Thottal Thodarum

Aug 30, 2010

கொத்து பரோட்டா-30/08/10

ஒரு வழியாய் விஜய் டிவி மூன்று மாதத்திற்கு முன் எடுத்த நீயா? நானா நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டார்களாம். நான் ஒரு தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்ததினால் பார்க்கவில்லை. நிகழ்ச்சியை பார்த்து தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸிலும் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி.. வீடியோ லிங்க்
http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=14048:neeya-naana-29-08-10-&catid=119:neeya-naana&Itemid=127
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
வெள்ளி இரவு சுமார் ஒரு மணிக்கு நந்தனம் சிக்னலிலிருந்து தி.நகர் பக்கமாய் டிராபிக் போலீஸால் திருப்பி விடப்பட்டேன். ஏன் என்று கேட்டபோது ட்ராபிக் ஜாம் என்றார்கள். மேலும் கேள்விகள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.. சீக்கிரமா வீட்டிற்கு போற வழிய பாருங்க சார் என்றார் அவர். நமது 24 மணி நேர செய்தி சேனல்களில் மத்யானம் போட்ட செய்திகளையே போட்டுக் கொண்டிருக்க, காலையில் செய்திதாளில் பார்த்த போது அவர்கள் போட்டிருந்த விஷயம் பார்த்து கோபம் கோபமாய் வந்தது. ஒரு ட்ரைவர் சின்னமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனாராம். அங்கே இருந்த சிலருடன் வாக்குவாதமாகி டிரைவர் தாக்கப்பட்டிருக்கிறார்.  அடிபட்ட டிரைவர் பணிமனைக்கு சென்று தன்னை அடித்துவிட்டதாக மற்ற டிரைவர்களிடம் சொல்ல, உடனே அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா டிரைவர்களிடமும் செய்தி பரவி பஸ்களை ஆங்காகே நிறுத்த, சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி வரை கடும் ட்ராபிக் ஜாம் இரவு பத்து மணியிலிருந்து. என்ன கொடுமை இது. டிரைவர் அங்கு என்ன பேசினாரோ, என்ன தகரறோ? எதுவாக இருந்தாலும் இவர்களது பர்சனல் ப்ரச்சனைகளுக்கு போலீஸை நாடாமல் இவர்கள் இஷ்டத்திற்கு நடு ரோட்டில் பஸ்ஸை நிறுத்தி ட்ராபிக்கை குலைத்தால் என்ன நியாயம். எத்தனை பேர் விமான நிலையத்துக்கோ, மருத்துவமனைக்கோ, முக்கிய விஷயங்களுக்காகவோ கிளம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியத்தனத்தை தூண்டி விட்ட டிரைவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் போல் ஒவ்வொருவரும் தங்களை அடித்துவிட்டார்கள் , என்று