சென்ற வருடம் போலவே இந்த வருடமும் என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்” அதே நாலாம் தேதியன்று, புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் வெளியாகியது. பெங்களூர்காரர் ஹரி ஊரிலிருந்து மெனக்கெட்டு பத்து பதினைந்து டீ ஷர்டுகளில் “தெர்மக்கோல் தேவதைகள்’ புத்தக அட்டை டிசைனை ப்ரிண்ட் செய்து எடுத்து வந்திருந்தார். படு சுவாரஸ்மான மனிதர். மூச்சுப் பயிற்சியிலிருந்து, இ- காமர்ஸ் வரைக்கும் பேசினார். என்னுடய தீவிர வாசகர் என்றார். அவர் நடத்தும் simplelife.in என்கிற இணையதளத்தை பற்றி நிறைய பேசினார். போகிற் போக்கில் ஒரு குட்டி நாவலுக்கான தீமை சொல்லிவிட்டு போனார். விழாவிற்கு வருவதாய் இருந்த இயக்குனர்கள் “கிருஷ்ணவேணி பஞ்சாலை” தனபால், “அம்புலி’ இயக்குனர் ஹரீஷ் ஆகியோர் வேலை நிமித்தமாய் வர முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் மின்சாரம் போனது எனக்கு சந்தோஷமாய் இருந்தது. வழக்கமாய் என் விழாவில் இம்மாதிரியான தடங்கல்கள் ஆரம்பிக்கும் போது ஏற்படுவது செண்டிமெண்டாய் நல்ல விஷயம். என்னா ஒரு மூட நம்பிக்கைடா.. சங்கரா.. என்று திட்டுவது கேட்கிறது. பட் இட் ஹாபென்ஸ் வெரி ஆஃபன்.
###################
புத்தகக் கண்காட்சி முதல் நாள். பெரிதாய் கூட்டமில்லை. உள்ளே நுழைந்ததுமே மூடை ஸ்பாயில் செய்துவிட்டார்கள். பைக் பார்க்கிங் பத்து ரூபாயாம். என்னாங்கடா இது பகல் கொள்ளை என்று கேட்டால் தியேட்டர்ல மட்டும் கொடுக்குறீங்கன்னு? கேக்குறான். அங்கேயும் இப்படி கேட்டுட்டுத்தான் கொடுக்கிறேன்னு கத்திட்டு உள்ளே போனேன். வழக்கம் போல பாப்கார்ன், அமெரிக்கன் கார்ன், காபி கலவை கடைகள், இடது பக்க புதியதலைமுறை மன்றம் எல்லாம் டெம்ப்ளேட்டாய் இருந்தது. முதல் நாள் என்பதால் இலவச அனுமதியாம். போன முறைக்கு இம்முறை கடைகள் அதிகமோ என்று தோன்றியது. புத்தக சந்தையில் இங்கிலீஷ் பட டிவிடியெல்லாம் விற்க ஆரம்பித்துவிட்டார்கள். 500 ரூபாய் மதிப்புள்ள என்ஸைக்ளோபீடியாவை 50 ரூபாய்க்கு கூவாத குறையாய் விற்றுக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் வினிதா பதிப்பக நண்பர் ஆதி அவருடய நான்கு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். என்ன புத்தகம் என்று பார்த்தேன் கவிதை புத்தகங்கள். இம்மாதிரியான நிகழ்வுகள் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஏற்கனவே நாகரத்னா பதிப்பக குகன், ஒரு காதல் கவிதை புத்தகத்தை வெளியிடச் சொல்லி ஜன்னி கண்டிருந்த நேரத்தில் மேலும் கவிதைகள் என்னை நிமோனியாவில் ஆழ்த்திவிடுமோ என்ற அச்சம் முதுகுத்தண்டில் ஓடத்தான் செய்தது. பாவம் கவிதைகளும், கவிஞர்களும்.
