Thottal Thodarum

May 21, 2012

கொத்து பரோட்டா 21/05/12

முதல்வன் பட இண்டர்வியூ போல சி.என்.என் - ஐ.பி.என் டிவி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார் மம்தா அக்கா. கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தொடர்ந்து ஜெய்தேவ் கார்டூன் ப்ரச்சனையை பற்றியும், அவருடய மாநிலத்தில் பெண்கள் மீது நடக்கும் அராஜகங்களையும், போலீஸாரின் நடவடிக்கைப் பற்றியும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தொடர்ந்து கேள்வி கேட்க, கடுப்பாகிப் போன மம்தா பாதி நிகழ்ச்சியில் சட்டசபையில் வெளிநடப்பு நடப்பது போல வெளியேறியிருக்கிறார்.  போகிற போக்கில் அம்மாதிரியான கேள்வி கேட்டவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட் தீவிரவாத மாணவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். நிகழ்ச்சியை நடத்திய சகாரிகா கோஷ் எவ்வளவோ அவர்கள் மாவோயிஸ்ட் அல்ல, இந்திந்த யூனிவர்சிட்டியிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். அதற்கு அப்படியே இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்ட் மாணவர்கள்தான் என்று காச்சு காச்சு என்று கத்திவிட்டு போயிருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நம்மூர் அரசியல்வாதிகள் எல்லாம், பப்ளிக் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. அப்படி மட்டும் மம்மியோ, தாத்தாவோ போய் உட்கார்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு முதல் கேள்வி மட்டுமே புட்டேஜாய் மிஞ்சும்.
@@@@@@@@@@@@@@@@@@@



