Thottal Thodarum

Nov 10, 2012

Stolen

 நான்கு நண்பர்கள் சேர்ந்து பேங்குகளை கொள்ளையடிக்கும் கூட்டம். ஒரு கொள்ளையின் போது போலீஸ் சுற்றுப் போட்டுவிட,  பணத்துடன் மாட்டினால் தண்டனை அதிகம் என்பதால் அதை எரித்து விடுகிறார் நிக்கோலஸ் கேஜ். எட்டு வருட தண்டனைப் பெற்றுவிட்டு திரும்பும் போது எப்.பி.ஐ அவரின் பின்னே தொடர்கிறது. நிச்சயம் ஐம்பது கோடி பணத்தை அவன் எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று. கேஜுக்கு தன் பெண்ணின் மேல் அதீத பாசம். அவளை பார்க்க, செல்கிறான். பெண் முகம் கொடுத்து பேசமாட்டேன் என்கிறாள். கேஜுன் நண்பர்களில் ஒருவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட, அப்படி சொல்லபப்ட்ட நண்பன் கேஜுன் பெண்ணை தன் டாக்சியில் கடத்துகிறான். எப்.பி.ஐ நினைப்பது போல கேஜ் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று அவனும் நினைக்கிறான். 12 மணி நேரத்துக்குள், பத்து மில்லியன் பணத்தை கொடுக்காவிட்டால் கேஜின் பெண்ணை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். வேறு வழியேயில்லாமல் இல்லாத பணத்தை கொடுப்பதாய் சொல்லி எப்படி தன் பெண்ணை மீட்கிறார் என்பதுதான் கதை.


படிக்கும் போது அட.. செம நாட்டாக இருக்கிறதே என்று சொல்ல தோன்றினாலும் அதை படமாய் பார்க்கும் போது படிக்கும் போது கிடைத்த இம்பாக்ட் நிச்சயம் கிடைக்காது. அதற்கு காரணம் படு  க்ளிஷேவான திரைகதையும், அநியாய காது பூச்சுற்றலும் தான். 
வில்லனுக்கு ஒத்தைக் கால் கிடையாது. அவன் ஒரு டாக்சி ட்ரைவர். கம்பிக் கால் வைத்து ஓட்டுகிறவன். அப்படியொன்றும் டெரர் பார்ட்டியும் இல்லை. ஓடிப் போய் அவன் மேல் விழுந்தால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியான அவன் சும்மா சும்மா போனில் மிரட்டிக் கொண்டும், நம்மை பயமுறுத்துவதற்காக போலீஸையும், வண்டியில் ட்ராவல் செய்பவனையும் கொல்வதும் அடிப்பதுமாய் செய்து கொண்டிருக்கிறானே தவிர, வேறெதையும் செய்யக் காணோம்.

வில்லனுக்கு பணம் கொடுக்க முடியாமல் ரகசியமாய் சென்ற முறை கொள்ளையடித்த அதே பேங்கின் வால்ட்டின் கீழே போய் ஓட்டைப் போட்டு கேஸை வைத்து அங்கிருக்கும் தங்கத்தை உருக்கி, ஓட்டை வழியாய் வழிய விட்டு எடுப்பது எல்லாம் செம பூச்சுற்றல். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் க்ளீஷேவின் உச்சம். க்ளைமாக்ஸ் உட்பட. மொத்தத்தில் ஒரு நல்ல இண்டரஸ்டிங்கான லைன் படு மொக்கையான படமாகியிருக்கிறது. இப்படத்திற்கு தமிழில் களவாளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதை கைவாளி என்று போஸ்டரைப் பார்த்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு ரசிகர்.
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

arul said...

Cableji,

Senthilji,

இது எங்களுடைய அடுத்த நகைச்சுவை குறும்பட முயற்சி. உங்களுடைய மேலான கருத்துகள் வேண்டும்.

மொக்கை பையன் ரிடர்ன்ஸ்

https://www.youtube.com/watch?v=-mmSKw88YqQ

M. Shanmugam said...

சுவையான விமர்சனம்
மிக்க நன்றி.

Tamil Online