Thottal Thodarum

Apr 5, 2013

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்.

 பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.


உதாரணமாய் எனக்கு நினைவு தெரிந்து ஷுகருக்காக காலையில் ஒர் மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்று சாப்பிட்டு வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பத்து மாத்திரைகள் கொண்ட ஸ்ட்ரிபின் அதிகபட்ச விலை 35 ரூபாய். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒர் முறை கொஞ்சம் கொஞ்சமாய் விலையேற்றி இன்று பதினைந்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிபின் விலை 108 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள் மூன்று வருடங்களில் இதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று. இதில் பத்து மாத்திரை இருந்த ஸ்ட்ரிப்பை பதினைந்தாக மாற்றியதால் பத்து மாத்திரையாக கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் மெடிக்கல் ஷாப்காரர்கள். வாங்கினால் பதினைந்தாகத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் பேசுகிறார்கள். ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் லூசுல கொடுத்தா மிஞ்சிப் போவுது. அதான். என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எப்படி நீங்க தெனம் சாப்பிட்டுத்தானே ஆகணும் வாங்கி வச்சிக்கங்க.என்று சொல்கிறார்.

 இதாவது பரவாயில்லை சுகர் மாத்திரை தினமும் சாப்பிடுவது. வேறு உடல் உபாதைகளுக்காக டாக்டர் பிரிஸ்கிரைப் செய்யும் மருந்துகள் அவரின் க்ளினிக்கின் பக்கத்திலிருக்கும் மெடிக்கல் ஷாப்பைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அதற்கு டாக்டர், மெடிக்கல்ஷாப், மருந்து கம்பெனியின் உள்குத்து ஒன்று இருக்கிறது. அதை விடுங்கள் அப்படி டாக்டர் எழுதிக் கொடுக்கும்  நான்கு வேலை மருந்துக்கு முழு ஸ்ட்ரிப்பையே வாங்கச் சொல்லும் மெடிக்கல் ஷாப்புகள் அதிகமாகிக்  கொண்டேயிருக்கிறது. உனக்கு தேவையோ இல்லையோ நான்கு வேலைக்கு பிறகு வேறு மருந்துகள் தேவையில்லாத போது நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எப்படி சரி என்றாகும்.

சமீபத்தில் நண்பரின் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு ஒர் ஆண்டிபயாட்டிக் மருந்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊசிகளுக்கு மேல் போட்டாக வேண்டிய கட்டாயம். அந்த மருந்தின் அதிக பட்ச விலை 2200. நண்பருக்கு தெரிந்தவர்  ஸ்டாகிஸ்டாக இருப்பதால் அவரிடம் இந்த மருந்தை வாங்க விலை கேட்டிருக்கிறார். ஸ்டாகிஸ்டின் விலை வெறும்520தானாம். ஸ்டாகிஸ்டுகளிடமிருந்து, டிஸ்ட்ரிப்யூட்டர், அங்கிருந்து ரீடெயில் மெடிக்கல் ஷாப்புக்கு வரும் போது இதன் விலை 2200. என்ன அநியாயம் பாருங்கள். இதை விடக் கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவமனையில் ஸ்டாகிஸ்டமிருந்து நான் மருந்து வாங்கி வருகிறேன் உபயோகியுங்கள் என்றால் முடியாது அவர்களது மருத்துக்கடையில் 2200 கொடுத்து வாங்கினால் தான் போடுவோம் என்கிறார்களாம். என்ன ஒரு பச்சை அயோக்கியத்தனம். 

மருந்து கம்பெனிகளுக்கு வியாதிக்கான மருந்துகளை தயாரிப்பதை விட அதன் மூலம் மருந்து விற்று கிடைக்ககூடிய லாபம்தான் முதலில் இருக்கிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கான மருந்துக்கு பேட்டண்ட் கொடுப்பதை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு வாழ்த்துகள். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் R&Dயில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள். இவர்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் மந்திய அரசு மருந்துக் கம்பெனிகளையும், அதற்கான விலையை நிர்ணையிக்கும் முறையையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தே ஆக வேண்டும்.
  கேபிள் சங்கர்

Post a Comment

19 comments:

Sudhar said...

when he writes about a valid issue, why people started advising on something else like what to eat or not, and type of treatment.

ragu said...

