Thottal Thodarum

Aug 22, 2008

முதன் முதலாய் பார்த்த படம் ?

எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. அந்த படங்களை திரும்பவும் பார்க்கும் போது நமக்கு மலரும் நினைவுகள் நிறைய மலரும்.

எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும்.

திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான்

இப்போது வளர்ந்த பிறகு எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றாலும், அப்போது ஏன் பிடித்த்து என்று யோசித்து கொண்டிருக்கும் போது, என் அம்மா அந்த படத்தின் கிளைமாக்ஸில் யானை எல்லாம் வரும் அதனால் உனக்கு ரொம்ப பிடிச்சது என்றாள்.

இது போல் நீங்கள் பார்த்த், முதல் படத்தை பற்றியும், இப்போது உங்கள் அனுபவங்களை பற்றி ஏதாவது சொல்லலாமே..
Post a Comment

2 comments:

ers said...

நான் பார்த்த படம் தங்கப்பதக்கம் என்று ஞாபகம். அதற்கு முன்பு என்ன படத்திற்கெல்லாம் போனேன் என்று தெரியவில்லை.

Cable சங்கர் said...

நன்றி டமில் சினிமா..
அந்த படத்தை மறுபடியும் பார்க்கும் போது உங்க்ளுக்கு ஏற்படும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே?