Thottal Thodarum

Mar 24, 2012

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

Aayiram Muthangaludan Thenmozhi Movie Stills (9)சில ஆயிரங்கள் செலவில் நடத்தப்படும் நாடகங்களுக்கு ரிகர்சல் பார்க்கும் போது, ஏன் லட்சம் கோடி செலவு செய்யும் சினிமாவிற்கு ரிகர்சல் எடுக்கக் கூடாது என்று கமல்ஹாசன் சொன்னதை வைத்து நடிகர்களுக்கு ரிகர்சல் பார்த்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முகமே காட்டாத ஒரு காதல் பாடல் வேறு இருக்கிறது என்றார்கள். சமயங்களில் சில படங்களுக்கு அருமையான டைட்டில் கிடைத்துவிடும்.  அது ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துவிடும். அப்படி கொடுத்த பெப்பை தக்க வைத்துக் கொள்ளுமா? என்று பார்த்தால் சில படங்கள் தக்க வைத்துக் கொண்டுவிடும். அப்படி இந்த தேன்மொழி தக்க வைத்துக் கொள்வாளா? என்ற கேள்வியோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.


ஹீரோவும் ஹீரோயினும் காரைக்கால்ல இருக்காங்க. படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷம் காதலிக்கிறாங்க. வழக்கம் போல இவங்க காதல் வீட்டுக்கு தெரிஞ்சிருது. ஆஸ்யூஷ்வல் போல வீட்டை விட்டு ஓடிப் போறாங்க.. ஆனா இங்க தான் இயக்குனர் ஒரு ட்விஸ்டு வச்சிருக்கார். அதாவது. ஓடிப்போறதுன்னா ஓடியே போறது இல்லை. ஹீரோயினுக்கு வேற கல்யாணம் பிக்ஸ் செய்த பிறகு அதுக்கு முன்ன அவரோட காலேஜ் ப்ராஜெக்ட் செய்ய சென்னைக்கு வர்றாங்க. அதை சாக்கா வச்சி ஹீரோவையும் அங்கே கூட வரச் சொல்லிட்டு, ஹீரோயினோட ப்ரெண்டோட அக்கா லிவிங் டு கெதர்ல வாழ்ந்ததை சொல்லி அது போல் நீயும் வாழ்ந்து பாரு ஒரு மாசம் அதுக்குள்ள செட்டிலாகலைன்னா பார்த்துப்போம்னு சொன்னதை வச்சி ஹீரோயின் லிவிங் டு கெதர்ல இருக்காங்க. அப்புறம் என்ன ஆச்சுங்கிறது மிச்சக் கதை. ரொம்பவே சீரியசான கதையை படு சாதாரணமாய் சொல்லியிருக்கிறார்கள்.
MDSG461667M-1 ஹீரோவும் ஹீரோயினும் ரொம்பவே சுமாரா இருக்காங்க. அதை இயக்குனரே ஆரம்பத்தில சொல்லிட்டாரு. ஹீரோவின் நடிப்பு கொஞ்சம் ஓகே. ஹீரோயினுக்கு நடிப்பும் சுமாராத்தான் வரும் போலருக்கு. இல்ல ரிகர்சல் பத்தலையோன்னு தெரியலை. கூடவே வரும் ரெண்டு மூணு நடிகர்கள் எல்லாம் காமெடி என்கிற பெயரில் கடுப்படிக்கிறார்கள் மைலார்ட்.