Weapons rule the world some yrs,
petrol rule the world now, next pharmacetical companys rule the wrold

குரங்குபெடல் said...

மிக நல்ல ஒரு பதிவு . .



ஓரளவு நியாயமான விலையில் நான்

ஒரு இடத்தில சில சித்த மருந்துகள் வாங்கி கொண்டிருந்தேன் . .

அவர்களும் தற்போது

கவர்சிகரமான பேக்கிங் மாற்றி

விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்





பேராசை . . .

sankar vijayakumar said...

Pl. try below website for same product in cheap rates.
go to the site www.medguideindia.com
Click on Drugs
Click on Brand
Click on Generics
Click on Matched brand with above constituents

Hari said...

Indha madhiri pala vishayam iruku. Sollite pogalam. Pesi pulamba dhan mudiyudhu. Ivanungala maattha or thandikka yaralayum mudiyala. Adhan avangaloda balam.....

Azhagan said...

You are being unfair. With all prices esp. fuel prices skyrocketing, do you really think pharmaceuticals can be sold at the same price?.
Why the Pharmaceutical industry 'alone' should do social service?, people in the industry need not eat and live?

Unknown said...

அண்மையில் உடல்நலகுறைவால் மயக்கமடைந்து விட்டேன்...தலையில் பட்ட அடிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர் என்னை அறிவுறுத்தினார்...அப்போது கவனித்த ஒரு விடயம் 4 தடவை ஒரு குறிப்பிட்ட ஆய்வு கூடத்தின் பெயரையே குறிப்பிட்டார்...அதனை விட கட்டணம் குறைவான நிலையங்கள் உள்ள போதும் விதி அங்கு போய் அதிக பணத்தை கொட்ட வேண்டும் என ஆகி விட்டது...மருத்துவருக்கு சம்பளத்துக்கு மேல் கிம்பளம் அங்கு இருந்து வருவதாக கேள்வி..அதனை விட மருத்துவர் விருந்து வைபவங்கள் (தண்ணி பார்ட்டி)ஔடத நிறுவனங்களால் ஏற்பாடு செய்ய படுகின்றது ......தேவை படின் வீட்டு சாதன பொருட்கள்,வெளிநாட்டு சுற்றுலா என்பவையும் கம்பனிகள் டாக்டர்கலக்கு ஏற்பாடு செய்யும் .

Unknown said...

40 வருடங்களக்கு முன்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் மருந்து சீட்டில் மருத்துவர்கள் மருந்து பெயர்களை மட்டுமே எழுத வேண்டும்,அவ்வாறு இல்லாது குறிப்பிட்ட நிறுவன தயாரிப்பு மருந்தின் பெயரை எழுதுவதை தடை செய்யும் சட்டமூலத்தை தயாரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தார்....ஆனால்,அப்பணியில் ஈடு பட்டிருக்கும் போதே அவர் கொல்லப்பட்டு விட்டார்..

புது சட்டம் வந்தால் அது தங்களின் கொள்ளை இலாபத்தை பாதிக்கும் என்பதால் அவர் மருந்து கம்பனிகளால் கொல்லப்பட்டு விட்டார் என கூற படுகின்றது..போதிய சாட்சியங்கள் இல்லாமையால் யாரும் தண்டிக்க படவில்லை

Unknown said...

As a sugar patient for 25 years i too agree with your arguments. Why the Government not interfering in deciding the rate of this medicines?
A major portion is spent on this. because of the monopoly pricing of the medicines. All your statements are naked truth.
sundararajan S

P.K.K.BABU said...

dear cableji please please visit dpco(drug price control order) in google and you will find the related news about your today`S post and also visit pharmabiz.com babu.e

arul said...

very informative post . you had created an awareness

VOICE OF INDIAN said...