நண்பர் ஓ.ஆர்.பி ராஜாவின் இளைய மகளும், அண்ணன் அப்துலலாவின் மகளும் டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓ.ஆர்.பியின் மகள் சத்தமாய் “ஏய் இங்க பாரேன்.. ஜாக்கி சான் சித்தப்பா இங்க வந்து பேசுறாரு” என்றதும், அப்துல்லாவின் மகளும், :”அட ஆமா.. அவரு ஏன் இங்க வந்து பேசுறாரு” என்று கேட்டாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாய் போய்விட்டது. இரண்டும் வெவ்வேறு கார்டூன் சீரியல்கள். இரண்டிலும் ஒரே ஆள் டப்பிங் கொடுத்திருக்க, இந்த பொடுசுகள் சட்டென டப்பிங் பேசிய ஆளின் குரலை வைத்து கண்டுபிடிக்கிறார்களே, இவங்களையா இப்பத்திய சினிமாக்காரங்க ஏமாத்த முடியும் என்று எண்ணிக் கொண்டேன்.
###################################
வழக்கு எண்ணைப் பற்றி விமர்சனம் எழுதி மீண்டும் விவாதத்திற்குரியவர் ஆகியிருக்கிறார் சாரு நிவேதிதா. அமெரிக்க பத்திரிக்கைக்கு எழுத வேண்டிய வேலையை விட்டு விட்டு எழுதியதைப் பற்றி புலம்பித் தள்ளியிருக்கிறார். தான் வசனம் எழுதுவதற்காக யாரிடமும் விலைப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்.  எது எப்படியோ.. பஞ்சாயத்து பாலிடால் குடிச்சா சரிதேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடிக்கிற வெய்யிலுக்கு மனுஷன் உடம்புதான் எரியுதுன்னா.. ஓடுற கார், பஸ் எல்லாமே எரியுது. நேத்தைக்கு மட்டும் நாலு ஆக்சிடெண்ட் நியூஸ் நம்ம தமிழ்நாட்டுல மட்டும். எல்லாமே ஓடுற வண்டி எரிஞ்சு போயிருச்சுன்னுதான். தமிழ்நாட்டுல மட்டுமே இத்தனைன்னா, இன்னும் நாடு பூரா எவ்வளவு வண்டி எரியுதோ?. ஆனால் இந்த வண்டி எரிதல் நிகழ்வுக்கும், பழைய நானோ எரிகிற நிகழ்வுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. நண்பர் வெங்கி 2010 நானோவை புக் செய்து வாங்கி, கிட்டத்தட்ட 36,000 கிலோமீட்டர் ஓட்டியிருக்கிறார். ஒரு சுபயோக சுபதினத்தினத்தன்று வண்டியின் பின்பக்கமாய் புகை வர, பதட்டமாகி, வண்டியின் கண்ட்ரோல் இழந்து விபத்துக்குள்ளாகி, எலும்பு முறிவு ஏற்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கிறார். இது குறித்து டாட்டா மோட்டார்ஸின் கஸ்டமர் கேருக்கு போனும், விபத்துப் பற்றிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களும், விபத்துப் பற்றி வந்த பத்திரிக்கை செய்தியை வைத்து தொடர்பு கொண்டு பேசியவர்கள், இழப்பீடுக்கா இன்னமும் விசாரணையில் இருக்கிறது என்றொரு மெயில் மட்டுமே அனுப்பியிருக்கிறார்கள். அதன் பிறகு போனிலோ, மெயிலிலோ தொடர்பு கொண்டால் அதற்கு பதிலோ, அல்லது போனை எடுப்பதோ இல்லை.   சரி இது பற்றி நானோவின் ஃபேஸ்புக் தளத்தில் போடுவோம் என்றால் யார் எவ்வள்வு ஸ்டேட்ஸ் மெசேஜுகளைப் போட்டாலும், ஆள் வைத்து அதை டெலிட் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நான்கு பேர் ஐந்து பேர் தொடர்ந்து போடுவதைவிட, கேட்டால் கிடைக்கும் குழுவினர்கள் எல்லோரும், அவர்களுடய பக்கத்தில் தொடர்ந்து இதைப் பற்றி எழுதினால், அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே உங்களது தளம், வலைப்பூ, ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற எல்லாவற்றிலும் தொடர்ந்து நாம் இந்த செய்தியை போட்டு, டாட்டா மோட்டார் பேஸ்புக் பக்கத்திலும், அவர்களுடய மெயில் ஐடிக்கு இந்த படத்தை மட்டுமே ரீஷேர் செய்து அனுப்பி, கேட்போம் என்று முடிவு செய்திருக்கிறோம். எல்லோரும் கேட்போம். இன்று என் நண்பருக்காக நாம் கேட்பது, நமக்காகவும்தான். click here for  Tata Nano facebook page  கஸ்டமர் கேர் மின்னஞ்சல் ஐடி. <customercare@tatamotors.com> எல்லா மெயிலும் ஆங்கிலத்தில் இருந்தால் நலம். Answer venkatesh என்று தலைப்பிட்டு மெயில் அனுப்புங்கள். கேட்டால் கிடைக்கும் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உண்மையாகவே நீ oruvarai விரும்பினால் உன் சந்தோஷத்தை விட avarudayathai முக்கியமாய் நினைப்பாய்....

ப்ரச்சனையின் போது எல்லோரும் நம்மிடமிருந்து விலகி ஓட, எவனொருவன் நம்முடன் இருக்கிறானோ அவனே சிறந்த நண்பன்

ஓவராய் குடித்துவிட்டு போதையாட்டம் போடும் நண்பரைவிட, சிறிது குடித்துவிட்டு போதையானவரை பார்க்க அழகாய் இருக்கிறது. # அவதானிப்பு

அழகோ, அழகில்லையோ எல்லா பெண்ணும் இந்த கேள்வியை கணவனிடமோ, காதலனிடமோ கேட்காமல் இருந்ததில்லை. “நான் அழகாயிருக்கேனா?” # அவதானிப்பு

வாழ்க்கை ஒரு புத்தகத்தைப் போல, அதற்காக உடனடியாய் கடைசி பக்கத்தை படிக்க விரும்பாதே.

