Thottal Thodarum

Jun 26, 2010

களவாணி

kalava2 களவாணி போக்கிரித்தனம், செய்து திரியும் இளைஞர்களை குறித்து சொல்லும் தஞ்சை மாவட்டத்துக்காரர்களின் சொல்வடை. வழக்கமாய் உழன்று சேறாகிய மதுரையிலிருந்து சினிமா களத்திருந்து, தஞ்சைக்கு மாற்றியதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விமல் +2 பெயிலாகிவிட்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை குடித்தும், சீட்டாடியும், பெண்களை சைட் அடித்துக் கொண்டும், நண்பர்களூடன் களவாணித்தனமான வேலைகளை செய்து கொண்டு திரியும் இளைஞன். இவன் இப்படி இலக்கில்லாம திரிவதை அவர் ஜாதகத்தின் காரணமாய் தான் செய்கிறான் என்று சாக்கு சொல்லிக் கொண்டு அவனுக்கு ஆதரவு கொடுக்கும் அம்மா சரண்யாவும், அவன் தங்கை.


kalava1
படத்தின் முதல் பாதி முழுவதும் விமலும், அவன் நண்பர்களும் சேர்ந்து களவாணித்தனம் செய்வதும், குடித்துவிட்டு கலாட்டா செய்வதும், காசுக்காக ஆட்டையை போடுவதுமாகத்தான் போய்ய்ய்ய்ய்ய்ய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு விஷயஙக்ள் ரசிக்க முடிந்தாலும், படம் முழுவதும் லைவாக எடுக்கிறேன் என்கிற கிளிஷேவை விட முடியாமல் ஒரே ப்ரேமில் நாலைந்து பேர் பேசுவதும், ஓவ்ர்லாப்பில் கத்துவதும் ஸ்…. முடியலப்பா.. தயவு செஞ்சு யாராவது ஒருத்தரை பேசவிடுங்களேன். எல்லா நேரத்திலேயும் இயல்பான வாழ்வில் நான்கைந்துபேரா? யார் சொல்வதையும் கேட்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?.

பின்பு வழக்கமாய் ஒரு பெண்ணை பார்த்ததும் காதல் வருகிறது. ஒட்டாத காதல் பார்த்த முதல் நாளே என்னை கட்டிக்கிறேன்னு சொல்லு என்று கேட்பது ஓவர் என்றால் அதான் முதல் சீனிலேயே கேட்டுட்டாச்சே.. எப்படியும் ஹீரோயின் காதலிச்சுதான் ஆகணும் என்கிற நினைப்பில் திரைக்கதை படு மொக்கையாய் காதல் காட்சிகளில் பரிமளிக்கிறது. இதற்கு நடுவில் ஊர் பிரச்சனை, சாமி சிலை பிரச்சனை என்று பில்டப் செய்கிறார்கள். ஹீரோயினுக்கு ரவுடி அண்ணன் ஒருவனை வெளிப்படுத்த, இடைவேளை வேளை வரை பொறுமையை சோதிக்கிறார்கள். இம்மாதிரியான படங்களுக்கும் மிக இயல்பான காமெடியும், நல்ல அழுத்தமான காதல் காட்சிகளும், நல்ல பாடல்களூம் மிக, மிக அவசியம்.
படம் ரெண்டாவது பாதியில் கொஞ்சமாய் காதல் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கும் முன்னரே வந்த சுவடில் திசை மாறி.. வில்லன், ஹீரோயின் கல்யாணம், சவால், ஊர் பிரச்சனை என்று ஒரு மாதிரி அத்திரி புத்திரியாய் முடிந்துவிடுகிறது. ஏதோ முன் பாதிக்கு இரண்டாவது பரவாயில்லை..

கதாநாயகனாய் பசங்க விமல், அந்த வேஷ்டி சட்டையும், தாடியுமாய் அசல் தஞ்சாவூர்கார குசும்புகளை ஓடுகிறது முகத்தில்.  கதாநாயகி ஓவியா.. க்யூட்டாக இருக்கிறார். வில்லனாக வரும் நண்பர் உதவி இயக்குனரின் நடிப்பு கச்சிதம், அவரது உயரமும், ஆகிருதியும் சரியாக சூட்டாகி பில்டப்பை கொடுக்கிறது.

