Thottal Thodarum

Aug 28, 2008

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-3

ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்..

அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து

" ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்.

நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. " என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, "

" சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.."

"பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா?


அவள் சற்று தயங்கி.. "சார் நீங்க திரும்பவும் உங்க பிராஞ்சுக்கு போய் அங்க கட்டிட்ட்டு, கால் சென்டர்ல போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா .. போதும், உங்களுடய NOC நோ.. அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வந்துடும்"

என்றவுடன் எனக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை..
"சற்றே கடுப்புடன் மேடம் அவங்க தான் இங்கே அனுப்பிச்சாங்க..."

அதற்கு அவள் சற்றும் அசராமல்.. "அது சரிதான் சார்.. இங்க் அமொண்ட் மற்றும் தான் சொல்வோம்.. அதுக்குத்தான் இங்க அனுப்சாங்க.. ஓண்ணும் ப்ராப்ளம் இலல.. நீங்க உடனடியா கட்டிட்டா இன்னையோட முடிஞ்சிடும்.. அதுவும் இரண்டு மணிக்குள்ளே.. இல்லேன்னா நாளைக்கு கட்டினீங்கன்னா.. இண்ட்ரஸ்ட் எக்ஸ்ட்ரா ஆகும்"

என்றவுடன் நாளூக்கு ஏறும் வட்டியை நிணைத்து.. அவளீடம் மறுதலிக்காமல் உடனடியாய் திரும்பவும் தி.நகர் வந்து, பேங்க் முடிய் ஓர் பத்து நிமிஷம் இருக்கும் முன் வந்து பணத்தை கட்டி, அங்கிருக்கும் அதிகாரியிடம், சொல்லி, கால்சென்டரிலி ல் சொல்லி விட்டு.. ஓரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்டே.ன்.. அப்பாடி ஓரு கடனை அடைத்தாகி விட்டது.. நான் மீண்டும் அந்த அதிகாரியிடம் வந்து..
" சார் .. சரியா ஓரு பத்து நாளில் பேப்பர் வந்திருமில்ல.. என்றேன்..

சிரித்தபடி” சார் பத்து நாளெல்லாம் ஓரு பேச்சுக்குத்தான்.. மேக்ஸிமம் ஓரு வாரத்துல வந்திடும்.. உங்களூக்கு இந்த லோன் சாங்ஷன் ஆன ஸ்பீட வச்சே உங்களூக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்று பெருமையாய் சொல்ல, நானும் .மனதினுள் சும்மா சொல்லக்கூடாது.. ஓரு வாரத்தில சும்மா கில்லி மாதிரியில்ல சொளயா கொடுத்தானுங்க.. என்று நினைத்துக்கொண்டு. கிளம்பினேன்/.


நானும் இதோ வரும், அதோ வருமென,, தீபாவளி, பண்டிகை யெல்லாம் தாண்டியும் வராது போக,, பெஸ்டிவல்ல ஏதாவது லேட் ஆயிடுக்க்ம்ன்னு நினைச்சுக்கிட்டு கிட்டத்தட்ட மறந்தேபோனேன். தீடீர்னு ஓரு நாள் ஞாபகம் வந்து தேதிய பார்த்த போது, ஓரு மாசம் ஆயிட்டுதுன்னு தெரிஞ்சுது,, சரின்னுட்டு.. கால்செண்டர்ல போன் பண்ணீ கேட்டா.... அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கி வாரி போட்டது.. அவன் சொல்றான்.சார்.. உங்க அக்கவுண்ட இன்னமும் ஆக்டிவாத்தான் இருக்குன்னான். அது எப்படி அதான் நான் முழு பணத்தையும் கட்டியாச்சே.. எப்படின்னு கேட்டா அவன் சார் அதை பத்ட்தி நீங்க நெல்சன் மாணிகம் ரோடுக்கு போய் தான் கேட்கணும்,சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம.. யோசிகிட்டு இருந்தப்போ.. அவன் இதை ஓரு கம்ப்ளைண்டா எடுத்திக்கறாதா சொன்னான். சரின்னு சொல்லி நம்பர் வாங்கிட்டு எனக்கு அடுத்த ரெண்டு நாள் சூட்டிங் இருந்ததால.. போகமுடியல..

