக்கு போன் பண்றோம்..” என்றான் ரெண்டுங்கெட்டான்.

“இல்லீங்க..என் கிட்ட பணமில்ல.. ஒரு நாலு நாள் டைம் கொடுத்தீங்கண்ணா.. கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க,
அவன் டேபிளின் மேலிருந்த ஒரு சீட்டில் சரசரவென எழுதி “தபாரு.. இந்த அக்கவுண்டுல பணம் கட்டிட்டு போன் பண்ணு இடம் சொல்லுறோம் அப்புறம்” என்றான்.

நான் சுறுசுறுப்பாக தலையாட்டிவிட்டு, வெளியே வந்தேன். நுங்கம்பாக்கம் சுறுசுறுப்பாக இருந்தது. ஜீன்ஸ், சுடிதார், போட்ட பெண்க்ள் என்னை கடந்து போகும் போதெல்லாம் கிளர்ச்சியாய் இருந்தது. இனி பெருமூச்சு விடத் தேவையில்லை. எல்லாமே கையில் கிடக்கும் தூரத்தில் என்று நினைக்கும் போது கட்ட வேண்டிய பணம் ஞாபகம் வந்து கொண்டேயிருந்தது. எங்கே போவது இரண்டாயிரத்திற்கு? அக்காவை தவிர வேறு யார் நினைவும் வரவில்லை. உடனே அவளை செல்லில் கூப்பிட்டேன். எடுக்கவேயில்லை. திரும்பவும் அடித்தேன்.. எடுக்கவில்லை. அவளின் ஆஸ்பிட்டல் நம்பர் இருந்தது அதற்கு அடித்தேன். ரிஷப்ஷனிஸ்ட் எடுத்தாள். நகரின் பெரிய ஆஸ்பிட்டலின் பெயரைச் சொல்லி யார் வேண்டும் என்றாள். என் அக்கா அங்கேயா வேலை பார்க்கிறாள்?

”ஸ்டாப் நர்ஸ் சுசீலா இருக்காங்களா?”

“இல்லீங்க அவங்க வீட்டிற்கு போயிட்டாங்க..” என்றதும் பதில் சொல்லாமல் கட் செய்துவிட்டு, நேரே பஸ் பிடித்து கோடம்பாக்கத்தில் இறங்கினேன். சேகர் எம்பொரியம் தெரியுமல்லவா? அதற்கு பக்கத்தில் தான் என் வீடு. ஒரு சிங்கிள் பெட்ரூம் ப்ளாட். அதை ப்ளாட் என்று கூட சொல்ல முடியாது. ஒரு மாதிரி நாலைந்து கடைகளுக்கு நடுவில் ஒரு சின்ன மாடிப்படியில் ஏறினால் முதல் மாடியிலிருந்து வீடுகளாய் இருக்கும், அதில் ரோடு பக்கமாக இல்லாமல் உள் பக்கமாய் பார்த்த பளாட் எங்களுடயது. கதவை திறக்க சாவி எடுத்து நுழைக்கையில் உள்ளிருந்து ஆளிலிருக்கும் சத்தம் கேட்டது. கதவும் பூட்டபடாமலேயே இருக்க, மெல்ல சத்தமில்லாமல் என் உடல் நுழையுமளவிற்கு திறந்து கொண்டு நுழைந்தேன். இருட்டாய் இருந்தது, பெட்ரூமில் தான் சத்தம் கேட்டது. என் அக்காவின் குரல்தான்.

“போங்க.. டாக்டர்.. உங்களுக்கு எப்பவும் உடனேதான். நல்லவேளை என் வீட்டுக்காரர் இல்ல. அர்ஜெண்ட் மட்டும்தான்.. மத்ததெல்லாம் அப்புறம் சாவகாசமா.. பார்த்துக்கலாம். எனச் சொல்ல, ஒருக்களித்த கதவுக்கு பின்னால் நல்ல உயரமாய், ஒல்லியாய் கண்ணாடிப் போட்டுக் கொண்டு ஒர் இளைஞன் நின்றிருக்க, அக்கா அவன் கால் பக்கமாய் உட்காருவது தெரிந்தது.