படத்தில் பாடல்கள் காட்சிகள் இல்லாமல் முழுவதுமாய் இல்லாமல் ஆரம்பித்து ஓவர்லாப்பில் போடுவது நன்றாகவேயிருந்தாலும், பல சமயங்களில் ரிலீப் ஆக மாட்டேன் என்கிறது திரைக்கதை. கஞ்சா கருப்பு முதல் பாகத்தில் கடுப்படித்தாலும்.. இரண்டாவது பாதியில் முதற்பாதி காட்சிகளின் ரிப்பீட் புன்னகையை வரவழைக்கிறது. சில இடங்களில் சிரிப்பையும்..
kalava4 கதை, திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருப்பவர் சற்குணம். படத்தில் மிகப்பெரிய லெட்டவுன் எதுவென்றால் திரைக்கதை தான். கொஞ்சம் கூட சுவாரஸ்யமில்லாத முதல் பாதி திரைக்கதை. இரண்டாம் பாதியில் விழுந்து, விழுந்து எழுந்திருக்கிறது. ஒரிரு கேரக்டர்களை தவிர வேறு யாரும் தஞ்சை ஸ்லாங்கை பேச மாட்டென் என்கிறார்கள். எல்லாரும் வந்திட்டாய்ங்க. போய்ட்டாய்ங்க என்று மதுரை தமிழ் பேசி கொல்கிறார்கள். Give Us A Break Man..
அதே போல் க்ளைமாக்ஸில் கஞ்சா கருப்பு வந்துதான் ஹீரோயின் கல்யாணம் முன் கூட்டியே மாற்ற பட்டது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னரே இவர்கள் தெரிந்தது போல் பேசிக் கொள்ளவது எப்படி?

ஹீரோயின் அண்ணன் வந்ததும் பெரிதாய் ஏதோ வரப்போகுது என்று பில்டப் ஏறியது. அடுத்து வரும் காட்சிகளில் சுருதி குறைந்து, க்ளைமாக்ஸில் பஞ்சராகிவிடுவது ம்ஹும்.இடைவேளைக்கு பிறகு நடக்கும் சண்டை காட்சியில் விமலை திருவிழாவில் கொலை செய்ய முயற்சித்து முதுகு, மார்பு, கை காலெல்லாம் வெட்டு பட்டு அலையும் நேரத்தில் ஊர் ஏதும் பிரச்சனை செய்யவில்லை. விமலின் பெற்றோர்களும் ஒன்றும் கேட்கவில்லை. சம்மந்தமேயில்லாமல் க்ளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னால் திடீரென வந்து வீட்டிற்கு கிரகபிரவேசம் எனும் போது வருகிறார்கள்.


kalava3
பள்ஸ் பாயிண்டுகளாய் சொல்ல வேண்டுமென்றால் படத்தில் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன காட்சிகளில் உள்ள ஐடியாக்களை சொல்லலாம். குறிப்பாக, கதாநாயகியின் அண்ணன் அவளை தேடி அலைகையில் சட்டென்று சைக்கிளோடு அவளை தூக்கி எதிர்பக்கம் பஸ்ஸுக்குள் போட்டு, ஒரு கையில் சைக்கிளோடு புட்போர்ட் அடித்து, அடுத்த ஸ்டாப்பிங்கில் இறக்கிவிடும் காட்சியும், கஞ்சா கருப்பின் முன் பாதி காட்சிகளை வைத்தே க்ளைமாக்ஸுக்கு உயிர் கொடுத்திருக்கும் இடங்களிலும், ஆங்காங்கே சில்லரையாய் சிதறும் குசும்புத்தனமான வசனங்களூம் தான். இயக்குனர் படத்திற்கு நிச்சயம் உயிராய் இருக்கும் என்று நினைத்து வைத்த ”அறிக்கி க்கும் LC112 கூட்டு” மேட்டர் எடுபடாமல் போய்விட்டது. அதை சரியாக பயன்படுத்தாத திரைக்கதையினால் தான்.