அப்போ ஓரு போன் வந்திச்சு.. அது அந்த பேங்கிலேர்ந்து தான். சார் ஓரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு.. என்ன/ அதுதொண்ணுமில்ல.. அங்க் உங்களுக்கு க்ளோசிங் கொடுக்கிறப்போ க்ளோசிங் சார்ஜ் சேக்காம கொடுத்திட்டாங்க.. அதுனால நாங்க க்ளோஸ் பண்ணல.. ன்னு சொன்னது, தான் மிச்சம் எனக்க்கு கோபம் தலைக்கேறி நீங்க நினைச்சு நினைச்சு அந்த பணம் இந்த பணம்னு சொல்வீங்க.. பணம் இருக்கிற்வன்னா ஓகே.. இல்லாதவன் என்ன பண்ணுவான்.. என்று கேட்டதும், அதில்லாம் சரிதான் சார் அதான் சாரி சொல்றேமில்ல அதுக்கு மேல என்ன செய்ய முடியும்.. என்றான். நான் அப்படின்னா.. நானும் சாரி கேட்டிக்குறேன். என்னால பணம் கட்ட முடியாதுன்னு சொன்னது.. அவன் அங்க் கோபத்துல சார்.. அதெப்படிசார் நீங்க சொல்ல முடியும்.. நீங்க கடட வேண்டிய பணத்த த்தானே கேட்கிறோம்..நீங்க கட்ட்லன்னா உங்களூக்குதான் வட்டி போடுவோம்ன்னு சொன்னதும். எனக்கு இன்னம் கோபம் தலைக்கேறி.. மிஸ்டர்... நான் பணம் கட்டமாட்டேன்.. நான் இப்பவே கன்சூமர் கோர்டுக்கு போறேன்னு சொன்னதும். சார்.. தப்பு என்னவோ எங்களுதுதான்... அதுக்கென்ன பண்றது ஏதோ.. நடந்தது நடந்து போச்சு பணத்தை கட்டிட்டு கையோட வாங்கிட்டு போயிடுங்க.. என்றான்.

எனக்கு இவன் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவிலை..யாரோ ஓருவர் செய்த தவறுக்கு சம்பந்தமேயில்லாத ஓரு வர் எதற்காக நஷ்டப்ப்டவேண்டும்.. இதை ஏற்ககூடாதென்று. முடிவெடுத்து மேற்கூறிய கருத்தை கூற. போனில் பேசிய நபர்.. மனசாட்சி உள்ளவர் போலும்.. சற்றே யோசித்து... சரி சார்.. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. என்றார்.. நீங்க சொன்ன மாதிரி.. நான் கட்ட வேண்டிய பணம்தான்.. ஆனா அதை கட்ட வந்த அன்னைக்கு நீங்க சரியான அமொள்ண்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் கட்டிட்டு போயிருப்பேன்.. சரி.. தவறு நடக்கறது சகஜம்தான்.. அதை கண்டுபிடிச்சு ஓரு இரண்டொருநாள்ல சொல்லியிருந்தீங்கன்னா.. பரவாயில்லை.. நானா ஓரு மாசம் வெயிட் பண்ணி, கம்பிளைண்ட் பண்ணி அதுக்கப்புறம் நீங்க.. சொன்னதுனால, நான் முழு பணத்தையும் கட்ட மாட்டேன். ஓரு ஆயீரம் ரூபாய் குறைச்சுத்தான் கட்டு வேண். என்றேன்..

அதெப்படி சார்.. அந்த பணத்த அந்த டேபிள் இன்சார்ஜிடம் தான் பிடிப்பாங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. பேங்கோ., அல்லது அந்த நபரோ இதுக்கான நஷ்டத்த ஏத்துகிட்டுத்தான் ஆகணும்.. என்ர்றேன் பிடிவாதமாய்... சொல்லி போனை வைத்தேன்.

இரண்டு நாள் பொறுத்தேன்.. பிறகு அவன் நம்பரை காண்டேக்ட் செய்த போது சாரி சார் நான் கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.சொல்லி அந்த மேடத்திக்கிட்ட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ஓண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க.. எதுக்கும் நீங்க. நேரா வந்தா மேட்டர் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்.. என்றது, கட்டூ.. நெல்சன் மாணிக்கம் ரோடு.. சில அரை மணிநேர காத்திருப்புக்குபின் அந்த குறிப்பிட்ட பெண்மணியை பார்க்க நெருக்கிய போது.. அவர் என்னை பார்த்து.. சாரி லஞ்ச் டைம் என்றார்..

நான் கோபத்தின் உச்சிக்கே சென்று. . ஆங்காரமாய்.. அந்த நடு ஹாலில் கத்த, அவர்.. சுற்றும் முற்றும் பார்த்து,, என்ன சார் இண்டீஸண்டா கத்திறீங்க.. சரி சரி உள்ள போய் உட்காருங்கன் சொன்னார்.. நானும் அவர் சொன்னதை கேட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.. அவர் மெல்ல வந்து என்னைபார்த்து.. இப்ப என்ன சார் வேணும்..சும்மா இதுக்கெல்லாம் ப்ரச்சன பண்றீங்க.. சாரி.. நான் பிரக்னெண்ட் லேடி கால்லலெலாஅம் விழமுடியாது.. சரியா.. இப்ப எப்ப பணத்தை கட்டுறீங்க.. என்றார்...என் கோபம் எரிமலையாய் உள்ளூக்குள் கனன்ற போதும்..மெதுவாக.. சாரி,, என்னால முழு பணதஹை கட்ட முடியாது... அப்ப என்னால ஓண்ணும் பண்ண முடியாதென்று.. அவர் நடக்க முற்ப்பட,