நடுரோட்டில் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தால் விளங்கினார்போலத்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பாகிஸ்தான் வீரர்கள் பணம், பெண், சாப்பாடு இவைகளுக்குத்தான் முக்யத்துவம் கொடுக்கிறார்கள் என்று மசார் மஜித் எனும் ஸ்பாட் புக்கி சொல்லியிருக்கிறார். இவர் இங்கிலாந்து பாகிஸ்தான் மேட்சுகளில் பிக்ஸிங் செய்த்தாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். மிகச் சிலரே ஆட்ட்த்தின் மீதான காதலுடன் விளையாடுவதாகவும், ஒவ்வொரு மேட்சின் போது ட்ரிங்க்ஸ் இடைவேளையில் வீரர்கள் பெவிலியனுக்கு வரும் போது கையில் வாஸலின் தடவி அவர்களிடம் கை குலுக்குவதை போல குலுக்கி அவர்கள் மாற்றி விடுவேன். அவர்கள் வேஸ்லின் தடவி பந்து வீசும் போது பந்து திடீரென ஸ்விங் ஆகும். அதே போல் பாலை கீறி பந்து போடுவது போன்ற பல விஷயஙகளை சொல்லியிருக்கிறார். http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Pak-cricketers-just-want-money-women-food-Bookie/articleshow/6455784.cms
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சினிமா வியாபாரம் &லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்
சென்ற வாரம் ஒரு போன்கால் ஒரு தயாரிப்பாளர், வெள்ளித்திரை இயக்குனர் விஜியை வைத்து படம் தயாரிப்பதாகவும், தினத்தந்தியில் வந்த சினிமாவியாபாரம் புத்தகம் விமர்சனத்தை படித்துவிட்டு புத்தகம் வாங்கியதாகவும் சொன்னார். புத்தகத்தை படித்துவிட்டு சுமார் அரை மணிநேரம் பேசினார். பாராட்டினார். நிச்சயம் அடுத்த மாதத்தில் சந்திப்போம் என்று சொன்னார். அவர் சொன்ன விஷயஙக்ளில் முக்கியமானது ரெண்டு விஷயம். ஒன்று இப்புத்தகம் ஒவ்வொரு தயாரிப்பாளர் இயக்குனரும் படிக்க வேண்டிய புத்த்கம் என்பது. இன்னொரு விஷயம் தினத்தந்தியில் போட்டிருந்த விமர்சனம் பற்றி. கிழக்கு ஹரன்பிரசன்னா சொன்ன விஷயம் ஒன்று நியாபகத்துக்கு வந்தது. தினத்தந்தி விமர்சனத்துக்கு பிறகு நானூறுக்கும் மேற்பட்ட கால்கள் வந்ததாய் சொன்னது. ஒரு புத்தகத்தை சரியாக கொண்டு போய் சேர்ப்பதில் கிழக்குக்கு நிகர் கிழக்குத்தான். இதை நான் சொம்படிப்பதாகவே சொன்னாலும். சுயபுராணமாக இருந்தாலும்.. சொல்லத் தோன்றியது. சொல்லாமல் இருக்க முடியவில்லை. சினிமா வியாபாரம் முதல் ப்ரிண்ட் விற்று முடிந்து இரண்டாவதாக  ரீ ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. என்பது சந்தோஷ விஷயம். 

லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வேலூர் புத்தக கண்காட்சியில் கிடைக்கிறது. நாகரத்னா பதிப்பகம் இப்புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலை எடுத்திருக்கிறார்கள் ஸ்டால் நெ.51 வேலூர் ரெட் போர்ட் கோட்டை மைதானத்தில் கண்காட்சி. அனுமதி இலவசமாம்.  
##################################################################
புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குனராய் வேலை பார்பதால் ஒரு பத்து நாளாய் டிஸ்கஷன் அது இது என்று பிஸி.. நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது பீப்லி வைவ்வும், நேஷனல் அவார்ட் வாங்கிய அந்தார்ட்வாண்ட் என்கிற இரண்டு ஹிந்தி படங்கள் தான். எல்லா தியேட்டர்களிலும் ஒரு ஷோ, அரை ஷோ என்று போட்டிருப்பதால் சரியான டைமில் பார்க்க முடியவில்லை. இந்த வாரம் பார்க்கணும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
இந்த வார ஆச்சர்யம்
anupam mukarjee Fakeiplplayer.com என்கிற பெயரில் எழுதிவந்தது யார் என்று ஏகப்பட்ட ஸ்பெகுலேஷனில் இருந்தவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் அவர் பெயர் அனுபம் முகர்ஜி. விப்ரோவின் முன்னாள் எம்ப்ளாயர். கேம் சேஞ்சர் என்கிற புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறவர். அவர் என்ன சொல்கிறார் என்றால் நான் அதில் விளையாட்டு வீரர்களை பற்றி எழுதிய விஷயங்கள் எல்லாமே கற்பனை என்றும், த ஹோக்ஸ் என்ற ஆங்கிலபடத்தில் வருவது போல தானும் செய்ய நினைத்து எழுதியதாகவும், தன்னுடய தளத்திலேயே இதை எழுதுவது யாராக இருக்கக்கூடும் என்று சர்வே போல் எடுத்த்தாகவும் கூறியிருக்கிறார். இதை எழுதியதில் எந்த்விதமான உள்நோக்கமும் இல்லை என்றும் வெறும் ஜாலிக்காக எழுதினேன் என்றும் சொல்லியிருக்கிறார். http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/08/29&PageLabel=15&EntityId=Ar01502&ViewMode=HTML&GZ=T
&&&&&&&&&&&&&&&&&&;&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சினிகூத்து.
கெளதம் மேனனின் “நடுநிசி நாய்கள்” படம் முழுவதுமே இரவில் எடுக்கப்பட்டதாம். இதன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இப்படம் சூப்பர் 16எம்.எம்மில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், முக்கியமாய் ஒரு மல்டி பர்பஸ் வண்டியில்தான் கதை நகர்வதால் அதனுள் வைத்து ஷூட் செய்வதற்கு வசதியாய் சின்ன கேமராவாகவும், கொஞ்சம் ராவாக புள்ளிகளூடனான ஒரு பீல் தேவையாக இருப்பதால் அந்த பிலிமை தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த ஷங்கரின் 3 இடியட்ஸ் கேமராமேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&ampp;&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
உலகின் சிறந்த விளம்பரங்களில் ஒன்றாகவும், காஸ்ட்லியான விளம்பரங்களில் ஒன்றாகவும் பெயர் பெற்றது.
&&&&&&&&&&&&&&&amp
இந்த வார குறும்படம்
ஒன்னரை நிமிடத்தில் ஒரு க்யூட்டான குறும்படம்.. இண்ட்ரஸ்டிங்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் யாருமே வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டவரில்லை. அதனால் புரிந்து கொள்ள் முயற்சிப்பவர்களுக்கு கொஞ்சம் பாராட்டுகளை தருவோம்.
&&&&&&&&&&&&&&&&a ஜோக்
ஒரு ஜோடி பாரீஸ் நகருக்கு சென்றார்கள். ஊரூக்குள் போனதும் கணவன் : நாம் உடனே ஈபிள் டவரை பார்க்க போகலாம் எனக்கூற… மனைவி : இல்லை ஓட்டல் ரூமுக்கு போவோம். என்றாள். ஏன் என்று கணவன் கேட்க மனவி : ஈபிள் டவர் என்னைக்குமே அங்கேயே தான் “நிக்கும்” இங்க அப்படியில்லையே என்றாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&am&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஏஜோக்
ஒரு டாக்டரும் பெண்ணும் மேட்டர் செய்துவிட அதனால் அவள் கர்பமாகிவிடுகிறாள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஒரு பாதர் வயிற்று கட்டி ஆபரேஷனுக்காக வர, டாக்டர் ஒரு ஐடியா சொல்கிறார். பிறக்கும் குழந்தையை டாக்டர் வயிற்றிலிருந்து பிறந்ததாக சொல்லி அவரை ஏமாற்றி தலையில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து ஆபரேஷன் முடிந்ததும், பாதரிடம் “பாதர் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நிஜம் நான் தான் ஆபரேஷன் செய்து எடுத்தேன். இதோ உங்கள் குழந்தை” என்று கொடுக்க, நம்பி குழந்தையை வளர்க்க அரம்பித்த் பாதர் சில வருடங்கள கழித்து அந்த பையனிடம் “நான் உன் தந்தையில்லை” என்று சொல்ல பையன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தான். “ஆம்.. நான் தந்தையில்லை.. தாய்.. உன் தந்தை பிஷப்தான்” என்றார்.