இன்னொரு பள்ஸ் பாயிண்ட் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு. தஞ்சையின் பசுமையை கண்ணுக்கு குளீர்ச்சியாய் வழங்கியிருக்கிறார். பூ படப் புகழ் எஸ்.எஸ்.குமரனின் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் கேட்கும் படியாக ஹிட் ஆகியிருந்தாலும், படத்தில் அப்பாடல்களை பெரிதாக உபயோகபடுத்தவில்லை. போட்ட பாடலும் விஷுவல் இருக்கும் அளவிற்கு பாட்டு இல்லை. பின்னணி இசை ஓகே. ஆரம்பத்திலிருந்தே சிரியஸ் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல், காதல் கதையாகவும் இல்லாமல், மூணும் கெட்ட்டானாக திரைக்கதை போவதால் நகைச்சுவையாக முடியும் க்ளைமாக்ஸ் சரியான முறையில் ஏறாமல் போகிறது.  படத்தின் குழுவில் என் நண்பர்கள் மூலம் கேள்வி பட்டது. படத்தின் ஒரிஜினல் திரைக்கதை இதுவல்ல என்று. இயக்குனரே எங்கு காம்பரமைஸ் ஆனீர்கள்?
களவாணி- Average
கேபிள் சங்கர்
Post a Comment

72 comments:

Thirumalai Kandasami said...
This comment has been removed by the author.
Romeoboy said...

\\படத்தின் ஒரிஜினல் திரைக்கதை இதுவல்ல என்று. இயக்குனரே எங்கு காம்பரமைஸ் ஆனீர்கள்? //

இப்படி சறுக்கிட்டு இருந்தா அப்பறம் எப்படி பொழப்ப பார்பிங்க டைரக்டர் ..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

2nd

சுரேகா.. said...

உங்கள் நேர்மையை மெச்சுகிறேன். :))

பிரபல பதிவர் said...

இயக்குனர் பேரு சற்குணம்...

அதான் திரைக்கதையில் சறுக்கியிருக்காரு

Unknown said...

அதெப்படி எங்கூர் காரங்க எடுத்தபடத்த நீங்க மொக்கைன்னு சொன்னாலும் பாக்காம இருப்போம் ...

HVL said...

நல்லவேளை சொன்னீங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thittakudi maathiri illiyo?

பின்னோக்கி said...

அதிசயமா, ToI ல 4 ஸ்டார் குடுத்திருந்தாங்க இந்தப் படத்துக்கு

Suresh.D said...

எங்க ஊரு எப்டி இருக்கு கேபிள் அண்ணே

San said...

Anna,
Times of India has given 3.5/5 for this movie.But you are saying average!!!
Why?

vinthaimanithan said...

ஏதோ தஞ்சாவூர வெச்சு படம் எடுத்துட்டாங்கனு பாத்தா.... ஹூம்...

vinthaimanithan said...

//அதெப்படி எங்கூர் காரங்க எடுத்தபடத்த நீங்க மொக்கைன்னு சொன்னாலும் பாக்காம இருப்போம் ...//

செந்திலண்ணேஏஏஏஏ.... என்ன மாமியா உடைச்சா பொன்குடமா?????

CS. Mohan Kumar said...

//அதிசயமா, ToI ல 4 ஸ்டார் குடுத்திருந்தாங்க இந்தப் படத்துக்கு//

Yes; they give 4 star only in rare cases; even I thought that the film must be good after seeing that. Cable thinks otherwise.

AkashSankar said...

நல்ல விமர்சனம்...

samvi said...

Its a good movie, complete fmly entertainer.

pasangaaa said...
This comment has been removed by the author.
pasangaaa said...

Padatha kudichitu poi paakadinga cable. Neenga oru nalla tamil padam edunga.

Kazhavaani Kalakkitanga

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சினிமா துறையில் இருந்து கொண்டே..நேர்மையா விமர்சனம்
பண்ணுறீங்க...!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மத்த மொழியில ஏதாச்சும் நல்ல படம் வந்திருக்கா!