நான் எழுதியபுத்தகங்களுக்கு ராயல்டி வாங்கியிருக்கிறேன். கொண்டிருக்கிறேன்.என்ன பெரிய பதிப்பகம் தான் முழுசாய் கொடுக்காமல் சத்தாய்க்கிறது. சிறிய பதிப்பகமான குகனின் நாகரத்னா பதிப்பகத்தின் நேர்மை பல சமயங்களில் அசத்துகிறது.

நீ எதை இழந்துவிட்டு தவிக்கிறாய் என்று யோசிக்கும் நேரத்தில் மற்றவர்களின் இழைப்பைப் பற்றி யோசி..

தமிழ் தமிழென முழங்குகிறவர்களில் முக்கால் வாசிப் பேர் தமிழை தமில் என்றே கொல்கிறார்கள். # அவதானிப்பு

அவள் இல்லாத போது உன் அன்பை வெளிப்படுத்தாதே..

ஒரு நாள் உன் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படாத ஒருவன் உன் எதிர்காலத்தை பங்கு போட வருவான் என்ற நம்பிக்கை எவ்வளவு நன்றாக இருக்கிறது.

நீயில்லாத நான் ஒரு குழப்ப மூட்டை

என்னை நீ மறக்காதவரை வேறு யார் என்னை மறந்தாலும் எனக்கு கவலையில்லை.

சிட்டுக்குருவி செத்து போச்சு காணாம போச்சுன்னு சொன்னாங்க.. சமீபத்தில் கொடைக்கானலில் கொத்து கொத்தாய் நிறைய சிட்டுக்குருவி பார்த்தேன்.

நீ பேசும் வார்த்தைகள் மீது கவனமாய் இரு. அவை மன்னிக்கப்படுபவைகளே தவிர மறக்கப்படுவதில்லை.......
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”யூத்” பதிவர் சந்திப்பு
மிகச் சிறப்பாக நடந்தேறியது யூத் பதிவர் சந்திப்பு. இச்சந்திப்பில் விலாசினி என்கிற பதினோரு வயதுப் பெண்ணையும், யோகானந்த் என்கிற்வரையும், கோகுல் எனும் புதிய பதிவரையும் கெளரவித்தார்கள். விலாசினி ஐ.க்யூ எனும் நுண்ணறிவு திறனில் 225 கொண்டவள். பில்கேட்ஸுக்கு 160ஆம். சுமார் நான்கு கின்னஸ் ரெக்கார்டுகளை முறியடித்திருக்கிறாள். அச்சிறுமியின் நுண்ணறிவுத்திறனை அவளுக்கு பிடித்த சப்ஜெக்ட் என்ன, பிடித்த நடிகர் யார்? பிடித்த திரைப்படம் எது? என்பது போன்ற நுண்ணறிவை வளர்க்கும் கேள்விகளைக் கேட்டு ஜென்ம சாபல்யம் அடைந்தோம். எதுக்கு ரிஸ்கு நாம கேள்வி கேட்டு அது படு மொக்கையா இருந்திருச்சுன்னா என்கிற பயம் இருந்ததால் இருக்கலாம். கார்க்கி கொஞ்சம் சைக்கலாஜிக்கலான கேள்விகள் கேட்டு தன் ஐ.க்யூவை தெரிவுப்படுத்தினான்.  அப்பெண்ணின் அம்மா இவளது அம்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது பெருமையாக இருக்கிறது என்று சொன்னார். என்னைப் பொறுத்தவரை அப்பெண்ணின் எதிர்காலத்திற்காக ஆல் இண்டியா ரேடியோவில் இருந்த வேலையை உதறிவிட்டு, அவளுக்காக அயராது பாடுபட்டு விலாசினியை ப்ரோமோட் செய்ய முனையும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். யோகானந்த் என்பவர் ஒரு லட்சத்தி இருபதாயிரம் மரம் வளர்த்திருக்கிறார். கோவைக்காரர். அவரின் இந்த செய்லாலும், மரம் வெட்டுவதை தடுப்பதாலும் கிடைத்த அனுபவங்களை சொன்னார். கிட்டத்தட்ட தெலுங்கு படம் போல இருந்தது. அவ்வளவு வயலன்ஸ். இருந்தாலும் தன் கண்டக்டர் வேலையை வைத்துக் கொண்டு தொடர்ந்து இயற்கையை காப்பாற்றுவதற்காக போராடும் அவரை பாராட்டியே ஆக வேண்டும். புதிய பதிவர் கோகுலை சென்ற ஆண்டின் சிறந்த பதிவராய் யூத் பதிவர் குழு தேர்ந்தெடுத்து வாழ்த்தியது. நான் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். என்னை பார்ப்பதற்காக கடலூரிலிருந்து வந்திருந்த பாலகணேஷுக்கு என் நன்றிகள். நலல் ஜாலியாய் போனது சந்திப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ஒரு காலத்தில் இந்தியாவையே கலக்கு கலக்கியெடுத்த பாடல். முக்கியமாய் அமிதாப்புக்கான அசலான குரலில் சுரேஷ் போல்ஸேவும் கவிதா கிருஷ்ணமூர்த்தியும் பாடி இந்தியாவையே ஜுரத்தில் வைத்த பாடல். விஷுவலும் அருமையாய் இருக்கும். இந்த பாட்டுக்காகவே செம ஓப்பனிங் 
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A woman walks into her accountant's office and tells him that she needs to file her taxes. 
The accountant says, "Before we begin, I'll need to ask a few questions. " He gets her name, address, social security number, etc. and then asks, "What is your occupation?" 
The woman replies, "I'm a whore." The accountant balks and says, "No, no, no. That will never work. That is much too crass. Let's try to rephrase that." The woman, "OK, I'm a prostitute.".
The accountant:"No, that is still too crude. Try again."
They both think for a minute, then the woman states, "I'm a chicken farmer."
The accountant asks, "What does chicken farming have to do with being a whore or a prostitute?"