அதற்கு மேல் அங்கே என்னால் இருக்க முடியவில்லை. சத்தமிடாமல் கீழே வந்தேன். எனக்கு அவளின் செய்கை அதிர்ச்சியாக இல்லை. ஒரு விதமான வெறுமைதான் இருந்தது. கீழே வந்து எதிர் பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பிடிக்க ஆரம்பித்தேன். பாதி சிகரெட் முடிவதற்குள் வந்துவிட்டான் வாசலில் நின்ற யமாஹா அவனுடயது தான். கிட்டத்தட்ட என்பதாயிரம் ரூபாய் வரும். வாங்கணும்.

அவன் போய் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்த போது அக்கா பாத்ரூமில் சத்தமாய் காறிக்காறி தண்ணீர் விட்டு பொப்பளித்து உமிழ்ந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து ஆச்சர்யமான ரியாக்‌ஷனோடு என்ன என்பது போல கேட்க.. “ கொஞ்சம் பணம் வேணும் மூவாயிரம் ரூபா” என்றேன்.

“இங்கே என்ன கொடுத்தா வசசிருக்கே.. என்கிட்டே ஏது? நானே நைட் ஷிப்ட் முடிஞ்சி டயர்டா வந்திருக்கேன்.தொல்லைப் பண்ணாதே”

“ரொம்ப அர்ஜெண்ட்.. வேணுமின்னா.. ஒரு ரெண்டு மாசத்தில திருமப் கொடுத்திடறேன்”

“அட தொர திருப்பி கொடுத்திருவியா.? எங்கேருந்து?”

நான் பதிலேதும் சொல்லாமல் இருந்தேன். கோபம் கோபமாய் வந்தது. எதற்கு இவ்வளவு கேள்வி? கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே..

“அதான் இல்லேன்னு சொல்லிட்டேன்ல.. எதுவாயிருந்தாலும் மாமா கிட்ட கேட்டுத்தான் கொடுக்கணும். என் கிட்ட பணமில்லை.” என்றவளை நிமிர்ந்து பார்த்து,..

“அந்த டாக்டர் கொடுக்கலை?.” என்றதும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

“என்ன சொல்றே?”

“எனக்கு தெரியும்.. நான் பார்த்தேன்.. சரி அது உன் பிரச்சனை.. எனக்கு என் பிரச்சனை..” என்றதும் ஏதும் பேசாமல் இருந்தாள்.

“மாமாவுக்கு தெரியுமா?” என்றேன் மாமாவுக்கு சற்று அழுத்தம் கொடுத்து. அக்கா கைப்பையை திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். சரியாக மூவாயிரம் இருந்தது. உடனே போய் பேங்கில் பணத்தைக் கட்டிவிட்டு போன் செய்தேன். செக் செய்துவிட்டு சொல்வதாய் சொன்னார்கள். அதற்கு பிறகு போனை எடுக்கவேயில்லை.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

K.MURALI said...

ம்ம்ம்...

sugi said...

then?

kalil said...

இப்போ தான் சூடு பிடிக்குது ...ஹ்ம்ம் நடக்கட்டும்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தொடருமா?முற்றுமா?நல்ல சஸ்பென்ஸ் ..
கேபிள்ஜி தங்களின் புத்தக வெளியீடு பதிவு போட்டுள்ளேன்.பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறவும்...
http://www.mani-saraswathi.blogspot.com/

IlayaDhasan said...

Going good. Nice work!

Shankar said...

Interesting Shankarji

அருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு,அடுத்தது எப்போ?ஆவலை தூண்டும் நடை.
-அருண்-

அனுஷ்-(anuz) said...

நான்.. ஷர்மி.. வைரம் அடுத்த பாகம் எப்போ வரும்..?