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Ganesan said...

இயக்குனர் சற்குணம் இந்த கதையை 3 வருடத்திற்கு முன்பே நிறைய தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.
மற்றபடி, 2 1/4 கோடிக்கு எடுக்கப்பட்ட படம் , 2 கோடி தயாரிப்பாளருக்கு பெற்றுள்ளது, இது தவிர சாட்டிலைட் ரைட்ஸ் வேற.

மொத்ததில் லாபம் பெற்ற படமே..

சரியான திட்டமிடல் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

Anonymous said...

நல்ல விமர்சனம் சங்கர். முதல் பாதியில் ரொம்பவே படுத்தி விட்டார்கள்.. படத்தின் க்ளைமாக்ஸ் மட்டும் ஓகே.

Swengnr said...

அச்சச்சோ! பசங்க ரொம்ப திட்டிடாங்க போல! நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். அப்புறம் என் வலைக்கு யாரும் வர மாட்டங்கே!

Elangovan said...

I just found a copy paste of your blog post... http://tn-online.blogspot.com/2010/06/blog-post_26.html

முரளிகண்ணன் said...

கேபிள் ஜி,

சென்ற மாத பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எப்போ போடப் போறீங்க?

(இல்ல போட்டாச்சா?)

CS. Mohan Kumar said...

Ahaa!! Murali Kannan!! Where were you all these days??:))

Unknown said...

தல டைம் போனதே தெரியல தல. எந்த கொழப்பமும் இல்லாம தெளிவா இருந்துச்சு . ராவணனுக்கு இது பெஸ்ட். திரை அரங்குல எல்லாருமே ரசிச்சு பாத்தாங்க.

shortfilmindia.com said...

@திருமலை கந்தசாமி

அப்படியும் சொல்ல முடியாது.. நண்பரே..

shortfilmindia.com said...

@திருமலை கந்தசாமி

அப்படியும் சொல்ல முடியாது.. நண்பரே..

shortfilmindia.com said...

@romeo
நோ..

@உலவு.காம்
நன்றி

@சுரேகா
நன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
நாங்களும் உங்க ஊர்கார் தாங்க..

@ஹெ.வி.எல்
அப்படியெல்லாம் சுறா மொக்கை கிடையாது..

@ரமெஷ் ரொம்ப் நல்லவன்
அதை விட நல்ல படம்

2பின்னோக்கி
அப்படியா..?

shortfilmindia.com said...

@சுரேஷ்.டி.
உங்க ஊரு இல்லை. நம்ம ஊரு..

@சான்
எனக்கு அவ்வளவுதான் பிடிச்சிருக்கு

@விந்தை மனிதன்
பாருங்க

@விந்தைமனிதன்
என்னது உங்களுக்கு மாமியாவா.?

shortfilmindia.com said...

@மோகன்குமார்
என் பார்வையில் இவ்வளவுதான்.

@ராசராசசோழன்
நன்றி

@சம்வி
நன்றி

@பசங்க
நீங்க எனக்கு வாங்கி கொடுத்தீங்களா?.. நிச்சயம் நானும் ஒரு நல்ல படம் எடுக்க முயற்சிப்பேன். நண்பரே.. களவாணீ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

shortfilmindia.com said...

@தமிழ்வெங்கட்
நன்றி

2ஜெகதிஸ்வரன்
சமீபத்தில் வேதம் தெலுங்கில்

shortfilmindia.com said...

@வெடிகுண்டு வெங்கட்
நன்றி

@மோடுமுட்டி
எனக்கும் அப்படித்தான் பட்டது

@சாப்ட்வேர் இஞினியர்
யார் திட்டினாலும் நான் கவலை படமாட்டேன். ஏன் என்றால் ஒரு விஷய்த்தை பொது மக்கள் பார்வையில் வெளியிட்டுவிட்டால் விமர்சனத்துக்கெல்லாம் பயப்படக்கூடாது.. என்பது என் எண்ணம்

shortfilmindia.com said...

#இளங்கோவன்
என்ன செய்யறதுன்னே புரியலை.. இவங்க சொந்த்மா எழுத எப்பத்தான் பழகுவானுங்களோ..?