அநேகமாய் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படமாய் தெரிகிறது. கிரேடிங் படு சொதப்பல். தாஜ்நூரின் இசையில் என் புருசா என்று வரும் பாடலைத் தவிர வேறேதும் பெரிதாய் இல்லை. கதாநாயகிப் பெண்ணுக்கு முதல் காட்சியில் ப்ளாட்டாக இருந்தால் இன்னொருக் காட்சியில் முட்டி நிற்கிறது. கண்டின்யூட்டி மிஸ்ஸிங்.
எழுதி இயக்கிய ஷண்முகராஜுக்கு முதல் படம். சேரனின் உதவியாளர். எடுக்க நினைத்தக் கதை நல்ல கதைதான் ஆனால் அதை திரைகக்தை அமைத்தவிதம் தான் படு சொதப்பல். எதை சீரியஸாய் சொல்வது எதை காமெடியாய் சொல்வது என்று புரியாமல் ரெண்டும்கெட்டானாய் காட்சிகள் அமைந்திருப்பதும், காமெடி என்கிற பெயரில் ஆங்காங்கே பட விளம்பர கார்டு போடுவதும், டபுள் மீனிங் காமெடி செய்வதும் சுத்தமாய் ஏறவேயில்லை.  அதுவும் கதாநாயகன் ஹீரோயின் சூடிதாரை தூக்க, அவள் என்ன என்று கேட்க, உன்னை பிறந்த மேனிக்கு பார்க்கணும் என்றதும், அவள் அவ்வாறே நிற்பது போன்ற அழுத்தமில்லா காதல் காட்சிகள் படு சொதப்பல். லிவிங் டு கெதர் என்பது எவ்வளவு சீரியசான மேட்டர். அதுவும் காரைக்காலில் வளர்ந்த இருவரின் மனநிலை எப்படி இந்த முடிவை எடுக்க தடுமாறி நின்றிருக்கும். அவர்களுக்குள் எதற்கு லிவிங் டு கெதர் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்?. ஏன் அந்த குழப்பம்? ஒரு வேளை டாக்டர் ஷாலினி கொடுத்த அட்வைஸ் காரணமாய் நாம் செய்வது காதல் தானா? என்று டெஸ்ட் செய்து பார்க்க ப்ளான் என்றால் படத்தின் அடிநாதமே காலி. முகமே காட்டாமல் வரும் பாடல் ஹீரோயினையும், ஹீரோவையும் அறிமுகப்படுத்தாத காட்சிக்கு முன் வந்திருந்தால் சுவாரஸ்யம். ஆனால் பின்னால் வருகிறது. உதவி இயக்குனராய் வரும் நண்பர் கேரக்டர் ஏன் ஆளுக்கொரு ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். அதுவும் ஹீரோயின் ப்ரெண்டுக்கெல்லாம் அனுப்புகிறார்?. காதல் என்பதே ஒரு கெமிஸ்ட்ரி எனும் டாக்டர் ஷாலினி பின்பு எதற்கு காதலை வாழ வைக்க 5 T யான Trust, Truth, Tolerance, Taste and Talk பற்றி பிரஸ்தாபிக்க வேண்டும். ஆங்காங்கே சின்னச் சின்ன நகாசான காட்சிகளூம், முத்தத்துக்கு ரேஷன் வைத்து விளையாடும் காட்சி, கவிதையான டைட்டிலும், டைட்டில் காட்சியில் காட்டப்படும் கார்டூன்களைத் தவிர இம்பரசிவாய் ஏதுமில்லை. நடிக்க ஹோம் ஒர்க் செய்தவர்கள் கொஞ்சம் ஸ்கிரிப்டுக்கும் ஹோம் ஒர்க் செய்திருக்கலாம்.
கேபிள் சங்கர்     

Post a Comment

8 comments:

Rajmohan said...

ரெண்டு பதிவா உங்க இளமை ஊஞ்சலாடுறது தெறியுதே? போன பதிவுல “புடைப்பு” இதுல “பிளாட்டு” நாங்களும் நோட் பண்ணுவமுல்ல.......

Kannan said...

http://www.facebook.com/Channel4.Fake.Video

arul said...

kamals rehearsal method is good for cinema

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்.
தேன்மொழி... கசப்பு விருந்துதானோ...

rajamelaiyur said...

//அதுவும் கதாநாயகன் ஹீரோயின் சூடிதாரை தூக்க, அவள் என்ன என்று கேட்க, உன்னை பிறந்த மேனிக்கு பார்க்கணும் என்றதும், அவள் அவ்வாறே நிற்பது போன்ற அழுத்தமில்லா காதல் காட்சிகள் படு சொதப்பல்
//

அப்ப பிட்டு பட ரேஞ்சுக்கு irukkaa ?

rajamelaiyur said...

இன்று
ரஜினியை முந்தும் சூர்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

// கதாநாயகிப் பெண்ணுக்கு முதல் காட்சியில் ப்ளாட்டாக இருந்தால் இன்னொருக் காட்சியில் முட்டி நிற்கிறது.//

படம் பாக்கப்போனா படத்தப் பாக்கணும்.

மோ.சி. பாலன் said...

பார்க்கலாமென்றிருந்தேன்...தேன் தேன் தப்பித்தேன்..