"Well, I raised over 5,000 cocks last year."
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேபிள் சங்கர்


Post a Comment

25 comments:

Anonymous said...

me the first.. Kalakal Cableji!

Ba La said...

கேட்டால் கிடைக்கும் என்பதை உங்கள் பதிவுகளிலேயே படித்திருக்கிறேன்.

மோத்திரக் கல்

moe said...

i tested by posting in nano fb. they deleted it after some time..
Tata was dreaming about a company and these guys won't stop till its buried.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ஒரு தனி மனிதனுக்கு என்ன பிரச்னை என்றாலும்
கேட்க ஆளில்லை . கஸ்டமர் கேர் என்ற பேர்
ரொம்ப எரிச்சலை உண்டு பண்ணுகிறது . கேள்வி அல்லது உதவி
கேட்டாலும்
ஒன்றை அமுக்கு இரண்டை அமுக்கு என்கிறபோது ..........
அவிங்க குரள்வளைய அமுக்க வேணும் போல உள்ளது .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கேள்வி அல்லது உதவி
கேட்டாலும்
ஒன்றை அமுக்கு இரண்டை அமுக்கு என்கிறபோது ..........
அவிங்க குரள்வளைய அமுக்க வேணும் போல உள்ளது .

Unknown said...

பாராட்டுக்கு, உரியவ்ர்களை
அழைத்துப் பாராட்டிய பெருமை
பதிவுலகத்துக்கே பெருமை!
மேலும் உயர்க அவர்தம்
தொண்டு
உரிய ஏற்பாடுகளை சிறப்பகச்
செய்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Balaganesan said...

thank so much sir fr mentioning என்னை பார்ப்பதற்காக கடலூரிலிருந்து வந்திருந்த பாலகணேஷுக்கு என் நன்றிகள். நலல் ஜாலியாய் போனது சந்திப்பு..... am enjoyed the bloggers meet..... i note this moments with you in my diary ...one of life time achievement.

