Thottal Thodarum

Mar 10, 2012

Kahaani

14993810_kahaani_330x234_9mar12 ரொம்ப வருஷம் ஆகிவிட்டது இம்மாதிரியான புத்திசாலித்தனமான த்ரில்லரை இந்தியத் திரையில் பார்த்து. சமீபத்தில் பார்த்த திறமையான த்ரில்லர் தமிழில் மெளனகுரு. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை பட்டம் பெற்ற நேரத்தில் வந்திருக்கும் படம்.


kahaani-21 லண்டனிலிருந்து வரும் என்.ஆர்.ஐ ஆன வித்யா பாக்சி  தன் கணவனை காணவில்லை  என்று ஒரு சூட்கேஸோடும், கணவரின் ஒரே ஒரு திருமணப் படத்தோடும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து,அவனை கண்டுபிடித்து தருமாறு நிற்கிறாள். தன் கணவன் ஒரு அஸைண்மெண்ட் விஷயமாய் லண்டனிலிருந்து கொல்கத்தா வந்ததாகவும் கடந்த இரண்டு மாதாமாய் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று அவனை தேடித் தர சொல்கிறாள். கர்பிணி பெண்ணாய் வந்து நிற்பவரின் மீது அனுதாபப்பட்டு, அவருக்கு உதவ ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் டார்கெட்டை நெருங்க ஆரம்பித்ததும், அவர்கள் கண்டுபிடித்த ஆட்கள் எல்லாம் ஒரு லெத்தார்ஜிக் இன்சூரன்ஸ் ஏஜெண்டாய் அலையும் பெயிட் ப்ரொபஷனல் கில்லர் ஒருவனால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். வித்யாவையும் கொல்ல அவனுக்கு ஆர்டர் வருகிறது. இன்னொரு பக்கம் புருஷனை தேடிப் போகும் நேரத்தில் இன்னொரு க்ளூவை கண்டுபிடித்தால் கணவனை கண்டு பிடிக்கலாம் என்று போகும் போது, ஐ.பி உள்ளே நுழைய, உளவுத்துறையும், மற்றவர்களும், வித்யாவை இன்னும் நெருக்குகிறார்கள். அவளின் கணவன் கிடைத்தானா? எல்லா ப்ரச்சனைகளிலிருந்து வித்யா விடுபட்டாளா? என்பதை வெள்ளித்திரையில் நிச்சயம் பாருங்கள்.
kahaani-22 கர்பிணிப் பெண் எடுத்த எடுப்பில் டாக்ஸி ட்ரைவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச் சொல்லி ஆரம்பிக்கும் போதே நமக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டுவிட, அதற்கு பிறகு நடப்பவையெல்லாம் பரபரதான். 

