இளையராஜா, மணிரத்னம்
இந்த படம் ராஜா- மணி காம்பினேஷனில் வந்த ஒரு முக்கியமான படம். மணி ராஜாவுக்காகவே எடுத்தார் போல் சில காட்சிகளை எடுத்திருப்பார். படம் முழுவதும் ராஜாவுக்கும் மணிக்கும் யாருடையது பெஸ்ட் என்று ஒரு போட்டி இருந்து கொண்டேயிருக்கும். இப்படத்தின் வெற்றியில் மணி, கமலுக்கு எவ்வளவு பங்கிருக்கிறாதோ, அதே அளவு பங்கு ராஜாவுக்கு உண்டு.
தென்பாண்டி சீமையிலே என்கிற பாடலை படம் முழுவதும் ஒரு பின்ணனி இசையாகவே படத்தின் மூட்டுக்கு ஏற்றார் போல் உபயோகபடுத்தியிருப்பார். அதே போல் படத்தில் வ்ரும் டிரான்ஸிசன் காட்சிகளுக்கு எல்லாம் ஒரு வயலின் வைத்து நகர்த்துவார். பிண்ணனி இசை என்பது வெறும் வாத்தியங்களின் ஒசை மட்டுமல்ல, எங்கெங்கே ஓசையில்லாம் இருக்க வேண்டும் என்றும் சொல்லி கொடுத்த படம். நிறைய இடஙக்ளில் எபக்டுகளிலேயே படத்தை நகர்த்தியிருப்பார்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி. நாயக்கர் ஏ.சியை பார்க்க அவரது ப்ளாட்டுக்கு போய், வேலைக்காரியிடம் போய் ஏசியை கூப்பிடு என்று சொல்லிவிட்டு காத்திருப்பார். அந்த நேரத்தில் வீட்டை சுற்றி பார்வையை ஓட்ட, ஒரு இடத்தில் பார்வை நிலைத்து நிற்கும், அப்போது கமல் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு மேலும் உற்று பார்ப்பார். அவரது பார்வையிலிருந்து கேமரா பயணித்து, அங்கேயிருக்கு ஒரு போட்டோவில் போய் நிற்க, அந்த இடைபட்ட நேரத்தில் “டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒரு ஒலியை எழுப்பி, கமலுக்கு ஏற்பட்ட குறுகுறுப்பை நமக்கும் ஏற்படுத்தி, படத்தில் முடிக்கும் போது, அது அவருடய பெண் ஏசியுடன் இருக்கு ப்டம் இருக்க, தென்பாண்டி சீமையிலே டூயூனை இம்முறை ஷெனாயில் தோய்த்தெடுக்க, கமல உருகி நிற்கும் காட்சி என்னால் மறக்கவே முடியாத காட்சி. கமல், மணி, ராஜா மூவரும் தங்களுடய சிறநத பங்களிப்பை அளித்திருப்பார்கள்
இன்னொரு காட்சியில் கமலின் மகள், ஜனகராஜ் ஒரு ஆளை அடிப்பதை பார்த்து விட்டு வீட்டிற்கு வ்ந்து கமலிடம் கேட்பார். அதற்கு கமல் அவன் தப்பு செஞ்சான், அதுனால அடிச்சேன் என்று சொல்ல, மகள் ஜனகராஜ் செய்வது தனக்கு தவறாக பட்டதால் அவரை நான் அடிக்கிறேன் என்று அடிக்க, மிக அருமையாக நடிக்கபட்டு, வசனம் எழுதப்பட்டு, திறமையாய் இயக்கப்பட்ட காட்சி, இந்த காட்சியை சவுண்ட் ம்யூட் வைத்து பாருங்கள், பின்னர் அதே காட்சியை பிண்ணனி இசையோடு பாருங்கள் அப்போது தெரியும் ராஜாவின் வீர்யம். .
அதே போல் கமல், சரண்யா கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் காட்சியில், சரண்யா மணியடிக்கும் காட்சியில் அவர் எகிறி அடிக்கும் போது, மணி சத்தத்துடன், ‘டொய்ங்’ என்று சிதார் ஒலியை கூடவே ஒலிக்க செய்து, அவளீன் துறுதுறுப்பையும், வெகுளிதனத்தையும் வெளிகாட்டுவார்.