சம்பத்குமார் said...

பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சங்கர் சார்...

உண்மையில் எதிர்பார்த்ததை விட சிறந்த ஓர் விழாவாக நடந்தேறியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..

நன்றி
சம்பத்குமார்

moe said...

Affected Nano owners can start a "fan" page for Nano complaints.
Tata's bad employees can't do much.

Anonymous said...

யூத் பதிவர் சந்திப்பின் தொகுப்பாளராக சேவை செய்த தென் சென்னை ஆதீனம் கேபிள் வாழ்க!!

தருமி said...

//அப்படி மட்டும் மம்மியோ, தாத்தாவோ போய் உட்கார்ந்தால் //

நம்ம மம்மிகூட தாப்பர் நடத்தீய நேர்காணலில் VANISH பண்ணினாங்களே .. மறந்துட்டீங்களா?

http://www.youtube.com/watch?v=vTXj3idjpc4

சதீஷ் மாஸ் said...

என்னை பற்றி ஒரு வரி கூட எழுதாததால், அதை யாம் கடுமையாக கண்டிக்கிறோம்... இதை பற்றி விழாக்குழுவிடம் புகார் அளிக்க உள்ளோம்...

Ivan Yaar said...

hi shankar,

Don't waste your valuable time by publishing news on writer Charu Nivedita. Seeing your blog only I visited his site to see what he had wrote about the movie. I think it is time for charu nivedita to consult psychologist.

Charu Nivedita is selfish fellow and always jealous about other's growth. I think, Charu has become like Ramadoss in Politcs. Charu Nivedita just wants cheap publicity.

rajamelaiyur said...

/ஓவராய் குடித்துவிட்டு போதையாட்டம் போடும் நண்பரைவிட, சிறிது குடித்துவிட்டு போதையானவரை பார்க்க அழகாய் இருக்கிறது. # அவதானிப்பு
//
பிலாசபி ...பிலாசபி ...(நான் நண்பர் பிரபாகரனை சொல்லவில்லை )

rajamelaiyur said...

இதுபோல மாணவர்கள் கேள்வி கேட்டால் அரசியல் வாதிகள் காலி

rajamelaiyur said...

தேர்வு முடிவு பார்க்கும் முன் இதை படியுங்கள்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

Anonymous said...

நானோ பிரச்னை பண்ணுதுன்னு என் நண்பனும் சொன்னான்....

இந்த அமிதாப் பாட்டை நீங்க ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முந்திதான் கொத்து பரோட்டால எழுதினாமாதிரி நினைவு...

Raj said...

கீழே உள்ளது அவரின் கேள்வி பதில். =======

அரவான் படம் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?
ஏ. ராஜ்குமார், திருநெல்வேலி.
டியர் ராஜ்குமார்,
எழுத்தாளன் என்றால் கேணப்பயல் என்று நினைத்துக் கொண்டீர்களா? அரவான் இயக்குனரிடம் போய் எக்ஸைல் நாவல் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க வேண்டியதுதானே? அது ஏன் சினிமா பற்றிய கருத்தை எழுத்தாளரிடம் கேட்கிறீர்கள்? எழுத்தாளன் என்ன சினிமாக்காரர்களுக்கு எடுபிடியா? சம்பளம் இல்லாத கூலியாளா? புத்தக வெளியீட்டுக்கு அழைத்தால் அங்கே வந்து கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் “நான் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை” என்று கூறுகிறார்கள் சினிமாக்காரர்கள். அப்படிப்பட்டவர்களின் படங்களைப் பற்றி மட்டும் எழுத்தாளன் கருத்துச் சொல்ல வேண்டுமா? சரி, ஸல்மான் ருஷ்டி, பாவ்லோ கொய்லோ போன்ற எழுத்தாளர்களிடம் அரவான் படம் பற்றிய கருத்தைக் கேட்டு விட்டீர்களா?
============
ரிச்சாவ எதிர்பார்த்துட்டு தப்பான தியேட்டருக்கு மனசு வக்கிரத்தோட தன்னியடிச்சிட்டு தவறான தியேட்டருக்கு போனவரிடம் சந்தனத்தையா எதிர்பார்க்கிறீர்கள்..