பெண்கள் ஆசைப்படும் ஆணின் பேண்டினுள் இருக்கும் ஒரு ஆறு இஞ்ச் விஷயம் எது?
அவன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு. கெட்ட பசங்க.. தப்புதப்பா யோசிக்காதீங்க..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கேபிள் சங்கர்
Post a Comment

58 comments:

தினேஷ் ராம் said...

:-)

Prasanna Rajan said...

மூன்றாவது பதிப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கேபிள்ஜி...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் அண்ணா ....மைக்கேல் ஜாக்சன் 29 auguest பிறந்தநாள் அவரைப்பற்றி எதிர்பார்த்தேன் ஏதும் இல்லை ...
சூப்பர் கொத்து

gulf-tamilan said...

/புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குனராய் வேலை பார்பதால் /
அட வாழ்த்துகள்!!!

Ahamed irshad said...

Congrats sir.

க ரா said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்.. என்னவோ இந்த வாரம் கொ.பரோ சுவை கம்மியான மாதிரி ஒரு பிலீங் :)

a said...

புது பட இணை இயக்குநர்... வாழ்த்துக்கள் கேபிள்ஜி .....

K.MURALI said...

///பாகிஸ்தான் வீரர்கள் பணம், பெண், சாப்பாடு இவைகளுக்குத்தான் முக்யத்துவம் கொடுக்கிறார்கள் என்று மசார் மஜித் எனும் ஸ்பாட் புக்கி சொல்லியிருக்கிறார். இவர் இங்கிலாந்து பாகிஸ்தான் மேட்சுகளில் பிக்ஸிங் செய்த்தாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்.///

http://www.newsoftheworld.co.uk/news/924349/Cricket-in-the-dock-as-we-expose-match-fixing-scandal-England-Pakistan-Test-no-balls-bribes.html

Muthukumara Rajan said...

பல இடத்துல உங்களை பார்கிறேன் விரைவில் திரைப்படத்துல பார்க்க விரும்புகிறேன் .
வாழ்த்துக்கள்

தமிழுடன்
முத்துக்குமார்

பா.ராஜாராம் said...

குரு, (ஹி..ஹி.. கார்க்கி)

குறும்பட பகிர்வு, thanks! மற்றும் வாழ்த்துகள் கேபில்ஜி! அப்பாவோட கனவுகள், இல்லையா? ஜெயிங்க மக்கா.

பரிசல்காரன் said...

//நான் ஒரு தயாரிப்பாளுடன் பேசிக் கொண்டிருந்ததினால்//


கலக்கு ராசா! மிக்க மகிழ்ச்சி & ஆல் த பெஸ்ட்!

பிரபல பதிவர் said...

நேத்து பாத்தேன் தல... நீங்க, அப்துல், நர்சிம்... அதிலும் நர்சிம் தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக வெளிபடுத்தினார்....

அப்துல் வயதானவராக (உங்களயும் சேத்து) காட்டிக்கொள்வதில் தனிக்கவனம் செலுத்தினார்... அவருக்கு என்ன பிரச்சனையோ....

நீங்க யூத்தா காட்டிக் கொள்ள முயன்றீர்கள்....

எனிவே அடுத்த அடுத்த தளங்களில் மூவருமே வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பிரபல பதிவர் said...

//நான் ஒரு தயாரிப்பாளுடன் பேசிக் கொண்டிருந்ததினால் //


தயாரிப்பு ஆளா???? இல்ல தயாரிப்பாளரா???

R. Gopi said...

வாழ்த்துக்கள் சார்

R. Gopi said...

குறும்படம் 12B படத்தை ஞாபகப்படுத்தியது

பிரபல பதிவர் said...

//புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குனராய் வேலை பார்பதால் .... நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது////


மக்களே இது ஒரு இணை இயக்குனரின் ஸ்டேட்மெண்ட்... என்னத்த சொல்ல‌

பிரபல பதிவர் said...

நாளைய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துகள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

'நீயா? நானா? ' பார்த்தேன், பதிவு, எழுத மட்டும் அல்ல நாம் நினைப்பதை தெளிவாக பேசவும் கற்றுக் கொடுக்கிறது என்பது நிரூபணம் ஆனது. ஐந்து பேர் பதிவின் மூலம் இணைந்து வந்திருப்பதாக சொன்னீர்கள். நர்சிம்,கேபிள், அப்துல்லா, மணிஜி தெரிந்தது ஐந்தாவது யார்?

கானா பிரபா said...

புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குனராய் வேலை பார்பதால் ஒரு பத்து நாளாய் டிஸ்கஷன் அது இது என்று பிஸி.. நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. //


இரண்டு சமாச்சரங்களையும் ஒரேயடியா போட்டதால, ஏதோ உங்க புதுப்பட டிஸ்கஷனுக்காக நிறையப்படங்கள் பார்க்கவேண்டும் என்ற ரீதியில் பொருள் மயக்கம் கொடுக்குது பாஸ் ;-)

அரவிந்தன் said...

ஐந்தாவது பதிவர் பட்டர்பிளை சூர்யா

Sukumar said...

நிறைய குட் நியூஸ் சொல்லி இருக்கிறீர்கள்... காலம் கனிந்து வருகிறது... வாழ்த்துக்கள்...

Sukumar said...

