Thottal Thodarum

Dec 13, 2012

விஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் 1. இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க 2.மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. 


இந்த அறிக்கையின் மூலம் இவர் சொல்ல வருவது என்னவென்றால் முதலில் கவன ஈர்ப்பு. இரண்டாவது இவர் தலைவர் என்பதை அறிவிக்கும் விஷயம். இன்னொரு தலைவர் சொந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கவிருப்பதால் அவர் எம்.எஸ்.ஓ ஆகிவிட்டபடியால் அவர் அறிக்கை விட மாட்டார்.

கேபிள் டி.வி.தொழிலை ஒழிக்க முற்படுவோருக்கு மத்திய அரசு 2.துணை போனாலும் டி.டி.எச். 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பதை தனது கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கும் 3.உலக நாயகனுக்கு உளமார்ந்த நன்றியை தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். 

இதில் மத்திய அரசின் ஆணை காரணமாய் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் டிஜிட்டல் மயமாக்குவது கண்டிப்பது. மத்திய அரசின் கணக்கெடுப்பில் ஆஹா ஓஹோ வென டி.டி.எச் இருப்பதாய் இருக்கும் பொய்க் கணக்கை சொல்ல விழைவது. இதுக்கு மட்டும் கமலஹாசன் வேணும்.

இதற்கு காரணம் 1.குறைந்த விலை நிறைந்த சேவை என்ற தாரக மந்திரத்தை தந்து கேபிள் டி.வி. தொழிலை தமிழகத்தில் தழைந்தோங்க வழிகாட்டி நிற்கும் 2.முதல்-அமைச்சரின் சீரிய சிந்தனையே ஆகும். சென்னை உயர்நீதி மன்றத்தில் கேபிள் டி.வி. தொழில் சம்பந்தமாக நாங்கள் தொடுத்திருக்கும் வழக்கில் இந்த 3.டி.டி.எச். 3 சதவீதம் என்ற கணக்கெடுப்பை பொதுமக்கள் கருத்தாக பதிவு செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கமலஹாசனை கேட்டுக் கொள்கிறேன். 

ஒரு விதத்தில் உண்மையும் கூட. ரெண்டாவது கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். மூன்றாவது இவரே சொல்லியிருக்கிறார் என்று நம் பக்கம் ஆட்களை சேர்த்துக் கொள்வது.

கமலஹாசன் தனது அறிக்கையில் டி.டி.எச். மூலம் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை 1.பதிவு இறக்கம் செய்யமுடியாது என்று கூறியுள்ளார். அது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் ஆகும். டி.டி.எச். மூலம் இவரது திரைப்படம் ஒளிப்பரப்பாகும்போது அவர் வேண்டுகோள் விடுத்தால் அந்த திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை அவர் முன்னிலையிலேயே நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளோம். திரைத்துறையை சார்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3.கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க வேண்டும் என்று கொக்கரித்தபோது, இது விஞ்ஞான உலகின் வியத்தகு பரிமாணம், அதோடு நாமும் பயணப்பட வேண்டும் என்று கூறியவர் கமலஹாசன்.

டெக்னாலஜி தங்களுக்கும் தெரியும் என்று சொல்ல விழைகிற விஷயம். ரெண்டாவது  மீண்டும் நாங்க உங்களுக்கு எதிரி இல்லை. நாமெல்லாம் ஒண்ணுதான் என்ற விதத்தில் விடும் உட்டாலக்கடி ஸ்டேட்மெண்ட்

‘தசாவதாரம்' எடுத்த கமலஹாசன் தற்போது டி.டி.எச்.க்கு விளம்பர தூதுவராக அடுத்த அவதாரம் எடுத்துள்ளது வருந்தத்தக்கது. ஒருமுறைதான் ஒளிபரப்பு. அதுவும் 1.ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும் என்கிறார். அவர் திரைப்படத்தை ஒளிப்பரப்பு செய்யும் நேரத்தில் மழை பெய்தால் படம் தெரியாது. இத்தகைய சூழலில் 2.ஆயிரம் ரூபாய் கட்டியவர் பணத்தை திரும்பக் கேட்கமாட்டாரா?