பிண்ணனி இசையில், அதிலும் குறிப்பாக சண்டைகாட்சிகளில், நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு வரும் ஆற்றல் எனக்கு தெரிந்து இளையராஜாவை தவிர வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கமலுக்கும், ப்ரதீப் சக்திக்க்கும் நடக்கும் சண்டை காட்சியை ஒரு பாருங்கள், அந்த காட்சியில் அவர்களுக்குள் காட்சியில் வெளி கொணரமுடியாத வெறியையும், கோபத்தையும் இளையராஜா தன்னுடய பிண்ணனி இசையில் கொண்டு வந்திருப்பார்.
பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.
இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இதையும் சேர்த்துருங்க சார்... இல்ல அடுத்த பகுதியிலயாவது எம்பெட் பண்ணிருங்க!
இதையும் சேர்த்துருங்க சார்... இல்ல அடுத்த பகுதியிலயாவது எம்பெட் பண்ணிருங்க//
இதைத்தான் இந்த கட்டுரையின்மூலம் எதிர்பார்த்தேன் வெங்கி.. இந்த கட்டுரையிலேயே ஆட் செய்துவிட்டேன்.
மிகவும் உள்ளார்ந்து ரசித்திருக்கிறீர்கள்..இ.ராஜாவின் இசையை...எனக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்...பலமுறை ரசித்திருக்கிறேன்...இன்றும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...மறுபடியும் அனுபவம் உங்களின் பதிவின் மூலம்...
நாயக்கர், ஏ.சியைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் காட்சியும், சரண்யா மணியடிக்கும் காட்சியும் இசையோடு எனக்கும் மிகப் பிடித்த காட்சிகள்...
நல்ல பதிவுக்கு நன்றி...
sankara4@gmail.com//
நிஜமா தானே!
காமெடி கீமெடி பண்ணலையே!
காமெடி கீமெடி பண்ணலையே!
/
serious val..
sankara4@gmail.com////
என் பதிவுக்கு ஆள் பிடிக்கனும்..விளம்பரம் பண்ணிடலாமா?
ஹை பிச்.
ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...
ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...
இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.
உண்மை :)
wishes
:)
http://gkpstar.googlepages.com/
am a follower of u
இளையராஜா இல்லையென்றால் என்று சொல்லுங்கள் சங்கா..
நன்றி நாஞ்சில் நாதம்.
//
இப்படி சொல்லி கொண்டே போகலாம் வெங்கி..
ஆமாம் பாலாஜி.. ஒரு படத்தின் பிண்ணனி இசையை வைத்தே அது என்ன படம் என்று சொல்லிவிடுவேன். அது இளையராஜாவின் இசையாக இருந்தால்.
நாயக்கர், ஏ.சியைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் காட்சியும், சரண்யா மணியடிக்கும் காட்சியும் இசையோடு எனக்கும் மிகப் பிடித்த காட்சிகள்...
நல்ல பதிவுக்கு நன்றி.//
மன்னிக்கவும் தமிழ் நெஞ்சம்.. கொஞ்சம் வேலையாகிவிட்டது. அதனால் எழுத முடியவில்லை.. அத்தோடு இந்த வீடியோகளை தேர்ந்தெடுக்க கொஞ்சம் நேரம் தேவைபட்டது. உஙக்ள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
//
மிக்க நன்றி வந்தியத்தேவன். கோலங்கள் கூட முடிந்துவிடும்.
நன்றி கலையரசன்
11:59 AM//
பின்னூட்டத்திலேயே தனிச்சு நிக்கிறீஙக் தறுதலை..
//
உஙக்ளுக்குன்னா டிஸ்கவுண்ட் போட்டுறலாம்
//
நன்றி கோஸ்ட்
நன்றி அச்சிலீஸ்
ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...
//
என்னன்னே அப்படி சொல்லிட்டீங்க.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரியான ரசனை..
மிரட்டல் மாதிரி தெரியுதே அசோக்..:)
wishes
:)//
நன்றி கார்த்திக் பிரபு..
நன்றி இது நம்ம ஆளூ
ஹரி ராஜகோபாலன்
கலக்கல் தல ;)
அருமை, ராஜா பத்திப்பேச வார்த்தையில்ல்லை, ”பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.”
சத்தியமான உண்மை, பல பக்கங்கள் வசனம் பேசினாலும் உணர்த்த முடியாத காட்சியை, ராஜா இசைமட்டுமே நம்மை உருக்குமளவிற்கு கொண்டுசெல்லும்
ம்ம், ராஜா ஒரு இசை கடவுள்,

கண்டிப்பாக