@பிள்ளைவாள்
ராவணனுக்கு எந்த படமுமே பெஸ்ட்தான்.. :)

Ravichandran Somu said...

தலைவரே,
நம்ம ஊர்ல எடுத்த படம் என்பதால் பார்த்திட வேண்டியதுதான்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வர வர உங்க விமர்சனத்தை நம்ப முடியலங்க. மொக்கை படத்தை நல்லா இருக்குங்கிறீங்க. நல்லா படத்தை குறைச்சு சொல்றீங்க. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. திரையரங்கு முழுக்க இப்படிச் சிரித்துச் சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டது..

Unknown said...

Don't Criticize all the films, even the film is fairly getting good reviews.I do like your posts, but your film review posts sounds like I-know-Film-stuffs and no-other-knows-what-is-film-direction.

Please see Vikatan review for the same film 'Kalavaani' and see how much this review differs.


- Realfilmcritic

அ.பிரபாகரன் said...

//வர வர உங்க விமர்சனத்தை நம்ப முடியலங்க. மொக்கை படத்தை நல்லா இருக்குங்கிறீங்க. நல்லா படத்தை குறைச்சு சொல்றீங்க. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. திரையரங்கு முழுக்க இப்படிச் சிரித்துச் சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டது..//

Repeattu

Rafeek said...

"சிரியஸ் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல், காதல் கதையாகவும் இல்லாமல், மூணும் கெட்ட்டானாக திரைக்கதை போவதால் நகைச்சுவையாக முடியும் க்ளைமாக்ஸ் சரியான முறையில் ஏறாமல் போகிறது. "

இந்த வார்த்தைகள் ஒரு அறிமுக இயக்குனரின் மனதை .. புதிய சிந்தனைகளை பாதிக்கும்
என்பது தங்களுக்கு தெரியவில்லையே . கொஞ்சம் வெகு ஜன சிந்தனையிலும் படம் பாருங்க! குமுதம், விகடன், ஹிந்து, டைம்ஸ் நவ் என அனைத்து ஊடகங்களும் பாராட்டி இருப்பதை கவனியுங்கள். சினிமா வில் இருப்பவர்களின் அதிமேதாவிதனமான ஒரு விமர்சனமே தங்களின் களவானி விமர்சனம்.

Rafeek said...

ரவிசங்கர் said... "வர வர உங்க விமர்சனத்தை நம்ப முடியலங்க. மொக்கை படத்தை நல்லா இருக்குங்கிறீங்க. நல்லா படத்தை குறைச்சு சொல்றீங்க. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. திரையரங்கு முழுக்க இப்படிச் சிரித்துச் சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டது.."

கேபிள் தயவு செய்து இன்னொரு முறை பார்த்துட்டு விமர்சனம் பண்ணுங்க பாஸு !

Thiru said...

உங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ..ஆனால் இந்தப் படத்திற்கு மொக்கையாக விமர்சன்ம எழுதியுள்ளிர்கள் ...
படத்தை இன்னொருமுறை பாருங்கள் ...
வேறேதும் சொல்ல தோன்றவில்லை ..

அவிய்ங்க ராசா said...

cable Anna,

Padam Super. The people like you should encourage this type of movies. I am shocked and surprised when i see the review.

aveenga raja

isgokulkumar said...

it is a very good movie...
watch it again and review it...
after watching the movie.. i came here for review..i was shocked.. i didnt expect this kind of review from you.. your image spoiled...bcz of this review

Sakthi said...

வர வர உங்க விமர்சனத்தை நம்ப முடியலங்க. மொக்கை படத்தை நல்லா இருக்குங்கிறீங்க. நல்லா படத்தை குறைச்சு சொல்றீங்க. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. திரையரங்கு முழுக்க இப்படிச் சிரித்துச் சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டது..

GD said...

there is many a slip between the cup and the lip

Thirumalai Kandasami said...

Previously i commented based on one of my friend's feedback+cable sankar's review..but it was totally wrong..

Saturday night ,,I saw this film in PVR..