உணவு உலகம் said...

சென்னை யூத் பதிவர் சந்திப்பில் தங்களுடன் நானும் கலந்து கொண்டேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

உணவு உலகம் said...

வித்யாசமான கோணத்தில் சிந்தித்து, மிக நேர்த்தியாய் நடந்த சந்திப்பு. பல ப்திவர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பாய் அமைந்தது.

Unknown said...

! சிவகுமார் ! said...
யூத் பதிவர் சந்திப்பின் தொகுப்பாளராக சேவை செய்த தென் சென்னை ஆதீனம் கேபிள் வாழ்க!!
///////////////////////
இளைய ஆதினம் சிவக்குமாருக்கும் நன்றி!

அ.சந்தர் சிங். said...

அய்யா சாமி,adult corner ஐ தயவு செய்து தமிழில் பிரசுரியுங்களேன்.

அமர பாரதி said...

//அய்யா சாமி,adult corner ஐ தயவு செய்து தமிழில் பிரசுரியுங்களேன். //

இந்த வார அடல்ட் கார்னர் தமிழாக்கப் பட்டால் சரியான அர்த்தம் தராது.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//ஆனால் இந்த வண்டி எரிதல் நிகழ்வுக்கும், பழைய நானோ எரிகிற நிகழ்வுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. நண்பர் வெங்கி 2010 நானோவை புக் செய்து வாங்கி, கிட்டத்தட்ட 36,000 கிலோமீட்டர் ஓட்டியிருக்கிறார். //

இதில என்ன வித்தியாசம்னு சொல்ல வரிங்க? விளக்கவும்.

புதுக்கார் எரிந்தால் தான் ஆச்சரியம், பழையக்காரி எரிய பல காரணங்கள் இருக்கு. மேலும் 36000 கி.மீ ஓட்டியாச்சு என்பதால் வாரண்டி கூட முடிந்து இருக்குமே. அனேகமா கண்டுக்கவே மாட்டான்.

நிறைய புது நானோவே எரிந்து இருக்கு, அதை வைத்து ஒரு பதிவு அரைகுறையாக ரெடி செய்து வைத்துவிட்டு கிடப்பில் கிடந்தது ,உங்கள்ப்பதிவைப்பார்த்ததும் முழுமை செய்துப்போட்டு விட்டேன். நானோ எரிய காரணம் என்னனு எனக்கு தெரிந்த அளவில் சொல்லி இருக்கேன்.முடிந்தால் பார்க்கவும்.

ஹி..ஹி..கொஞ்ச நாளுக்கு முன்னர் தான் நானோ கார் அருமையா 100 இல் போகுது,இ.சிஆரில் போனேன் சொன்னிங்க, இப்பொ ரிவர்ஸ் ஆ சொல்றிங்களே.

இதை விட சுரேகாஜி நானோ ஓட்டிப்பார்க்காதவங்க தான் அதைப்பற்றி குறை சொல்லுவாங்க,நான் வாங்கியிருக்கேன் நல்லா இருக்குனு சொன்னார், :-))

தீப்பிடிக்க தீப்பிடிக்க நானோ காருடானு

வவ்வால் said...

கேபிள்ஜி,

ஆட்சேபணை தெரிவிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப்பதிவினை எனது பதிவில் இணைத்துள்ளேன்,மேலும் வெங்கியின் முகநூல்,படங்களும் இணைத்துள்ளேன்.நன்றி!