ம்.. அப்புறம் பக்காவான டெம்ப்ளேட்..... நைஸ்

இளையவன் said...

பரோட்டா சூப்பர் அண்ணா,பீப்லி வைவ்வுக்கு உங்களின் பார்வைக்காக wating, அடப்பாவிகளா இந்த fakeiplplayer ஆய் இருக்கும் என்டு எத்தனை players nameai சொன்னாங்கள் அதில் முக்கியமான ஆள் நம்ம முரளி கார்த்திக் ,யாராவது அந்த நீயா நானாவின் லிங்க் தரமுடியுமா,அண்ணா நீங்க இன்னை இயக்குனராய் இருக்கும் படம் என்னண்டு சொல்லகூடாதோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

சூப்பர் கொத்து

priyamudanprabu said...

பெண்கள் ஆசைப்படும் ஆணின் பேண்டினுள் இருக்கும் ஒரு ஆறு இஞ்ச் விஷயம் எது?
அவன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு. கெட்ட பசங்க.. தப்புதப்பா யோசிக்காதீங்க..
///////

he he

R.Gopi said...

வழக்கம் போலவே கலந்து கட்டி அடித்து ஆடியது இந்த கொத்து பரோட்டாவும்..

1. நீயா நானா ஒளிபரப்பானது..

2. நடுரோடு ஆர்ப்பாட்டம்.... (இது பற்றி ஓ பக்கங்களில் ஞானி எழுதுவாரா?)

3. பாகிஸ்தான் மேல் இருந்த நல்லெண்ணம் எல்லாம் போய் நெம்ப நாள் ஆச்சு தல...

4. சினிமா வியாபாரம் மூன்றாம் பதிப்பு வர வாழ்த்துக்கள்...

5. புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குநர்... படம் பேர் சொல்வீர்களா? கூடிய சீக்கிரம் இயக்குநராக வர வாழ்த்துக்கள்....

6. அனுபம் முகர்ஜி நல்லா அடிச்சு ஆடியிருக்கார்... ஆளும் பார்க்க சேவாக் போலவே இருக்காரா, அதான் நல்லா அடிச்சு ஆடியிருக்கார்....

7. நடுநிசி நாய்கள் படு திரில்லராக இருக்கும் என்று தெரிகிறது.... அந்த சமீரா ரெட்டிய விடவே மாட்டார் போல இருக்கே இந்த கவுதம் மேனன்..

8. ஹோண்டா அக்கார்ட் விளம்பரம். மிக மிக நன்றாக இருந்தது.... அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு, டெல்லி கணேஷ் கொலை காட்சியை நினைவுபடுத்தியது....

9. குறும்படம் பலே...

10. தத்துவம் - பாராட்டுக்கள்....

11. ஜோக் / ஏ ஜோக் இரண்டுமே ரசிக்கும்படியாக இருந்தது...

கலக்கல் சங்கர் ஜி....

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

அய்..

மனோஜ் தான் 3 இடியட்ஸ் ஒளிப்பதிவாளரா?

சுரேகா.. said...

பரோட்டா நல்ல டேஸ்ட்!! :)

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் சார் நானும் இந்த நிகழ்ச்சியை கண்டேன் அதில் நிறைய பதிவர்கள் கலந்து கொண்டார்கள் என்று அறிவேன். உங்களையே நான் ரொம்ப யோசித்து தான் கண்டு பிடித்தேன் காரணம் போட்டோவில் உள்ளதைப்போல் நீங்கள் நேரில் இல்லை. உங்களால் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த பதிவர்கள் யார் யார் அவர்களின் முகவரிகளை தெரிவிக்க முடியுமா?

சும்மா ஒரு வாழ்த்து தெரிவிக்க தான்.

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள்... All the best. SOme good things are happening in your life and you deserve all these.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புது பட இணை இயக்குநர்... :)வாழ்த்துகள்

Jawahar said...

இணை இயக்குனர் ஆனது சந்தோஷம். விரைவில் இணையில்லா இயக்குனர் ஆக வாழ்த்துக்கள்

http://kgjawarlal.wordpress.com

'பரிவை' சே.குமார் said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் said...

மூன்றாவது பதிப்புக்கு வாழ்த்துகள்..

Ravichandran Somu said...