Unexpectedly,,
Very very interesting movie..I enjoyed a lot..All the best to director.

Don't miss this film..

A Simple Man said...

I'm not a big cinema fan. But I'd rate this as a watchable movie than others. களவாணி - நல்ல சிரிப்பானி

Nandhan Sp said...

//Real said...
Don't Criticize all the films, even the film is fairly getting good reviews.I do like your posts, but your film review posts sounds like I-know-Film-stuffs and no-other-knows-what-is-film-direction.
//

உண்மை..
இதுமாதிரி 2 கோடி பட்ஜெட்-ல "காம்பரமைஸ்" ஆகாம நீங்க படம் எடுக்கிறபோது ..அதை எல்லாரும் நார் நார கிழிச்சி தொங்க விடுவாங்க பாருங்க...
அப்ப தான் யோசிபிங்க..இந்த படத்துல கஞ்ச கருப்பு சொல்லறமாதிரி "கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ " ன்னு..

விமர்சனம் பண்ண வேண்டியதுதான் ...அதுக்காக... இது கொஞ்சம் too much...

மத்தபடி..மக்கா..
ரொம்ப நாளைக்கு பிறகு..
குடும்பத்தோட உக்காந்து சந்தோசமா பார்த்த படம்...
i mean it..i saw all faces are happy with a satisfaction at the end of the film.....the real sucess of the director..and the whole movie team...


Nanda

விலெகா said...

கேபிள் ஜி!
நல்லா சொன்னிங்க விமர்சனம் ,. நீங்க சென்னை ஆளு கிராமத்து விசயமெல்லாம் உங்களுக்கு தெரியாது . பாரதி ராஜா படம் பார்த்த மாதரி ஒரு பீலிங் . ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி . குறை ஒன்றும் பெரிதாக சொல்லமுடியாது .

விலெகா said...

கேபிள் ஜி!
நல்லா சொன்னிங்க விமர்சனம் ,. நீங்க சென்னை ஆளு கிராமத்து விசயமெல்லாம் உங்களுக்கு தெரியாது . பாரதி ராஜா படம் பார்த்த மாதரி ஒரு பீலிங் . ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி . குறை ஒன்றும் பெரிதாக சொல்லமுடியாது .

Unknown said...

Thillalangadi -- Good....Kalavaani ...NOt???? What happened to you Cable Sankar?... If your taste does not migle with Audience, you can never shine in this field...

Rafeek said...

கேபிள் தயவு செய்து களவாணி விமர்சனம் க்கு மன்னிப்பு கேட்டுவிடுங்கள். அல்லது டெலிட் செய்து விடவும். படத்த பார்த்துவிட்டு உங்க மூணுங்கெட்டான் விமர்சனத்த படிச்சா பிபி ஏறுது!!

இரவி சங்கர் said...

அய்யா கேபிள் சங்கரன், அவர்களே
இதை விட வேறு எப்படி படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு எடுக்க வேண்டும் உங்களுக்கு?
ஏதாவது விமர்சிக்கணும்ண்ணு எழுதுவியலா? உங்களுக்கு 'மேல்மட்ட' படம்தான் பிடிக்கும்ன்னா தயவு செய்து இந்த மாதிரி வித்தியாசமான முயற்சி செய்து எடுத்த படத்துக்கு உங்கள் வி(மர்)சனத்தை எழுத வேண்டாம்.

மற்றபடி 'களவாணி' பட குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி வணக்கம்.

தமிழ் குமார் said...

கேபிள் சார்,உங்க தளத்திற்கு இப்ப தான் வந்து விமர்சனம் படிக்கிறன்.நீங்க களவாணி படம் பார்த்த மாதிரி தெரில.
உங்கல மாதிரி தினம் நிறைய ஹிட்டுகள் வாங்கும் வலைப்பூல எழுதுற விமர்சனத்த கொஞ்சம் பொறுப்பாக எழுதுங்க.
ஒரு படைப்பாளிய நோக வைசுறாதிங்க.இனிமே நல்ல விமர்சனம் எழுதுனா சொல்லி அனுப்புங்க வந்து படிக்கிறன்.

