சாட்டை
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அரசு தரப்பில் அதை மேன்மை படுத்த வேண்டும் என்று ப்ரெஷ்ர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிலையை, அதன் ஆசிரியர்களின் நிலையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்படத்தின் மூலமாய் சாட்டைக் கொண்டு அடித்திருக்கிறார்கள்
தயாளன் என்கிற புதிய இளம் வாத்தியார் ஒருவர் தன் முயற்சியால் நொடிந்து போய் இருக்கிற அரசு பள்ளியை தலை நிமிரச் செய்ய படும் பாட்டையும், அதனால் அவர் சந்திக்கிற பிரச்சனைகளையெல்லாம் எப்படி தகர்த்தெறிந்து ஜெயிக்கிறார் என்பதுதான் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அரசு பள்ளியின் நிலையை தெளிவாக விளக்கி விடுகிறார்கள். நோட்டீஸ் போர்டில் வட்டிப் பணம் தராத டீச்சர்கள் பெயரை போட்டு ஏ.எச்.எம் அறிவிப்பு செய்திருப்பதிலிருந்து, வராண்டாவின் நிலை, அங்கே நடக்கும் டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர்ஸ் மீட்டிங்கில் அப்பள்ளியின் தற்போதைய நிலை என்று எல்லாவற்றையும் டைட்டில் காட்சியிலேயே விளக்கிவிடுகிற போது அட என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கத்தான் செய்கிறார்கள். அதன் பிறகு பள்ளியின் ஹெட்மாஸ்டர், ஏ.எச்.எம்மின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், மற்ற டீச்சர்கள் எல்லோரும் அவரிடம் கடன் வாங்கியிருப்பதால் வேறு வழியில்லாமல் சொம்படித்துக் கொண்டிருப்பதையும் அடுத்தடுத்த காட்சிகளில் காட்ட அட.. உடனடியாய் கதைக்கு வருகிறார்களே என்று புருவத்தை உயர்த்த வைத்தார்கள். தயாளன் டீச்சர் கொஞ்சம் கொஞ்சமாய் பள்ளியை தன் வாக்கில் கொண்டு வந்து அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்க ஆரம்பித்த போது ம்.. பரவாயில்லையே அடுத்த கட்டத்துக்கு அதற்குள் நகர்ந்துவிட்டார்களே என்று சபாஷ் போட வைத்தார்கள். தயாளன் வாத்தியாரின் க்ளாஸில் படிக்கும் அன்புக்கும் அறிவுக்குமிடையே ஆன காதல், பாட்டு, என்று ஆரம்பித்த பிறகு அஹா.. ஆரம்பிச்சிட்டாங்கடா.. என்று யோசிக்க வைத்தார்கள்.
ஏ.எச்.எம் சிங்கபெருமாளின் நாடகத்தனமான காட்சிகளும், அவ்வப்போது நடத்தப்படும் அட்வைஸ் மழைகளும், பாஸிட்டிவாக பேசுகிறேன் என்று நான் கூட சைட் அடிச்சேன், நானும் ரவுடியாயிருந்தேன் என்று பசங்களிடம் நெருங்க முயற்சிக்கும் காட்சிகளில் எல்லாம் நாடகத்தனமும், ஏற்கனவே பார்த்த காட்சிகளாகவே தெரிய ஆரம்பிக்க, தயாளன் மாஸ்டர், அறிவுக்குமான தவறான தொடர்பு என்று ஊரே சேர்ந்து அவரை அடிக்கும் போது இடைவேளை விடும் போது அட நல்லாத்தானே போயிட்டிருந்தது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தையும் நாமே லிஸ்ட் போட்டு வைத்துவிடலாம்.
தயாளன் மாஸ்டராய் சமுத்திரக்கனி. அவரது நடிப்பை விட குரல் பல இடங்களில் டப்பிங்கில் நன்றாக நடித்திருக்கிறது. அவரின் ஓங்கு தாங்கான உடலும் அவரின் உடல் மொழியும், சில இடங்களில் அவரை ரசிக்க வைக்கிறது. பள்ளியின் வளர்ச்சிக்காக தன் மனைவியையே கவனிக்காதவராய் காட்டியிருப்பது என்னதான் நல்ல ஆசிரியராய் அவரின் கேரக்டரை வடிவமைத்திருந்தாலும், நல்ல கணவனாய் இல்லாமல் இருப்பது உறுத்துகிறது. லேடீஸ் டாய்லெட் எப்படி இருக்கும் என்று யோசித்து ஆர்வத்தில் அந்த பாத்ரூமில் எட்டிப் பார்த்ததற்காக முட்டிப் போட வைக்கப்பட்ட சிறுவனுக்காக டீச்சரிடம் பேசும் காட்சி சுவாரஸ்யம். ஆனால் அவர் எல்லா மாணவர்களுக்கும் ஏதோ ஆபத்பாந்தவனாய் மாறி தயா சார் சொன்னாருன்னு சொல்லுங்க என்று சொல்லி தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுவது ஹீரோயிசம்தான்.
