பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.
உதாரணமாய் எனக்கு நினைவு தெரிந்து ஷுகருக்காக காலையில் ஒர் மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்று சாப்பிட்டு வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பத்து மாத்திரைகள் கொண்ட ஸ்ட்ரிபின் அதிகபட்ச விலை 35 ரூபாய். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒர் முறை கொஞ்சம் கொஞ்சமாய் விலையேற்றி இன்று பதினைந்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிபின் விலை 108 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள் மூன்று வருடங்களில் இதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று. இதில் பத்து மாத்திரை இருந்த ஸ்ட்ரிப்பை பதினைந்தாக மாற்றியதால் பத்து மாத்திரையாக கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் மெடிக்கல் ஷாப்காரர்கள். வாங்கினால் பதினைந்தாகத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் பேசுகிறார்கள். ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் லூசுல கொடுத்தா மிஞ்சிப் போவுது. அதான். என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எப்படி நீங்க தெனம் சாப்பிட்டுத்தானே ஆகணும் வாங்கி வச்சிக்கங்க.என்று சொல்கிறார்.
இதாவது பரவாயில்லை சுகர் மாத்திரை தினமும் சாப்பிடுவது. வேறு உடல் உபாதைகளுக்காக டாக்டர் பிரிஸ்கிரைப் செய்யும் மருந்துகள் அவரின் க்ளினிக்கின் பக்கத்திலிருக்கும் மெடிக்கல் ஷாப்பைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அதற்கு டாக்டர், மெடிக்கல்ஷாப், மருந்து கம்பெனியின் உள்குத்து ஒன்று இருக்கிறது. அதை விடுங்கள் அப்படி டாக்டர் எழுதிக் கொடுக்கும் நான்கு வேலை மருந்துக்கு முழு ஸ்ட்ரிப்பையே வாங்கச் சொல்லும் மெடிக்கல் ஷாப்புகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உனக்கு தேவையோ இல்லையோ நான்கு வேலைக்கு பிறகு வேறு மருந்துகள் தேவையில்லாத போது நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எப்படி சரி என்றாகும்.
சமீபத்தில் நண்பரின் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு ஒர் ஆண்டிபயாட்டிக் மருந்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊசிகளுக்கு மேல் போட்டாக வேண்டிய கட்டாயம். அந்த மருந்தின் அதிக பட்ச விலை 2200. நண்பருக்கு தெரிந்தவர் ஸ்டாகிஸ்டாக இருப்பதால் அவரிடம் இந்த மருந்தை வாங்க விலை கேட்டிருக்கிறார். ஸ்டாகிஸ்டின் விலை வெறும்520தானாம். ஸ்டாகிஸ்டுகளிடமிருந்து, டிஸ்ட்ரிப்யூட்டர், அங்கிருந்து ரீடெயில் மெடிக்கல் ஷாப்புக்கு வரும் போது இதன் விலை 2200. என்ன அநியாயம் பாருங்கள். இதை விடக் கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவமனையில் ஸ்டாகிஸ்டமிருந்து நான் மருந்து வாங்கி வருகிறேன் உபயோகியுங்கள் என்றால் முடியாது அவர்களது மருத்துக்கடையில் 2200 கொடுத்து வாங்கினால் தான் போடுவோம் என்கிறார்களாம். என்ன ஒரு பச்சை அயோக்கியத்தனம்.
மருந்து கம்பெனிகளுக்கு வியாதிக்கான மருந்துகளை தயாரிப்பதை விட அதன் மூலம் மருந்து விற்று கிடைக்ககூடிய லாபம்தான் முதலில் இருக்கிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கான மருந்துக்கு பேட்டண்ட் கொடுப்பதை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு வாழ்த்துகள். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் R&Dயில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள். இவர்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் மந்திய அரசு மருந்துக் கம்பெனிகளையும், அதற்கான விலையை நிர்ணையிக்கும் முறையையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தே ஆக வேண்டும்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
petrol rule the world now, next pharmacetical companys rule the wrold
ஓரளவு நியாயமான விலையில் நான்
ஒரு இடத்தில சில சித்த மருந்துகள் வாங்கி கொண்டிருந்தேன் . .
அவர்களும் தற்போது
கவர்சிகரமான பேக்கிங் மாற்றி
விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்
பேராசை . . .
go to the site www.medguideindia.com
Click on Drugs
Click on Brand
Click on Generics
Click on Matched brand with above constituents
Why the Pharmaceutical industry 'alone' should do social service?, people in the industry need not eat and live?
புது சட்டம் வந்தால் அது தங்களின் கொள்ளை இலாபத்தை பாதிக்கும் என்பதால் அவர் மருந்து கம்பனிகளால் கொல்லப்பட்டு விட்டார் என கூற படுகின்றது..போதிய சாட்சியங்கள் இல்லாமையால் யாரும் தண்டிக்க படவில்லை
A major portion is spent on this. because of the monopoly pricing of the medicines. All your statements are naked truth.
sundararajan S
அடுத்த பதிபவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
http://vitrustu.blogspot.in/
உங்கள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் கிடைக்கிறது என்றால், உங்கள் மருத்துவர் எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் மாற்றி விடுங்கள். ஏன் எனில் அவர், அதிகம் புழக்கத்திற்கு வராத, சோதனை ஓட்டத்தில் இருக்கும் மருந்துகளை பரிந்துரைக்கிறார். நீங்கள் தான் அந்த மருந்துக்கான சோதனை எலி.
anatomictherapy.org
நான் முழுதாக பின்பற்ற முடியாவிட்டாலும். பின்பற்றியவரையில் பயன் தெரிந்தது. உங்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன். பின்பற்றிவிட்டு பதிலளிக்கவும்.
தாமதிக்காதீர்கள்
anatomictherapy.org will not workout for people like cableji ...
They are more interested in knowing a lot about the outside world than to know basic things about how our body works or what actually causes Diabetes in the first place...
It looks like Mr.Shankar has been taking tablets for diabetes for the past many years but i am not sure if he really knows what actually causes diabetes...
anatomictherapy.org provides the answer for these basic questions..