Thottal Thodarum

Aug 9, 2008

"சத்யம்" -சக்ஸஸ் ரகசியம்

சத்யம் விஷால், நயன் தாரா நடிக்திருக்கும் படம். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம் மிக அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த பதிவு அதை பற்றியல்ல. சத்யம் திரையரங்கத்தை பற்றியது. எல்லா தியேட்டரிலும் விட அதிக வசூலை எப்படி இந்த தியேட்டர் வளாகம் மட்டும் கொடுக்கிறது? அதிலும் விலை அதிகமுள்ள டிக்கெட்டுகள் இருந்தும் எப்படி இது சாத்தியம். இந்த பதிவு சத்யம் வளாகத்துக்கான விளம்பரம் அல்ல, உண்மை.

நான் எப்போதும் சத்யம் தியேட்டரிலேயே பட்ம் பார்பதை விரும்புவன். ஏனென்றால் அதி நவின
இண்டீரியஸ், சிறந்த சவுண்ட், டிஜிட்டல் ப்ரொசக்ஷன், எல்லாவற்றிக்கும் மேலாக, சிறந்த உபசரிப்பு.

சமீபத்தில் "கிஸ்மத் கனெக்ஷன்" என்ற இந்தி படத்தை பார்க சென்றிருந்தேன். படம் ஆரம்பித்து ஓரு பத்து நிமிடங்களீல் திடீரென்று தேய்ந்து போன ரிக்கார்ட் கணக்காய் படம் ப்ரீஸ் ஆகி "மறுக்கா.. மறுக்கா" அதே டயலாக்கில் நின்று போனது.

படம் நின்று போனதற்க்கு காரணம் டிஜிட்டல் சர்வர் டவுன் ஆனது தான். இந்த மாதிரி படம் நின்று போனால் தியேட்டரில் விசில், கத்தல் எல்லாம் நடக்கும் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை, படம் நின்றவுடன் இரண்டு ஆட்கள் கையில் ஓரு ஸ்பீக்கருடன் வந்து படம் த்டை ஏற்பட்டதற்கு வருந்தி, ஐந்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, சென்றார்கள். சரியாய் 8 நிமிடத்தில் படம் ஆரம்பித்தது. ஆனால் "மறுக்கா" படம் அதே இடத்தில் நின்று போக, இந்த முறை பார்வையாளர்கள் சிறிது பொறுமையிழந்து அங்கே வந்த ஆட்களீடம் என்ன ஆகி விட்டது என்று கேட்க, அவர்கள் மீண்டும் சர்வர் ப்ராப்ளம்தான். வேறு ஓரு சர்வர் இன்னும் 15நிமிடங்களில் வந்து விடும். என்று கூறிவிட்டு, அங்கிருந்த எல்லோருக்கும் ஓரு லார்ஜ் சைஸ் கோக் மற்றும் ஸ்நாக்ஸ் தர, அதை கொடுத்துவிட்டு, படம் பார்கக விரும்புவர்கள் உள்ளே சென்று அமரலாம். வேண்டாம் என்று நினைப்பவர்கள் கவுண்டரில் சென்று பணத்தை வாபஸ் வாங்கி கொள்ளலாம் என்றவுடன் நான் படம் பார்க இஷ்டமில்லாமல் பணத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு பார்க்கிங்கில் பைக் எடுத்து கிளம்பினேன்.

அங்கிருந்த ஸ்டாப் ஓருவர் என்னை தடுத்து சார் நீங்கள் கேன்சல் ஆன படத்திலிருந்து தானே போகிறீர்கள்? இந்தாருங்கள் உங்கள் பார்கிங் பணம் என்று கேட்டு கொடுத்தார். 50ரூபாய் டிக்கெட்டை புதிய படத்துக்கு 150ரூபாய் கொடுத்து ஏசியும் இல்லாமல், பேனும் இல்லாமல் ,மிக மோசமான முகசுழிக்க வைக்கும் பல தியேட்டர்களூக்கு மத்தியில் இப்படி ஓரு தியேட்டரா என்று என்னுடன் வந்த நண்பர் அதிலும் தியேட்டரில் ஸ்டால் வைத்திருப்பவர் அதிர்ச்சியடைந்து, இனிமே படம் பார்த்தா இந்த தியேட்டரில் தான் படம் பார்க்கணும் என்றார்.

இப்போது புரிகிறதா? எப்படி சத்யம் தியேட்டரில் மற்றும் இவ்வளவு க்லைக்ஷன் என்று...
Post a Comment

2 comments:

கிரி said...

முக்கியமான காரணம் காலி பயல்கள் கூட்டம் இல்லாததும் அசிங்கமான கமெண்ட் அடித்தால் உடனே பாது காவலர்களால் வெளியேற்றப்படுவதும், பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை மக்கள் அதிகளவில் சென்று வர காரணம்.

Cable சங்கர் said...

அதுவும் உண்மை தான் நண்பரே.