உங்க ஸ்டைல்ல சொலனும்னா
கேபிள் சங்கர் களவாணி Review - "Hidden truth"

Sundar said...

I Can't expect this type of review comment from cable .

what happened .....?

This movie needs to be added of the classic village enterainers list movies .

After long time some poetic simple vilaage move like Anpavam

I don't know what made cable to write this comment .

Rishoban said...

Sorry for the late reply...:P
anyway, just only got the chance to watch the movie...and I totally disagree with your review! Actually, I can't call this as a review..very bad

The film was an excellent piece of work! Hats off to the director

Nelson said...

naan ipa thaan unga review va padichen cable...

nan solla vendiyatha yerkanave ellarum mela solitaanga, irunthalum sollaama iruka mudila..

romba too much ninga paninathu. oru nalla padatha rasikum thanmai ila ungaluku. ungaluku advice panra alavuku nan intellect illa. but u should never have done this...

karuppu said...

களவாணி படத்தின் விமர்சனத்தை உங்கள் blog இல் இன்றுதான் படித்தேன்!
படித்ததும் அதிர்ந்தே போய்விட்டேன்!!
நான் களவாணி படத்தை 2 தடவை தியேட்டர்களிலும் பல தடவை DVD இலும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
Kalavani is an excellent fantastic romantic comedy!
களவாணி சூப்பர் ஹிட் ஆகி ஹிந்தி, தெலுங்கு போன்ற மற்ற மொழிகளில் எடுக்கப்படுவது உங்களுக்கு தெரியாதா?
களவாணி நாயகன் விமலும் நாயகி ஓவியாவும் களவாணியில் பெற்ற புகழுடன் வேறு பல பட வாய்ப்புகளை பெற்று பலராலும் பேசப்படும் நடிகர்களாக திகழ்வது உங்களுக்கு தெரியாதா?
களவாணி இயக்குனர் சற்குணம் வாகை சுடவா என்ற அவருடைய அடுத்த படத்தை தொடங்கியிருப்பது உங்களுக்கு தெரியாதா?
களவாணி இயக்குனர் சற்குணம்மீது உள்ள பொறாமையால் இப்படி செய்கிறீர்களா, அல்லது அவர் நல்ல comment எழுத பணம் தராதபடியால் இப்படி செய்கிறீர்களா, அல்லது வேறு யாராவது பணம் தந்து இப்படி செய்ய சொன்னார்களா எனக்கு புரியவில்லை.
ஒரு சிறந்த படைப்பை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லையே?
உங்களால் ஒரு blog தான் போட முடிகிறது, அதுவும் யாரோ youtube இல் போட்ட video களைத்தான் போட முடிகிறது, உங்களால் ஒருபோதும் மற்றவர்களால் பேசப்படும் ஒரு இயக்குனராக வரவே முடியாது!!
(என்னுடைய இந்த கமெண்டை பிரசுரிக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்)

sundaram selvarayar said...

i dont normally like tamil movies, i see only movies if every one say good and if i get realy free time, unfortunatly i saw this one, it was a nice movie, you can not say this is not the good one, my whole family enjoyed while watching this.

karuppu said...

LC112 மேட்டர் எடுபடாமல் போய்விட்டது என்று எழுதி உள்ளீர்களே, அது எப்படி உங்களுக்கு தெரியும்? LC112 போன்ற ஒரு விடயத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற வயித்தெரிச்சலா? (I challenge you, can you create something like LC112 of your own and publish here?)
"I love you" என்ற சொற்தொடர்களை பாவிக்காமல் LC112 ஐ பாவித்து நாயகன் தனது காதலை வெளிப்படுத்தும் விதத்தை இயக்குனர் எவ்வளவு சுவாரசியமாக அமைத்து இருக்கிறார் என்பதை கவனிக்கவும்.

karuppu said...