கிழக்குக்கு இம்முறை பெரிய ஸ்டாலாய் இல்லாமல் இரண்டு ஸ்டால்களாய் பிரித்துவிட்டார்கள். 334 டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சத்யம் டிவி, புதியதலைமுறை ஆகிய சேனல்களும் ஒவ்வொரு ஸ்டால் போட்டிருந்தார்கள். 422 மீனாட்சி பதிப்பகத்தில் சுஜாதா புத்தகமெல்லாம் சல்லீசாய் கிடைக்கிறது. பத்துக்கும் இருபதுக்குமாய். அநேகமாய் நேற்றே நம் நண்பர்கள் காலி செய்துவிட்டார்கள். இன்றைக்கு போகிறவர்கள் உடன் போய் ஆட்டையை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதே புத்தகங்களை எல்லாம் என் பாக்கெட் மணியில் எட்டு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்குமாய் நான் வாங்கி சேர்த்து வைத்த லைப்ரரியை பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. இந்த கண்காட்சியிலும், தலைவன் தான் பெஸ்ட் செல்லர். மார்கண்டேயன் போல.. லயன் காமிக்ஸ் மொத்த பதிப்பையும் ஒரே பண்டிலாய் கொடுக்கிறார்கள். 900 ரூபாய்க்கு. காமிக்ஸ் விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான். நேற்று எந்த புத்தகங்களையும் நான் வாங்கவில்லை. கே.ஆர்.பி, எறும்பு ராஜகோபால், பலாப்பட்டறை சங்கர், சாரு சங்கர், தினேஷ் ஆகியோர் வந்திருந்தார்கள். நூலுலகம்.காம் அம்புலி அவரது ஸ்டாலுக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் என் அனைத்து புத்தகங்களும், கிடைக்குமிடம்
334 டிஸ்கவரி புக் பேலஸ்
160/161 ராஐகுமாரி பப்ளிகேஷன்ஸ்
281/82 வனிதா பதிப்பகம்.
ஆகிய இடங்களில் கிடைக்கும்.
நாளை சந்திப்போம்
Comments
ஒண்ணுக்கும் உதவாத உதயம் தியேட்டரிலும், ஆல்பட் தியேட்டரிலும் பைக் பார்க்கிங் இருவது ரூவாய். வெளியே ஏதாவது பொட்டிக்கடை வாசலில் நிறுத்திவிட்டுதான் படம் பார்க்க போகவேண்டியிருக்கு...
ஏதாவது செய்யுங்க தலைவரே :-)
ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
அது வனிதா பதிப்பகம், வினிதா அல்ல என்று நினைக்கிறேன்.
புத்தக வெளியீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்கள் புக் ரிலீஸில் உங்களைப் பத்தி என்ன பேச வேண்டும் என்று ப்ரிப்பேரேஷனெல்லாம் செய்து வைத்திருந்தேன். ஆனால், படத்தின் ரிலீஸ் நிமித்த வேலைகள் எல்லா பக்கமும் ட்ராப் செய்துவிட்டது... ப்ரொட்யூசருடன் முக்கியமான இடங்களுக்கு சென்று வர வேண்டிய கட்டாயத்தில் நானும் நண்பர் ஹரியும் மாட்டி கொண்டோம்... நீங்க எப்படியும் நிறைய புக் எழுதத்தான் போறீங்க... கண்டிப்பா அந்த புத்தக வெளியீடு அத்தனையிலும், மேலும் நீங்கள் எடுக்க போகும் திரைப்படங்களின் விழாக்கள் அத்தனையிலும் நிச்சயம் கலந்து கொள்ளும் ஆசையுடன் காத்திருக்கிறேன்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
thalai......
Hari
www.simplelife.in
ENSOY thala...
ண்ணா.... 'பார்க்கிங் படபடப்புகள்' புக்கு எப்ப ரிலீசுங்கண்ணா?
விதி யாரை விட்டது...