திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு சின்ன பழைய வீட்டில் அமைந்திருக்கிறது இந்த மெஸ்.காலை மாலை டிபன் மட்டுமே கிடைக்கிறது. ஒரு காலத்தில் மதியம் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னார் நண்பர் பாலா. சட்டென கண்டுபிடிக்க முடியாத வரிசை கடைகளுக்கு நடுவில் தான் அமைந்திருக்கிறது அம்பாள் மெஸ்.
வழக்கமான இட்லி, தோசையுடன், கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சப்பாத்தி,காய்கறி சாதம், கொத்து மல்லி சாதம் ஆகியவைகளும் இரவு நேரத்தில் கிடைக்கிறது. இட்லியுடன் தேங்காய் மற்றும் வெங்காய காரச்சட்னி, சாம்பார். மல்லிகைப்பூப் போல இருந்தது இட்லி. கார சட்னியில் ஒரு புரட்டு புரட்டி ஒரு விள்ளல். இன்னொரு விள்ளல் தேங்காய் சட்னியுடன், அப்புறம் சாம்பாருடன் என்று ஆறு இட்லி உள்ளே போனதே தெரியவில்லை. டிவைன்..
அடுத்ததாய் ஏதாவது ஸ்பெஷல் அயிட்டம் என்று கேட்ட போது ராஜ்மா மசாலா தோசை என்றார்கள். சரி என்று நானும் கே.ஆர்.பியும், ஆளூக்கொன்றை ஆர்டர் செய்தோம். சுடச் சுட வந்தது ராஜ்மா மசாலா. வழக்கமாய் ராஜ்மா எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அதையும் மீறி படு சுவையாய் இருந்தது அதன் மசாலா காரணமாய். அதன் பிறகு சாப்பிட வயிற்றில் இடமில்லாததால் இன்னொரு நாள் வருவோம் என்று கிளம்பினோம். பில் கட்டும் போது இன்னும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமோ என்று யோசனை வந்தது. அதற்கு காரணம் விலையும், வயிறு திம்மென இல்லாது போனதும் தான் காரணம். இரண்டு பேருக்கு ஏழு இட்லி, இரண்டு ராஜ்மா மசாலா தோசைக்கு வெறும் 84 ரூபாய் தான் மக்களே. முழுக்க முழுக்க வெஜிட்டேரியன் ஐயிட்டங்கள் தான் என்றாலும் முட்டை மட்டும் ஆம்லெட்டாக போடுகிறார்கள். முட்டை வெஜிட்டேரியன் தானே?
கேபிள் சங்கர்
Comments
Enakkum aaasaiyaa thaan irukku but sri lankala oru Ulunthu Vadai Ista pattu saapida ponaa oru vadai 45/= vilaiya ketta udane pasiyum paranthu poidum ;((
Regards
M.Gazzaly
(greenhathacker.blogspot.coM)
ஒரு முறை சென்னையில் இரண்டு நாட்களாவது தங்க வேண்டும். எட்டு வேளையும் இந்த மாதிரி உணவகங்களுக்கு உங்களுடன் சென்று உணவருந்த வேண்டும்.
நானும் ஆஸ்கர் விருதும்
கேபிள்க்கேவா...??? இது ரொம்ப ஓவர்.
Ambal mess is my one of the favourite mess.
Until 2008 i think they serving lunch! (i eaten lunch and dinner several days) after that i dont know what happen?
Also one more mess is there "Kasi Vinayagam" try to eat there and tell me your experience.
JP
vikkiulakam neenga renuga messai solreengala.. athunna irukku..
எல்லா சாப்பாட்டு கடை பதிவுகளிலும் இந்த சொல் டெம்பிளேட் ஆக வந்து விடுகிறேதே! :)
thanks for the post.
ஐந்து வருடங்கள் தினமும் சாப்பிட்ட மெஸ். பழைய நினைவுகளை கிளரிய பதிவு. நான் சாப்பிடும்போது பகலில் சாப்பாடுடன் முட்டை மசாலா போடுவார்கள்.
ஓஹோ என்று இல்லாவிட்டாலும் good for purse and body.
ஒருநாள் போவோம்!