முதல்: இத்தனை நாள் டி.டி.எச் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாதா மழை பெய்தால் என்ன ஆகும்? என்று. இதன் பின்னணி மழை பெய்தாலும் கேபிள் டிவியில் படம் தெரியும் என்பதை சொல்ல விழைவது. ரெண்டாவது சும்மா ஏத்தி விடுவது. ஆயிரம் ரூபாய் பணம் கட்டி பார்க்க கரண்ட் இல்லையென்றால் அப்போது யாரிடம் கேட்க வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நியாயமாய் இருக்கும்.

மூவி அன்டு டிமாண்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் அவரது முயற்சியில் நியாயம் இருக்கிறது. 1.அது கேபிள் டி.வி. மூலம் செய்வது மட்டுமே சாத்தியம். அவரது பிரம்மாண்டமான அடுத்த படைப்பு இந்த முயற்சியை கேபிள் டி.வி. மூலம் சாதிக்கும். இதற்கு மேலும் டி.டி.எச். நிறுவனங்களின் பசப்பு மொழியில் அவர் தன்னிலை இழந்தாரானால் அவரையும் அவரது திரைப்படத்தையும் காப்பற்ற கடவுளாலும் முடியாது. இதையெல்லாம் மீறி டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்' திரைப்படத்தை ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமலஹாசன் முடிவெடுப்பாரானால் நூற்றாண்டுகால 2சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி.எச்சில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது பட்டிதொட்டி எங்கும் வீடியோஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பி, கமலஹாசனை வாழ்த்திட நாங்களும் தயாராகி விடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது எச்சரிக்கை அல்ல. இரண்டாம் தலைமுறையை கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபடுத்தியுள்ள எளிய கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இதயத்தின் ரணக்குரல்.

முதல்: இதைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நிச்சயம் இது கேபிள் டிவி மூவி ஆன் டிமாண்ட் டெக்னாலஜி மூலம் சாத்தியம். சென்னையில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருக்கிறது. அப்படி ஆன பிறகு சுமார் நாற்பது லட்சம் இணைப்புகளிருப்பதாய் கணக்கிருக்கிறது. நாற்பது லட்சம் இணைப்புகளிலும் செட்டாப் பாக்ஸ் இருப்பதால் மூவி ஆன் டிமாண்ட் டெக்னாலஜியில் படங்கள் நேரடியாய் மக்களிடம் காட்ட முடியும். அது மட்டுமல்லாமல் பணமும் நேரடியாய் வசூலாகிவிடும். அதாவது ஒரு சாதாரண படம் கூட டிஜிட்டல் டெக்னாலஜியில் மூவி ஆன் டிமாண்டின் மூலம் ஒளிபரப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாற்பது லட்சம் இணைப்புகளில் ஓரளவுக்கு விமர்சகர்களின் பாராட்டு பெற்ற படங்களை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சமாய் 50 ரூபாய் ஒரு வீட்டிற்கு என்று கணக்கிட்டாலும், நாற்பது லட்சத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே பார்த்தார்கள் என்றாலும் கூட 50 லட்சம் ரூபாய் வந்துவிடும். அதில் சரி பாதி கேபிள் நிறுவனத்துக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிரித்துக் கொண்டால் யோசித்துப் பாருங்கள். இதனால் தயாரிப்பாளருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்கிறது. சினிமாவும் வாழும். சினிமா வியாபாரம் புத்தகத்தில் எழுதியது போல.. ஒரு தயாரிப்பாளர் தன் பட உரிமைகளை அறுபதுக்கும் மேற்பட்ட விதங்களில் விற்று சம்பாதிக்க முடியும் என்பதை இந்த டெக்னாலஜி நிருபிக்கிறது.