இமானின் இசையில் சஹாயனே ஹிட் பாடல் தான் என்றாலும் தேவையில்லாத இடத்தில் வந்து, படத்திற்கே சூட்டாகாத பாடலாய் அமைந்துவிடுகிறது. பின்னணியிசை ஓகே. ஜீவனின் ஒளிப்பதிவில் பட்ஜெட் தெரிகிறது. நிறைய இடங்களில் படு சுமார்
எழுதி இயக்கியவர் எம்.அன்பழகன்.இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளர். இன்ஸ்ட்டியூட்டில் தங்க மெடல் வென்றவர். இவரின் முதல் படம் இது. முதல் படத்தில் ஹிட்டடிக்க வழக்கமான காதல், கிராமம் என்று ஃபார்முலாவுக்குள் போகாமல் நம் அரசு பள்ளிகளின் நிலையை உயர்த்த எண்ணி உண்மையான வலியோடு ஒரு கதை சொல்ல வந்ததற்கு பாராட்டுக்கள். படத்தின் பெரிய பலமே வசனங்கள் தான். “பசங்க நம்மள நம்புறாங்க சார். ஆனா பெத்தவங்க நாமதான் அவங்களை நம்புறது இல்லை” “எல்லா பொண்ணுங்களும் பசங்களை திரும்பிப் பார்க்கத்தான் செய்வோம் ஏன்னா சனியன் இன்னும் இருக்கா போயிருச்சான்னு பார்க்கத்தான்” “ஏணியை கூரை மேல போடாதீங்க வானத்துக்கு போடுங்க” என்று அதகளப்படுத்துகிறார். தோப்புகரணம் போட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பதை விளக்கும் காட்சி, மாணவர்களை மிக ஈஸியாய் தயாளன் வாத்தியார் தன் பக்கம் இழுக்கும் சிறு சிறு காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம். வாத்தியார் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அவரது மனைவி யாரும் ஆழாதீங்க. அவரைப் பத்தி எனக்கு தெரியும் எந்திருச்சு வந்திருவாரு என்று உறுதியாய் நம்பிப் பேசும் காட்சியில் நெகிழ்வு. கணவன் மனைவி புரிதலுக்கும், அவர்களின் காதலுக்கும் அழுத்தமாய் முன்னால் ஒரு காட்சி வைத்திருந்தால் இந்த காட்சி இன்னும் மேன்மை அடைந்திருக்கும்.
முதல் பாதியில் தயாளன் வாத்தியார் மேல் விழும் காமாந்தகன் பழி, வில்லன் ஏ.எச்.எம்ம் பசங்களை திருத்த முயலும் காட்சிகள், ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் நிகழ்ச்சி, போட்டி ஸ்கூல் மாஸ்டர் ஸ்கூல் கல்சுரல்ஸுக்கு எல்லாம் பேரம் பேசுவது, ஸ்போர்ட்ஸில் பசங்க ஜெயிக்கக் கூடாது என்பதற்காக தம்பி ராமையாய் செய்யும் காரியம் எல்லாம் மிகப் பழையதாக இருக்கிறது. அதே போல அன்பு, அறிவுக்குமிடையே ஆன காதல், தறுதலை மாணவன் வாத்தியார் பையனாய் இருப்பது, அவனை நம்பிக்கையூட்டி திருத்துவது போன்ற காட்சிகளையும் சொல்லலாம். க்ளைமாக்ஸில் ஏ.எச்.எம் கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவில் தயாளனைக் கொல்ல இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு போவதெல்லாம் அறுபதுகளின் நாடகத்தன உச்சம். இவையனைத்தையும் மீறி ஒரு டீசெண்டான இன்றைய சமுதாயத்திற்கு தேவையான முக்கியமான கருத்தை வலியுறுத்தி சொல்லியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் அன்பழகன்.
முதல் பாதியில் தயாளன் வாத்தியார் மேல் விழும் காமாந்தகன் பழி, வில்லன் ஏ.எச்.எம்ம் பசங்களை திருத்த முயலும் காட்சிகள், ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் நிகழ்ச்சி, போட்டி ஸ்கூல் மாஸ்டர் ஸ்கூல் கல்சுரல்ஸுக்கு எல்லாம் பேரம் பேசுவது, ஸ்போர்ட்ஸில் பசங்க ஜெயிக்கக் கூடாது என்பதற்காக தம்பி ராமையாய் செய்யும் காரியம் எல்லாம் மிகப் பழையதாக இருக்கிறது. அதே போல அன்பு, அறிவுக்குமிடையே ஆன காதல், தறுதலை மாணவன் வாத்தியார் பையனாய் இருப்பது, அவனை நம்பிக்கையூட்டி திருத்துவது போன்ற காட்சிகளையும் சொல்லலாம். க்ளைமாக்ஸில் ஏ.எச்.எம் கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவில் தயாளனைக் கொல்ல இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு போவதெல்லாம் அறுபதுகளின் நாடகத்தன உச்சம். இவையனைத்தையும் மீறி ஒரு டீசெண்டான இன்றைய சமுதாயத்திற்கு தேவையான முக்கியமான கருத்தை வலியுறுத்தி சொல்லியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் அன்பழகன்.
Comments
படம் பாக்க வர்றவங்களை . . .
இப்படியா பண்றது
இதுல Ocean Fruit kku Flex வேற . . .
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
It was nice meeting you yesterday.
Regards,
Jagadeesh. S
Team Jasan Pictures
www.jasanpictures.com
Follow us on Facebook: https://facebook.com/jasan.pictures
Follow us on twitter: https://twitter.com/jasanpictures
Follow My Blog: https://jaggy.me
சூப்பர் கேபிள்.. இப்படி தான் இருக்கணும். அப்போதான் சினிமா இலக்கிய புலி என்ற பட்டம் கிடைக்கும்.
எளிமையான விமர்சனம்,தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் பாணி விமர்சனம், தொடரட்டும்!!!
த.ம.2012.
//இதுல Ocean Fruit kku Flex வேற . . .//
இது தனி மனித தாக்குதல் , கடல் பழம் பிரபல நடிகர் ஆகிடுவார் என பொறாமை, எனவே உம்மீது கேஸ் போடுவேன் :-))