உண்மை அமர்க்களம் சரியான விழிப்புணர்வுப் பதிவு வாழ்த்துக்கள் அதுமட்டும் இல்லை மருந்து கம்பெனி காரர்கள் டாக்டருக்கு கமிசன் தருகிறார்கள் எவ்வளவு தெரியுமா 100 ரூபாய்க்கு மருந்து எழுதினால் 35 ரூபாய் கமிசன் இத்துடன் கடைக்காரர் லாபம் எல்லாம் நம் தலையில் இந்தியன் குரல் தகவல் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு தகவல் கலைக் கேட்டதன் விளைவாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெளியான மிகப்பெரிய மோசடி காலாவதி மருந்து விற்பனை பெரிய அளவில் பேசப்பட்டது வெள்ளூரில் ஒரு கம்பெனிக்காரர் பிடிபட்டது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று எண்ணுகிறேன் தற்போதைய நிலை என்ன அவர் சுதந்திரமாக வெளியில் எந்த ஊடகமாவது பேசுகிறதா எல்லாம் விலைபோய்விட்டார்கள் தோழரே இருப்பினும் இந்தியன் குரல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது மருந்துகளில் போலி ஒரே பெயர் ஒரே கம்பெனி மருந்துகள் ஒவ்வொரு இடத்திலும் மருந்தின் அளவு மட்டும் வித்தியாசம் செய்து ஏமாற்றுகிறார்கள் கூர்ந்து கவனியுங்கள் இது தொடர்பான உங்களுக்கு தெரிந்ததை மற்றவருக்கும் சொல்லுங்கள் இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்வதை தொடருங்கள் நாளை நாடு உங்களை வணங்கும்

அடுத்த பதிபவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

http://vitrustu.blogspot.in/

kailash said...

In Coimbatore many medical shops are selling medicines for discounts ranging from 10 - 20 % . It benefits consumers , but would they be selling real medicines or just for the sake of discounts would they be going for fake medicines . Iam not complaining about the shops , but just wanted to make sure patients get proper medicines . Does anyone know about this ? If they are proper medicines why not rest of the cities cant follow this strategy

ஸ்ரீநாராயணன் said...

Cable ...
உங்கள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் கிடைக்கிறது என்றால், உங்கள் மருத்துவர் எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் மாற்றி விடுங்கள். ஏன் எனில் அவர், அதிகம் புழக்கத்திற்கு வராத, சோதனை ஓட்டத்தில் இருக்கும் மருந்துகளை பரிந்துரைக்கிறார். நீங்கள் தான் அந்த மருந்துக்கான சோதனை எலி.

Anbazhagan Ramalingam said...

சரியான பதிவு. நன்றீ

DaddyAppa said...

I was taking medicine for the last 5-6 months for a stomach issue. No change and I would have spent around 3-4k. Then consulted one of my doctor friends. He said "There is no issue in your report/health. Avoid eating foods that take too much of time to digest" and he prescribed one medicine which will cost only Rs.60 a month. Now, after 10 days...I'm much better and happy. We need to check with at least 2-3 doctors even before taking some medicine/treatment. Visit an experienced doctor, preferably of age more than 55. They still have the ethics of medical science. I feel sad for the next generation. We need to do something.

Srinivasan C said...

Try
anatomictherapy.org

நான் முழுதாக பின்பற்ற முடியாவிட்டாலும். பின்பற்றியவரையில் பயன் தெரிந்தது. உங்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன். பின்பற்றிவிட்டு பதிலளிக்கவும்.

தாமதிக்காதீர்கள்

kvn said...

Srinivasan,

anatomictherapy.org will not workout for people like cableji ...

They are more interested in knowing a lot about the outside world than to know basic things about how our body works or what actually causes Diabetes in the first place...

It looks like Mr.Shankar has been taking tablets for diabetes for the past many years but i am not sure if he really knows what actually causes diabetes...

anatomictherapy.org provides the answer for these basic questions..

cybercoolie said...

Good article ji.....please write more like these articles. .rather writing reviews for some mokkai tamil movie's