கடைசியாய் ஹைலைட் செய்யப்பட்ட விஷயம் கேபிள் ஆப்பரேட்டர்களின் மனதிலுள்ள பயம். எங்கே டிடிஎச்சில் புதிய படங்களைப் போட ஆரம்பித்தால் கேபிள் டிவியின் வளர்ச்சி குறைந்துவிடுமோ என்கிற பயம் தான். நிச்சயம் ஆகாது. கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கம் முழுவதுமாய் ஆகிவிடும் போது நிச்சயம் டி.டி.எச்சை விட விலை குறைவாக இருக்கும் கேபிள் டிவி டெக்னாலஜிக்கே ஆதரவு இருக்கும். அது மட்டுமில்லாமல் டி.டி.எச்சில் செய்ய முடியாத பல சேவைகளான, அதிகப்பட்ச சேனல்கள், டிஜிட்டல் தரம், இண்டெநெட், இரு முனை தொடர்பு, லோக்கல் செய்திகள், போன்ற பல விஷயங்களில் கேபிள் டெக்னாலஜி முன்னிலை வகிக்கும். அதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறினால் மட்டுமே சாத்தியம். அதையும் மீறி விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் வளர்ந்த இந்தத் தொழிலில் அடுத்த கட்ட நிலைக்கு இரண்டாம் தலைமுறை ஆட்களும் வளரத்தானே வேண்டும். இலவசமாய் கேபிள் டிவியில் ஒளிபரப்புவோம் என்று சொல்லியிருந்தால் கேபிள் டிவி உரிமையாளராய் எனக்கு பயம் வந்திருக்கும். இவர் பெரிய திரைப் போட்டு ரோட்டில் காட்ட போகிறேன் என்று சொல்லியிருக்கும் பட்சத்தில் கேபிள் டிவி உரிமையாளருக்கும் இந்த அறிக்கைக்கும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை. விஞ்ஞானத்தோடு போட்டிப் போட்டு வளர நாம் பழக வேண்டும் என்று கமலஹாசன் சொன்னதை தலைவர் மறந்துவிடக்கூடாது.


Post a Comment

4 comments:

PSB said...

Cable Ji in Bangalore we get 200 Chanel plus 512 KBPS unlimited internet connection for Rs.700/-. Cable connection is with setup box. Quality of the channels are excellent.

Unknown said...

கமல் என்ற நடிகனின் கூட்டு முயற்சியை ( தயாரிப்பாளரும் கூட) அவர் அனுமதியில்லாமல் பெரிய திரைப் போட்டு ரோட்டில் காட்ட போகிறேன் என்று குரல் எழுப்பும் அதிகாரத்தை கேபிள் டிவி இயக்குபவர்களுக்கு யார் கொடுத்தது ? ...

Hari said...

dth la padam podren nu solren nu solradhe makkalidam panam karakkum vishayam dhan. Hindi padattha 1 week kalichu 50rs ku dth la kudukaranga. Aanal kamal In peraasai miga periyadhai irukiradhu. Kettal 10days munnadiye podrom adhanal dhan 1000rs enbaargal. Enna dhan dth la clarity ya irundhalum mazhai vandhal ella dth um avlo dhan. 1000rs katti Current ponalo alladhu mazhai vandhalo vanginavanuku namam dhan. Kamal ku enna kavalai? Andha padam nalla iruka illaya nu theriyama endha muttalum 1000rs katti parka maattan. Theatre ku pona oruttharuku 150rs selavv agudhu nu dhan naraya per dvd r net la parkuranga. Dth 1000rs nu kuduttha kandipa evanum parka maattan. Arva kolaarula 1st sila per parthalum poga poga idhu sari pattu varadhu nu pazhayapadi dvd r net la dhan parpanga. Kandipa indha vishayam tholvi la dhan mudiya pogudhu.

ரவி said...

Cable JI my comment is missing here.