களவாணி பட இயக்குனர் கதையில் வரும் ஊர்களுக்கு பெயர் வைப்பதிலேயே எவ்வளவு கலைனயத்துடன் செயற்பட்டுள்ளார்! நாயகனின் ஊருக்கு அரசனூர் என்றும் நாயகியின் ஊருக்கு ராணிமங்கலம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது எவ்வளவு கலை ரசனையுள்ள செயற்பாடு! (அரசன், ராணி என்ற சொற்பதங்களை கவனிக்கவும்) கேபிள் அவர்களே, உங்களுக்கு இப்போதுதான் புரிகிறதா? அல்லது இப்போதும் புரியவில்லையா?

karuppu said...

நடுநிலையான களவாணி பட விமர்சனத்தை இந்த லிங்க் இல் படிக்கவும்:
http://sathish777.blogspot.com/2010/06/blog-post_25.html

karuppu said...

"களவாணி- Average" என்ற சொற்தொடர்களை உங்களுடைய விமர்சனத்தின் இறுதியில் இப்போதுதான் add பண்ணியிருக்கிறீர்கள். பலரும் உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பதால் தந்திரமாக தப்பித்துக்கொள்ளும் உபாயமா?

உண்மையில் களவானி average அல்ல, but excellent fantastic.

Cable சங்கர் said...

karuppu.. காந்தி செத்துப் போய் ரொம்ப நாளாயிருச்சு உங்களுக்கு தெரியுமா?

என்னைப் பொறுத்த வரையில் இன்றைக்கும் இந்த படத்தை பற்றிய எண்ணம் ஆவரேஜ் தான். இதை நான் யாருக்கும் பயந்தெல்லாம் போட்டதேயில்லை. இந்த விமர்சனம் போட்ட தினத்திலிருந்து அதே தான் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் காந்தி செத்தது தெரியாமல் இப்போ வந்து துக்கம் விசாரிக்கலாம். எனிவே.. ஒரு படத்தை விமர்சிக்கும் உரிமை எனக்கிருப்பதை போல என் விமர்சனத்தை விமர்சிக்கும் உரிமை படிக்கும் உங்களுக்கு இருக்கிறது அதனால் தான் இவ்வள்வு பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன். நன்றி.. திரும்பவும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் காந்தி செத்து ரொம்ப நாளாச்சு..:))

karuppu said...

கேபிள் அவர்களே, உங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு "காந்தி செத்துப் போய் ரொம்ப நாளாயிருச்சு உங்களுக்கு தெரியுமா?" என்று சொல்லி உள்ளீர்கள். இதே விடயத்தை களவாணி இயக்குனர் சொல்லி இருந்தால் மிகவும் சுவாரசியமாக சொல்லி இருப்பார். (உதாரணம் சொல்வதற்கு செத்த வீட்டைதான் இழுக்க வேண்டுமா என்ன?)

karuppu said...

கேபிள் அவர்களே, நோர்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு களவாணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.
http://thatstamil.oneindia.in/movies/awards/2011/02/enthiran-angadi-theru-13-tamil-films-screened-ntff-aid0136.html

karuppu said...

களவாணி முடிந்துபோன விடயமல்ல. வேறு பல மொழிகளில் மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறது.
http://thatstamil.oneindia.in/movies/specials/2011/03/27-kalavani-remake-telugu-kannada-oviya-aid0091.html

subbu said...

Cable,
now only i started reading blogs. i read all posts. it was nice to read. but i wanted to read, how u rate kalavani. you rated average. there may be two reasons for it.either u don't know how to watch a film or u don't like the director. which is the real good film? tell me. don't expect all 'Tamil' films will be like blood diamond or the last samurai.

karuppu said...

Of course, Cable Shangar dosen't like a great Tamil Director Satgunam, because of jealous! But note that Satgunam is releasing his next supper hit film Vagai Suudavaa:
http://thatstamil.oneindia.in/movies/shooting-spot/2011/05/6-vaagai-sooda-vaa-show-the-real-village-life-aid0136.html

Unknown said...

@கேபிள் ஷங்கர்:

நம்மவர்களின் இரசனைத் தரத்தை யூகிக்கவே முடியவில்லை.. ஏதாவது சொல்லப்போய் பொது மாத்து வாங்க நான் தயாராக இல்லை.