வித்யா பாலனை முழு கர்பிணியாகவே ஓப்பனிங் காட்சியில் பார்க்கும் போதே பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். டாக்ஸிகாரரிடம் கேட்கும் இடத்திலிருந்து, நம்மையும் அவருடனே பயணிக்க வைத்துவிடுகிறார் அவரின் நடிப்பின் மூலம். அவுட் ஸ்டாண்டிங்கான நடிப்பு. முழு கதையையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு செல்கிறார். வயிற்றை தள்ளிக் கொண்டு, கால்களை விரித்த வாக்கில் நடக்கும் பாடி லேங்குவேஜ், முகத்தில் காட்டும் அயர்ச்சி, என தனக்கு சிறந்த நடிகை பட்டம்  கொடுத்தது சரியானதே என்பதை நிருபிக்கும் பர்பாமென்ஸ்.
kahaani-5 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர், ஐபி ஆபீசர், மேன்ஷன் மேனேஜர், அந்த ”ரன்னிங் ஹாட் வாட்டர்” பையன், என்று பார்த்து பார்த்து செய்த கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்கள் அவர்களின் நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார்கள். முக்கியமாய் ஐபி ஏஜெண்ட் நவாசூதீனின் பாடிலேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் அட்டகாசம். மிரட்டி எடுக்கிறார். அதே போல அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் கில்லர். மிக சாவகாசமாய் நமஸ்கார் சொல்லிவிட்டு கொல்லும் லெதார்ஜிக்தனம் அட்டகாசம். ரயில்வே ஸ்டேஷனில் வித்யாபாலனை பயமுறுத்துமிடம் முதுகு தண்டு சில்லிடும் மேட்டர்.
kahaani-19
சேதுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான மூடை சரியாக தருகிறது. க்ளைமாக்ஸ் துர்கா பூஜா காட்சிகளும், கொல்கத்தாவின் அதிகாலை விழிப்பைச் சொல்லும் ஷாட்களிலும் தனித்துவமாக தெரிகிறார். நம்ரதாராவின் எடிட்டிங், விஷால் சேகரின் பின்னணியிசை, மற்றும் பாடல்கள் பெரும் பலம்.
kahaani-4 எழுதி இயக்கியவர் சுஜய் கோஷ். பட நெடுக கேள்விகளாலேயே நம்மை கொக்கிப் போட்டு அழைத்துச் செல்லும் எழுத்து, அடுத்தடுத்த காட்சிகளுக்கு கொண்டு செல்லும் லாவகமான திரைகதை, சப்டிலான ப்ளாக் ஹூயூமர். பெங்காலிகளுக்கு “வி” “பி” என்று அழைப்பதை வைத்து, செய்யப்படும் ஹாஸ்யங்கள்.  வித்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்குமான ரிலேஷன்ஷிப், ஓரிரு ஷாட்களில் விதயாவின் அருகாமையால் டிஸ்டர்ப் ஆகும் சப் இன்ஸ்பெக்டரின் மனநிலையை சொல்லும் காட்சி. அந்த ரன்னிங் வாட்டர் பதம். என்று பார்த்து பார்த்து எழுதப்பட்ட விஷயங்களாகவும், ஆங்காங்கே வரும் ட்விஸ்டுகளை கொஞ்சம் கூட யோசிக்க முடியாமல் திரைக்கதை அமைத்திருப்பதும் இவரின் பலம் என்றால் டூமச்சான கிளைக்கதைகள் லேசான குழப்படியைத்தான் செய்கிறது. பட். ஒரு நல்ல திரில்லருக்கு இது போன்ற சில சின்னத் தவறுகள் பெரிய விஷயமேயில்லை. அவுட்ஸ்டாண்டிங் ஒர்க்.
Kahaani – Must see thriller
கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

முரளிகண்ணன் said...

அச்சா ஜி

Marc said...

நல்ல விமர்சனம் வாழ்த்துகள்

மதுரை சரவணன் said...

good review... vaalththukkal . padam paarkka thundukirathu

ஹாலிவுட்ரசிகன் said...

//Kahaani – Must see thriller//

கட்டாயம் பார்த்துவிடுகிறேன். விமர்சனத்திற்கும் அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி.

Thava said...

விமர்சனம் சிறப்பாக உள்ளது..படம் பார்க்க முயற்சிக்கிறேன்.மிக்க நன்றி.

Senthilarasu said...

உங்களின் எழுத்துக்கள் தான் என்னை எழுதத்தூண்டியது. உங்களின் விமர்சனங்கள் எப்போதும் மிக அருமை. என்னாச்சு கொத்துப்பரோட்டா....
http://sunarasu.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்...
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

நல்ல தெளிவான விமர்சனம்

காவேரிகணேஷ் said...

மாற்றுமொழி பார்க்காத எவரையும் உங்கள் விமர்சனம் இந்த படம் பார்க்க தூண்டிவிடும்..

ஜேகே said...

நான் படம் பார்க்கவில்லை .. விமர்சனத்தை பார்த்தால் A Mighty Heart என்ற கராச்சியில் கதை நடக்கும் படத்தின் தழுவல் போல இருக்கிறதே? உண்மையா?

shortfilmindia.com said...

illai jk.

KARTHIIGUNA said...

சார் இந்த படத்துக்கு subtitle எங்க கிடைக்கும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பாத்துருவோம்.:-)))

Raj said...

நேத்து படிச்சதும் டோரன்ட் டவுன்லோட் போட்டு பாத்தாசி. கிளைமாக்ஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒருமுறை பார்த்தால் புரியவே புரியாது. நல்ல படத்தை பகிர்ந்ததற்கு நன்றி

Veera Vinod said...

விமர்சனத்தை படித்தால் இந்த படம் Unknown என்ற ஆங்கில படத்தின் கதையை போல் இருக்கிறது.
http://www.imdb.com/title/tt1401152/