நான் அவரிடம் மேடம்.. உங்க் ஹையர் ஆபீசரை பார்க்க வேண்டும், ஏன்.. என்றார்.. இல்ல நான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கறத்துக்கு முன்னாடி அவரை பார்த்து பேசண்னும் என்றேன்.. அவர் சற்று பதட்டட்துடன். போலீசா... எதுக்கு சார்.. இதுக்கெல்லாம். நீங்க போலீஸ் கோர்ட்டுன்னு போனீங்கன்னா.. அவ்வளவு தான்..எல்லாத்தை யும் பேசி தீத்துக்கலாம்.. என்றார்.. அப்ப சரி என்றேன்.. சார்... ஓரு மனிதாப மான் முறையில் எனக்காக பணத்தை கட்டக்கூடாதா.. ப்ரக்ணண்ட் லேடி கேக்கிறேன்... அவரை நிதானமாய் பார்த்து,, சரி மேடம்.. நான் பணம் கட்டறேன்.. ஆனா இன்னைக்கில்ல.. நாளைக்கு.. ஏன்னா.. நீங்க தான் மனிதாபமானத்தை பத்தி பேசினதாலே.. ஓரு ஹெல்ப் பண்ணுங்க.. ஓரு நாலாயிரம் இருந்த்தா.. எனக்காக,,, கட்டுங்க.. அதுக்க்கு உங்களூக்கு இப்பவே.. செக் தந்துடறேன்.. ஓரு நாள் தானே.. இது கூட உங்க தப்புனால தான் வந்திருச்சு.. அதனால ஓரு நாளுக்கு மட்டும் எனக்காக ஓரு நாலாயிரம் ரூபாய் கொடுங்களேன்..ன்னு சொன்னவுடன்.. அவர் என்னை பார்த்து.. என்ன விளையாடறீங்களா..என்றார்.. இல்ல மேடம் சீரியஸாத்தான் சொல்றேன்..நீங்க் போராடுறது பேங்குக்கான பண்த்துக்காக.. அதுவும் நீங்க பண்ணூன தப்புனால.. பேங்க்கு எனக்கு சார்ஜ் பண்ணுது. ஆனா கட்டப்போற பணம் என் பணம் நான் உழைத்து சம்பாதிச்ச பணம்.. இல்ல நான் ஓரு ரூபாய் குறைச்சு கட்டுணா.. உங்க் பேங்கோ.. அல்லது நீங்களோ .. விடுவீங்களா? உங்களுது மட்டும்தான் பணமா?

எதிர் முனை மெளனம் சாதித்தது.

அதனால.. நான் ஓரு முடிவுக்கு வந்திட்டேன்.. நான் ஆயிரம் ரூபாய் தர்ரேன்.. மிச்சம் மூணு ஆயிரம் ரூபாய நீங்க கட்டுவீங்களோ.. பேங்க் ஏத்துக்கும்மோ எனக்கு தெரியாது.. ன்னு சொன்னதும்..

அந்த பெண் மணி அது வரை கோபத்தில் பேசினாலும் மரியாதையாய் பேசியவர்.. பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை ன்னு தெரிஞ்சதும்.. நீ,,,வா... போன்னு.. ஓருமையில் பேச நான் சற்றும். மரியாதை தவ்றாமல்.. மேடம். இது வரைக்கும் என் ப்ணததை கொடுப்பதற்க்காக.. நான் கோபமாய் பேசியபோதும், நான் கொஞ்சம்கூட மரியாடதை குறைவாக் பேசவில்லை.. ஆனால் உங்கள் பணம் போகப் போகிறதென்று தெரிந்தவுடன்.. நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள்.. பரவாயில்லை.. என்று.. கூறி.. அவர். என்னை அடுத்த நாள் வர வைத்து. அவர் மூவாயிரம் ரூபாய் கட்ட,, நான் ஆயிரம்.. கட்ட..பிரச்சனை முடிவுக்கு வந்தது.

”உங்கள மாதிரி ஓரு ஆளை நான் பார்த்ததேயில்லைன்னு சொன்னாள்.

“உங்கள பணம் கட்ட வச்சது எனக்கு பெரிசில்ல.. இந்த நிமிஷத்திலேர்ந்து இனிமேயாவது நீங்க மத்தவங்களோட பணத்துலயும், வாழ்க்கையிலயும் விளையாடமாட்டிங்கன்னு நம்பறேன்.
என்று கூறிவிட்டு வெளியே வந்தபோது எதிரே கச்சலாக ஓருவர் தெலுங்கு மீசையுடன். என்னை மறித்து “சார்.. லோனுக்கு அப்ளை பண்ணினேன் சார்.. ஆனா எடுக்கல.. அவங்க செக்கும் அனுப்பல.. ஆனா மாசா மாசம் பணத்தை மட்டும் என் அக்கவுண்டலேர்ந்து எடுத்துக்கிறாங்க.. அத திருப்பி கேட்டா அங்க போ இங்க போன்னு அலையவிடறாங்க.. என்ன செய்யறதுன்னே தெரியல..” என்றேன்.

இந்தியாவில் மிக பெரிய பாங்க். ஹெ.டிஎப்.சி பேங்க்.
Post a Comment

1 comment:

Unknown said...

இவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லையா? நான் ஒரு கடன் அட்டைக்கு இவர்கள் படித்திய படு இருகிறதே அம்மா அம்மா ...