Thottal Thodarum

Jan 27, 2012

தேனி மாவட்டம்

நல்ல கருத்துள்ள, மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லக் கூடிய படங்கள் தமிழில் வருவதில்லை என்று வருத்தப்படுகிறவர்களுக்காகவே வந்திருக்கும் படம். விளை நிலங்களை கட்டிடங்கள் ஆக்காதீர்கள் என்பதை வலியுறுத்தியிருக்கும் படம். சமயங்களில் வருத்தம் நல்லது போலிருக்கிறது.


மகாதேவன் தேவர்மகன் சிவாஜி போல ஊர் மெச்சும் நல்லவர், வல்லவர். அவருடைய ஒரே மகன் ஜி.கே. பிரபல உச்ச நடிகர்கள் படத்தில் வருவது போல தன்னைவிட இளமையான நண்பர்கள் குழாமோடு பாட்டுப்பாடி, சரக்கடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். விளை நிலத்தை பேக்டரி கட்ட கொடுக்கிறார் வில்லி ஐஸ்வர்யா. அதை தடுக்கிறார் மகாதேவன். அதனால் ஆள் வைத்து கொல்கிறார்கள். மகாதேவன் இறந்ததும், தேவர் மகன் போல ஜி.கே நல்லவனாய் திருந்தி பொறுப்பெடுக்கிறார். தன் தந்தையை கொன்றவரை பழிவாங்க போகும் போது, அப்பாவைப் போல பொறுமை காத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கான அம்மா சபிதா ஆனந்த் சொல்ல ஹீரோ விவசாயப் புரட்சி செய்து ஊரையும், தமிழ்நாட்டையும், வில்லியையும் எப்படி எதிர் கொள்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கதையாய் பார்த்தால் ஓரளவுக்கு ஓகேதான். ஆனால் நடிகர்களின் நடிப்பு, நகைச்சுவை என்று இவர்கள் செய்திருக்கும் அழும்பு, எல்லாவற்றையும் பார்க்கும் போது கோபம் கோபமாய் வருகிறது. நடிகர், தயாரிப்பாளர் ஜி.கே இன்னொரு ஆர்.கே வாக வலம் வர வாய்ப்பிருக்கிறது. கதையில் இன்னொரு ஹிரோவும், ஹீரோயினும் வந்தார்கள். நிஜமாகவே கொஞ்சம் ப்ரெஷ்ஷாக இருந்தது அந்த ஜோடி. ஒரு வேளை படம் நன்றாக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் எபிசோடை எடிட்டி விட்டார்கள் போல. ஐஸ்வர்யாவின் வில்லி நடிப்பு ஓகே. அதுவும் அவரது ஒரிஜினல் அக்மார்க் கரகர குரலால்தான். குண்டாய் ஒரு ஹீரோயின். நல்லா அழுத்திப்பிடிக்கலாம் போலிருக்கிறார்.இன்னொரு ஹீரோயின் கொஞ்சம் அழகாகவே இருக்கிறார். ஒரு வேளை முதல் ஹீரோயினை பார்த்ததினால் வந்த எபக்ட்டாகக் கூட இருக்கலாம்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் ஓரளவுக்கு ஒளிப்பதிவும்,  புதிய இசையமைப்பாளரின் இசையில் அந்த விவசாயி பாடல் மட்டும் ஓகே. 

தேனி மாவட்டம் -  படம் ஓட நல்ல கருத்து மட்டும் இருந்தால் போதாது என்பதை ஆணித்தரமாய் சொல்லும் படம்.:)
 சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

how is 7 star?

அருள் நடேசன் said...

அண்ணா , நீங்கள் 7 star,power star போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதுல்லை என்று ஒரு பதிவர் குறை கூறினர் , அதையும் போக்கிவிட்டீர்கள் போல ...... நன்று

sarav said...

eppadi thaliavare intha mathiri padam ellam pakka mudiyuthu athukku vimarsanam vera ezhuthi ! !!
distribution linela irukkarathanala vara occupation hazard ?

ஹாலிவுட்ரசிகன் said...

// படம் ஓட நல்ல கருத்து மட்டும் இருந்தால் போதாது என்பதை ஆணித்தரமாய் சொல்லும் படம் //

முற்றிலும் உண்மை.

பிரசன்னா கண்ணன் said...

>> குண்டாய் ஒரு ஹீரோயின். நல்லா அழுத்திப்பிடிக்கலாம் போலிருக்கிறார்>>
- இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே தல.. :-)

நெல்லை கபே said...

>> குண்டாய் ஒரு ஹீரோயின். நல்லா அழுத்திப்பிடிக்கலாம் போலிருக்கிறார்>> இந்த வரியை தியேட்டரலயே மனசுக்குள்ள எழுதிட்டீங்க போல...

என் வலையில்;
உங்கள் நேரத்தை வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி? Time Management

TXBlogger said...

Hi Shankar, I have started to blog and have written my first article on our republic day. The aim is to define liberty in India and to see where we stand with respect to our Constitution.

I intend to write one article per month and end this by next jan 26th. Please go through it if you have time and If you liked the message, please help me spread it! The message is Liberty!

http://libertydefined.tumblr.com/post/16540436802/rebirth-of-a-republic-the-cause

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே கடைசில மேதை படத்த மட்டும் புறக்கணிச்சிட்டீங்களே?