வாழ்த்துகள் தலைவரே!

Unknown said...

பீப்லி பற்றிய விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன் ...........

Unknown said...

//நேத்து பாத்தேன் தல... நீங்க, அப்துல், நர்சிம்... அதிலும் நர்சிம் தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக வெளிபடுத்தினார்....
//

எனக்கென்னவோ நர்சிம் பேச்சைவிட அப்துல்லா பேச்சு நன்றாக இருந்தைப்போல் இருக்கிறது.நர்சிம் பேச்சு சற்று செயற்கையாக இருந்தது. அப்துல்லா எடுத்துவைத்த வாதம் ஒரு தேர்ந்த வழக்கறிஞரைப்போல் இருந்தது.

சாஷீ said...

கொத்து பரோட்டா நல்ல டேஸ்ட்டு .நீயா நானா பார்த்தேன் அருமையான வாதங்கள் .அந்த t v பரிசு வாங்குனவர் அருமையா பேசினார் .கோபிநாத் எப்பவும் போல் கலக்கல் .

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

All the best sir... :-)

RVS said...

அந்த மாதிரி ஜோக்ஸ் நல்லா இருந்தது...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அருண் said...

புது பட இணை இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

RVS said...

திரைப்பட அகராதியே... ராவணனுக்கு லேட்டா என்னால முடிஞ்சா கைங்கர்யம் பண்ணியிருக்கேன். நேரமிருப்பின் ஒரு முறை எட்டிப் பார்க்கவும். மோதிரக்கையால் குட்டுப்பட ஆசை.
http://mannairvs.blogspot.com/2010/08/blog-post_30.html

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சிவராம்குமார் said...

விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள்... சூப்பர் கொத்து பரோட்டா!!!

Cable சங்கர் said...

@சாம்ராஜ்யப்ரியன்
:)

@ப்ரசன்ன ராஜன்
நன்றி

@புதிய மனிதர்
அட டா ஞாபகம் வரலையே..

@கல்ப் தமிழன்
நன்றி

Cable சங்கர் said...

@அஹமது இர்ஷாத்
நன்றி

@இராமசாமி கண்ணன்
நன்றி

@@வழிப்போக்கன் யோகேஷ்
நன்றி

@முரளி
பார்க்குறேன் நன்றி

@முத்துகுமார்
நன்றி..

@பா.ராஜாராம்
வாழ்த்துக்களுக்கு நன்றி

@பரிசல்காரன்
நன்றி நண்பேண்டா..


@சிவகாசி மாப்பிள்ளை
நன்றி

Cable சங்கர் said...

@கோபி
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

@நாய்க்குட்டி மனசு
பட்டர்ப்ளை சூரியா நன்றி

@கானாபிரபா
சில சமயங்களில் இரண்டு சமாசாரங்கள் ஒன்றாகக்கூட வாய்ப்பிருக்கிறது..:)

@அரவிந்தன்
நன்றி

@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி

@இளையவன்
போட்டிருகுன்னே


@வெறும்பய
நன்றி

@பிரியமுடன் பிரபு
ஹேஹே...

@கோபி
பிரித்து மேய்ந்த் பின்னூட்டத்திற்கு நன்றி

Cable சங்கர் said...

@கார்க்கி
ஆமாம்

@சுரேகா
நன்றி

@சசிகுமார்
என் முகவரி தொலைபேசி நம்பர் இங்கேயே இருக்கிறது..

2மோகன் குமார்
நன்றி தலைவா...

Cable சங்கர் said...

@டி.வி.ஆர்
நன்றி

@ஜவஹர்
நன்றி

@சே.குமார்
நன்றி

2

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி
வந்திருச்சு

@அனானி
அப்படியா நன்றி தலைவரே

@சாஷீ
நன்றி

@நாளைபோவான்
நன்றி

@அருண்
நன்றி

@ஆர்.வி.எஸ்
அஹா.. உங்க பட்டத்தில ஒரு உள்குத்து இருக்கு போலருக்கே..

@சிவராம் குமார்
நன்றி..

Thamira said...

ஷார்ட் பிலிம் பின்னுது.

ம.தி.சுதா said...

கொத்துண்ண கொத்து அப்பிடி ஒரு கொத்து....